‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு!- கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் ‘ஒரே நாடு -ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் […]

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம்..

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடகா – கோவா கடற்கரை பகுதிகளில் நீடிக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதனைத் தொடர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் 12-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வருகிற 16-ந்தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்ய […]

எட்டாத உயரத்தில் தங்கம் விலை! நாளுக்கு நாள் அதிகரிப்பு..

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க நினைப்போர் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,095-க்கும் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,760-க்கு விற்பனையாகிறது. தங்கதைப் போலவே வெள்ளி விலையும் […]

தென்காசி மாவட்டத்தில் ரூ.24 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், நகரம் (ம) இராமசாமியாபுரம் கிராமம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 91 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட நகரம் (ம) இராமசாமியாபுரம் கிராமம் ஜெயராம் திருமண மண்டபத்தில் 09.10.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் […]

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை; சென்னை விமான நிலையத்தில் குவியும் பயணிகள்! – டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு..

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது நவரத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் […]

ரூ.2,000 கொடுத்தால் மின் இணைப்பு..!’ – லஞ்சம் கேட்ட அதிகாரி… சிக்கவைத்த விவசாயி!

ரூ.2,000 கொடுத்தால் மின் இணைப்பு..!’ – லஞ்சம் கேட்ட அதிகாரி… சிக்கவைத்த விவசாயி! திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள கொங்கல்நகரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன். இவர் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெறவேண்டி தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், விவசாயி ஜெயராமனை அலுவலகத்துக்கு அழைத்த கொங்கல்நகர மின்சாரத் துறை உதவிப் பொறியாளர் சத்தியவாணிமுத்து, மின் மீட்டர் பொறுத்தி இணைப்பு தர ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன் இது […]

முரசொலி செல்வம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும் எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமானவர் முரசொலி செல்வம். இவர் கருணாநிதியின் உடன்பிறந்த சகோதரியான சண்முக சுந்தரம்மாள் மகன். இவர் கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்துள்ளார். சமீபத்தில் லேசாக உடல் நலம் பாதிக்கப்பட்டார். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று மாரடைப்பால் அவர் காலமானார். முதல்வர் ஸ்டாலின் இரங்கல் மறைந்த செல்வம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இவரது இரங்கல் செய்தியில்; கருணாநிதியின் மூத்த பிள்ளை சிறு வயது முதல் முரசொலியின் […]

தொடர் விடுமுறை எதிரொலி!சென்னையில் வெளியூர்களுக்கு 4 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கம்..

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் நாளை (வெள்ளிக்கிழமை)யும் அதனை தொடர்ந்து சனிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு பொது விடுமுறை நாளாகும். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள், பஸ், ரெயில்களில் நேற்று முதல் பயணத்தை தொடங்கி விட்டனர்.பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டதால் இன்று வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகிறது.கிளாம்பாக்கம், […]

ரத்தன் டாடா காலமானார்: அவரது உடலுக்கு அரசு மரியாதை: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு! அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்… 

ரத்தன் டாடா காலமானார்: அவரது உடலுக்கு அரசு மரியாதை: மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு! அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்… மும்பை தேசிய மையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ரத்தன் டாடாவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என குடும்பத்தார் தகவல். ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை தரப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு. குடியரசுத் தலைவர் இரங்கல்: குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்; ரத்தன் டாடா […]

ஹரியானா தேர்தல் முடிவு! EVM மீது குற்றச்சாட்டு: ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த காங்.!

ஹரியானா தேர்தல் முடிவு! EVM மீது குற்றச்சாட்டு.. ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த காங்.! ஹரியானா தேர்தல் முடிவு குறித்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டிய காங்கிரஸ், இன்று அதன் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளது. ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் நேற்றைய வாக்கு எண்ணிக்கையின்போது, தொடக்கத்தில் காங்கிரசுக்கு சாதகமாக இருந்தநிலை பின்னர் மாறி, பாரதிய ஜனதாவுக்கு வெற்றியாக அமைந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருந்தது. முன்னதாக, ஹரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம், தேர்தல் ஆணைய இணையதளத்தில் […]

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் மழை! வானிலை மையம் எச்சரிக்கை..

