தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் மாணவருக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சை, அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், ஊட்டி, விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் மாணவர் விளையாட்டு விடுதிகளும், ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் மாணவியர் விளையாட்டு […]
Category: விளையாட்டு செய்திகள்
பாலியல் குற்றத்திற்கு தூக்கு தண்டனை அளவிற்கு கடுமையான தண்டணை கொடுக்க வேண்டும் – தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தல்…
கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் மற்றும் கயத்தார் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கட்சி நிர்வாகிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி விட்டு கயத்தாரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது,இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும், நாற்பதும் நாமதே, நாளையும் நாமதே என்ற அளவில் வெற்றி பெறும், இன்றைய காலகட்டத்தில் இந்த கூட்டணியில் குழப்பம் விளைவிக்க பல பேர் முயற்சி செய்கின்றர்கள், அதில் தோற்றுதான் போவார்கள்,பொள்ளாச்சி சம்பவம் எல்லோரும் மனதினையும் […]
மதுரையில் இலக்கிய அமைப்பு.. புதுமைப்பித்தன் நினைவு விழா..
மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் விளக்கு இலக்கிய அமைப்பு(அமெரிக்கா)புதுமைப்பித்தன் நினைவு விருது-2017 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் ஆ.ரா.வெங்கடாசலபதி மற்றும் பா.வெங்கடேசன் ஆகியோருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வினை தீபாநாகராணி தொகுத்து வழங்கியும், இரவிசுப்பிரமணியன் தமிழ்த்தாய் வாழ்த்தும்,வை.க.தேவ் அவர்கள் வரவேற்புரையும் ஆற்றினார். இதில் ஜெ.பாலசுப்பிரமணியம், கரு.ஆறுகத்தமிழன், சு.வெங்கடேசன், பாலசுப்பிரமணியம் பொன்ராஜ், தி.பரமேஸ்வரி, ராஜன்குறைகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் அ.வெற்றிவேல் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியை பொறுப்பாளர் மு.சுந்தரமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.
துபாயில் நடந்த மாரத்தான் போட்டியில் கீழக்கரை மற்றும் பல தமிழக இளைஞர்கள் கலந்து கொண்டனர்…வீடியோ..
துபாயில் ஸ்டேண்டர்ட் சாட்டர்ட் பேங்க் (Standard Chartered Bank) சார்பாக வருடந்தோரும் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த 2019 ஆண்டிற்கான 10 கி.மீ மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கீழக்கரையை சார்ந்த மரைக்கா, சிஹாபுதீன், ஜீப்ரீ ஆகியோர் AG MELCO அணி சார்பாகவும், மதுரையில் இருந்து மார்டின் ரேமண்ட், தன் ஐந்து வயது மகனுடன் கலந்து கொண்டு 10 கி.மீ தூரத்தை வெற்றிக்கரமாக நிறைவு செய்தனர் .இதில் […]
இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து போட்டி : காரிக் கூட்டம் அணி கோப்பை வென்றது…வீடியோ..
இராமநாதபுரம் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் சாத்தான்குளம் நூருல் இஸ்லாம் வாலிபர் முன்னேற்றச் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கால் பந்து போட்டி நடந்தது. கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய போட்டியில் இளையான்குடி, சாத்தான்குளம், மண்டபம், வலசை, காரிக் கூட்டம், பனைக்குளம், அழகன்குளம், பெரிய பட்டணம் உள்பட 10 அணிகள் கலந்து கொண்டன. இறுதி ஆட்டத்தில் காரிக் கூட்டம், முனியன்வலசை அணிகள் மோதின. நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர நிறைவில் இரு […]
இராமேஸ்வரம் கோயில் ரத வீதிகள் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்..
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு செய்தார். அப்போது கோயில் நான்கு ரத வீதிகளில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக ஆட்சியர் ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றிக் கொள்ள அதன் உரிமையாளர்களுக்கு ஆட்சியர் கால அவகாசம் கொடுத்தார். ஆனால் கடைகளை அப்புறப்படுத்தாமல் அதன் உரிமையாளர்கள் போக்கு காட்டினர். அக்கடைகளை நகராட்சி ஊழியர்கள் மூலம் […]
பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு..
அந்தமான் கடற்பகுதில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. 12.11.2018 க்கு மேல் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் எனவும், கடலுக்கு சென்ற மீனவர்கள் 12.11. 18 இரவுக்குள் கரை திரும்ப வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும். 14.11. 18 இல் சென்னை உட்பட தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். இதன் […]
காட்பாடி அருகே அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பாக 4ம் ஆண்டு கபடி போட்டி..
