இன்று மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன? விரிவாகப் பார்க்கலாம். 1. ராஜ்நாத் சிங் – பாதுகாப்புத்துறை அமைச்சர் 2. அமித்ஷா – உள்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் 3. நிதின் கட்கரி – சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் 4. ஜே.பி.நட்டா – சுகாதாரம் மற்றும் குடும்பநலன், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் 5. […]
Category: மாவட்ட செய்திகள்
திமுக நாடாளுமன்ற குழு நிர்வாகிகள் பட்டியலை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தி.மு.க நாடாளுமன்றக் குழு நிர்வாகிகள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை – மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து கழக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி அவர்களும்; மக்களைவைக் குழுத் தலைவராக கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி அவர்களும்; மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக கழக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி அவர்களும்; மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, […]
இராமநாதபுரம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
இராமநாதபுரம் மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2023-2024-ம் ஆண்டு 11.06.2024 தேதி முதல் 20.06.2024ம் தேதி முடிய (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 1433-ம் பசலி ஆண்டு (2023-2024) கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும் https://cmhelpline.tnega.org/support/iipgcms ஆகிய இணைத்தளம் அல்லது இ சேவை மையங்கள் மூலமாக 11.06.2024 முதல் 20.06.2024 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும், பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய […]
நிலக்கோட்டையில் மீண்டும் கொள்ளையர்கள் அட்டகாசம்! வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை! அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி! கலக்கத்தில்பொதுமக்கள்..?
நிலக்கோட்டையில் மீண்டும் கொள்ளையர்கள் அட்டகாசம்! வீட்டின் பூட்டை உடைத்து பல லட்சம் கொள்ளை! அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி! கலக்கத்தில்பொதுமக்கள்..? திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சுந்தரம் இவர் டீக்கடையில் பணி செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது நிலத்தை விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் வந்த பணத்தை தனது வீட்டில் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக சுந்தரத்துக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த இரு […]
10- ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி.. பஸ், ரெயில்களில் அலைமோதும் கூட்டம்..
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும். இதற்கிடையே இந்த கல்வியாண்டில் (2024-2025) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந் தேதி அறிவிக்கப்பட்டதால், பள்ளிகள் 6-ந்தேதி (அதாவது நேற்று) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயில் தாக்கம் காரணமாக 10-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. பொதுவாக கோடை விடுமுறையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தங்கள் சொந்த ஊர்கள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு பெற்றோர் செல்வர். அந்த வகையில் சென்னையில் வசித்து வரும் […]
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
.ராமநாதபுரம் மாவட்டம் வனத்துறை சார்பாக ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களை பெருக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரை வன சரக அலுவலகத்தில் இருந்து தொடங்கி கீழக்கரை வழியாக திருப்புல்லாணி மேங்குரோ காடுகள் வரை பேரணியாக சென்றனர். வன உயிரினங்களை காப்போம் என்று முழக்கத்தோடு பொது […]
கீழக்கரையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரை வனச்சரகத்தின் சார்பாக கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரையில் சிவகாமி புறத்தின் அருகில் இருக்கக்கூடிய குனியம்மன் கோவில் பொதுமக்கள் பயன்படும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டியில் 14 உப மின் நிலையங்களில் பணியாற்றும் – மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி.இராமநாதபுரம் உப மின் நிலையத்தில் பணியாற்றும் பாண்டி என்பவர் மின் தடையை சரி செய்ய சென்ற போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக கடந்த 17.05.2024 அன்று சாப்டூர் காவல் நிலையத்தில் அவரது மேல் அதிகாரியான மின் பாதை ஆய்வாளர் ஜெயக்கொடி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று உசிலம்பட்டி உப மின் நிலையத்தில் மின் வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்துடன், செயற் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் […]
இன்றும், நாளையும் தமிழகத்தில் அடித்து வெளுக்க போகும் கனமழை..
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அந்தவகையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.அதன்படி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று […]
அதிமுகவினர் ஒன்றிணைய அழைப்பு விடுத்த ஓபிஎஸ்.. என்ன முடிவெடுக்கும் அதிமுக.?
இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். ‘தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’ என்னும் கழக நிறுவனர், எம்ஜிஆரின் மந்திர மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். […]
அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாரளிக்க வாங்க; லஞ்ச ஒழிப்புத்துறை..
அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் தயங்காமல் புகாரளிக்க வாங்க; லஞ்ச ஒழிப்புத்துறை.. தென் மாவட்ட பொது மக்கள், அரசு அலுவலங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு வேலையை செய்வதற்கு, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலும் அல்லது அரசு அலுவலர்கள் அவர்களது பெயரிலோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலே அபரிமிதமான மற்றும் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் இருந்தாலும், அரசு பணிகளில் உள்ள குறைபாடுகள், அரசு ஊழியர்கள் செய்யும் முறைகேடுகள் தொடர்பாகவும் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ […]
5 ஆண்டு காலத்திற்கு ஆட்சி நீடிக்குமா என்பது “கேள்விக்குறி”- தொல். திருமாவளவன்..
5 ஆண்டு காலத்திற்கு ஆட்சி நீடிக்குமா என்பது “கேள்விக்குறி”- தொல். திருமாவளவன்.. நாட்டின் அரசியலமைப்பைக் காக்க வேண்டும் என்ற I.N.D.I.A.கூட்டணியின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றியுள்ளனர் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பின்னடைவு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது; நரேந்திர மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது பொருத்தமானது இல்லை தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள அரசு அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தேசிய […]
அயோத்தியாவில் வைத்த “கொட்டு” நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன். -சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி..
அயோத்தியாவில் வைத்த கொட்டு நிச்சயம் வலிக்கும் என்று நம்புகிறேன். -சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி.. மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றிக்கு முதல் காரணம் முதல்வர்தான். அவரின் நலத்திட்டம், அணுகுமுறை, தமிழ்நாட்டு மக்கள் மதங்களை மதிக்கின்ற அரசு வேண்டும் என்பதற்காக, மதச்சார்பற்ற அரசு மத்தியில் வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் நாங்கள் எதிர்பார்த்ததைப் போல […]
உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார். -விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..
உண்மையான பக்தி என்பது வேறு, ராமரை வியாபாரம் ஆக்குவது என்பது வேறு என்று ராமரே மோடிக்கு பதில் சொல்லி இருக்கிறார். -விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி.. மதுரையில் இருந்து டெல்லி செல்வதற்காக விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழகம் மோடிக்கு எதிரான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. இந்த அலையின் உடைய தாக்கம் தான் 40க்கு 40. இழுபறியில் […]
மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் பாசிச ஆட்சிக்கு எதிராக இந்தியா கூட்டணி தொடர்ந்து போராடும்!- காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே..
இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் இன்று மாலை நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் கார்கே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:எங்கள் கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்கள், இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.பாஜக மற்றும் அவர்களின் வெறுப்பு, ஊழல் அரசியலுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் […]
திண்டுக்கல் அருகே குப்பையில் கிடந்த 2 உலோக சிலைகள் – பத்திரமாக மீட்ட வருவாய்த் துறையினர்..
திண்டுக்கல் அருகே குப்பையில் கிடந்த 2 உலோக சிலைகள் – பத்திரமாக மீட்ட வருவாய்த் துறையினர்.. திண்டுக்கல்லை அடுத்த N.S.நகர் பேருந்து நிறுத்தம் அருகே சீலப்பாடி ஊராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தபோது குப்பையில் இருந்த ஒரு பையில் 2 உலோக சிலைகள் இருப்பதை கண்டறிந்து சீலப்பாடி ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மேற்கு தாசில்தார் வில்சன், வருவாய் ஆய்வாளர் அறிவழகன், சீலப்பாடி கிராம […]
ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது !- வி.கே.சசிகலா வேதனை..
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வேதனை. தமிழக மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லாமல், ஏற்கனவே ஐந்து வருடங்களை வீணாக்கிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால், இனி வரும்காலங்களிலும் தமிழக மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் ஏற்படாது என்பது இப்போதே தெரிந்துவிட்டது. தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி பெற்ற வெற்றியாகத்தான் இதை கருதமுடிகிறது. மேலும், “ஊரு […]
தென்காசி தொகுதியில் அதிமுக பாஜகவை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர்..
தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுக பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார்.. தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களை வீழ்த்தி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தென்காசி மக்களவை தனி தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், அதிமுக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக சார்பில் ஜான்பாண்டியன், நாம் தமிழர் கட்சி சார்பில் […]
இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின் கடிதம்..
திமு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றிக்களத்தின் நன்றி மடல்.மகத்தான வெற்றியை தி.மு.க.வுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் தொண்டர்களாகிய நீங்களும்தான். தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் பங்களிப்புடன் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. அதன் மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதை […]
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதள பாதாளத்திற்கு சென்ற பாமக- மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது..
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்தது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாமக இழந்துள்ளது.இந்த நிலையில் […]