லட்சத்தீவு மற்றும் அதனை யொட்டிய தென்கிழக்குப் அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு இருப்பதால் குறிப்பாக தமிழகம், லட்சத்தீவு மற்றும் அரபிக் கடல் போன்ற பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், கோவை, ராணிப்பேட்டை ஆகிய […]

சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது..

சென்னை மெட்ரோ பணிகளுக்காக கத்திப்பாரா சந்திப்பில் அக்.11 முதல் 14 வரை சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது..  கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.  போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை பெல் இராணுவ சாலை சந்திப்பில் […]

திருப்பூரில் சட்டவிரோத நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் மூன்று பேர் பலி!காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு  தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்!  – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருப்பூர் பாண்டியன் நகர் சத்யா காலனியில், கார்த்திக் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக தயாரித்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வீட்டின் அருகில் இருந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிகுண்டு வெடித்து கட்டிடம் சிதறியதில், அந்த தெருவில் வசித்து வந்த  எஸ்டிபிஐ கட்சி தொண்டர் அபுதாஹிரின் ஒன்பது மாத குழந்தை ஆலியா ஷெரின் மீது கல் விழுந்ததால் அந்தக் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சத்யா காலணியில் […]

சென்னை மாநகரிலேயே தேவையான உற்பத்தி இருக்கும் போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தரமற்ற ஆவின் பால் விநியோகம் ஏன்..? சு.ஆ.பொன்னுசாமி கேள்வி..

சென்னை மாநகரிலேயே தேவையான உற்பத்தி இருக்கும் போது விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு தரமற்ற ஆவின் பால் விநியோகம் ஏன்..? சு.ஆ.பொன்னுசாமி கேள்வி.. சென்னை மாநகரின் தினசரி பால் தேவையில் சுமார் 50% அளவிற்கு பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் என மூன்று இடங்களில் ஆவின் பண்ணைகள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பால் கொள்முதலும் சீரான அளவில் நடப்பதாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்து ஏற்கனவே […]

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்விற்கு மதிப்பளிக்கும் அரசு நமது அரசு!- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை..

  தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் 2024-25 கல்வியாண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசின் 60% பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் முதல் தவணைப் பெறப்படும் நிலையில், இந்தாண்டு இத்தொகை உரிய காலத்தில் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள், கடந்த செப்டம்பர் 27 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களைச் […]

திருமாவளவன் கோரிக்கை நியாயமானது! எச்.ராஜா பேட்டி..

திருச்சியில் பா.ஜ.க. தமிழக ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-3-வது முறையாக அரியானாவில் பாஜக ஆட்சி அமைய உள்ளது. தேர்தலில் வெற்றியை பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்த காங்கிரஸ் கூட்டணிக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ஒரு அரசு எப்படியெல்லாம் ஏற்பாடு செய்யக்கூடாது என்பதற்கு ஒரு அடையாளமாக மெரினாவில் நடைபெற்ற ஏர் ஷோ நடந்துள்ளது.இந்த அரசால் மக்களுக்கு குடிநீர் கூட கொடுக்க முடியவில்லை.தனது நண்பர்கள் நலனுக்காக விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது கார் […]

சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் கைது! பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்..

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் தொழிற்சங்க அங்கீகாரம், 8 மணி நேர வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களின் போராட்ட பந்தலை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த் துறையினர் நேற்று இரவோடு, இரவாக அகற்றி உள்ளனர்.அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேரை கைது செய்து சட்டவிரோதக் […]

தக்காளி விலை மீண்டும் கிடு கிடு உயர்வு! அதிர்ச்சியில் நடுத்தர மக்கள்..

தக்காளி விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த சில நாட்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்து விற்பனையானது.இந்நிலையில்,  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த மார்க்கெட்டில் இந்த விலை என்றால், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.70 முதல் ரூ.100 வரை […]

பாஜகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மை  அணி மாவட்டத் தலைவர் காங்கிரஸில் இணைந்தார்..

பாஜகவின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மை  அணி மாவட்டத் தலைவர் காங்கிரஸில் இணைந்தார்.. சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் முகமது அலி பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்..

அரியானாவில் படு தோல்வி! ஜம்மு காஷ்மீரில் அசத்திய ஆம் ஆத்மி கட்சி..

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.காங்கிரஸ் தேசிய மாநாடு கூட்டணி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிரமாக தேர்தலை எதிர்கொண்டன.ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!