செங்கோட்டை பகுதியில் சமூக நல ஆர்வலர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் பள்ளி குழந்தைகளால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிட புணரமைப்புப் பணி முடிவுற்று அவ்வகுப்பறை மாணாக்கர் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, ஆசிரியர் பயிற்றுனர் சுப்புலெட்சுமி, குழு ஒருங்கிணைப்பாளர் வெங்காடம்பட்டி […]
Category: செய்திகள்
கீழக்கரை நகர திமுக சார்பில் தமிழ்நாட்டின் துணை முதல்வர் 48ஆவது பிறந்த நாள் விழா..
தமிழ்நாட்டின் துணை முதல்வரின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர திமுக சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக நகர செயலாளர் திரு. S.A.H. பஷீர் அஹமது தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. அத்துடன், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் […]
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கான கிட் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் தமிழமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.உசிலம்பட்டி அரசு தலைமை பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமணையில் பிரசவ வார்டில் உள்ள 39 குழந்தைகளுக்கும், குழந்தைகள் கிட் உபகரணம் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கான […]
டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் அடுத்தடுத்து நிர்வாகிகள் மோதிக் கொண்ட நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 15.12.2024 – ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ […]
பெய்து வரும் தொடர் கன மழை! அதைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறைகளும்..
தமிழகத்தில் பல மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் 27/11/2024 அன்று 10 க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உள்ளனர்கள் அதன் விவரம்.. பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை! 1️⃣ நாகை 2️⃣ மயிலாடுதுறை 3️⃣ கடலூர் 4️⃣ திருவாரூர் 5️⃣ விழுப்புரம் 6️⃣ தஞ்சாவூர் 7️⃣ திருவள்ளூர் பள்ளிகளுக்கு மட்டும் லீவு! 1️⃣ சென்னை 2️⃣ காஞ்சிபுரம் 3️⃣ செங்கல்பட்டு 4️⃣ புதுக்கோட்டை 5️⃣ சிவகங்கை […]
சென்னைக்கு தென்கிழக்கே 590 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! புயலாக மாற வாய்ப்பு..
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறதுஇந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெங்கல் […]
தென்காசி மாவட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழியேற்பு..
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் […]
அடை மழை! 27.11.2024 புதன்கிழமை அன்று உங்கள் ஊரில் பள்ளி, கல்லூரி விடுமுறையா!!
கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (நவ.,27) புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு […]
மக்களே தமிழகத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்?- வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு; தென்கிழக்கு வங்கக்கடல் உருவான காற்றழுத்த மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும், இதன் காரணமாக தமிழக கடலோர கோவிலில் மழை தொடர வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி […]
இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு
மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் மற்றும் கடமைகள் என்ற சிறப்பு கருத்தரங்கு தலைமை ஆசிரியர் தனபால் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி சடையாண்டி கலந்து கொண்டு பேசும்பொழுது மனித உரிமைகள் மற்றும் கடமைகளை பற்றி மாணவர்கள் புரியும் வண்ணம் சிறப்பாக பேசினார். மாணவர்கள் மனித உரிமைகளையும் கடமைகளையும் கட்டாயம் தெரிந்து […]
அதானி ஊழல் பிரச்சினையில் மருத்துவர் ராமதாஸ் திசை திருப்ப முனைவதாகவும், பொய்யான வதந்திகளுக்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் மதிமுக எம்.பி. வைகோ அறிக்கை ..
அதானி ஊழல் பிரச்சினையில் மருத்துவர் ராமதாஸ் திசை திருப்ப முனைவதாகவும், பொய்யான வதந்திகளுக்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் மதிமுக எம்.பி. வைகோ அறிக்கை .. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : அதானியின் கிரீன் எனர்ஜி நிறுவனம் ஒன்றிய அரசு நிறுவனமான எஸ்.இ.சி.ஐ (Solar Energy Corporation of India Limited) சூரிய ஒளி மின் திட்ட ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய மின்வாரிய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் (சுமார் […]
ரேஷன் கடைகளில் 41 பணியிடங்கள் மட்டுமே ஆனால்!!5,989 பேர் விண்ணப்பம் அனைவருக்கும் நேர்காணல் தொடக்கம்..
ரேஷன் கடைகளில் 41 பணியிடங்கள் மட்டுமே ஆனால்!!5,989 பேர் விண்ணப்பம் அனைவருக்கும் நேர்காணல் தொடக்கம்.. குமரியில் ரேஷன் கடைகளில் 41 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 5,989 பேரிடம் நேர்காணல் தொடங்கியது. குமரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் 583 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 35 விற்பனையாளர்கள் மற்றும் 6 கட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி பிளஸ்-2 ஆகும். இவர்களுக்கு முதல் ஓராண்டுக்கு ரூ.6,250 ஊதியம் வழங்கப்படும். […]
பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா?; கேள்வி எழுப்பிய காந்தியவாதி..
பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா? என வடகரை பகுதி சமூக செயற்பாட்டாளர் வாவாமைதீன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மனுநீதி நாளில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில், தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் கல்குளம் சாலை மற்றும் ஒச்சான் ஓடையில் பாலம் கட்டுவதற்காக 2018 இல் இருந்து ஆறு ஆண்டுகளாய் பல மனுக்கள் கொடுத்திருக்கிறேன். 2019-ல் தென்காசி கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து வருவாய்த்துறை பொதுப்பணித்துறை நில அளவு துறை அனைத்து துறைகளும் களப்பணி […]
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அடிச்சு துவைக்க போகும் மழை!
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாக பெய்து வருகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு இன்னும் மழை கிடைக்க வில்லை. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் இன்னும் நிரம்பவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருகிறது.பருவமழை காலம் தொடங்கி ஒரே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வந்த நிலை யில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலில் உருவாகிறது. இது காற்றழுத்த […]
இனி க்யூஆர் கோடு கொண்ட பான் அட்டை! துரிதமாக செயல்பட்டு வரும் மத்திய அரசு..
க்யூ ஆர் கோடு கொண்ட பான் அட்டைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தற்போது பயன்பாட்டில் உள்ள பான் அட்டைகளுக்கு மாற்றாக, மேம்படுத்தப்பட்ட பான் கார்டு அறிமுகப்படுத்தும் பணியை மத்திய அரசு விரைவாகத் தொடங்கவிருக்கிறது. தற்போது நிரந்தர கணக்கு எண் ( பான் ) என்பது பத்து இலக்கங்களைக் கொண்ட எழுத்து மற்றும் எண்களைக் கொண்ட அதாவது எண்ணெழுத்து அடையாள அட்டையாக பயன்பாட்டில் உள்ளது. […]
பட்டப்பகலில் அட்டகாசம்! கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்..
பட்டப்பகலில் அட்டகாசம்! கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்.. ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சி. ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை வயது வித்தியாசம் பாராமல், கண்மூடித்தனமாக தாக்கும் சம்பவம் பார்ப்போரை அச்சமடையச் செய்துள்ளது. ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. இச்சம்பவம் தொடர்பாக ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மள மளவென குறைந்து வரும் தங்கம் விலை! மகிழ்ச்சியில் நடுத்தர மக்கள்..
இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தாண்டு இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது. கிட்டதிட்ட சவரன் ரூ.60,000-ஐ நெருங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.55,000 வரை விற்பனை ஆனது. இந்நிலையில் கடந்த வாரம் திடீரென விலை கடுமையாக உயர்ந்தது. 5 நாளில் ரூ.2,320 அதிகரித்தது. இந்தநிலையில் இன்று மீண்டும் […]
தென்காசியில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தென்காசி மாவட்டத்தில் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0 நிகழ்வு 25.11.2024 முதல் 24.12.2024 வரை மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும், அனைத்து ஊராட்சிகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் பாலியல் வன்முறைக்கு […]
ஏ.ஆர் ரஹ்மான் எனது தந்தையை போன்றவர்! தயவுசெய்து கொச்சை படுத்த வேண்டாம்! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த மோகினி டே…
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அவரது மனைவி சாய்ரா பானு இருவரும் விவகாரத்து செய்வதாக அறிவித்தனர். 29 ஆண்டுகால திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். ஏ.ஆர்.ரகுமான் விவகாரத்து அறிவித்த சில மணிநேரத்தில் அவரது இசைக்குழுவில் கிடார் இசைக்கலைஞராக பணியாற்றிய பெண் மோகனி டேவும் அவரது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதையடுத்து இருவரையும் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வந்தன. தனக்கு எதிரான தவறான செய்திகளை யூடியூபர்கள் உடனடியாக நீக்குமாறு ரகுமான் நோட்டீஸ் வழங்கினார். […]
அசத்தும் ஆலோசனைகள்! தாமரைக்குளம் அரசு பள்ளிகளில் அசத்தி வரும் முன்னாள் கல்லூரி மாணவர்கள்..
அசத்தும் ஆலோசனைகள்! தாமரைக்குளம் அரசு பள்ளிகளில் அசத்தி வரும் முன்னாள் கல்லூரி மாணவர்கள்.. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு தொடக்க பள்ளிகள் தரம் உயர்த்தும் எண்ணத்தில் செயல்படும் இரண்டு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள். Flushtrash Planet Foundation, Namma School Namma Oru Palli உடன் இணைந்து, தெற்கு தாமரைகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் எழுதும் பயிற்சிக்காக ஒயிட் போடு, குழந்தைகளுக்கு E-ink மாத்திரைகளையும், கற்பிப்பதற்காக வெள்ளை பலகையையும் வழங்கினர். மேலும் குழந்தைகளுக்கு மதிய உணவை […]
You must be logged in to post a comment.