திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் “வேதி வினைகள்” எனும் தலைப்பில் பணிமனை (workshop) மற்றும் குழந்தைகளுக்கு “Still life painting” உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளதாக நெல்லை மாவட்ட அறிவியல் மையம் அறிவித்துள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், சர்வதேச அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியக தினத்தை (International Science Centre & Science Museum Day) முன்னிட்டு வருகின்ற 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் […]
Category: செய்திகள்
தென்காசியில் 3-வது புத்தக திருவிழா; இலச்சினை வெளியீடு..
தென்காசி மாவட்டத்தில் 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அதற்கான இலச்சினை மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 15.11.2024 முதல் 24.11.2024 வரை தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பொதிகை புத்தகத் திருவிழாவின் இலச்சினையை 07.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. […]
உசிலம்பட்டியில் நூதன முறையில் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் தலைமறைவு.போலிசார் விசாரணை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் முத்து (எ) சங்கர்நாத் (34).இவர் வின் டிவியில் ஒளிப்பதிவாளராகவும் உசிலம்பட்டியிலுள்ள. தனியார் லோக்கல் சானலில் மேனேஜராகவும் பணியாற்றி வந்தார். சங்கர் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.தன்னிடம் பழகியவர்களிடம் குறைந்தது ரூ10 ஆயிரம் கடன் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.நாளடைவில் பணம் போதவில்லை என நூதன முறையில் மோசடியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். தன்னுடைய உறவினர்கள் மற்றும் பணிபுரியும் இடத்தில் பழகிய பெண்களிடம் தன்னுடைய சோகக்கதையை கூறி அழுது […]
ரியாத்தில் மரணித்த கட்டுமான பணியாளர் ஐயப்பன்; உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமுமுகவினருக்கு உறவினர்கள் நன்றி..
ரியாத்தில் மரணம் அடைந்த கட்டுமான பணியாளர் ஐயப்பன் உடலை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகளுக்கு அவரது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டம் புக்கலம் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 27.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஐயப்பனின் உறவினர் கஜேந்திரன், ரியாத் மண்டல இந்தியன்ஸ் […]
தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்; தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தீர்மானம்..
கூடுதல் ரயில்கள் இயக்குவதில் உள்ள சிக்கலை போக்க தென்காசியில் புறவழி ரயில்பாதை அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் மூன்றாவது முக்கிய ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் பாண்டியராஜா தலைமையில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்க செயலாளர் ஜெகன் முன்னிலை வகிக்க தென்காசி மாவட்டம் சார்ந்த பல்வேறு ரயில்வே கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]
செங்கோட்டை பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்..
செங்கோட்டை நகர பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சுமார் 1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை சமூக ஆர்வலர்கள் காவல் ஆய்வாளர் பாலமுருகனிடம் வழங்கினர். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முக்கிய பகுதிகளில் காவல் துறையினரால் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சமூக நல ஆர்வலர்கள், கல்வி நிறுவனத்தினர் மற்றும் சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும் தங்களை இணைத்துக் கொண்டு தேவையான […]
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட எஸ்.பி; பெண் காவலரின் செயலை பாராட்டி வெகுமதி..
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன், பெண் காவலரின் செயலை பாராட்டி வெகுமதி வழங்கி கெளரவித்த நிகழ்வு காவல் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுதம் வைப்பறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பணியின் போது […]
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.11.2024 திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட […]
பயணியை கன்னத்தில் அறைந்த நடத்துனர் சஸ்பெண்ட்..
நெல்லையில் பயணியை கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மூலக்கரை பட்டியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், இன்று காலை 8.30 மணிக்கு பயணி ஒருவர் லக்கேஜ் உடன் ஏற வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தின் நடத்துனர் அந்த பயணியை ஏறக்கூடாது என்றும், உனது டிக்கெட் வேண்டாம் என்றும், ஆபாச வார்த்தை பேசி பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காட்சி வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் […]
உசிலம்பட்டி அருகே பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாம் தமிழர் கட்சி சார்பாக தொட்டப்பநாயக்கனுர் ஊராட்சி குன்னூத்துப்பட்டி கிராமத்தில் அசுவமா நதிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளராகிய வினோத் அருண்பாண்டி ராஜா மணிவண்ணன் முனியப்பன் பிரபாகரன் சரத்குமார் வைரமணி கலைவாணன் மற்றும் பல மற்றும் பல நிர்வாகிகளும் மகளிர் பாசறை விமலா தேவி ,பிரியா, விஜி முத்துமாரி முனியம்மாள் நித்தியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுக்காமல் ஏமாற்றும் தமிழக அரசு?-அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-2021-ம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை.அதுகுறித்து கேட்கும் போதெல்லாம், மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டை கணக்கிட போதிய பணியாளர்கள் இல்லை என்று கூறி வந்தது. ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், […]
சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்… த.வெ.க. நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் விஜய்..
