பல்கலைக்கழக கூடை பந்து போட்டியில் சாம்பியன் கோப்பை வென்று செய்யது ஹமீதா கல்லூரி சாதனை…

அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. அதில் செய்யது ஹமீதா கல்லூரி மாணவர்கள் முதலிடத்தை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர். பரிசளிப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணை உடற்கல்வி இயக்குனர் முனைவர் P.காளீஸ்வரன் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். அனைத்து ஏற்பாடுகளையும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் க.தவசிலிங்கம் செய்திருந்தார். வெற்றி பெற்ற அணியினருக்கு முகமது சதக் அறக்கட்டளை சேர்மன் யூசுப் செயலாளர் சர்மிளா மற்றும் இயக்குனர்கள் அனைவரும் பாராட்டினர்.

16வது மண்டல அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி கோப்பையை வென்றது..

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல அளவிலான ஆண்கள் வாலிபால் போட்டி 11 மற்றும் 12.09.2017 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 21 பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து விளையாடினர். ​இரண்டாம் நாள் நடைபெற்ற இறுதி சாம்பியன் போட்டியில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி , புதுக்கோட்டை மவுன்ட் சியான் பொறியியல் கல்லூரியை 25-22, 25-16 என்ற நேர்செட்டுகளில் வெற்றி பெற்று அண்ணா பல்கலைக்கழக 16வது மண்டல வாலிபால் […]

கல்வியிலும், விளையாட்டிலும் தனித்தன்மையுடன் விளங்கும் இஸ்லாமியா பள்ளி….

கீழக்கரையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக இஸ்லாமியா பள்ளியையும் குறிப்பாக சொல்லலாம்.  இஸ்லாமியா பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாமல் பிற செயல்பாடுகளாகிய சமூக விழிப்புணர்வு, விளையாட்டு துறை போன்றவற்றிலும் முத்திரை பதித்த வண்ணமே உள்ளனர். சமீபத்தில் மாநில ரீதியாக நடைபெற்ற போட்டிகளிலும் உள்அரங்கு மற்றும் வெளியரங்கு போட்டிகளில் பல பரிசுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது. நேற்று இஸ்லாமியா பள்ளி மாணவன் ஆகிப் ரஹ்மான் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டியி வட்டு எறிதல் […]

விளையாட்டில் தொடர்ந்து சாதனை படைக்கும் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள்…

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் சீதக்காதி விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற வாலிபால் போட்டியில் வெற்றி பெற்றனர். இவ்வாரம் நடந்த வட்டு எறிதல் போட்டியில் ஆகிப் ரஹ்மான் முதலிடமும், தடை தாண்டி ஓடுதலில் இன்சாப் முதலிடம், உயரம் தாண்டுதலில் இர்பான் இரண்டாம் இடமும் பிடித்தனர். அதே போல் இறகு பந்து ஒற்றையர் பிரிவில் பாத்திமா ஷப்னா […]

இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட வாலிபால் போட்டியில் வெற்றி…

இராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் பல வயது பிரிவினருக்கு மாநில அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பள்ளி அணிகள் மோதின, இதில் இறுதி ஆட்டத்தில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் மண்டபம் பள்ளி அணியினருடன் மோதி வெற்றி பெற்றனர். அதே போல் இஸ்லாமியா பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் சித்தார்கோட்டை பள்ளியிடம் இறுதி சுற்றில் மோதி வெற்றி பெற்றனர். போட்டியில் […]

கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் வாலிபால் போட்டியில் தொடர் வெற்றி..

