ரயில் நிலையங்களில் தட்கல் முன்பதிவுக்கு இனி ஓடிபி கட்டாயம்!

ரயில் நிலையங்களில் தட்கல் முன்பதிவுக்கு இனி ஓடிபி கட்டாயம்! ரயில் நிலையங்களில் தட்கல் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். அந்த எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி ரயில் நிலைய அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட்ட பின்னரே பயணச்சீட்டு உறுதி செய்யப்படும். உரிய பயணிகளுக்கு தட்கல் பயணச்சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யவே இந்த முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது. முன்னதாக, தட்கல் பயணச்சீட்டை இணைய வழியில் முன்பதிவு செய்ய ஆதாா் மூலம் ஓடிபி சரிபாா்ப்பு முறை […]

திருப்பரங்குன்றம் மலை பிரச்சினை! பரபரப்பாக நடைபெற்றுவரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை..

144 தடை உத்தரவு எதற்கு பிறப்பிக்கப்பட்டது, எப்போது பிறப்பிக்கப்பட்டது? – நீதிபதிகள் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி.. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் கோவிலை விட பழமையானதா? – நீதிபதிகள் கேள்வி. தீபத்தூண் பழமையானது ஆனால் கோவிலை விட பழமையானதா என தெரியவில்லை – தமிழ்நாடு அரசு  ஒரு வழக்கிற்கு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் வழங்கப்பட வேண்டும், ஆனால் தனி நீதிபதி அவசரம் காட்டுகிறார் – தமிழ்நாடு அரசு. நேற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை […]

திருப்பரங்குன்றம் பிரச்சின: கலவரத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு அரசு யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!-இந்தியா கூட்டணி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்; திருமாவளவன் அறிக்கை..

திருப்பரங்குன்றம் பிரச்சின: கலவரத்தில் ஈடுபட்டவர்களை தமிழ்நாடு அரசு யுஏபிஏ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!-இந்தியா கூட்டணி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்; திருமாவளவன் அறிக்கை.. திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படாமல் தடுத்து அமைதியை நிலைநாட்டிய தமிழ்நாடு அரசுக்கும், கலவரத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஆத்திரமூட்டலுக்கு இடம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்தைக் காப்பாற்றிய திருப்பரங்குன்றம் பொதுமக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகப் பயங்கரவாதிகள் தொடர்ந்து […]

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. ஈரப்பதம் மிக்க கிழக்கு திசை காற்று காரணமாக இன்று தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு மிக சாதகமாக உள்ளது. இராமநாதபுரம் தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று இரவு நாளை அதிகாலை நேரங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக இராமநாதபுரம் இராமேஷ்வரம் தங்கச்சிமடம் பாம்பன் தனுஷ்கோடி மண்டபம் வைப்பார் தூத்துக்குடி காயல்பட்டினம் திருச்செந்தூர் ஆகிய கடலோர பகுதிகளில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு. நெல்லை தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை […]

உசிலம்பட்டி அருகே பரமசிவன் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் மேற்கே அமைந்துள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள பரமசிவன் மலையில் உள்ள பழமையான பரமசிவன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் சார்பாக 50 லிட்டர் நெய் மற்றும் 50 மீட்டர் திரி சுற்றப்பட்டு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது., முன்னதாக பரமசிவனுக்கு பால், தயிர்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்து அபிஷேகம் செய்யப்பட்டு தீபாதாரணை காண்பிக்கப்பட்டது.,இதில் கிராம பொதுமக்கள் திரளாக பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் […]

குரூப் 4 தேர்வு: காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு,- தேர்வாணையம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வில் 645 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் கூடுதலாக 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது 645 காலிப்பணியிடங்களுடன் சேர்த்து, மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 5,307 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு; கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர். வனக்காப்பாளர். […]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற,CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் மலை மீது தீபத்தூணில் ஆண்டாண்டு காலமாக கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகவும் ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இது நிறுத்தப்பட்டது என்றும் கூறி இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் அளித்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் […]

எஸ்ஐஆர்: தனது சொந்த கல்லறையை பாஜக தோண்டுகிறது:- மம்தா பானர்ஜி சாடல்..

