5 ஆண்டு காலத்திற்கு ஆட்சி நீடிக்குமா என்பது “கேள்விக்குறி”- தொல். திருமாவளவன்..

5 ஆண்டு காலத்திற்கு ஆட்சி நீடிக்குமா என்பது “கேள்விக்குறி”- தொல். திருமாவளவன்.. நாட்டின் அரசியலமைப்பைக் காக்க வேண்டும் என்ற I.N.D.I.A.கூட்டணியின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றியுள்ளனர் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பின்னடைவு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது; நரேந்திர மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது பொருத்தமானது இல்லை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள அரசு அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தேசிய […]

அயோத்தியாவில் வைத்த “கொட்டு” நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன். -சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி..

அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன். -சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி.. மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றிக்கு முதல் காரணம் முதல்வர்தான். அவரின் நலத்திட்டம், அணுகுமுறை, தமிழ்நாட்டு மக்கள் மதங்களை மதிக்கின்ற அரசு வேண்டும் என்பதற்காக, மதச்சார்பற்ற அரசு மத்தியில் வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைப் போல […]

உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார். -விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..

உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார். -விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி.. மதுரையில் இருந்து டெல்லி செல்வதற்காக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழகம் மோடிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த அலையின் உடைய தாக்கம் தான் 40க்கு 40. இழுபறியில் […]

மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்!- காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே..

இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எங்கள் கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்கள், இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.பாஜக மற்றும் அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் […]

திண்டுக்கல் அருகே குப்பையில் கிடந்த 2 உலோக சிலைகள் – பத்திரமாக மீட்ட வருவாய்த் துறையினர்..

திண்டுக்கல் அருகே குப்பையில் கிடந்த 2 உலோக சிலைகள் – பத்திரமாக மீட்ட வருவாய்த் துறையினர்.. திண்டுக்கல்லை அடுத்த N.S.நகர் பேருந்து நிறுத்தம் அருகே சீலப்பாடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது குப்பையில் இருந்த ஒரு பையில் 2 உலோக சிலைகள் இருப்பதை கண்டறிந்து சீலப்பாடி ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன், வருவாய் ஆய்வாளர் அறிவழகன், சீலப்பாடி கிராம […]

ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது !- வி.கே.சசிகலா வேதனை..

வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை. தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், இனி வரும்காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது. தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருதமுடிகிறது. மேலும், “ஊரு […]

தென்காசி தொகுதியில் அதிமுக பாஜகவை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர்..

தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுக பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார்.. தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தென்காசி மக்களவை தனி தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக சார்பில் ஜான்பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் […]

இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின் கடிதம்..

திமு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றிக்களத்தின் நன்றி மடல்.மகத்தான வெற்றியை தி.மு.க.வுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் தொண்டர்களாகிய நீங்களும்தான். தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் பங்களிப்புடன் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. அதன் மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதை […]

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதள பாதாளத்திற்கு சென்ற பாமக- மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது..

தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ளது.இந்த நிலையில் […]

பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் மோடி..

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட […]

மூன்றாவது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி – ஜூன் 8-ல் பதவியேற்பு??

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதற்கு ஏதுவாக 17-வது மக்களவையை கலைப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை […]

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் CBCID முன் நேரில் ஆஜர்!

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்பரம் இரயில் நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.4 கோடி பணம் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், அந்த மூன்று பேரில் முக்கிய நபர் நயினாருக்கு சொந்தமான ஹோட்டலின் ஊழியர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து நயினார் […]

2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்ற திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள்!முழு விவரம்..

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர். இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர்களின் விவரங்கள். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,87,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. திண்டுக்கல் தொகுதியில் […]

தனித்து நின்று சாதித்து காட்டியது நாம் தமிழர் கட்சி! தேர்தல் ஆணைய அங்கீகாரமும் பெறுகிறது..

தனித்து போட்டியிட்டு சாதனை படைத்த நாம் தமிழர் கட்சி. மூன்றாம் இடம் பிடித்த தொகுதிகள்: கன்னியாகுமரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, நாகை திருச்சி மற்றும் புதுவை. 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்ற இடங்கள்: சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், நாகை, தென்காசி மயிலாடுதுறை, திருவள்ளூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருச்சி, கிருஷ்ணகிரி. அதிகபட்சமாக சிவகங்கையில் எழிலரசி 1,63,412 வாக்குகளைப் பெற்றார். தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் […]

பிஜேபி கூட்டணியில் தான் இருப்பேன், சந்திரபாபு நாயுடு திட்ட வட்டம்..

ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் பேட்டி. தெலுங்கு தேசம் கட்சியை வெற்றி பெற வைத்து மக்களுக்கு நன்றி. எனது வாழ்நாளில் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தலை நாம் பார்த்து இல்லை. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும் போது பதவியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது. என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்- சந்திரபாபு நாயுடு திட்டவட்டம். என்டிஏ கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி செல்கிறேன்- சந்திரபாபு நாயுடு.

தென்காசி தொகுதியில் 7-வது முறையாக தோல்வி அடைந்த கிருஷ்ணசாமி..

தென்காசி (தனி) பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார்.அவர் இதேபோல் ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார்.இந்த முறையுடன் சேர்த்து டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் தொடர்ந்து 7 முறை போட்டியிட்டார். கடந்த 1998, 1999, 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தென்காசி தொகுதியை குறிவைத்து போட்டியிட்ட கிருஷ்ணசாமி அவை அனைத்திலும் […]

பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக,நாதக ஆகிய கட்சிகளுக்கு முறையாக எத்தனையாவது இடம் கிடைத்துள்ளது..

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில், 28 தொகுதிகளில் அதிமுகவும், 11 தொகுதிகளில் பாஜகவும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், தற்போது பெற்ற வாக்குகள் அடிப்படையில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கக் கூடும் என தெரிகிறது. மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் நேற்று எண்ணப்பட்டன. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் அனைத்து தொகுதிகளையும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. முன்னதாக இந்த தேர்தலில், […]

வத்தலகுண்டு பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..

வத்தலகுண்டு பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட பலே திருடன் கைது, 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக வத்தலகுண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில், நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் நிலக்கோட்டை குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் காவலர்கள் ஜெயச்சந்திரன், பாலமுருகன், முருகன், கார்த்திக் […]

உத்தர பிரதேச மக்கள் விவேகத்துடன் செயல்பட்டுள்ளனர்’!-பிரியங்கா காந்தி மகிழ்ச்சி..

மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. அதே சமயம், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி இரானியை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மா வெற்றி பெற்றுள்ளார். அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியிலும் பா.ஜ.க. வேட்பாளர் லல்லு […]

ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவராகும் நடிகர் பவன் கல்யாண்?..

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் 21 தொகுதிகளில் ஜனசேனா கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. படிப்படியாக வெற்றி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!