கருப்பட்டியில் அரசு பள்ளி அருகில்மழை நீர் வடிகால் வசதி செய்து தர மாணவர்கள் பெற்றோர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி அரசு பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் மழை நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளி கட்டிடம் சேதமடையும் நிலையிலும் பள்ளிக்குள் மழை நீர் புகுந்து மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலையிலும் இருப்பதாகவும் ஆகையால் அரசு பள்ளி அருகில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை […]

சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோழவந்தான் வடகரை கண்மாய் தென்கரை கண்மாய் முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலம் அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்ய சோழவந்தான் ஊத்துக்குளி முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வந்தது இந்த நிலையில் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் நெல்லை கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது ஆனால் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலமும் தாமதமாக நடவு […]

சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் புற காவல் நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக விக்கிரமங்கலம்பகுதி, குருவித்துறை பகுதி, மேலக்கால், பகுதியில் விஷக்கடி மற்றும் நாய்க்கடி போன்ற நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பகுதியில் விபத்து மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களை சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வருகின்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறும் பொழுது உடன் […]

நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழா.!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி, 29ஆம் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பகல்-இரவு கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 7 முதல் 10 வரை நடைபெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று ஆட்டத்தை சிறப்பிக்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1,00,060, இரண்டாம் பரிசு ரூ.75,060, மூன்றாம் பரிசு ரூ.50,060, நான்காம் […]

58 கிராம பாசன விவசாயிகள் சங்க சார்பில் பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது

. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் பயன் பெறும் கண்மாயை சேர்ந்த 35 கண்மாய் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தேனி மாவட்டம் வைகை அணையில் தற்பொழுது முழுக் கொள்ளவை எட்டியுள்ள சூழ்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கடந்த வாரத்தில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகளை […]

திமுக சார்பில் கல்வி உதவித் தொகை..

தென்காசி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவியை பாராட்டி திமுக சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் இலத்தூரில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய மாநில விவசாய அணி இணைச் செயலாளர் அப்துல்காதர், +2 பொதுத் தேர்வில் தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த சீவநல்லூர் மாணவி கார்த்திகா உயர் கல்வி படிப்பதற்கான முதலாம் ஆண்டு செலவை […]

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல் விடுத்த இருவருக்கு சிறை..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் குடிநீர் தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததோடு நகராட்சி ஊழியரை மிரட்டிய இரண்டு பேருக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட ஓடைத்தெரு தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் நகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமல் அதற்குரிய பணத்தையும் கட்டாமல் நகராட்சி தொட்டியில் இருந்து தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு […]

சோழவந்தானில் கதிர் அறுக்கும் எந்திரம் மோதி பெண் பலி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சமுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி செருவம்மாள் வயது 65 கணவனை இழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் உடன் தச்சம்பத்து கிராமத்தில் குடியிருந்து வருகிறார் இந்த நிலையில் சோழவந்தான் சங்கங் கோட்டை கிராமத்தில் உள்ள இவரது சகோதரர் சங்கிலி வீட்டில் அவ்வப்போது தங்கி வந்துள்ளார் இந்த நிலையில் சங்கிலியின் வயல்காட்டில் கதிர் அறுப்பு நடைபெற்று உள்ளது இதற்காக வயல்காட்டிற்கு சென்ற செருவமாள் அங்கு கதிர் அறுப்பு எந்திரம் மூலம் பணியாளர்கள் […]

சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் அனைவரும் […]

கலைஞர் கருணாநிதி நினைவு தினம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிபள்ளம் கிளை கழகத்தின் சார்பாக கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கருணாநிதியின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் மாலை அணிவித்து மரியாதை […]

குருவித்துறை மன்னாடி மங்கலத்திற்கு பேருந்து வராததால் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை மற்றும் மன்னாடிமங்கலத்திற்கு ஒரு வாரத்திற்கு மேல் பேருந்துகள் வராததால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குருவித்துறைக்கு காலை 6 மணிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வந்து செல்லும்2167 என்ற தடம் கொண்ட மதுரை பி சி பி பேருந்து கடந்த ஒரு வாரமாக வரவில்லை என பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர் இந்த பேருந்து தான் இரவு 10:30 மணிக்கு […]