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் பாஜக, தனது சொந்த கல்லறையை தோண்டுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர்-க்கு எதிப்பு தெரிவித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசுகையில், வாக்காளர்களைத் தொல்லைப்படுத்தும் நோக்கிலேயே எஸ்ஐஆர் பணி மேற்கொள்ளப்படுகிறது. எஸ்ஐஆர் சதித்திட்டத்தின் பின்னணியில் அமித் ஷா தான் இருக்கிறார். அவர் மேற்கு வங்கத்தை எந்த விலையிலும் வாங்கத் தயாராக இருக்கிறார். அதற்கான தகுந்த பதில் […]

அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்த குளத்தில் நீச்சல் குளமாக மாறிய முதலமைச்சர் விளையாட்டு மைதானம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு

அலங்காநல்லூர் அருகே சின்ன இழந்த குளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் சரியான இடத்தில் அமைக்காததால் நீச்சல் குளம் போல காட்சி அளிக்கிறது. டென்னிஸ் வாலிபால் கபடி உள்ளிட்டவைகள் விளையாட கட்டப்பட்ட முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் வயல்வெளி நீர் சூழ்ந்து நீச்சல் குளம் போல காட்சி அளிக்கிறது.இந்த நீச்சல் குளம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்ற போது அருகில் இருந்த […]

தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாகமாறும் திருப்பரங்குன்றம்!போலீஸ் குவிப்பு: மதுரையில் பரபரப்பு:

தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக மாறும் திருப்பரங்குன்றம்! போலீஸ் குவிப்பு: மதுரையில் பரபரப்பு: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்த நிலையில் தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்தது. மலை அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் விழாவின் முக்கிய […]

தமிழகத்தில் 69 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.?

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.இதற்காக கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது.தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த படிவங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கின்றனர்.இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க […]

வாடிப்பட்டி அருகேமின்சாரம் தாக்கி கடை உரிமையாளர்,டீ மாஸ்டர் பலி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(60) இவர் ஆண்டிபட்டி பங்களாவில் சைவ, அசைவ உணவகத்துடன் கூடிய டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.அந்தக் கடையில் சோழவந்தானை சேர்ந்த பாலகுரு (50) டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு சோமசுந்தரம் மகன் ரஞ்சித் குமார்(35) இருவரும் இரவு பணி செய்தனர். இந்நிலையில் நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. […]

பெரியகுளம் அருகே பாலத்தில் கார் மோதி விபத்து; இருவர் பரிதாபமாக உயிரிழப்பு..

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாலத்தில் காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சபரிமலை பக்தா்கள் 2 போ் உயிரிழந்தனா். ஆந்திர மாநிலம், சக்திவேரூா் தடா மாவட்டம் வாரையா பாளையத்தைச் சோ்ந்தவா் நரேஷ்குரிலா (32). இவா், தனது மகன் சாதுா்யா (9), நண்பா் வேணு (55) ஆகியோருடன் காரில் சபரிமலைக்குச் சென்று விட்டு, செவ்வாய்க்கிழமை திரும்பினாா். காரை அதே ஊரைச் சோ்ந்த முனிதேஜா (28) ஓட்டினாா். பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி புறவழிச் சாலையில் வந்தபோது கட்டுப்பாட்டை […]

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில்  வெளுத்து வாங்கும் கன மழை..

