கீழக்கரை புதுத்தெரு MYFA சங்கம் சார்பாக நடைபெற்ற கைப்பந்து போட்டி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 10-04-2018 அன்று புதுத்தெரு   முஸ்லிம் வாலிபர் முன்னேற்ற சங்கம் (MYFA)  நடத்திய மாநில அளவிலான 4ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி மிக சிறப்பாக, அத்தெரு குளத்துமேட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த கைப்பந்து போட்டியில் MYFA  அணி முதல் பரிசாக  ₹.15,000/- மற்றும் கோப்பையை  கைபற்றியது. அதே போல் இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, நான்காம் பரிசு மற்றும் சிறப்பு பரிசுகளை  MFC (மயிலாடுதுரை) அணியினர், IVC (கீழக்கரை) அணியினர்( MYFA […]

தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 30 வது விளையாட்டு விழா..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் இன்று 21.3.2018 மாலை 4 மணியளவில் கல்லூரி மைதானத்தில் 30வது விளையாட்டு விழா நடைபெற்றது. இறை வணக்கத்துடன் தொடங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா வரவேற்புரையாற்றினார். பின்னர் ஶ்ரீ  தாரணி முருகேசன், நிர்வாக அறங்காவலர்,DARE அறக்கட்டளை, இராமநாதபுரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். திருமதி குர்ரத் ஜெமிலா, புரவலர் சீதக்காதி அறக்கட்டளை, சென்னை மற்றும் செயலாளர் முஸ்லிம் பெண்கள் அமைப்பு, இராமநாதபுரம் சிறப்பு […]

வண்ணாங்குண்டு முதலாமாண்டு மின்னொளி கால்பந்து போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது…

இராமநாதபுரம் மாவட்டம் வணணாங்குண்டில் முதலாம் ஆண்டு மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி நேற்று மாலை தொடங்கியது. இப்போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் முதல் பரிசாக ₹.10,001/- மற்றும் சுழற்கோப்பையை சித்தார்கோட்டை அணியும், இரண்டாவது பரிசு ₹.5,001/- மற்றும் சுழற்கோப்பையயை பெருங்குளம் அணியும், மூன்றாவது பரிசு ₹.3,001/- மற்றும் சுழற்கோப்பையை சக்கரக்கோட்டை அணியும் கைப்பற்றினர். இந்த முதலாம் ஆண்டு மின்னொளி கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை வண்ணாங்குண்டு கால்பந்து குழுவினர் (VFC) சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.

மாநில அளவிளான வாலிபால் போட்டியில் பரிசு வென்ற மூர் வாலிபால் கிளப்..

திருச்சியில் மாநில அளவிளான வாலிபால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரையைச் சார்ந்த மூர் வாலிபால் கிளப் (MVC) அணியினர் முதல் பரிசுக்கான கோப்பையை வென்றனர். இந்த அணியினர் சமீபத்தில் கீழக்கரையில் நடந்து THAIZET மின்னொளி வாலிபால் போட்டியிலும் பரிசுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

தமிழன் தொலைக்காட்சி கௌரவித்த இஸ்லாமியா பள்ளி மாணவன்..

தமிழகத்தில் உள்ள தமிழன் தொலைகாட்சி வருடந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக தனித்திறமை விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான விருது கடந்த 14-02-2018 அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இதில் கீழக்கரை இஸ்லாமியா பள்ளி 11ம் வகுப்பு, தெற்கு தெரு மாணவன் ரினாஸ்தீன் “விளையாட்டு வீரர் மாணவர்” என்ற 2017ம் ஆண்டுக்கான விருதினை பெற்றார். இவ்விருதை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சென்னையில் நடந்த விழாவில் வழங்கினார். இம்மாணவர் இஸ்லாமியா பள்ளி வாலிபால் […]

விருதுகளை குவித்த செய்யது ஹமீதா கலைக் கல்லூரி மாணவர்கள்…

கடந்த வாரம் விருதுநகர் V.H.N.S.N கல்லூரியில் ஒருநாள் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல கல்லூரிகள் கலந்து கொண்டனர். அன்று நடைபெற்ற போட்டிகளில் கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரி மாணவர்களும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு அதிகமான பரிசுகளை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான அகில இந்திய கைப்பந்து போட்டியில் சிறந்த வீரர் பட்டம் பெற்ற கீழக்கரை மாணவன்..

கீழக்கரை வடக்குத் தெரு ஜஹுபர் அலி (சிங்கப்பூர் டிராவல்ஸ்) மகன் ஜாகித் ரிஃபாய். இவர் செங்கல்பட்டு சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். இவர் நீண்ட நாட்களாக கல்லூரியின் கைப்பந்து அணி சார்பாக விளையாடி வருகிறார். கடந்த வாரம் கொல்கத்தாவில், அகில இந்திய சட்டக்கல்லூரிகளுக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணி, இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. மேலும் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவரான ஜாகித் ரிஃபாய் சிறந்த வீரருக்கான சிறப்பு பரிசையும் வென்றார். அவருக்கு […]

“THAI ZET” மின்னொளி வாலிபால் போட்டி பரிசளிப்பு விழா..

