நெல்லை தென்காசி மாவட்டங்களில் நாளை மின்தடை..

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உபமின் நிலையங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.10.2024) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மானூர் உப மின் நிலையத்தில் 16.10.2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில் காலை […]

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! சென்னையில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் மற்றும் தண்டையார்பேட்டையில் 6.1 செ.மீ மழை பெய்துள்ளது. பலத்த காற்று வீசியதால் சென்னையில் 8 மரங்கள் சாய்ந்துள்ளன. தற்போது வரை ஒரு மரம் அகற்றப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் அனைத்து மரங்களும் அகற்றப்படும். 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இங்கு தண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு உள்ளன. கணேசபுரம் மற்றும் பெரம்பூர் சுரங்கப்பாதையைத் […]

கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள்..

கனமழை எச்சரிக்கை தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள்.. 15.10.2024 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். 15.10.2024 முதல் 18.10.2024 வரை தனியார் ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும். தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்புப் படகுகள் […]

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்!- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்!- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.. மேலும், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் […]

விடிய விடிய பெய்த மழை! பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை..

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருசில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் பள்ளிகளுக்கு […]

“தொடங்கியது கன(தொடர்)மழை.!, வருகிறது அதிதீவிர கனமழை..! கவனமாக செயல்படாவிட்டால் ஏற்படும் மிகப்பெரும் பிழை..!!-பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெச்சரிக்கை.

“தொடங்கியது கன(தொடர்)மழை.!, வருகிறது அதிதீவிர கனமழை..! கவனமாக செயல்படாவிட்டால் ஏற்படும் மிகப்பெரும் பிழை..!! -பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் முன்னெச்சரிக்கை. பொதுமக்கள் உறங்கும் நள்ளிரவு நேரத்தில் கண்விழித்து, அவர்கள் காலையில் எழுந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பிறகும் கூட அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்தில் அயராது பாடுபட்டு வரும் எனதருமை பால் முகவர்களே, பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களே, பால் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் உற்பத்தியாளர்களே அனைவருக்கும் வணக்கம். புயல், மழை, வெள்ளம், மூடுபனி, […]

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது..

தமிழ்நாட்டில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதை பார்க்க முடிகிறது. நாளைய தினம் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 5:30 மணிக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டி நகருவதால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.திருவள்ளூர், செங்கல்பட்டு, […]

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும். அடுத்தாண்டு […]

ஸ்கேட்டிங் மூலம் சாதனை படைத்த மூன்றரை வயது சிறுமி; தென்காசி எம்எல்ஏ பரிசுகள் வழங்கி பாராட்டு..

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் மூன்றரை வயது சிறுமி 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் 50 நிமிடத்தில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சாதனை சிறுமியை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார், சுரண்டை நகரமன்ற தலைவர் வள்ளிமுருகன் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் செல்வராஜ். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு கேடன்ஸ் மார்ஷியா என்ற மூன்றரை […]

தென்காசி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் தாமதமின்றி வழங்க வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தாமதமின்றி ரேஷன் கார்டுகள் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேசன் கடை எண், ரேசன்கடை ஊழியர் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் மண்டல / தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள உங்கள் ஸ்மார்ட் கார்டு (333XXXXXX034) பெற்று கொள்ளவும் என விண்ணப்பதாரரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது. இந்த குறுஞ்செய்தி வந்தவுடன் தாலுகா அலுவலகத்திற்கு […]

ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின் கீழ் அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் என்ற திட்டத்தின்படி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்” ஏழாம் கட்டமாக எதிர் வரும் 16.10.2024 புதன்கிழமை முற்பகல் […]

இனி18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதாருக்கு விண்ணப்பித்தால்!- புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது..

இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து அட்டையை பெற முடியும். இங்கேயே பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனிடையே எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி, தற்சமயம் தரகர்களின் உதவியுடன் ஆதார் அட்டை வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில், திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்களுக்கு மாரிமுத்து என்பவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ஆதார் அட்டை பெற்றுத் தந்ததாக கைது செய்யப்பட்டார்.கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், 100 பேருக்கு […]

திருவள்ளூர் அருகே நடந்த ரயில் விபத்தின் எதிரொலி!! இன்று (அக்.,12) 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு..

திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து, இன்று (அக்.,12) 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீஹாரின் தர்பங்கா செல்லும் விரைவு ரயில், திருவள்ளூர் – கவரைப்பேட்டை மார்க்கத்தில், ‘லுாப் லைனில்’ நின்றிருந்த சரக்கு ரயில் மீது, நேற்றிரவு 8:27 மணியளவில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று (அக்.,12) 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]

சபாஷ் விமானி டேனியல் பெலிசோ! அனைவரது வாழ்த்து மழையிலும்..