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.இதைத் தொடர்ந்து கடந்த 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமான முறையில் தமிழக வெற்றிக்கழக மாநாட்டை நடத்திக் காட்டினார்.இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றது தமிழக அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.பாரதிய ஜனதா, தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தனது எதிரி என மாநாட்டு மேடையில் அறிவித்த விஜய் 2026-ம் […]
தீபாவளி முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் அலை மோதும் கூட்டம்..
தீபாவளி பண்டிகை ஒட்டி தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த புதன்கிழமை முதலிலே வரத் தொடங்கினர். வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் அரசு விடுமுறை என்பதால் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டாடினர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் இன்று தங்கள் பணிபுரியும் இடத்திற்கு பொதுமக்கள் செல்லத் துவக்கி உள்ளனர். […]
121 ஆண்டுகள் இல்லாத வகையில் உச்சமாக சுட்டெரிக்கும் வெப்பம்…
வடமாநிலங்களில் வழக்கமாக இந்த மாதத்தில் எல்லாம் வெயில் குறைந்து குளிர்காலம் ஆரம்பித்திருக்கும். ஆனால், இப்போதோ நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. இப்போதுதான் கோடைக்காலம் தொடங்கியது போல டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெயில் வாட்டிக்கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் சராசரி குறைந்தபட்ச வெப்பம் 26.92 டிகிரி செல்சியஸ் என 121 வருடத்தில் இல்லாத புதிய உச்சமாக பதிவாகியுள்ளது. அக்டோபர் மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் முந்தைய ஆண்டுகளைப் போல குறையவில்லை எனவும் நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் குளிர்காலத்தின் அறிகுறியே இருக்காது […]
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு ‘உலகத் தமிழ் மாமணி” விருது
“ தேசியக் கல்வி அறக்கட்டளையும் சென் நெக்சஸ் குழுமமும் இணைந்து ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 4 வது பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை ஐம்பெரும் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது.இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்களின் இலக்கியப் பணிகளையும் உலகு தழுவிய நிலையில் தமிழ் மொழிக்கு ஆற்றி வரும் தொண்டினையும் கருத்தில் கொண்டு “உலகத் தமிழ் மாமணி” என்ற விருதினை, இந்நிகழ்வில் சிறப்பு விருந்pனர்களாகக் கல்ந்துகொண்ட சென்னை, […]
அது கொள்கை இல்லை. அழுகிய கூமுட்டை. நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்..
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். விஜய் கட்சி தொடங்கியது முதல் அவருக்கு ஆதரவாகவே சீமான் பேசி வந்தார். இந்த சூழலில், கடந்த மாதம் 27ம் தேதி த.வெ.க. மாநில மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய விஜய், திராவிடமும் தமிழ் தேசியமும் தங்களது இரு கண்கள் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், விஜய்யை […]
20 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், தூத்துக்குடி, […]
பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி பலியான சார்பு ஆய்வாளர் உடலுக்கு ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் அஞ்சலி..
பரமக்குடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கி பலியான சார்பு ஆய்வாளர் உடலுக்கு ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் அஞ்சலி.. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பின் போது பிளக்ஸ் பேனரை அகற்ற முயன்ற போது மின் டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்ததில் பரமக்குடி சார்பு ஆய்வாளர் சரவணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கமுதி அருகே உள்ள கே.நெடுங்குளம் கிராமத்தில் அவரது உடலுக்கு தமிழக காவல்துறை ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு டேவிட்சன் […]
மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடிய ராகுல்காந்தி..
தீபாவளி பண்டிகையின் போது அகல் விளக்குகளை தயார் செய்யும் ஒரு குடும்பத்தினரை சந்தித்து பேசிய வீடியோ ஒன்றை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் மற்றும் முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்தும், மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மண் பாண்டங்களை தயார் செய்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினேன். அவர்களின் வேலையை அருகில் இருந்து பார்த்து, கற்றுக் கொள்ள முயற்சித்தேன். அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும், சிக்கல்களையும் […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் (நவ.02) மின்தடை..
நெல்லை, தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 02.11.2024 அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மின்வாரிய செய்திக்குறிப்பில் பின்வரும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 02.11.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், […]