கீழக்கரை THAI ZET விளையாட்டு குழு நடத்திய மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியின் இறுதி சுற்றுகள் மற்றும் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வெள்ள துரை ADSP கலந்து கொண்டார். இந்நிகழ்வில் சிறப்புரையை ஹமீது யூசுஃப் சாகிபு கீழக்கரை நகர் செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கினார். இப்போட்டியில் முதல் பரிசுக்கான சாம்பியன் கோப்பையை மூர் டிராவல்ஸ் (MVC) அணியனரும், இரண்டாம் இடத்தை “THAI ZET” அணியினரும் […]

“THAI ZET” வாலிபால் போட்டி தொடங்கியது..

இன்று (19-02-2018) கீழக்கரை THAI ZET வாலிபால் அசோசியேசன் நடத்தும் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி சிறப்பாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கீழக்கரை நகர் செயலாளர் ஹமீது யூசுப் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தை தொகுதிச் செயலாளர் அற்புதக்குமார், 500 பிளாட் தமிம் மற்றும் சதக் , சாதிக் அலி மற்றும் இன்னும் பலர் கலந்து கொண்டனர். https://keelainews.in/2018/02/10/thai-zet-sports-friends-district-level-competition-kilakarai-01/

கீழக்கரையில் ‘THAI ZET’ விளையாட்டு குழு நண்பர்கள் நடத்தும் மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நாளை துவங்குகிறது.

கீழக்கரை ‘THAI ZET’ விளையாட்டு குழு நண்பர்கள் சார்பாக மாவட்ட அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி நாளை (11.02.18) தெற்குத் தெரு கிஷ்கிந்தா விளையாட்டு மைதானத்தில் மாலை 5 மணியளவில் துவங்குகிறது. இந்த மாவட்ட அளவிலான போட்டியில் 15 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. விழா நிறைவு நிகழ்ச்சியில் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் இபுறாகீம் தலைமை ஏற்கிறார். சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் கூடுதல் காவல் துணை கண்பாணிப்பாளர் வெள்ளத்துரை பங்கேற்கிறார். தெற்குத் தெரு ஜமாஅத் […]

துபாயில் நடைபெற்ற தமிழக அளவிலான கிரிக்கெட் போட்டியில் ‘SMASHING STRICKERS’ அணியினர் சேம்பியன் கோப்பையை வென்று அபாரம்

துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு நண்பர்கள் ஒன்றிணைந்து ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 அணிகள் பங்கு பெற்றது. இன்று (09.02.18) துபாயில் நடைபெற்ற இறுதி போட்டியில் ‘SMASHING STRICKERS’ அணியினர் மதுக்கூர் கிரிக்கெட் கிளப் அணியினை வீழ்த்தி முதல் பரிசு 2222 திர்ஹம் மற்றும் சேம்பியன் கோப்பையை தட்டி சென்றுள்ளனர். தொடர்ந்து வெறிகளை குவித்து வரும் அணியினருக்கு […]

விளையாட்டு போட்டிகளில் பல பதக்கங்களை வென்று மின்னும் அல்-பையினா பள்ளி..

20-01-2018 அன்று திருப்பத்தூர் பாபா அமிர் பாதுஷா பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தமிழக இஸ்லாமிய பள்ளிகள் மேம்பாட்டு (TAMILNAD ISLAMIC SCHOOL WELFARE ASSOCIATION – TISWA) அமைப்பு சார்பாக  SPORTANS’18 என்ற பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் பல் வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.  இப்போட்டியில் தமிழகத்தில் இராமநாதபுரம் மதுரை திண்டுக்கல் திருநெல்வேலி புதுக்கோட்டை கரூர் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 25 பள்ளிகளின் சார்பாக 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். […]

இராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் முதல் பரிசு இரண்டாம் பரிசு பெற்ற பெரியபட்டினம் இளைஞர்கள்.

அரியாமான் ( குஷி பீச் ) யில் இந்த ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய 21 வயதுக்கு உட்பட்ட ஐவர் கால்பந்துப் போட்டியில் பெரியபட்டினம் அணியினர்கள் இந்த ஆண்டும் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற இளைஞர்களை பாராட்டுவதில் கீழைநியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.

