பாலமேட்டில் பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர்.

பாலமேட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக பேருந்து நிலையத்தை மறித்து மேடை போட்ட திமுகவினர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து வர முடியாத நிலையில் பொதுமக்கள் அவதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்காக பாலமேடு பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து மேடை அமைத்ததால் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது இதனால் பாலமேட்டில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கும் மற்றும் நகர் பகுதிகளுக்கும் […]

நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழா.!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி, 29ஆம் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பகல்-இரவு கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 7 முதல் 10 வரை நடைபெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று ஆட்டத்தை சிறப்பிக்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1,00,060, இரண்டாம் பரிசு ரூ.75,060, மூன்றாம் பரிசு ரூ.50,060, நான்காம் […]

இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி  .!

இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றலான மன்னர் என்.குமரன் சேதுபதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 18 அணிகள் 216 வீரர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டானது மூன்று நாட்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் பெரியபட்டினம் அணியும் இராமநாதபுரம் சேதுபதி அணியும் விளையாடின இதில் பெரிய பட்டிண அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணி பெரியபட்டிணம் முதல் […]

ஃபோன் அடிக்க்ஷனில் இருந்து தப்பிக்க இளைஞர்களுக்கு மாணவர்களுக்கும் பயிற்சி .!

போதைக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு ஒரு ‘அடிக்சன் கில்லர்’ இருப்பது போல் ஃபோன் அடிக்க்ஷனில் இருந்து மீள்வதற்கு தொடங்கப்பட்ட நல்ல ஒரு பயிற்சி முகாம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள அரிய ஒரு வாய்ப்பு. இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு பெரியபட்டினம் கால்பந்து குழு சார்பாக கோடை கால கால்பந்து மற்றும் விளையாட்டு பயிற்சி முகாம் – போன் அடிக்க்ஷனில் இருந்து விடுபடலாம் என நம்பிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் […]

சத்திரக்குடி கலை ஸ்போர்ஸ் அகடாமியின் சார்பில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு..

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் செயல்பட்டு வருகிறது கலை ஸ்போர்ட்ஸ் அகடாமி இங்கு கராத்தே மாஸ்டரும் அகடாமியின் நிறுவனருமான கலைக்குமார் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பு பயிற்சி முகாம் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிலம்பம், கராத்தே, செஸ், பரதநாட்டியம், பயிற்சி வழங்கப்படுவது வழக்கம் இந்த நிலையில் இன்று ஆர்.எஸ் மங்கலம் அருகே உள்ள உப்பூர் டோனி நர்சரி அண்ட் ப்ரைமரி பள்ளியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று கராத்தேவில் குமித்தே சண்டை பயிற்சி, சிறப்பு கராத்தே கட்டா பயிற்சிகளும் மாணவர்களுக்கு […]

கல்லூரி மாணவியின் கல்லூரி கட்டணத்தை செலுத்திய தஞ்சை ஜோதி அறக்கட்டளை.!

மகள் படித்து பட்டம் பெற வீட்டில் இருக்கும் கடைசி பொருளான மறைந்த கணவர் நினைவாக வைத்திருந்த தாலியை விற்று கல்விக்கட்டணம் செலுத்த முயன்ற ஏழைத்தாய் . அடகு கடைக்காரர் மூலம் கேள்விப்பட்டு கல்லூரி கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றை முழுமையாக செலுத்தி தாயின் தாலியை மீட்ட சமூக ஆர்வலர் . நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் கிரமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் – பெரியநாயகி தம்பதிகள் . இவர்களுக்கு ரோகிணி,துர்காதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர் . முருகதாஸ் அன்றாடம் கூலி வேலைக்கு […]

அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) 18வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி துவக்கம்..

இராமநாதபுரம் கீழக்கரையை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக  செயல்பட்டு வரும்அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) சார்பாக நடத்துப்ஙனும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி இன்று (14/01/2025) கீழக்கரையில் உற்சாகமாக தொடங்கியது. இந்த போட்டியில் பல் வேறு இடங்களில் இருந்து போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் யார்க்கர் மன்னன் நடராஜன்…

திருச்சியில் தனியார் நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது,  “மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன், கடுமையான பயிற்சியின் முயற்சியும் செய்தால்தான் இந்திய அணியில் இடம்பெற முடியும்”. தமிழ்நாடு பிரிமியர் லீக் பல திறமையான வீரர்களை உருவாக்கி வருகிறது . தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சிறப்பாக விளையாடியதால் தான் நான் இந்திய அணிக்கு தேர்வானேன். கிராமத்தில் இருந்து வந்த […]

தமிழ்நாடு ஸ்டேட் மினி 11 வயது உட்பட்டவர்களுக்கான ரேங்கிங் இறகு பந்து விளையாட்டு போட்டி..

