சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி செய்யப்பட்டு வடகரை அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக காவல்துறை மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது. பசியில்லா தமிழகம் குழுவினர் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் அனுமதியின் பேரில் சங்கரன்கோவில் பகுதிக்கு விரைந்து சென்றனர். சங்கரன்கோவிலுக்கு விரைந்து […]
Category: செய்திகள்
தமிழ் மண்ணில் விஷக்கருத்தை விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு..
விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றிய தனது முகநூல் பதிவில், இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு தனது கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்கு சில கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ளார். ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் […]
விபத்தில்லா மாசற்ற தீபாவளி கொண்டாட தென்காசி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்..
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 31.10.2024 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பும் பட்டசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும், பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிக்க வேண்டும். பெரியவர்கள் உடனிருக்கும் போது பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் […]
தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை; கவிஞர் பேரா பாராட்டு..
சென்னை மழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா பாராட்டியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், பருவமழை பாதிப்புகளிலிருந்து மக்களை குறிப்பாக சென்னை மக்களை காப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுத்த துரிதமான முன்னெச்சரிக்கைகளால் பாதிப்புகள் ஏதும் இன்றி சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பாராட்டி இருப்பதும் பெருமைப்படத் […]
கடையம் யூனியன் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு..
கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள இந்திரா நகரில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்திரா நகரில் உள்ள, 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வாட்டர் டேங்கின் பில்லர்கள் மிகவும் பழுதடைந்த காரணத்தினால், அதனை சரி செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக வாட்டர் […]
“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டிய தென்காசி மாவட்ட எஸ்.பி..
தென்காசி தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன், தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்பதை வடிவமைத்த மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டி பரிசு வழங்கினார். தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் […]
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பட்டறை
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு எண் 191 சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ஜெயா தலைமையில் நடந்தது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தார். மாணவி அபிதா பெல்சியா வரவேற்றார். சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை நிலைய அலுவலர் உ.ரமேஷ் தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்புரை மற்றும் பயிற்சி வழங்கினார். அவருடன் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் […]
மேலகரம் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி; தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழங்கினார்..
மேலகரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் 11ஆம் வகுப்பு படிக்கும் 73 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். தென்காசி மாவட்டம், மேலகரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். பேரூர் கழக செயலாளர் சுடலை வரவேற்புரை ஆற்றினார். […]
உசிலம்பட்டி அருகே வீட்டிற்குள் புகுந்து அச்சுறுத்திய 5 அடி நீளமுள்ள உடும்பு,தீயணைப்புத்துறையினர் மீட்டனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினி, இவரது வீட்டிற்குள் சுமார் 5 அடிக்கு மேல் நீளமுள்ள உடும்பு புகுந்து வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டில் உள்ள பொருட்களை கீழே தள்ளிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரஜினி, உசிலம்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார், இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் போராடி வீட்டிற்குள் புகுந்த உடும்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.,சுமார் […]
பீடித் தொழிலாளர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்; நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை..
நெல்லை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பீடித் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை 800 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டெல்லியில் ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன் ஷுக் மாண்டவியாவை 16.10.2024 அன்று நேரில் சந்தித்து எம்.பி. ராபர்ட் புரூஸ் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இடம் […]
தப்பியது சென்னை: சிக்கியது ஆந்திரா: புரட்டி போடும் புயல், இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு..
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஆந்திராவில் திருப்பதி, நெல்லூர் உள்ளிட்ட ராயல சீமா மாவட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த புயல் நேரடியாக சென்னையை தாக்கும் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல நகர்ந்து ஆந்திரா மாநிலத்தில் தென் மாவட்டங்களான திருப்பதி, ராயல சீமா மாவட்டங்கள் வழியாக கரையே கடக்கிறது.சென்னை தப்பிய நிலையில் நேற்று முதல் திருப்பதி […]
வல்லநாடு மலைப்பகுதியில் விதைப்பந்துகள் மூலம் பசுமை பாதுகாப்பு பணி; பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
பூமியில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக வல்லநாடு மலையில் பள்ளிச் சிறுவர், சிறுமியர்களால் விதைப்பந்துகளை தன்னார்வத்துடன் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இயற்கை மற்றும் சமூக நல ஆர்வலர்கள், கல்வித்துறை, வனத்துறை, காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பசுமையை பாதுகாக்கும் பணியில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் காலாண்டு விடுமுறையில் தாம் செய்த விதைப் பந்துகளுடன் வந்திருந்தனர். 21,000 விதைப்பந்துகளை இந்த […]
தென்காசியில் இளைஞர் எழுச்சி தின பேரணி; மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்…
தென்காசியில் இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என என்றும் போற்றப்படும் பன்முகத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15 ஆம் […]
கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தப்பியது சென்னை! நிம்மதி பெருமூச்சு விடும் மக்கள்..
வட சென்னை மற்றும் தெற்கு ஆந்திரத்துக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்தது. இந்த நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில், புதுச்சேரி மற்றும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு […]
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!!
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!! செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
கீழக்கரை மின் வாரிய அலுவலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறைவு.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின்வாரியத் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருந்து வருவதாகவும் இது தொடர்பாக மக்கள் நல பாதுகாப்பு கழக அமைப்பு சார்பில் தமிழக முதல்வர், தமிழக மின்சார துறை அமைச்சர், தமிழக மின்சார துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு மூலம் அனுப்பி உள்ளதாகவும் மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தெரிவித்துள்ளார் மேலும் அவர் கூறுகையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின்சார வாரிய அலுவலகத்தின் […]
தஞ்சை மாநகராட்சியை கண்டித்து நாளை நடைப்பெற இருந்த சங்கு ஊதும் போராட்டம் ஒத்திவைப்பு
தஞ்சை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும், பயணிகளுக்கு இருக்கைகள் அமைத்திட வேண்டும், கடைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் , கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், யூனியன் கிளப் கட்டடத்தை சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தஞ்சை மாநகராட்சியை கண்டித்து சங்கு ஊதும் போராட்டம் 16 .10. 2024 அனறு காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. […]
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் – சி.ஐ.டி.யூ மாநில தலைவர் செளந்தரராஜன் பேட்டி..
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் – சி.ஐ.டி.யூ மாநில தலைவர் செளந்தரராஜன் பேட்டி. 4 அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். நாளை எங்களது பேரவைக் கூட்டம் நடக்க உள்ளது. அதில் நல்ல முடிவு எடுக்கப்படும். நிர்வாகத்திற்கும் சங்கத்திற்கும் இடையே ஒரு தொடர்பு, இந்த பேச்சுவார்த்தையால் ஏற்பட்டுள்ளது. எதையும் ஒத்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறிய நிர்வாகம், அமைச்சர்களின் அழுத்தத்தால் தற்போது பேச முன்வந்துள்ளது. அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுகள். தொழிற்சங்கப் பதிவு அங்கீகாரம் என்பது எங்களது […]
கனமழை எதிரொலி:- 4 ரெயில்கள் ரத்து! தெற்கு ரயில்வே அறிவிப்பு..
இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.இந்நிலையில், சென்னையில் கனமழை பெய்து வருவதாலும், பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி ரெயில் நிலையம் இடையே தண்ணீர் தேங்கி நிற்பதாலும் சென்னை- ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 4 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருப்பதியில் இருந்து சென்னை வரும் சப்தகிரி ரெயில்,சென்னையில் […]
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!-பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..
வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. சென்னைக்கு இன்றே ரெட் அலெர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரவு முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு. வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தென் மாவட்டங்களுக்கு கனமழைக்கான அலெர்ட் இல்லை, இருப்பினும் ஒரு சில இடங்களில் மழைக்கு […]