பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இதில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்வது குறித்து தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது..! தமிழக சட்டப்பேரவை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை கூடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய […]
Category: செய்திகள்
பா.ஜ.க-வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? – செந்தில் பாலாஜி கேள்வி..
பா.ஜ.க-வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? – செந்தில் பாலாஜி கேள்வி. பா.ஜ.க-வில் யாரும் ஜாமீனில் வந்து அமைச்சர் ஆகவில்லையா? என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி பொதுமக்களை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: “தமிழக முதல்வர், எந்த காலத்திலும் குறிப்பாக மின்வாரியம் சம்பந்தமாக அதானியை சந்திக்கவில்லை என […]
பழைய ஸ்கூட்டரை இ-வாகனமாக மாற்றி பிரமிக்க வைக்கும் கோவை பெண்!!
பழைய ஸ்கூட்டரை இ-வாகனமாக மாற்றி பிரமிக்க வைக்கும் கோவை பெண்!! கோவையை சேர்ந்தவர் சிவசங்கரி, எம்.டெக்., செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் படித்தவர். படித்த படிப்பின் வாயிலாக புதிய மின்னணு தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதன் படி அன்றாடம் பயன்படுத்தும் இரு சக்கர பெட்ரோல் வாகனங்களை, அப்படியே மின்சார வாகனங்களாக மாற்றித்தருகிறார். இதற்கு புனேவிலுள்ள இந்திய அரசின் ‘ஆட்டோமேட்டிவ் ரிசர்ச் அசோசியேசன் ஆப் இந்தியா’ (ஏ.ஆர்.ஏ.ஐ.) மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை ஆணையம் ( ஸ்டேட் […]
தேவகோட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..
உத்திர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் ஆறு இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பாஜக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு தலைவர் சாதிக் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் சத்திய பிரபு செல்வராஜ், ஜனநாயக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாவல், கண்டன உரை நிகழ்த்தினர். தேவகோட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் கமருல் ஜமான், நகர இஸ்லாமிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மொய்னுதீன், சாதிக்பாட்ஷா , மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் : மூன்று பேர் கைது..!
ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரையில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவாளிகள் தப்பி விடாத வண்ணம் கீழக்கரை போலீசாருக்கு பிரிவு போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்த நபர்கள் சென்ற காரில் தீவிர சோதனை செய்தபோது, காரில் நான்கு கிராம் உயர்ரக போதை பொருளான […]
கண்காணிப்பு கேமரா சேவை : எஸ்பி தொடங்கி வைத்தார்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் சின்னஉடப்பங்குளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன் ஏற்பாட்டில் பொருத்தி கண்காணிப்பு கேமராக்களின் சேவையையும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் இன்று துவங்கி வைத்தார். அபிராமம் அருகே பாப்பனம் கிராமத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 4 CCTV கேமராக்களின் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பொதுமக்கள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.
காசநோய் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம்; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
தென்காசியில் “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 07.12.2024 அன்று “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் […]
கீழக்கரை 18 வாலிபர்கள் ஜக்காத் கமிட்டிக்கு தன்னார்வலர் விருது..
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) சமூக சேவை, மருத்துவ சேவை, கல்வி சேவை, வட்டியில்லா கடன் உதவிகள், பேரிடர் காலத்து உதவிகள், மரக்கன்று நடுதல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றது. மேலும் கோவையில் தனியார் கல்லூரியில் தமிழக குரல் இணையதளம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவப்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் […]
கடையம் அருகே இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 5 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து திருமலையப்பபுரம் திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் […]
மண்டபம் மீனவர் 8 பேருக்கு டிச.20 வரை நீதிமன்ற காவல்: ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு…
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் டி – நகர், மேற்கு வாடி, கோயில் வாடி ஆகிய மீன்பிடி இறக்கு தளங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. இப்படகுகளில் மண்டபம் முகாம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் சகாய ஆன்ட்ரூஸ் ஆகியோரது விசைப்படகுகளில் தொழிலுக்கு சென்ற மீனவர் 8 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் […]
இட ஒதுக்கீடு அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மீண்டும் அமல்படுத்தக்கோரி ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம் பட்டியல் & பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மாநில அரசு அமல்படுத்த கோருவது தொடா்பான ஆலோசனனக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமலிலிருந்த இனச்சுழற்சி அடிபடையில் பதவி வழங்கும் நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள், பட்டியல் & பழங்குடி வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பதவி உயர்வு […]
12-ம் வகுப்பில் படித்த பாடப்பிரிவுக்கு பதிலாக இளங்கலை படிப்பில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சேரலாம்..