திருச்சி விமான நிலையத்தில் 141 பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி டேனியல் பெலிசோவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது. விமானத்தை டேனியல் பெலிசோ என்ற விமானி இயக்கினார். மாலை 5:40 மணிக்கு கிளம்பிய விமானம் நடுவானில் பறந்த போது, ஹைட்ராலிக் பெயிலியர் காரணமாக, தானாக உள்ளே செல்ல வேண்டிய சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், விமானத்தை எமர்ஜென்ஸி லேண்டிங் […]

தொழில் நுட்ப கோளாறால் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானத்திலேயே வட்டமடித்த திருச்சி-சார்ஜா விமானம்; பீதியில் உறைந்த பயணிகள்..

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனால், விமானம் தொடர்ந்து வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது. விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு […]

திருவள்ளூர் அருகே பயங்கர ரயில் விபத்து: நடந்தது என்ன??

திருவள்ளூர் அருகே பயங்கர ரயில் விபத்து: நடந்தது என்ன?? மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற ‘பாக்மதி எஸ்பிரஸ்’ ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது  பெரம்பூரில் இருந்து 7.44 அளவில் புறப்பட்ட இந்த ரயில், 8.27 மணியளவில் கவரைப்பேட்டை அருகே வந்துள்ளது.  தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. வேகமாக மோதியதால் ரயில் பெட்டிகள் தடம் புரண்டு 2 பெட்டிகள் எரிந்து வருகின்றன.  பயணிகள் விரைவு ரயிலின் […]

மறந்து போன உணவு தானியங்களை வைத்து இயற்கை உணவுத்திருவிழா நடத்தி அசத்திய பள்ளி..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை உணவு திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.,வழக்கம் போல இந்த ஆண்டும் இந்த உணவு திருவிழா பள்ளி வகுப்பறை வளாகத்தில் நடைபெற்றது.,மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் உதவியோடு இயற்கை உணவுகளான கம்பு மற்றும் கேப்பை கூல், கேப்பை புட்டு, அரிசி மாவு புட்டு, கொழுக்கட்டை, தேன் மிட்டாய், முளைகட்டிய பாசி பயறு, சுண்டல் பயறு, பழங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், பச்சை காய்கறிகளால் செய்யப்பட்ட உணவு […]

“சர்வதேச பெண் குழந்தைகள் தினம்”!பெண்கள், பெண் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உறுதியேற்போம்.!-பால் முகவர்கள் சங்கம்  அறிக்கை…

“சர்வதேச பெண் குழந்தைகள் தினம்”!பெண்கள், பெண் குழந்தை மீதான பாலியல் வன்கொடுமைகள் நிகழாமல் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உறுதியேற்போம்.!-பால் முகவர்கள் சங்கம்  அறிக்கை… விவசாயம் முதல் விண்வெளி வரையிலும், இலகு பணிகள் தொடங்கி மிக கடினமான ராணுவப் பணிகள் வரையிலும் மட்டுமின்றி விளையாட்டு, கலை, இலக்கியம் என உலகில் எத்தனை துறைகள் உண்டோ அத்துணை துறைகளிலும் ஆணுக்கு சரிநிகர் சமமாக பூமியில் தொடங்கி, விண்வெளி வரையிலும் சரித்திர சாதனைகள் படைத்து கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த […]

டாடா குழுமத்தின் புதிய தலைவர்: யார் இந்த நோயல் டாடா..

மும்பையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.டாடா ஸ்டீல், வாட்ச் நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக நோயல் டாடா உள்ளார். நோயல் டாடா 2000-களின் முற்பகுதியில் இணைந்ததில் இருந்து டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய நபராக விளங்கி வருகிறார். சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் கூட்டத்தைத் தொடர்ந்து, டாடா டிரஸ்டின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டார். […]

கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அரசு பேருந்திற்கு வழிவிட மறுத்து டிரைவருடன் தகராறில் ஈடுபடும் இளைஞர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து நேற்று இரவு பேரையம்பட்டிக்கு அரசுப்பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.பேருந்து டிரைவர் பாண்டி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.பேருந்து எழுமலை புல்லுக்கடை மைதானத்தின் அருகே சென்ற போது சில இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அருகில் நின்று கொண்டிருந்தனர்.பேருந்து செல்ல வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் பாண்டி ஹாரன் அடிக்க இருசக்கரவாகனத்தை எடுக்க மறுத்து டிரைவர் மற்றும் நடத்துனரை கெட்டவார்த்தையால் திட்டி அடிக்கச் சென்றுள்ளனர்.அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பது […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!