4 வது நாளாக சர சரவென சரியும் தங்கம் விலை.‌‌.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) அதிரடியாக சரிந்துள்ளது.. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பிறகு படிப்படியாக குறைந்து வருகின்றது. கடந்த வாரத்தில் ரூ. 58,000-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத் தொடக்கம் முதல் சரிந்து வருகின்றது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 1,080, புதன்கிழமை ரூ. 320 குறைந்து ரூ. 56,360-க்கு விற்பனையானது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ. […]

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு..

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடனாநதி அணை, பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி மற்றும் கீழப்பாவூர் பெரியகுளம் போன்ற பகுதிகளில் சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை மேம்படுத்துவதற்காகவும், வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடனாநதி அணை, பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி மற்றும் கீழப்பாவூர் பெரியகுளம் போன்ற பகுதிகளில் 13.11.2024 அன்று மாவட்ட […]

கைலாசபட்டி கோவில் பூசாரி தற்கொலை விவகாரம்: ஓ.பி.எஸ். தம்பி மீதான வழக்கில் 6 பேர் விடுதலை..

கைலாசபட்டி கோவில் பூசாரி தற்கொலை விவகாரம் – ஓ.பி.எஸ். தம்பி மீதான வழக்கில் 6 பேர் விடுதலை.. தேனி, பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பூசாரி நாகமுத்து கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக கோவில் அறங்காவலர் ஓ.ராஜா உட்பட 7 பேர் மீது பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் […]

மதுரை முல்லை நகர்ப் பகுதியில் 575 குடும்பங்களை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை! -தமிழக முதல்வர் தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மதுரை செல்லூர் பீ.பீ.குளம் அருகில் உள்ள முல்லை நகர்ப் பகுதியில் சுமார் 575 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையாக, திடீரென மாவட்ட நிர்வாகம் அப்பகுதி மக்களை காலி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 575 குடும்பங்களில் 160க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசின் […]

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு..

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்ததை அடுத்து, தமிழ்நாட்டிற்கு நேற்று முன்தினம் (நவம்பர் 11) முதல் வரும் நவம்பர் 18-ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். சொன்னதுபோலவே, சென்னையிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தற்போதுவரை விட்டுவிட்டு கனமழை முதல் லேசான மழை வரை பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாது காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் […]

வாழும் சூழலுடன் நம்முடைய பால்வழி திரளில் மட்டும் 30 கோடி கோள்கள் இருக்கலாம்; நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்..

வாழும் சூழலுடன் நம்முடைய பால்வழி திரளில் மட்டும் 30 கோடி கோள்கள் இருக்கலாம்; நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியம்.. பூமியை போல் வாழ்வதற்கு உகந்த சூழலுடன் 30 கோடி கோள்களை (Habitable exoplanets) பால்வழி திரள் (Milkyway galaxy) கொண்டுள்ளது என நாசா ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரிய தகவலை வெளியிட்டு உள்ளனர். பூமியில் உயிரினங்கள் தோன்றி, ஆட்சி அதிகாரம் செலுத்தும் அளவுக்கு மனித இனம் வளர்ந்துள்ள சூழலில் நாம் வாழும் இந்த அண்டம் தவிர்த்து வேறு வாழ்விடங்கள் உள்ளனவா? என […]

பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு..

சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு வட கடலோரப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தமிழகத்தின் தெற்குப் பகுதிகளான சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், ஆகிய இடங்களில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.

திமுக குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்ட எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பில் உசிலம்பட்டி காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார்.

மதுரை மாவட்டம் மங்கல்ரேவு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அத்திபட்டியில் நடைபெற்ற கூட்டத்தை முடித்துவிட்டு தனது நிர்வாகிகளுடன் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அமமுகவினர் இடைமறித்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.இத்தாக்குதலில் உடன் வந்த அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திருமிபினார். தினேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் சேடப்பட்டி காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள்; மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு […]

அதிரிடியாக குறைந்து வரும் தங்கம் விலை..

சென்னையில் தங்கம் விலை இன்று (நவ.12) அதிரடியாக பவுனுக்கு ரூ.1.080 குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. சென்னையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.7,085-க்கும், பவுனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு பவுன் ரூ.56,680-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் […]

சந்தை குறியீட்டில் இந்தியாவை முந்தியது சீனா! இந்திய பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பும் கடும் சரிவு!..

சந்தை குறியீட்டில் இந்தியாவை முந்தியது சீனா! இந்திய பங்குச்சந்தையின் மொத்த சந்தை மதிப்பும் கடும் சரிவு!..  வளர்ந்து வரும் நாடுகளின் சந்தை முதலீட்டுக் குறியீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22.27% குறியீட்டை பெற்று இந்தியா முதல்முறையாக முதலிடம் பிடித்ருந்தது . இந்நிலையில், ஆகஸ்ட்டில் 21.58%-ஆக இருந்த சீனாவின் சந்தை குறியீடு அக்டோபர் மாத நிலவரப்படி 24.72% ஆக உயர்ந்துள்ளது  இந்தியாவின் சந்தை குறியீடு 22.27%-ல் இருந்து அக்டோபரில் 20.42%-ஆகக் குறைந்துள்ளது. . கடந்த ஜூலை மாத காலக்கட்டத்தில் […]

3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்!- தமிழக அரசு..