12-ம் வகுப்பில் படித்த பாடப்பிரிவுக்கு பதிலாக இளங்கலை படிப்பில் எந்தவொரு பாடப்பிரிவிலும் சேரலாம்.. இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது. குறிப்பாக பட்டப்படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி தொடர்பாக வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் முக்கியமாக 12-ம் வகுப்பு அல்லது நிலை 4-ல் ஒரு மாணவர் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் சேர முடியும். அதேநேரம் […]
தமிழகத்தில் மீண்டும் கன மழை! பொதுமக்களே உஷார்..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். தமிழகத்தில் டிச.,10ம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது’ என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும். மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடையும். டிச.,11ம் தேதி தமிழகம்- இலங்கை கடற்பகுதிகளை நோக்கி […]
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள்!- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 5,556 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.இதுவரை சுமார் 62,000-க்கு மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இசிஜி, எக்ஸ்ரே போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது . இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் இறுதி மட்டுமல்லாமல் தேவைக்கு ஏற்ப ஜனவரி மாதமும் […]
மண்டபம் மீனவர் 8 பேர் 2 விசைப்படகு களுடன் கைது:இலங்கை கடற்படை நடவடிக்கை..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றனர். இலங்கை யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மண்டபம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் ஆஸ்டின் ஆகியோரது விசைப்படகுகளில் இருந்த சேசு 47, காளி 50, கண்ணன் 55, முத்துராஜ் 45, பத்தரப்பன் 55 உள்பட 8 மீனவர்களை […]
மண்டபம், திருப்புல்லாணி வட்டாரத்தில் உலக மண் வள பாதுகாப்பு தின விழா..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்புல்லாணி வட்டாரங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறை, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், மண்ணை மலடு ஆக்காமல், அதன் வளம் காக்க வேண்டும் மண் மாசடைவதை தடுக்க வேண்டியது அனைவரின் கடமை என்றார். மண் பராமரிப்பு குறித்து திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் செல்வம் விளக்கம் அளித்து துவக்கி வைத்தார். […]
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு..
திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவா்கள் உயிரிழப்பு.. திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அருகே கொசவப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி. இவரது மகன் கோகுல் (13). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் மணிமாறன் மகன் யாதேஸ்வா் (10), ஞானசெல்வம் மகன் டாங்குலின் இன்பராஜ் (10). இவா்களில் கோகுல் கொசவப்பட்டியிலுள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இதேபோல, யாதேஸ்வா், டாங்குலின் இன்பராஜ் ஆகியோா் வெவ்வேறு பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு பயின்று வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமை […]
பரபரப்பான அரசியல் சூழல்! நாளை கூடுகிறது சட்டசபை! எகிறும் எதிர்பார்ப்புகள்..
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த 2 நாட்கள் நடந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 15-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.அதன்பிறகு, பிப்ரவரி 19-ந்தேதி சட்டசபை மீண்டும் கூடியது. அன்றைய தினம் 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் […]
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு!! கொடைரோடு நிலையத்தில் இறங்கிய பயணிகள்..
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கதவுகள் திறக்காததால் பரபரப்பு!! கொடைரோடு நிலையத்தில் இறங்கிய பயணிகள்.. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தபோது கதவுகள் திறக்கப்படாமல் பழுதானதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் பயணிகள் இறங்க முடியவில்லை. இதை தொடர்ந்து திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்ற வந்தே பாரத் ரயிலின் அபாய சங்கலியை அழுத்தி பயணிகள் ரயிலை நிறுத்தினாலும் ரயில் நீண்ட தூரம் சென்று விட்டதால் […]
பிறப்பால் ஒருவர் முதல்-அமைச்சராவதாக ஆதவ் அர்ஜுனா சொல்லியிருப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தேர்தலில் எம்.எல்.ஏ.வாக ஜெயித்துவிட்டுதான் வந்திருக்கிறார் !- டிடிவி தினகரன்..
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் வி.சி.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். பிறப்பால் ஒரு முதல்-அமைச்சர் இங்கு உருவாகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும்” என்று தெரிவித்தார். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து குறித்து அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது;- “தேர்தல் அரசியல் மூலம் மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்து […]
You must be logged in to post a comment.