காட்பாடி அருகே செம்ராயநெல்லூர் டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற கபாடி போட்டியில் மொத்தம் 50 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கபாடி வெற்றி பெற்று முதல் பரிசான ரூ 20 ஆயிரம் பெற்றனர். விழாவில் செளந்தர்ராஜன், மோகன்.ராமமூர்த்தி, வில்வ நாதன், யாதவ மூர்த்தி, ராம்பிரகாஷ் பிரபாகன் (எ) அப்புண், பிரதீப் குமார் வினோத் மற்றும் அம்பேத்கார் நற்பணி மன்றத்தை சேர்ந்த இளவரசன், சந்துரூ, மதியழகன் சத்ய பிரகாஷ் அறிவழகன் சத்யராஜ், […]
வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்..
வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பெருமாள் கோவிலில் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் SRK அப்புதலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சு.ரவி பூத் கமிட்டி குறித்து விளக்கி பேசினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராமு காட்பாடி ஒன்றிய செயலாளர் KS சுபாஸ் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் எம் ஜி ஆர் மன்ற செயலாளர் நாராயணன் தொழில்நுட்ப செயலாளர் ராகேஷ் சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் […]
நெல்லை மாவட்டம் சுரண்டையில் புத்தக திருவிழா..
நெல்லை மாவட்டம் சுரண்டையில் மகாத்மா காந்தியின் 150 வது நினைவு தினத்தை முன்னிட்டு சத்யா ஏஜென்சி சார்பில் 2-வது புத்தக திருவிழா 6/10/18 முதல் 15/10/18 வரை நடைபெற்று வருகிறது. இப்புத்தக திருவிழாவில் உலகின் பல்வேறு அறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், தலைசிறந்த எழுத்தாளர்களின் ஏராளமான புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டது. இந்த புத்தக திருவிழாவில் ஆசிரியர்கள்,பள்ளி கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள்,சிறுவர் சிறுமியர்கள் என அதிகமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அந்த வகையில் கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து […]
இராமநாதபுரம் பகுதியில் மின்னல் தாக்கி 20 ஆடுகள் பலி..
இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பரவலான மழை பெய்தது. மேலும் அடிக்கடி பலத்த இடி சத்தத்துடன் மின்னல் தாக்கம் தொடர்ந்தது. இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே ஏ.புனவாசல் சிறுகுடி கிராமத்தில் மழைக்கு ஆடுகள் ஓரிடத்தில் ஒதுங்கின. அங்கு மின்னல் தாக்கியதில் கூட்டமாக நின்ற 20 ஆடுகள் பரிதாபமாக பலியாகின. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம். இது குறித்து வருவாய் துறை, கால்நடை துறை, மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர். செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
கள்ளத்தோணியில் இலங்கைக்கு செல்ல முயன்ற மூவர் கைது..
இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை கொழும்பு பகுதியைச்சேர்ந்தவர் ரமணி (42). சுற்றுலா விசாவில் இந்தியா வந்த இவர் திருச்சியில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை, தனுஷ்கோடி வழியாக மர்மப்படகில் இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்றார். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஏஜன்ட் ஆல்வின், திருச்சியைச்சேர்ந்த கார் ஓட்டுநர் உட்பட மூன்று பேரை ராமநாதபுரம் சுங்கத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
மாவட்ட அளவிளான கைப்பந்து போட்டி பரமக்குடி, இளையாங்குடி மற்றும் கீழக்கரை அணியினர் வெற்றி…
இராமநாதபுரம் மாவட்டம் விளையாட்டு மேம்பாட்டு கழகம் சார்பாக மாவட்ட அளவிலான ஹேண்ட் பால் (கைபந்து) போட்டி நடந்தது. இப்போட்டியில் பரமக்குடி ராஜா சேதுபதி அணி முதல் பரிசு, இளையான் குடி டாக்டர் ஜாகீர் உசேன் கல்லூரி இரண்டாம் பரிசு மற்றும் கீழக்கரை கண்ணாடி வாப்பா ஹேண்ட் பால் அணி மூன்றாம் பரிசையும் வென்றன. பின்னர் போட்டியில் வென்ற அணி வீரர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்பால் ஜெயசீலன் பரிசு வழங்கினார். ஹேண்ட் பால் அசோசியேஷன் செயலாளர் ஆசிரியர் […]
இராமநாதபுரத்தில் ரோட்டரி டென்னிஸ் போட்டி…
ரோட்டரி கிளப் ஆப் இராம்நாடு சார்பாக இராமநாதபுரம் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி டென்னிஸ் மைதானத்தில் நடந்தது. 3 நாட்கள் நடந்த போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் ராஜேஷ், திலீப் ஜோடி , அசோக்குமார், முரளி ஜோடியை வென்றது. ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் அசோக்குமார், மாஸ்டர் ஹரி யோகித்தை வென்றார். 15 வயதிற்குட்பட்டோர் ஆட்டத்தில் மாஸ்டர் ஹரி யோகித், பரத்வாஜை வென்றார். 12 […]
மதுரையில் நாயை காப்பாற்ற 70அடி கிணற்றில் குதித்த வாலிபர்..வீடியோ பதிவு.