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் அவசரகால மற்றும் நோய் கண்டறியும் சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், சுகாதார உள்கட்டமைப்புகளை பெரிய அளவில் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டு முதல், தமிழ்நாடு அரசு 28 தீவிர சிகிச்சை பிரிவுகளும் (CCBs), 20 மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்களும் (DIPHLs) நிறுவுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளது. இத்திட்டங்கள் பல்வேறு கட்டுமான நிலைகளில் உள்ளன. பெரம்பலூர் (பெரம்பலூர் மாவட்டம்), […]

உசிலம்பட்டியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி மு க பாக முகவர்கள் கூட்டம் தேனி ரோடு எம் பி  பழனி மகாலில் நடைபெற்றது.மதுரை தெற்கு மாவட்டம் தி மு க சார்பாக உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பாக முகவர்கள் பி எல் ஏ 2 கூட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் விருதுநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் செல்லத்துரை தலைமையில் உசிலம்பட்டி  நகர செயலாளர் எஸ் ஓ.ஆர் தங்கப்பாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர் இளமகிழன் […]

சென்னை விமான நிலையத்தில் இனி காத்து இருக்க வேண்டாம்!-பயணிகளுக்காக அமலுக்கு வந்த அதி நவீன புதிய திட்டம்..

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் டெர்மினல் 4 -லிருந்து புறப்படும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானங்களின் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் தற்போது பாஸ்ட் ட்ராக் எனப்படும், self package drop (SBD) என்ற புதிய திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன்படி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை, பயணிகளே தானியங்கி இயந்திரங்கள் மூலம், ஸ்கேன் செய்து பரிசோதித்து, கண்வெயர் பெல்ட் மூலம், விமானத்தில் ஏற்றுவதற்கு அனுப்பி வைக்கலாம். […]

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது என்ன?; விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம்..

தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரேவுக்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்துக் கொடுத்ததாகவும், கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு எக்ஸ்ரே பிலிம்க்கு பதிலாக ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியது. இந்த செய்தி முற்றிலும் தவறானது என தென்காசி தலைமை மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தென்காசி அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தெரிவித்துள்ளதாவது, தென்காசி அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி 15 வருடங்களுக்கும் […]

10 ரூபாய் நாணயங்களை மறுக்க கூடாது; தென்காசி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..

இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவிக்கக்கூடாது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் எரிபொருள் நிலையங்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வங்கிகள், மளிகைச் சாமான் கடைகள், காய்கறி கடைகள், திரையரங்கங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பலவிதமான பொருட்களை விற்கும் கடைகள், பலவித சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் அனைத்திலும் இந்திய அரசால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்களை வாங்க […]

ரைஸ்மில் உரிமையாளரை காரில் கடத்தி சென்ற நான்கு நபர்கள் அதிரடி கைது..

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், ரைஸ்மில் உரிமையாளரை காரில் கடத்திச் சென்ற நான்கு நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிலூத்து பகுதியில் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார் உதயகுமார். இவர் கடந்த வருடம் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சூரியகுமார் என்ற நபரிடம் நெல் கொள்முதல் செய்து விட்டு, அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் திருப்பி கொடுத்து பாக்கி பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை […]

அ. தி.மு.க. செல்லம்பட்டி ஒன்றியம்  செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் அ தி மு க செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத்தில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள்  வீராங்கனை ஆலோசனை கூட்டம்  முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில்  மாவட்ட பொறுப்பாளர்  எம் ஜி ஆர் மன்ற மாநில இணைச் செயலாளர் தண்டலை கே. […]

குருக்கள்பட்டி அருகே நடந்த கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆயாள்பட்டி டிடிடிஏ துவக்க பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, தலைமை வகித்தார். தென்காசி எம்பி ஸ்ரீ ராணி குமார் முகாமை துவக்கி வைத்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பெரியதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கோதையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேர்ந்தமரம் நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில், […]

தென்காசி தலைமை மருத்துவமனையில் தேசிய குருதி கொடையாளர் தின விழா..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி மையங்கள் சார்பாக குருதி கொடையாளர் தினம் 08.11.2024 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் “இந்தியாவில் இரத்த மாற்ற மருத்துவத்தின் தந்தை” என்று கருதப்படும் ஒரு இந்திய மருத்துவர் டாக்டர் ஜெய் கோபால் ஜாலியின் பிறந்தநாளை நினைவு கூறுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் […]

அலிகர் பல்கலைக் கழக சிறுபான்மை அந்தஸ்து வழக்கு; உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு மமக வரவேற்பு..

அலிகர் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்பதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இத்தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், சர் சையத் அகமது கான் அவர்களின் மாபெரும் முயற்சியினால் 1875ல் உருவாக்கப்பட்டது ஆங்கிலோ ஓரியெண்டல் கல்லூரி. பிறகு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாறி, 150 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது. இப்பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்காகத் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!