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில்  வெளுத்து வாங்கும் கன மழை.. காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,விழுப்புரம்,, கடலூர் ,சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகி வருகிறது.. சிங்கப்பெருமாள் கோவில், அரும்புலியூர் காஞ்சிபுரம் மாவட்டம், நெடுங்குணம் திருவண்ணாமலை மாவட்டம், நெல்லிக்குப்பம் கடலூர் மாவட்டம், கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது… தற்போது காலை 6:30 மணி அளவில் விழுப்புரம், சென்னை ,செங்கல்பட்டு […]

சென்னையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலகக்குழு கூட்டம் சென்னையில் இன்று (டிச.02) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச.உமர் பாரூக், மாநில பொதுச்செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே.கரீம், மாநில செயலாளர் ஷபீக் அஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் அமீர் ஹம்சா ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் BLA2, பூத் கமிட்டி BLC மாநாடுகளை […]

சென்னையில் எப்பதான் மழை நிற்கும்?- தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு! மற்றும் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் அடுத்த 7 தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:-தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் – வடதமிழகம் – புதுவை – தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொதுவாக வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (02-12-2025) காலை 0530 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, காலை 08:30 மணி அளவில், அதே […]

வக்ஃபு சொத்து ஆவணங்களை UMEED PORTAL – ல் பதிவு செய்வதை விரைவு படுத்திட வேண்டும்.கே நவாஸ்கனி MP,தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்..

வக்ஃபு சொத்து ஆவணங்களை UMEED PORTAL – ல் பதிவு செய்வதை விரைவு படுத்திட வேண்டும்.கே நவாஸ்கனி MP தலைவர்- தமிழ்நாடு வக்ஃபு வாரியம்.. வக்ஃபு சொத்துக்களையும், முத்தவல்லிகளையும் UMEED PORTAL ல் வரும் டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் கட்டாயம் பதிவு செய்திட வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் மூன்று நாட்களே இருப்பதினால் UMEED PORTAL – ல் பதிவு செய்வதை விரைவு படுத்திட வேண்டும் என கண்ணியமிக்க முத்தவல்லிகளை கேட்டுக்கொள்கிறேன். நம்முடைய வக்ஃபு சொத்துக்களை பாதுகாத்திடும் மிக […]

சோழவந்தானில் பிளக்ஸ் பேனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பேரூராட்சி அலுவலகத்தில் மனு

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் கல்வி வியாபாரம் ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக சோழவந்தான் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சோழவந்தான் நகருக்குள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் சோழவந்தானில் முக்கியமான இடங்களில் அரசியல் கட்சியினர் சமூக அமைப்புகள் உள்ளிட்ட பலர் ஆபத்தான நிலையில் பிளக்ஸ் பேனர்களை வைப்பதால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் மற்றும் […]

”சஞ்சார் சாத்தி” ஒரு உளவு பார்க்கும் செயலி! இது மிகவும் அபத்தமானது; காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு..

அனைத்து கைப்பேசிகளிலும் ‘சஞ்சாா் சாத்தி’ செயலியை நிறுவ வேண்டும் என்ற மத்திய தொலைத்தொடா்பு துறையின் உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிதாகத் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து கைப்பேசிகளிலும் ‘சஞ்சாா் சாத்தி’ செயலியை முன்பே நிறுவி இருக்க வேண்டும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள பழைய கைப்பேசிகளிலும் மென்பொருள் புதுப்பித்தல் மூலம் செயலியைப் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சஞ்சார் சாத்தி செயலி என்பது குடிமக்களை கண்காணிப்பதற்காக கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதாக காங்கிரஸ் […]

காங்கிரஸ் கட்சியின் மறுசீரமைப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம்உசிலம்பட்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கம் சார்பில், ஆலோசனைக் கூட்டம் மேலிடப் பார்வையாளரும், தெலுங்கானா மாநில வக்ப்போர்டு தலைவருமான சையத் அஸ்மத்துல்லா ஹுசைன் தலைமையில் நடந்தது. சிவகாசி எம். எல். ஏ., அசோகன், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி, பகுதி நிர்வாகிகளிடம் தனித்தனியாக கட்சியின் வளர்ச்சி, 2026 தேர்தலை எதிர்கொள்ள தேவையான ஆயத்தப்பணிகள், மாவட்ட அளவில் தலைவர்கள் உள்ளிட நிர்வாகிகள் பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் போன்றவை குறித்து ஆலோசித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!