சமயநல்லூர் அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற 4ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மலைமேகம் பாப்பாத்தி பந்தல் வேலை பார்ப்பவர் இவரது மகன் கருப்பு சமயநல்லூர் அருகேஊர்மெச்சிகுளம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார் . இந்லையில் இன்று பள்ளிக்கு செல்லாமல் இவரது வீட்டிற்கு வந்த நிலக்கோட்டை சேர்ந்த இவருடைய தாய்மாமன் முருகன் என்பவருடன் சமயநல்லூர் வைகை நகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் இறங்கி குளிக்க சென்றுள்ளார் அப்போது அதிகளவு தண்ணீர் வந்ததால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் இழுத்துச் […]

மன்னாடிமங்கலத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் நடுத்தெருவில் மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் நடுத்தெரு பகுதியில் சாய்ந்த நிலையில் பல மாதங்களாக மின்கம்பம் உள்ளதாகவும் பலமுறை மின்வாரிய பணியாளர்களிடம் கூறியும் மின்கம்பத்தை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மழைக்காலங்களில் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டுமென இந்த […]

மன்னாடிமங்கலம் மகா சக்தி முச்சந்தி அம்மன் நண்பர்கள் சார்பில் 15 ஆம் ஆண்டு அன்னதான விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் அருள்மிகு மகா சக்தி முச்சந்தி மாரியம்மன் கோவில் 148 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி காப்புக் கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது 30 ஆம் தேதி இளைஞர்கள் மற்றும் மார்நாடு நண்பர்கள் சார்பாக கோவில் முன்பு அன்னதானம் வழங்கப்பட்டது 31 ஆம் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் அலங்காரம் நடைபெற்று அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது 1ம் தேதி தெற்கு தெரு சார்பாக […]

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சங்கங்கோட்டை கிராமத்தார்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ கோட்டைவாசல் காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சங்கங்கோட்டை கிராமத்தார்கள் சார்பாக அன்னதானம் நடைபெற்றது அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சங்கங் கோட்டை கிராம சாவடி முன்பாக அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. இதில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர் தொடர்ந்து நேற்று இரவு சக்தி கரகம் எடுத்து […]

உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா தவெக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லானை திறந்து வைத்தார்.

மதுரை பாலமேட்டில் மதுரை சாலையில் தனியார் உடற்பயிற்சி கூடத்தை தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் கல்லாணை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணன் மற்றும் தளபதி பிரியன் நடராஜன் உடன் இருந்தனர் . உடற்பயிற்சி கூட உரிமையாளர்,உறவினர்கள் நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் தமிழக வெற்றிக்கழக மாநகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இலஞ்சி டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினம்..

இலஞ்சி டிஎஸ் டேனியல் பிஎட் கல்லூரியில் ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  நிகழ்வுக்கு […]

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு.

காரைக்கால் முதல் தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை மார்கமாக ரயில்வே திட்டத்தை மீண்டும் துவங்கி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே அருங்காட்சியகம் அமைப்பது, சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பகல் நேர விரைவு வண்டிகளை இயக்குவது, அறந்தாங்கி பகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகள்., விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி, இராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம், மற்றும் சூடியூர், சத்திரக்குடி, வாலாந்தரவை, மண்டபம் கேம்ப் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது, தங்கச்சிமடம் ரயில் […]

58 கிராம பாசனவிவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்நடைபெற்றது, இதில் 58 கிராம பாசன கால்வாயில் பயன் பெறும் கண்மாயை சேர்ந்த 35 கண்மாய் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வைகைஅணையில் தற்பொழுது முழுக்கொள்ளவை எட்டியுள்ள சூழ்நிலையில் 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி கடந்த வாரத்தில் 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும், பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகளை சந்தித்தும் […]

ஆர்எஸ்எஸ்-ன் ஊது குழலாக தமிழக ஆளுநர் செயல்படுவதா?

ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ்-ன் ஊது குழலாக செயல்படுவதாகவும், தமிழகத்தின் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் முடக்கி வருவதாகவும் கூறி ஆளுநருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டதில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை முடக்குகின்ற வகையில் நாள்தோறும் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையை தமிழக பா.ஜ.க.வின் கிளை அலுவலகமாக மாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்-ன் நச்சுக் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!