கீழக்கரை இளைஞர்களுக்கும், வாலிபால் போட்டிக்கும் எப்பொழுதும் ஒரு ராசியான தொடர்புண்டு. எந்த போட்டிக்கு சென்றாலும் எந்த அளவிளாவது வெற்றி வாகை சூட்டுவார்கள். கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் இளைஞர்கள் சமீபத்தில் 24ம் தேதி முத்துப்பேட்டையில் நடந்த போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று ரூ.6000/-ம் பரிசாக வென்றார்கள், அதுபோல் 25ம் தேதி மக்கள்பாதை திடல் திட்டத்தின் வாலிபால் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று ரூ.7000/- பரிசை பெற்றுள்ளார்கள். கீழக்க்ரையில் உள்ள பல வாலிபால் சங்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மாவட்டத்தில் […]

வாலிபால் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதிக்கும் கீழக்கரை இளைஞர்கள்..

08-04-2017 (சனிக்கிழமை) அன்று பிரப்பன்வலசை அலிநகர், சற்குண சன்மார்க்க சங்கம் – SSS கிளப் சார்பில் 10ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துபோட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுற்றுவட்டாரத்தில்இருந்து பல அணிகள் கலந்து கொண்டு போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் கீழ்க்கரை அணி முதல் பரிசை தட்டிச்சென்றது.  இந்த வாரத்தில் கீழக்கரை இளைஞர்கள் பெரும் இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் முதல் பரிசாக 15001, இரண்டாம் பரிசாக 8001, மூன்றாம் பரிசாக 5001, மற்றும் நான்காம் பரிசாக 3001 ரூபாய் […]

வாலிபால் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெரும் கீழக்கரை இளைஞர்கள்..

08-04-2017 அன்று  ஒப்பிலானில் அல்-அப்ரார் நண்பர்கள் சார்பாக சூரிய ஒளிப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல ஊர் அணியினர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் முதல் பரிசு முதல் நான்காம் பரிசு வரை, ஒப்பிலான் சைபுல் இஸ்லாம் அணி, ஒப்பிலான் அல்-அப்ரார் அணி, நிரப்பையூர் அணி மற்றும் கீழக்கரை அணி என முறையே வென்றனர். இப்போட்டியில் பரிசுத் தொகையாக ₹.5002 முதல் ₹.1002 வரை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்போட்டியில் பரிசு பெற்ற கீழக்கரை இளைஞர்களை கீழை நியூஸ் […]

ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டி – நேசனல் அகாடமி பள்ளியில் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 11 வது செஸ் போட்டி ராமநாதபுரம் நேசனல் அகாடமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 5 பிரிவுகளாக 5 சுற்றுக்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் 42 பள்ளிகளில் இருந்து 9, 11, 13, 15, 17 ஆகிய வயதிற்கு உட்பட்ட 217 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் ராமநாதபுரம் செஸ் அசோசியேசன் துணைச் செயலாளர் சி. குணசேகரன் வரவேற்றார். […]

ஒப்பிலானில் நடைபெற்ற மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்கரை இளைஞர்கள் வெற்றி..

கடந்த சனிக்கிழமை (18-03-2017) அன்று ஒப்பிலானில் சைபுல் இஸ்லாம் நண்பர்கள் குழு சார்பாக மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பல அணியினர் கலந்து கொண்டார்கள். இத்தொடர் போட்டிக்கு சிறப்பு பரிசு உட்பட மொத்தம் 10 பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியின் இறுதியில் பனிமலர் அணி, முகம்மது பாய்ஸ் அணி, கேரளா அணி, உமர் ஃபிரண்ட்ஸ் அணி, கீழக்கரை அணி, சித்தார்கோட்டை அணி என முறையே முதல் ஆறு […]

மீண்டும் வாலிபால் போட்டியில் முதல் பரிசு வென்று அசத்திய கீழக்கரை இளைஞர்கள் …

கடந்த (12-03-17) அன்று R.புதுப்பட்டினம், அல் அமின் இளைஞர் பேரவையின் சார்பாக முதலாம் ஆண்டு  மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் மீண்டும் முதல் பரிசாக ₹.8000/- வென்று கீழக்கரை இளைஞர்கள் அசத்தியுள்ளார்கள். முதல் பரிசை கீழக்கரை அணியினர், இரண்டாம் பரிசை R.புதுப்பட்டின அணியினர், மூன்றாம் பரிசை கீரமங்கலம் அணியினர் மற்றும் நான்காம் பரிசை சித்தார்கோட்டை அணியினர் வென்றுள்ளனர். தொடர் வெற்றி வாகை சூடும் கீழக்கரை இளைஞர்களை கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

