நெல்லையில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா; நினைவு பரிசுகள் வழங்கல்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா; நினைவு பரிசுகள் வழங்கல்.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் கலை பதிப்பகம் இணைந்து பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையிலான 50 இலக்கிய கூட்டங்கள் பள்ளிக் கல்லூரி மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் வகையிலான கூட்டங்கள் என 100 கூட்டங்களை நடத்தி முடித்தனர். அந்நிகழ்வில் நிறைவு விழா […]

நபி­களாரின் போதனைகள் அறவழிக்கான அறிவுரைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாக பெருநாள் வாழ்த்து..

நபி­களாரின் போத­னை­கள் அறவழிக்கான அறிவுரைகள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தியாக திருநாள் வாழ்த்து.. நபி­களாரின் போத­னை­கள் மனி­தர்­கள் தங்களது அன்றாட வாழ்­வில் கடை­பி­டிக்க வேண்­டிய அறவழிக்கான அறிவுரைகள் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் தியாக திருநாள் வாழ்த்துச் செய்தியில், நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம், சகோதரத்துவம், அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்! ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி […]

நீட் தேர்வின் எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப் பெற்று வருகிறது! எங்களது எதிர்ப்பு குரலும் இனி தேசிய அளவில் இருக்கும்!- தொல் திருமாவளவன்..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் 40 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றியை வழங்கி உள்ளனர். நீட் தேர்வின் எதிர்ப்பு நாடு முழுவதும் வலுப் பெற்று வருகிறது. எங்களது எதிர்ப்பு குரலும் இனி தேசிய அளவில் இருக்கும். பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளை போன்று, தற்போது முடிவு எடுக்க […]

கொடைரோடு பகுதிகளில் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சார நிறுத்தம்..

கொடைரோடு பகுதிகளில் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சார நிறுத்தம்.. திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் துணை மின்நிலையத்தில் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பகோட்டை, முருகத்தூரான்பட்டி, சாந்தலாபுரம், நிலக்கோட்டை தொழிற்பேட்டை, பொட்டிக்குளம், பள்ளப்பட்டி, மாவூர் அணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வத்தலக்குண்டு செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

கீழக்கரையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை ! உலக மக்கள் அமைதிக்காக கூட்டுப் பிராத்தனை !

,  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஓடக்கரை பள்ளி ஜமாத் சார்பில் 18 வாலிபர்கள் தர்கா அருகில் அமைந்துள்ள திடலில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதிக்காகவும் சகோதரத்துவத்துக்காகவும்  கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டனர். பக்ரீத் திருநாள் என்பது இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் […]

சென்னையில் புதிய பார்க்கிங் பூங்கா திறக்கும் மெட்ரோ..

மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் வார நாள்களில் காலை 9 மணிக்கு மேல் பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியார் பார்க்கிங் இடத்தில் தங்கள் வாகனத்தை விட்டுவிட வேண்டும். காத்திருப்பு நேரம் 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை இருக்கலாம். இருப்பினும், அதிக நேரம் காத்திருப்பவர்கள் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள நங்கநல்லூர் ரோடு மெட்ரோவிலோ நிறுத்த […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை!- நடிகை கஸ்தூரி வேதனை..

விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது.இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என்பதால் இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இந்தநிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிக்க […]

பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை..

பெத்தநாடார்பட்டியில் கருவிழி நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; 93 நோயாளிகளுக்கு கண் பரிசோதனை.. பெத்தநாடார்பட்டியில் அரவிந்த் கண் மருத்துவமனை பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்பு விழிப்புணர்வு குழு இணைந்து கருவிழி நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 93 பேர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பெத்தநாடார்பட்டி தொழிலதிபர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர் குழு நிறுவனர் இளங்கோ, பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன் ஆகியோர் […]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னத்தில் போட்டியிட சீமான் முடிவு..

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர்.அபிநயா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. […]

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைக்க தென்காசி மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை..

பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கலெக்டரிடம் கோரிக்கை.. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பகுதியில் தார் சாலை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தென்காசி தெற்கு திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி திருநெல்வேலி நான்கு வழிச்சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், […]

தென்காசி மாவட்டத்தில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்..

தென்காசி மாவட்டத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்; மாவட்ட கலெக்டர் தகவல்.. தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்.168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் வலசை, இலத்தூர் அஞ்சல் என்ற முகவரியில் […]

அரசின் விதிகளை பின்பற்றாத கனிம வள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்; முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்..

அரசின் விதிகளை பின்பற்றாத கனிம வள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும்; முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணன் வலியுறுத்தல்.. அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காத கனிமவள லாரிகள் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தப்பட வேண்டும் என முன்னாள் எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான கே. ரவி அருணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு செல்லும் […]

திப்பணம்பட்டி அரசு நூலகத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா; பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்..

திப்பணம்பட்டி அரசு நூலகத்தில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா; பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கல்.. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில் பாரதியார் வாசகர் வட்டம் சார்பாக, பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாத கோடை கால இலவச ஆங்கில வகுப்பு மற்றும் பொது அறிவு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இதில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் […]

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்; சிபிஐஎம் மாநில செயலாளர் கண்டனம்..

நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்; சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்.. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதலுக்கு சிபிஐஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றிய கண்டன அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் […]

சங்கரன்கோவிலில் காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது..

சங்கரன்கோவிலில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்த நபர் அதிரடி கைது.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில்வே கேட் அருகே பயிற்சி சார்பு ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது மதுபோதையில் இருந்த மூவரும் காவல்துறையினரிடம் தங்களை எப்படி நிறுத்தி சோதனை செய்யலாம் என்று பிரச்சனை செய்து அவர்களை […]

அரியமானில் மாபெரும் கடற்கரை திருவிழா !  பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்திட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !! 

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரையில் இன்று (15.06.2024) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கடற்கரை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இவ்விழா இன்று துவங்கி 17.06.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் கடற்கரை கைப்பந்து போட்டிகள், கால்பந்து போட்டிகள், இரவு மின்னொளி விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், வகை வகையான உணவு கூடாரங்கள், படகு சவாரி, டிஜே மியூசிக், தண்ணீர் விளையாட்டுகள் போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இன்று 15.06.2024, 16.06.2024, […]

சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபர்; காவல் துறையினர் பாராட்டு.

சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு பாராட்டு. சாலையில் கிடந்த மணி பர்ஸை நேர்மையான முறையில் சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபரின் நற்செயலை காவல்துறையினர் பாராட்டினர். நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான வேளாளர்குளம், ஆர்.சி சர்ச் அருகே செங்குளம், துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுக நயினார் (40) என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது கீழே கிடந்த மணிபர்ஸை எடுத்து […]

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு சரக்குந்து உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; சீமான் வலியுறுத்தல்..

தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு சரக்குந்து உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.. தென்காசி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சரக்குந்து உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், தென்காசி அருகே குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் சரக்குந்து மோதி ஒரு […]

தென்காசியில் குருதி கொடையாளர் தின விழா; குருதி கொடையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு..

தென்காசியில் உலக குருதி கொடையாளர் தின விழா; குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் பாராட்டு.. தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர்களை பாராட்டும் விதமாக நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு அதிக ரத்த தானம் வழங்கிய குருதிக் கொடையாளர்களை பாராட்டி சிறப்பு சான்றிதழும் பதக்கமும் வழங்கினார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் […]

கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம்!- ஓபிஎஸ் அறிக்கை..

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதிமுகவைக் கைப்பற்றிக் கொள்வதை விட காப்பாற்றுவதே முக்கியம் என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அதில் கலந்து கொண்டிருந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் புகழேந்தி மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!