வாலிபால் போட்டியில் வெற்றிக் கனிகளை குவித்து வரும் கீழக்கரை புதுத்தெரு (MYFA) இளைஞர்கள்…

கீழக்கரை புதுத்தெரு MYFA அணியினர் வாலிபால் போட்டியில் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூரில் (26.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் நான்காம் பரிசு Rs.10,000 வென்றனர். இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளியில் (29.12.2017) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் மூன்றாம் பரிசு Rs.10,000/- வென்றனர் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் (01.01.2018) அன்று நடைபெற்ற வாலிபால் போட்டியில் முதல் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி நாயகர்களை வாழ்த்துவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.

கால்பந்து போட்டியில் வண்ணாங்குண்டு அணி வெற்றி..

சமீபத்தில் சாத்தான்குளத்தில் மாவட்ட அளவிளான மின்னொளி கால்பந்து அளவிளான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல அணிகள் மோதியது. இறுதிப் போட்டியில் வண்ணாங்குண்டு அணி, பனைக்குளம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற வண்ணாங்குண்டு அணியினருக்கு பல அன்பர்களிடம் இருந்து பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளன. இத்தருணத்தில் கீழை நியூஸ் நிர்வாகமும் வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறது.

மாநில அளவிலான ‘சதுரங்கப்போட்டி’ (Chess) போட்டியில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை…

தமிழ்நாடு மாநில அளவிலான சிறுவர்களுக்கான செஸ் போட்டி (TN State Level Children’s Chess Tournament – 2017) திண்டிவனம் V.K.M.வித்யாலயா சி.பிஎஸ்.இ. பள்ளியில், லிட்டில் ராஜு செஸ் அகடமியுடன் இணைந்து, சென்னை லோட்டஸ் செஸ் அகடமி சார்பில் டிசம்பர் 23-24 ஆகிய இரு நாட்களாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் பல வயது பிரிவுகளில் மொத்தம் 200 டிரோஃபிகள் வழங்கப்பட்டன. அதில் 10 வயதிற்கு கீழுள்ள பிரிவில் கலந்துகொண்ட 61 மாணவர்களில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி […]

மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்ரை CVC அணியினர் இரண்டாம் பரிசு..

மாரியூரில் 09/12/2017 அன்று நடைபெற்ற மாநில அளவிலான இரண்டுநாள் (09-12-17 & 10-12-17)மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது. அதில் கீழக்கரையை சார்ந்த கஸ்டம்ஸ் வாலிபால் கிளப்(CVC – CUSTOMS VOLLEY BALL CLUB) அணியினர் இரண்டாம் பரிசு பெற்றனர். இந்த *CVC* வாலிபால் அணி ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் கீழ் செயல்படுவது குறிப்பிடதக்கது. மேலும் ஹிதாயத் நற்பணி மன்றம் கீழக்கரை சுற்றிவட்டாரம் முழுவதும் இலவச மரக்கன்றுகள் வழங்குவது பாராட்டுக்குரிய விசயமாகும்.

டேக்வோண்டா போட்டியில் பல பரிசுகளை வென்ற இஸ்லாமியா உயர் நிலைப் பள்ளி மாணவர்கள்..

கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழக்கரை கண்ணாடி வாப்பா பள்ளியில் பலதரப்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட டேக்வோண்டா (TAEKWOUNDO) போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி  பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் பல வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர். R.முகில்தரன் தங்க பதக்கத்தையும், J.முஹம்மது ஹுசைன் வெள்ளி பதக்கத்தையும், முகம்மது இர்ஃபான், கோபிநாத், வைநித்திஸ் மற்றும் மணிரூபன் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் […]

வாலிபால் போட்டியில் கடல் கடந்தும் சாதனை புரியும் கீழக்கரை இளைஞர்கள் – வீடியோ தொகுப்புடன்…

சமீபத்தில் சவுதி அரேபியா வணிக தலைநகரான ஜித்தாவில் கேரள இஸ்லாமியர்கள் கமிட்டி (KMCC) நடத்திய வாலிபால் போட்டியில் பல ஊர்களில் இருந்து கலந்து பல் வேறு அணியினர் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் இறுதி சுற்றுவரைச் சென்று கீழக்கரை இளைஞர்களை உள்ளடக்கிய FRC (Friends Republic Club) அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. முதல் இடத்தை ஜித்தாவைச் சார்ந்த JVT அணியினர் வென்றனர். FRC (Friends Republic Club) அணியில் இருந்த 12 வீர்ர்களில் கீழக்கரையைச் சார்ந்த ஹமீது […]

அமீரக மண்ணில் தடம் பதித்த தமிழ் மைந்தன்..

திருநெல்வேலியை சேர்ந்தவர் சையத் அலி ( வயது 51 ). இவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ரன் தி டிராக் (Run the Track) என்ற ஓட்டப் போட்டி 3, 5 மற்றும் 10 கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளுக்கு நடந்தது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய பலர் ஆயிரக் கணக்கில் பங்கேற்றனர். இதில் தமிழக வீரர் சையது அலி கலந்து கொண்டு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!