திருவண்ணாமலை அடுத்த போளூர் பகுதியைச் சேர்ந்த டி.எஸ்.ஷாதின் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டேட் மினி 11 வயது உட்பட்டவர்களுக்கான ரேங்கிங் இறகு பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட 38 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 128 மாணவர்களில் கலந்து கொண்டு 16வது இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். பயிற்சியாளர் கே.டி.ஆர்.கார்த்தி உடன் உள்ளார்

தேசிய கராத்தே போட்டி : இரட்டை. சகோதரிகள் வெற்றி..

இராமநாதபுரம் : டில்லி டால்க டோர உள் விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி டிச.12 முதல் 15 வரை நடந்தது. 7 வயதிற்கு மேல் 14 வயதிற்குட்பட்டோர்,  சப்-ஜூனியர் மகளிர் 30 கிலோ எடை குமித் தே பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம்  ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4ம் வகுப்பு மாணவி ரித்யா, தமிழ்நாடு சார்பில் பங்கேற்று இறுதிச்சுற்றில் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்தார். இவரது சகோதரி ரிதன்யா முதல் […]

அரசு தடை செய்ய புகையிலை பொருள் விற்பனை : 3 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிற்கு இணங்க, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் வழிகாட்டல் படி ராமேஸ்வரம் நகரில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், சார்பு ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், காவலர்கள் சரவணன், முனியசாமி பாண்டி, விநாயகம், கோபி, திக்விஜயன் உள்ளிட்டோர் ராமேஸ்வரம் நகர் முழுவதும் 38 […]

கீழக்கரையில் நாய்களை பிடிக்கக் கோரி மூவாயிரம் போஸ்ட் கார்டுகள் முதலமைச்சருக்கு அனுப்பிய பொதுமக்கள் !

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என்றும் பொது மக்களுக்கு அச்சத்தில் இருப்பதாகவும் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதித்து வருவதாகவும் கூறி கீழக்கரை சமூக ஆர்வலர்கள் தொண்டு இயக்கங்கள் இணைந்து பொதுமக்களிடம் போஸ்ட் கார்டு மூலம் கோரிக்கைகளைப் பெற்று 3000 போஸ்டர் கார்டுகளை முதலமைச்சருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் நாய்களை கிழக்கே நகராட்சி முறையாக பிடித்து அகற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். […]

தோனியை ஆர்சிபி அவமதித்துவிட்டது! விராட் கோலி செய்த மெகா தவறு!இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு..

தோனியை ஆர்சிபி அவமதித்துவிட்டது! விராட் கோலி செய்த மெகா தவறு!இங்கிலாந்து வீரர் குற்றச்சாட்டு.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டி முடிவடைந்த பிறகு ஆர் சி பி அணியினருக்கு, தோனி கை கொடுக்கவில்லை என்று ஒரு புகார் எழுந்தது. ஆனால் உண்மை என்னவென்று தற்போது வெளியாகி இருக்கிறது. சிஎஸ்கே அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் மூலம் பிளே ஆப் […]

பட்டையை கிளப்பிய சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் […]

திரு உத்தரகோசமங்கையில் 10 ஆம் நாள் சித்திரை பெருவிழா ! வானவேடிக்கையுடன் கோலாகல கொண்டாட்டம் !!

ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் மங்களநாதர் மங்களீஸ்வரி ஆலயம் பாண்டியர்களால் கட்டப்பட்டு இங்குள்ள சுவர்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொரு தூண்களிலும் சிற்பத்தால் பாண்டியர்களின் ரகசியம் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்த ஆலயத்தில் உலகத்திலேயே எந்த முருகனுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு முருகப்பெருமானுக்கு முன்பு வெள்ளை யானை இருப்பதே ஆகும் இந்திரன் மகளான தெய்வானையை மணம் முடித்த முருகப்பெருமானுக்கு இங்குதான் இந்திரன் சீதனமாக வெள்ளை யானையை வழங்கியதாக சொல்லப்படுகிறது. […]

கே.எல். ராகுல் அதிரடியால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணிக்கு எதிராக லக்னோ அணி அபார வெற்றி..

17-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ஆடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் கெய்க்வாட் […]

லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி..

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 17வது சீசனில் இன்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, லக்னோ தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குவிண்டன் டிகாக் களமிறங்கினர். டிகாக் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபக் ஹூடா 8 ரன்னிலும், கேப்டன் ராகுல் 39 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த […]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது ஐதராபாத் அணி..

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில்  நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த […]

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி..

ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணியில் சால்ட் முதல் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருந்தாலும் அதன்பிறகு சுனில் நரைன் – அங்கிரிஷ் ரகுவன்ஷி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது. அதனை […]

இன்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாவது ஆட்டத்தில் குஜராத்தை இலகுவாக வீழ்த்தியது லக்னோ அணி..

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்களிலும், அடுத்ததாக களமிறங்கிய படிக்கல் 7 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் கேப்டன் கே.எல். ராகுலுடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் நிதானமாக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!