சென்னை மாநகரின் பல பகுதிகளில் இரவிலும் வெளுத்து வாங்கிய கனமழை.

சென்னை மாநகரின் பல பகுதிகளில் இரவிலும் வெளுத்து வாங்கிய கனமழை. ஜாம்பஜார், மீசாபேட்டை பகுதி சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர். சென்னை ஐஸ்ஹவுஸ் சாலையில் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக வெளியேற்றம். 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கிய நிலையில் முற்றிலும் அகற்றம். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு.சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. கனமழை […]

சென்னை முழுவதும் கொட்டித் தீர்க்கும் கன மழை..

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகலில் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.இதேபோல், ராயப்பேட்டை, ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் காலை […]

எஸ்ஐஆர் திருத்தத்தை முறையாக மேற்கொள்க: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தல்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கின்ற வாக்களிக்கின்ற உரிமையை மறுப்பது சரியானது அல்ல, வாக்காளர் சிறப்பு முறை திருத்தத்தை முறையாக மேற்கொள்க! திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தல். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., தெரிவித்துள்ளதாவது; SIR எனும் சிறப்பு வாக்காளர் திருத்தம் நடத்துவதற்கான தேதி தேர்தல் ஆணையத்தால் 2025 டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் சிறப்பு முகாம்களில் கொடுக்கப்பட்ட படிவங்கள் வாக்குச்சாவடி நிலை […]

வடகிழக்கு பருவமழையில் தோல்வியடைந்த திமுக அரசு சலுகை மழையில் மக்களை திருப்தி படுத்திவிடலாம் என ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறது – என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு சந்தனமாரியம்மன் கோவிலில் அதிமுக நகர் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., கிராமம் கிராமமாக சென்று நடைபெற்று வரும் வாக்காளர் சீர்த்திருந்த பணிகளை ஆய்வு செய்து, நீக்க வேண்டியவர்களை நீக்கவும், சேர்க்க வேண்டிய வாக்காளர்களை சேர்ப்பது குறித்தும், இந்த பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து பயிற்சி வழங்கி […]

சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் காதிர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள காதிர்வலி தர்கா ஹசரத் செய்யது சாகுல் ஹமீது காதிர் வலி பாதுஷாவின் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை தர்கா கமிட்டி எத்திஹாசா சாகிப் சர்குரு என்ற இம்தியாஸ், அபுதாகிர், ஜாகிர் உசேன்,, ஜுலான் பாஷா, மற்றும் டிரஸ்ட் சித்திக் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் […]

சோழவந்தான் அருகே நெடுங்குளம் அருள்மிகு வெங்கலநாதமுடைய அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பூர்ணகலாதேவி புஷ்ப கலாதேவி சமேத வெங்கலநாதமுடைய அய்யனார் திருக்கோவில் மூன்றாவது வருடாந்திர அபிஷேக விழா நடைபெற்றது. திருக்கோவில் அர்ச்சகர் முருகன் புனித தீர்த்தங்களை கொண்டு வந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]

சோழவந்தான் வைத்தியநாதபுரம் அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீ நொண்டி கருப்பணசாமி ஆலய கும்பாபிஷேக விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ பொம்மி அம்மாள் ,சுவாமி ஸ்ரீ நொண்டி கருப்பு சுவாமிகளின் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது பிரசாத் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜையினை நடத்தினர். தொடர்ந்து காலை கடம் புறப்பாடாகி திருக்கோவிலை சுற்றி வலம் வந்து கும்பத்தின் மேல் புனித […]

வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற மெசஞ்சர் செயலிகளைப் பயன்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய கட்டுப்பாடு..

வாட்ஸ்ஆப், டெலிகிராம் போன்ற மெசஞ்சர் செயலிகளைப் பயன்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. நாடு முழுவதும் வாட்ஸ்ஆப், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஸ்னாப் சாட் போன்ற மெசஞ்சர் செயலிகளை 60 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து, முதல்முறையாக உள்நுழைவதற்கு மட்டும் பதிவிடும் தொலைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி இருந்தால் போதும், பின்னர் சிம் கார்டு இல்லையென்றாலும் செயலிகளைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை இருந்தது. இணைய வசதி இருந்தால், […]

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை!- நாகர்கோவில் உட்கோட்டம்; போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை!- நாகர்கோவில் உட்கோட்டம்; போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு! நாகர்கோவில் மாநகரில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு, வரும் 2.12.2025 மற்றும் 3.12.2025 ஆகிய தேதிகளில் திருவிழாவை காண வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 1.கேப்ரோடு வேப்பமூடு சந்திப்பிலிருந்து கோர்ட்ரோடு மார்க்கமாகவும், செட்டிகுளம் APN பிளாசா சந்திப்பிலிருந்து பீச் ரோடு நோக்கியும் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்படும். 2.கன்னியாகுமரி, இருளப்பபுரம், ஈத்தாமொழியிலிருந்து, பீச் ரோடு […]

தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா (PMNAM)

தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக, பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் அப்ரண்டீஸ் மேளா (PMNAM) வரும் 08.12.2025 அன்று திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேர்க்கை முகாம் அரசு தொழிற் பயிற்சி நிலையம், தென்காசியில் வைத்து நடைபெறுகிறது. இந்த தொழில் பழகுநர் சேர்க்கை முகாமில் ஐ.டி.ஐ இரண்டாண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகள். பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து […]

ஆவின் நெய் விற்பனை விலை உயர்வு; ஜிஎஸ்டி வரி குறைப்பை வைத்து நாடகமாடிய ஆவின் நிர்வாகத்தின் சாயம் வெளுத்தது.! பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு..

