இராமநாதபுரம் :தனுஷ்கோடி ஆற்றில் சேராங்கோட்டை கிராம மக்கள் மீன்பிடித்தல் தொடர்பாக ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் சமரச கூட்டம் நடந்தது. இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ராமேஸ்வரம் உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி முன்னிலை வகித்தனர். தனுஷ்கோடி ஆற்றில் ஒரு சாரார் மட்டும் மீன்பிடிக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். ஆற்றில் தனி நபர் ஒருவருக்கு முறைகேடாக வழங்கிய உள் குத்தகை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க […]
Category: செய்திகள்
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்! யார் இவர் முழுப் பிண்ணனி என்ன?
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 11ஆம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸின் பதவிக்காலம் வரும் 11ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு நியமித்து […]
கீழக்கரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர்..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் நகர் செயலாளர் ஹபீப் முஹமது தம்பி மற்றும் மாநில இளைஞரணி செயலாளரும் நகர் ஆலோசகருமான நைய்னா முகம்மது ஆகியோர் தலைமையில் தாலுகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை பற்றியும் செவிலியர்கள் பணிகளைப் பற்றியும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விசாரித்து அவர்களுக்கு உணவு பொருள்கள் மற்றும் பழங்கள் வழங்கி […]
கீழக்கரை மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் தேர்வு..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலனக் கமிட்டிக்கு உட்பட்ட மக்தூமியா உயர்நிலைப் பள்ளியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ஜமாத் தலைவர் ஜனாப் ஹாஜா ஜலாலுதீன் செயலாளர் ஜனாப் ஷர்ஃப்ராஸ் நவாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் புதிய தாளாளராக அந்த ஜமாத்தை சேர்ந்த வழக்கறிஞர் M.நாதியா ஹனிபா Bsc, MBA LLB தேர்வாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து புதிய கல்வி குழு மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது .இதில் […]
சட்ட சபையில் டங்ஸ்டன் தீர்மானம்: மத்திய அரசுக்கு இன்று இரவுக்குள் அனுப்பத் திட்டம்..
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி மலைப்பகுதியில் இருந்து சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த 29-ந் தேதி மேலூரில் கண்டன ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடந்தது. மேலும் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த […]
மன்னர் பரம்பரை மனநிலையை உடைத்தெறிவேன்!விசிக-வில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா பரபரப்பு சபதம்..!
மன்னர் பரம்பரை மனநிலையை உடைத்தெறிவேன்!விசிக-வில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா பரபரப்பு சபதம்..! விசிக-வில் துணை பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவை நீக்கி திருமாவளவன் உத்தரவிட்ட நிலையில் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: தானாக விடியுமென்று தவறாக நம்பாதே வீணாக மனம் நொந்து எல்லாம் விதியென்று வெம்பாதே! நீயாக முன்வந்து நெருப்பாக விழி சிவந்து நிலையாக போரிட்டால் நிச்சயமாய் விடியலுண்டு உனக்கு! ‘அதிகாரத்தை அடைவோம்’ என்று எழுச்சித் தமிழர் எந்த […]
மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்..
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் 322 பேர் தங்களில் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் வழங்கினர். இதில மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 6 பேருக்கு ரூ.62 ஆயிரம் மதிப்பில் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, சமூக பாதுகாப்பு திட்ட […]
பரமக்குடி சவுராஷ்ட்ரா பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
இராமநாதபுரம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் கண்ணுக்கு புலனாகாதா நுண்ணுயிரிகளை எளிதாக கண்டுபிடிக்கும் நுண்ணோக்கி கண்டுபிடித்த பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ 10 ஆயிரம் பரிசுத்தொகை வென்றனர் இம்மாணவர்களை கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு, […]
கடுக்காய்வலசை அரசு பள்ளி மாணவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
இராமநாதபுரம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பார்வையற்றோர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிறர் உதவியின்றி செல்ல ஜிபிஆர்எஸ் கருவி கண்டுபிடித்த மண்டபம் வட்டாரம் கடுக்காய்வலசை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து ரூ10 ஆயிரம் பரிசு வென்றனர்இம்மாணவர்களை கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த ஆசிரியர்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் இன்று […]
அறிவியல் புத்தாக்க போட்டியில் பரிசு குவித்த ராமநாதபுரம் மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு..
இராமநாதபுரம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் ராமநாதபுரம் மீன்வள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ராமகோபால், வேல்முருகன், செல்வகணேஷ் ஆகியோர் கேபிள் கிளைடு வே எனும் புதிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடித்து ரூ 1 லட்சம் பரிசுத்தொகை வென்றனர். இந்த மாணவர் 3 பேரையும், அரிய கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த சிவசுடலைமணி, பொன் வேல்முருகன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் […]
சுகாதாரத்துறை ஏற்பாட்டில் கொசு ஒழிப்பு பணி : ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்காணிப்பு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனைப்படி புதுவலசை ஊராட்சியில் வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு பணி இன்று நடந்தது. இப்பணியை மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, உச்சிப்புள வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளர் வைரவசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஒலி ஆகியோர் கண்காணித்தனர். இதே போல் பனைக்குளம் ஊராட்சி வீடுகள் தோறும் […]
காரைக்குடியில்சம்பை ஊற்று நீர் , பாதுகாக்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம்…
காரைக்குடியில் சம்பை ஊற்று நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ,நீர் நிலைகளை மாசுபடுத்தும் கெமிக்கல் மற்றும் ஒர்க் ஷாப், கார், பைக் கம்பெனிகளை மூட கோரியும் சம்பை நீர் நீரோட்ட பகுதியில் கட்டிடம் கட்ட தடை செய்யக்கோரியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே. எம்.சரீப் தலைமையில் காரைக்குடியில் தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் […]
மகாரதம் பவனி !பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தி.மலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு..
