சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.. தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்குட்பட்ட சூரங்குடியில் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தையும், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் கால் மற்றும் வாய்நோய், கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டத்தையும் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான சிவஆனந்த் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாடுகளின் உரிமையாளரின் ஆதார் கார்டு […]
Category: மாவட்ட செய்திகள்
ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு..
ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு.. இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் கல்வி கற்பித்தலில் 17 ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்றுள்ளது எனவும், இக்கல்லூரியில் பயின்ற பலர் அரசு அதிகாரிகளாக மாறி வருவதாகவும் கூறி நெல்லை பேராயர் பர்னபாஸ் கல்லூரி நிர்வாகத்தை பாராட்டினார். கல்லூரியில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் […]
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக களை கட்டும் ஜமாபந்தி!
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக களை கட்டும் ஜமாபந்தி! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் வருவாய் தீர்வாய் அலுவலரும் திண்டுக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையில் நேற்று முன்தினம் துவங்கியது. நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீதான விசாரணை வருவாய் தீர்வாய் அலுவலர் பால்பாண்டி விசாரணை செய்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் மாலைய கவுண்டன்பட்டி, குள்ளல குண்டு, கல்லடி […]
விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 35 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு […]
தமிழக சட்ட சபை இன்று கூடியது! பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு..
தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் கூடியதும் உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார். கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு […]
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்!அரசு நிர்வாகத்தின் அலட்சியம்: தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு..
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. இந்த நிலையில், கள்ளக் குறிச்சி சம்பவம் அரசின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. […]
பா.ஜ.க.வில் இருந்து திருச்சி சூர்யா அதிரடி நீக்கம்..
தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்! கதறும் உறவினர்கள்! பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு.. அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்..
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அதன்படி கருணாபுரத்தை சோ்ந்த கணேசன் மகன் பிரவீன், சிவா (32), மகேஷ் (60), ஜெகதீசன் (70), ஏசுதாஸ் (36), கண்ணன் […]
ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள், விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி, தந்தை இறந்த சோகத்திலும் + 2 அரசு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேறிய காட்டூரணியைச் மாணவி ஆர்த்திக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் , ஆடவர் […]
தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்..
தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்.. கலைஞர் ஆட்சியின் நீட்சியாகத் தமிழகத்தில் முதல்வர் சிறப்பான ஆட்சி நடத்தியதன் மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது என சுயமரியாதை திருமண விழாவில் பேசிய எம்.பி. கனிமொழி கருணாநிதி புகழாரம் சூட்டினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் நடைபெற்ற மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் த.செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் திமுக துணைப் […]
திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.. தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18.06.2024 இன்று சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வுப்பணிகளை காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் […]
டூவீலர்கள் தொடர் திருட்டு ! 3 வாலிபர்கள் அதிரடி கைது..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் டூவீலர்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக, கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தொண்டி உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம் 21, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் 25, எஸ்.பி.பட்டினம் கிழக்கு தெரு முகமது முஸ்தபா 19, ஆகியோர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, மூன்று வாலிபர்களையும் ஏர்வாடியில் வைத்து தனிப்படை போலீசார் பிடித்தனர். மேலும், […]
வீர வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தென்காசி மாவட்ட கலெக்டர் மரியாதை..
தென்காசி மாவட்டத்தில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாவட்ட கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை.. வீர வாஞ்சிநாதன் 113வது நினைவு நாளினை முன்னிட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், செங்கோட்டை நகர் மன்ற தலைவர் ராமலட்சுமி, நகர் மன்ற உறுப்பினர்கள் ரஹீம், மேரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, செங்கோட்டை நூலகர் ராமசாமி, வீர வாஞ்சிநாதன் வாரிசு ஹரிஹர சுப்ரமணியன், வாஞ்சி கோபால கிருஷ்ணன், சுதந்திர […]
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி தொடங்கியது..
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433ஆம் பசலி ஆண்டிற்கான ஜமாபந்தி தொடங்கியது.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் வருவாய் தீர்வாய் அலுவலரும் திண்டுக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையில் துவங்கியது. நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் மனுக்கள் மனுக்கள் பெறப்பட்டது மனுக்கள் மீதான விசாரணை வருவாய் தீர்வாய் அலுவலர் பால்பாண்டி விசாரணை செய்தார் இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் நரியூத்து, கோட்டூர், பச்சமலையான் கோட்டை, நிலக்கோட்டை, கோடாங்கி நாயக்கன்பட்டி, […]
தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்துரையாடிய மாணவ மாணவிகள்..
தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்துரையாடிய மாணவ மாணவிகள்.. “நான் முதல்வன்” மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) இணைந்து நடத்திய SCOUT திட்டத்தில் இங்கிலாந்தின் டர்ஹம் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று தாயகம் திரும்பிய 25 மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது ஈரோடு, எம்.பி.நாச்சிமுத்து ஜெகன்நாதன் பொறியியில் கல்லூரியில் ECE துறையில், மூன்றாவது வருடம் படித்து வரும் மாணவி பேசியதாவது: நான் அரசு பள்ளியில் படித்ததால், புதுமைப்பெண் திட்டத்தின் […]
சென்னையில் அதிகாலையில் பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் கடும் பாதிப்பு..
சென்னையில் அதிகாலையில் பெய்த பலத்த மழையால் விமான சேவைகள் கடும் பாதிப்பு.. அதிகாலையில் ஒருமணி நேரம் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமானம் புறப்பாடு மற்றும் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 7 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. ஒரு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள் தாமதம் ஆனதால் புறப்பட வேண்டிய 15 விமானங்களும் […]
கோட்டாட்சியரையே கொலை செய்யும் அளவுக்கு மணல் கடத்தல் கும்பல் துணிகிறது என்றால் அவர்களுக்கு எந்த அளவுக்கு ஆட்சியாளர்களின் ஆதரவு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது!- அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..
தமிழ்நாடு முழுவதும் அட்டகாசம் செய்யும் மணல் கொள்ளையர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். மாறாக, அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சியாளர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். ஆளுங்கட்சியினர் கொடுக்கும் தைரியத்தால் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மணல் கடத்தல் கும்பல்கள் மாபியாக்களாக மாறி வருகின்றனர். இது இயற்கை வளங்களுக்கு மட்டுமின்றி சமுக அமைதிக்கும் மிகப்பெரிய ஆபத்து என அன்புமணி கூறியுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம் […]
ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்த இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள்..!
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த மார்ச் 6ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்.அப்போது இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விரைவில் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி துவங்கப்படும் என்றும் அரசு பஸ்களில் சிஎன்ஜி வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார். […]
மதுரையில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
மதுரையில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கல். மதுரை மாநகர் மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. மாநகர தலைமை ரஜினி ரசிகர் மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினி முருகன் என்பவரின் மகளான ரம்யா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் 600 க்கு 482 மதிப்பெண் பெற்று தற்போது […]
மதுரையில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை..
மதுரையில் தியாக பெருநாள் சிறப்பு தொழுகை; 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… மதுரை வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தவ்ஹீது ஜமாத் சார்பில் “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “நபி வழி திடல் தொழுகை நடத்தினர். 300 பெண்கள் உள்பட 700 பேர் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஏ ஸ் மகால் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ” பக்ரீத் பண்டிகையை ” முன்னிட்டு […]