கடந்த செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவித்ததன் அடிப்படையில் UHT பால் மற்றும் பனீர் வகைகளை 5% ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்தும், நெய், வெண்ணெய், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்களுக்கான ஜிஎஸ்டியை 12% லிருந்து 5% ஆகவும், ஐஸ்கிரீம் வகைகளை 18% லிருந்து 5% ஆகவும் ஜிஎஸ்டி குறைப்பு செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வந்தது. செப்டம்பர் 22முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமுலுக்கு […]

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து:- 11 பேர் உயிரிழப்பு..

திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் கும்மங்குடி பாலம் அருகே திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்களும், பிற வாகனங்களில் வந்தவர்களும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் […]

சொந்த பயன்பாட்டு வாகன பதிவுக்கு இனி ஆர்.டி.ஓ., ஆபீஸ் வர தேவையில்லை: புதிய விதிமுறை நாளை முதல் அமல்..

சொந்த பயன்பாட்டு வாகன பதிவுக்கு இனி ஆர்.டி.ஓ., ஆபீஸ் வர தேவையில்லை: புதிய விதிமுறை நாளை முதல் அமல்.. சொந்த பயன்பாட்டுக்காக வாங்கப்படும் புதிய வாகனங்களை பதிவு செய்ய, ஆர்.டி.ஓ., எனும் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இனி வாகனங்களை கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய நடைமுறை, நாளை முதல் அமலாகிறது. தமிழகத்தில் மொத்தம் 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. டூ – வீலர்கள், கார்கள், கனரக வாகனங்கள் உட்பட […]

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டத்தில்உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் இந்து நட்டாத்தி நாடார் உறவின் முறை மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வாளாகத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமினை உசிலம்பட்டி தி மு க நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார். நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் க. பரமசிவம் உசிலம்பட்டியில் இருக்கும் […]

எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 11 ஆம் தேதி வரை நீட்டிப்பு..

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையான, எஸ்ஐஆர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச. 11 ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக எஸ்ஐஆர் படிவத்தை ஒப்படைப்பதற்கான கடைசி தேதி டிச. 4 என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிச. 11 ஆம் தேதி நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16 ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் […]

‘டிட்வா’ புயல் காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கிமீ, வேதாரண்யத்திற்கு வடகிழக்கில் 140 கிமீ மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கில் 180 கிமீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல்..

தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த டிட்வா புயல் தற்போது 12 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில் ‘டிட்வா’ புயல் காரைக்காலுக்கு கிழக்கு-வடகிழக்கில் சுமார் 100 கிமீ, வேதாரண்யத்திற்கு வடகிழக்கில் 140 கிமீ மற்றும் சென்னைக்கு தென்-தென்கிழக்கில் 180 கிமீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ‘டிட்வா’ புயல் […]

அன்பையும் ஆதரவையும் அளிக்க வேண்டும்; உலக எய்ட்ஸ் நாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 1986-ஆம் ஆண்டு சென்னையில் முதன் முதலாக எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழ்நாடு அரசு, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பணியில் கடந்து வந்த 39 ஆண்டு காலப் பணியானது மிக நெடியதும், வெற்றிகரமானதும் ஆகும். புதிய எச்.ஐ.வி தொற்றினை முற்றிலும் தடுக்கும் விதமாக மாநில அரசின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு […]

வத்தலக்குண்டு  தக்காளி சந்தையில் தொடர் மழை காரணமாக,   வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை கடும் உயர்வு. ஒரு கிலோ ரூ 90-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..

வத்தலக்குண்டு  தக்காளி சந்தையில் தொடர் மழை காரணமாக,   வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை கடும் உயர்வு. ஒரு கிலோ ரூ 90-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி. அனைத்து காய்கறிகள் விலையும் உயர்வு. வத்தலக்குண்டு  தக்காளி சந்தையில் தொடர் மழை காரணமாக,   வரத்து குறைந்துள்ளதால், தக்காளி விலை கடும் உயர்ந்துள்ளது. இதனால், சனிக்கிழமை  ஒரு கிலோ தக்காளி ரூ 90-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு  நிலக்கோட்டை பகுதிகளில் தக்காளி விளைச்சல்  நவம்பர், டிசம்பர் […]

வலுவிழந்த டிட்வா புயல்: பாம்பன் பாலத்தில் மீண்டும் ரயில் இயக்கம்..

ராமேஸ்வரம் பாம்பன் பாலம் வழியாக மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டிட்வா புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வட இலங்கை கடற்பகுதிகளில் பகுதிகளில் உருவான டிட்வா புயல், வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) அதிகாலை, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உள்ளது. […]

டிட்வா புயல் எதிரொலி; திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அவசர உதவி எண் அறிவிப்பு..

டிட்வா புயல் எதிரொலியால் நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இந்நிலையில், திருச்சி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில் அவசர உதவி எண்கள் அறிவித்துள்ளனர்.அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் 1077 மற்றும் 0431 2418995 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் அதிகனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!