மகாரதம் பவனி !பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தி.மலை மாவட்ட காவல்துறை அறிவிப்பு.. தி.மலை மாவட்ட காவல்துறை பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் : மகாரதம் பவனி நாளை போக்குவரத்து நெறிமுறை மற்றும் அறிவுரைகள்.. பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல், திலகமிடுதல், ஆசிர்வதித்தல் மற்றும் மிரட்டியும் பணம் வசூலிப்பது குற்றமாகும். மகாரத பவனி நடைபெறும் மாட வீதிகளை நோக்கி செல்லக்கூடிய வீதிகளான அசலியம்மன் கோவில் தெரு, பேய் கோபுர 3வது தெரு, பேய் கோபுரம் பிரதான சாலை, […]
தாயாரை மீட்டு தரக்கோரி மகள் கண்ணீர் மல்க மனு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆ. புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பத்ரகாளி. இவரை வீட்டு வேலைக்காக ஏஜன்ட்கள் கொக்கா டி இருளாண்டி, திருச்சி நாசர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஸ்கட் நாட்டிற்கு அனுப்பினர். அங்கு பத்ரகாளி தொடர் சித்ரவதையால் தற்போது மிகவும் உடல் நலம் பாதித்துள்ளார். இதனால் பத்ரகாளியை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் நபியா மக்கள் குறை தீர் […]
பழனியில் பாமக (வடக்கு) மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது..
பழனியில் பாமக (வடக்கு) மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. திண்டுக்கல் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் பழனியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமை தாங்கினார். தொழிற்சங்க செயலாளர் ராஜரத்தினம், அமைப்பு செயலாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார். பின்பு நடந்த கூட்டத்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மாநாட்டில் கட்சியினர் […]
மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு..
மதுபான விற்பனைக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.. சில மதுபான சில்லறை விற்பனை கடைகளிலிருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்தியாசங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்களுடன் அதற்குண்டான ரசீது கண்டிப்பாக வழங்க வேண்டும். மதுபானங்களை விற்பனை செய்யும்போது மட்டுமே பாட்டில்களை ஸ்கேன் செய்ய வேண்டும். மதுபானங்களை முன்கூட்டியே […]
ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை! ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம்!- தொல்.திருமாவளவன் அறிவிப்பு..
கட்சியில் இருந்து, விடுதலை சிறுத்தைக் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அக்கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆதவ் அர்ஜுனாவின், ‘வாய்ஸ் ஆப் காமன்’ அமைப்பு சார்பில், ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பிலான நுால் வெளியீட்டு விழா, சென்னையில் கடந்த 6ம் தேதி நடந்தது. இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ‘தமிழகத்தில் உள்ள மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்’ என்றார். தி.மு.க.,வை நேரடியாக தாக்கி பேசியது, அக்கட்சி தொண்டர்களையும், […]
“பால் முகவர்கள் சங்கத்தின் 17ம் ஆண்டு பொதுக்குழு, 18ம் ஆண்டுக்கான (2025) நிர்வாகிகள் தேர்வு!-18வது முறை மாநில தலைவராக சு.ஆ.பொன்னுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்..
“பால் முகவர்கள் சங்கத்தின் 17ம் ஆண்டு பொதுக்குழு, 18ம் ஆண்டுக்கான (2025) நிர்வாகிகள் தேர்வு!-18வது முறை மாநில தலைவராக சு.ஆ.பொன்னுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் 18வது நிர்வாகக் குழுவை தேர்வு செய்வதற்கான மாநில பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் எஸ்.பொன்மாரியப்பன் அவர்களின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (08.12.2024) மாலை 3.00மணியளவில் சென்னை, எருக்கஞ்சேரியில் உள்ள சக்தி பாலக கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு […]
பழனியில் பல மாதங்களாக பூட்டி கிடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகம், கோர்ட் உத்தரவின் பேரில் மீண்டும் திறப்பு..
பழனியில் பல மாதங்களாக பூட்டி கிடந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் கோர்ட் உத்தரவின் பேரில் மீண்டும் திறப்பு.. பழனி ரயில்வே பீடர் சாலையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு சொந்தம் எனக்கூறி இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது அலுவலகம் தமாக விற்கு சொந்தம் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தமிழ் மாநில […]
சிரியாவை சிதறடித்த கிளர்ச்சியாளர்கள்! ரஷ்யாவில் தஞ்சம் புகுந்த அதிபர் ஆசாத்..
சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல்-ஆசாத் தலைமையிலான அரசு இரு தசாப்தங்களாக நடந்து வந்த சூழலில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் போராட்டம் கடந்த வாரம் தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்கள், சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து, ஹோம்ஸ் நகர் நோக்கி முன்னேறினர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடினர். இந்த சூழலில் டமாஸ்கஸ் நகரையும் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால், பாதுகாப்பு தேடி அதிபர் ஆசாத் டமாஸ்கஸில் இருந்து வெளியேறி விட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. […]
You must be logged in to post a comment.