மதுரை திருப்பரங்குன்றத்தில் நாயை காப்பாற்ற 70 அடி கிணற்றில் குதித்த வாலிபரால் பரபரப்பு. மதுரை தேவிநகர் பேயத்தேவர் காம்பவுண்டை சேர்ந்த சிற்ப தொழிலாளி பாலமுருகன். இவர் கிணற்றில் விழுந்த நாயை காப்பாற்ற 70 அடி கிணற்றில் குதித்தார். அதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறை மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து அவரை காப்பாற்றினர்.
62வது போலீஸ் பணி திறன் போட்டி ஜூலை 22 முதல் 27 வரை சென்னையில் நடந்தது..இராமநாதபுர வட்ட மோப்ப நாய்கள் பதக்கம் வென்றது..
தமிழ்நாடு போலீஸ் அகாடமி சார்பில் 2018ம் ஆண்டுக்கான 62வது போலீஸ் பணி திறன் போட்டி ஜூலை 22 முதல் 27 வரை சென்னையில் நடந்தது. இதில் இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் மோப்ப நாய் அணி பங்கேற்றது. குற்ற மோப்ப நாய் ரோமியோ, குற்ற தடுப்பு பயிற்சி திறன் படைத்த நாய் லைக்கா (சிவகங்கை மாவட்டம் ) தலா ஒரு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றன. மேலும் பதக்கம் வென்று சாதனை படைக்க மோப்ப நாய்கள் ரோமியோ, […]
அறிவோம் – உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) அலைபேசி எண்…!!!
அறிவோம் – உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் ) அலைபேசி எண்…!!!* அப்படியே தாலூகாவையும் அறிந்து கொள்ளலாமே….. *1 .சென்னை மாவட்டம்* ——————————— 1 Fort-Tondiarpet 94450 00484 2 Purasawakkam-Perambur 94450 00485 3 Egmore-Nungambakkam94450 00486 4 Mylapore-Triplicane 94450 00487 5 Mambalam-Guindy 94450 00488 *2 .திருவள்ளூர் மாவட்டம்* ————————————- 6 Ambattur 94450 00489 7 Ponneri 94450 00490 8 Gummudipoondi 94450 00491 9 Thiruthani 94450 00492 […]
தமிழ்நாடு பொன்விழா ஆண்டு” விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்..
‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு” விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் இன்று (19.07.2018) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து ‘பிரசிடென்சி ஆப் மெட்ராஸ்” என்று ஆங்கிலத்திலும், ‘சென்னை மாகாணம்” என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் […]
ராமநாதபுரத்தில் ஜூலை 19ல் தடகள விளையாட்டு போட்டி ..
தமிழ்நாடு அரசு பொன் விழா ஆண்டை முன்னிட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஜூலை 19ல் தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஜூலை 19 காலை 8 மணிக்கு 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க 2017 டிச., 31 அன்று 21 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் சொந்த மாவட்டத்திற்காகவோ, […]
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் வரும் அமைச்சர் மணிகண்டன் உறுதி!
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு விமான நிலையம் விரைவில் வரும் என இருமேனி இஸ்லாமிய இளைஞர் அமைப்பு நடத்திய மாநில அளவிளான ஐந்தாம் ஆண்டு கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழாவில் அமைச்சர் மணிகண்டன் உறுதி அளித்தார். மேலும் அவர் பேசியதாவது’” இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி சீனியப்பா தர்ஹா வில் கடந்த 2013 ல் அம்மா அறிவித்த திட்டத்தினை நிறைவேற்றும் வகையில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் சுமார் 7 கோடி மதிப்பில் அமைக்கப்படும். மாவட்டத்தில் பெண்களுக்கு […]
You must be logged in to post a comment.