கீழக்கரையில் ‘பீச் வாலிபால்’ விளையாட்டில் அசத்தும் பள்ளி சிறுவர்கள் – வருங்கால சாதனை விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து

கீழக்கரை பகுதிகளில் பெரும்பாலான சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு செல்லும் போது உங்கள் பிள்ளைகள் எங்கே என நாம் கேட்டால், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறான், கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கிறான். கராத்தே, குங்க்பூ பயிற்சியில் எதிரியை துவம்சம் செய்து கொண்டிருக்கிறான் என்று அதிர்ச்சி பதில் தருகின்றனர். இவையெல்லாம் எந்த மைதானத்தில் நடக்கிறது..? என்று கேட்டால் அவர்கள் தரும் பதில் நம்மை கதிகலங்க வைக்கிறது. இது போன்ற விளையாட்டுகளை எல்லாம் நம் பிள்ளைகள் விளையாடி மகிழ்வது வீட்டுக்குள்ளே.. மூலையில் அமர்ந்து, வீடியோ கேம் […]

இளைஞர்கள் விளையாட்டு துறையில் சாதனை படைக்க வேண்டும் – இந்திய கப்பற்படை முன்னாள் கமாண்டோ செய்யது ஹமீதா கலை கல்லூரியில் சிறப்புரை

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று 10.03.17 விளையாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ஏ. வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் “இந்திய அளவில் இளைஞர்களுக்கும் கல்லூரி காலத்தில் பயிலும் விளையாட்டில் ஆர்வம் மற்றும் அதிக ஈடுபாடு கொண்ட மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்புத் துறைகளில் அதிக வேலை வாய்ப்பு காத்திருக்கிறது. மாணவ மாணவியர் அனைவரும் […]

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்ச்சி

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.03.2017 அன்று மாலை 2 மணியளவில் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்.ரஜபுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையின் ஓய்வு பெற்ற கமாண்டர் ஏ. வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டார். இவ்விழாவிற்கு முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்.அலாவுதீன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர்.ரஜபுதீன் அவர்கள் வரவேற்புரை […]

இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் நடைபெற உள்ள 11 வது செஸ் போட்டி – ஆர்வமுடையோர் பங்கேற்க அறிவிப்பு

மாநில அளவிலான தேர்வுக்காக இராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் 11 வது செஸ் போட்டி  எதிர்வரும் 26.03.17 ஞாயிற்று கிழமை காலை 9 மணியளவில் இராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியில் நடைபெற இருக்கிறது. 5 பிரிவுகளாக நடக்க இருக்கும் இந்த செஸ் போட்டியில் பங்கேற்க ஆர்வமுடையவர்கள் 22.03.17 ஆம் தேதிக்குள் உரிய பதிவு கட்டணத்தை செலுத்தி பங்கேற்கும் படி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கீழக்கரையில் கராத்தே கலையில் கலக்கும் மாணவர்கள் – பியர்ல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ‘பிளாக் பெல்ட்’ கட்டா போட்டிகளில் வெற்றி வாகை

கீழக்கரை பியர்ல் மெட்ரிகுலேஷன் மேநிலைப் பள்ளியில் நேற்று மாவட்ட அளவிலான பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்ட கராத்தே போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஜுனியர் லெவல் ‘பிளாக் பெல்ட்’ கட்டா, சிறுவர்களுக்கான கலர் பெல்ட் கட்டா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பல்வேறு தர வரிசைப்படி அமைந்துள்ள முறைப்படி கராத்தே பெல்ட்டுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஷாஹிரா தலைமை ஏற்றிருந்தார். ஸ்டேட் லெவல் கிரேடு கராத்தே மாஸ்டர் கண்ணன், அபாகஸ் மாஸ் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!