இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ் எம் பாக்கர் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்தவர் ஆவார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருதய நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சிறிது மீண்டு மருத்துவம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளில் முனைப்பாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் பல மருத்துவ போராட்டங்கள் நடந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் தன்னலத்தை தாண்டி சமுதாய நலனுக்காக ஈடுபட்டு வந்தார். சிறிது நாட்களுக்கு முன்னால் சென்னை வெள்ளத்தில் நிவாரண பணியில் ஈடுபட்டபோது காலில் காயம் […]
Category: மாவட்ட செய்திகள்
ராமநாதபுரத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் ! மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் திருவாடானை வட்டாட்சியர் K. கார்த்திகேயன் ஆர்.எஸ்.மங்கலம் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் , கமுதி வட்டாட்சியர் V. சேதுராமன் பரமக்குடி சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , கடலாடி வட்டாட்சியர் N. ரெங்கராஜு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராகவும் […]
பரமக்குடி அருகே ரேசன் அரிசி கடத்தியவர் கைது ! குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி நடவடிக்கை ! !
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே நயினார் கோவில் ஆர்.எஸ் மங்களம் சாலையில் காடடர்ந்தகுடியில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த கிஷோர் என்பவர் TN 72 BS 6979 பதிவெண் கொண்ட நான்கு சரக்கு வாகனத்தில் 23 மூட்டைகளில் 575 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. உடனே கடத்திய ரேசன் […]
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாழ்த்து..
சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள கம்போடியா நாட்டிற்கு செல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வாழ்த்து தெரிவித்தார். போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தம்பதியான குருநாதன் – மாரீஸ்வரி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் மாநில அளவிலும் தேசிய அளவிலும் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கமும் 1 வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை […]
மதுரை வந்தடைந்த இராணுவ வீரரின் உடல்..
மதுரை வந்தடைந்த இராணுவ வீரரின் உடல்.. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆட்டோ விபத்தில் பலியான முள்ளிப்பள்ளம் ராணுவ வீரரின் உடல் மதுரை வந்தடைந்தது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளம் கிராமத்தை சேர்ந்த முத்துசாமி மகன் நாகரத்தினம் (வயது 28) இவர் ராஜஸ்தான் (டெல்லி ) ஆறாவது கார்டு ரெஜிமென்ட் படை பிரிவில் லேன்ஸ் நாயக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி அலுவல் பணி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள […]
கனிமவள வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தமுமுக-மமக கூட்டத்தில் தீர்மானம்..
கனிமவள வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தமுமுக-மமக வலியுறுத்தல்.. பொட்டல்புதூர் கடையம் வழியாக கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்லும் ராட்சத கனரக லாரிகளால் விபத்துக்களும், போக்குவரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டு வருவதால், கனிமவள லாரிகள் கடையம் பொட்டல்புதூர் சாலையை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையில் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுமுக-மமக கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட தமுமுக-மமக பொட்டல் புதூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் பொட்டல்புதூர் அலுவலகத்தில் மமக மாவட்ட செயலாளர் சலீம் […]
கள்ளச் சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 39-ஆக உயர்வு! கடுமையாக விளாசிய பிரேமலதா விஜயகாந்த்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விரிவாக கேட்டறிந்தார்.இந்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். குறைந்த விலையில் கிடைத்ததால் பலரும் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர். டாஸ்மாக்கை […]
கலைஞர் பிறந்த தின விழாவில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்..
கலைஞர் பிறந்த தின விழாவில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வழங்கினார்.. தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பேரூராட்சி மேலபட்டமுடையார்புரம் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த தின விழாவை முன்னிட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் வழங்கினார். தென்காசி கீழப்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேலபட்டமுடையார்புரத்தில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த […]
சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்..
சூரங்குடியில் கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் முகாம்; நடுவக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.. தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுவக்குறிச்சி மைனர் ஊராட்சிக்குட்பட்ட சூரங்குடியில் மாடுகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தையும், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் கால் மற்றும் வாய்நோய், கோமாரி நோய் தடுப்பூசி போடும் திட்டத்தையும் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளருமான சிவஆனந்த் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் மாடுகளின் உரிமையாளரின் ஆதார் கார்டு […]
ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு..
ஆசிரியர் கல்வி கற்பித்தலில் இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரி சிறப்பிடம்; நெல்லை பேராயர் பர்னபாஸ் பாராட்டு.. இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்வியியல் கல்லூரி ஆசிரியர் கல்வி கற்பித்தலில் 17 ஆண்டுகளாக சிறப்பிடம் பெற்றுள்ளது எனவும், இக்கல்லூரியில் பயின்ற பலர் அரசு அதிகாரிகளாக மாறி வருவதாகவும் கூறி நெல்லை பேராயர் பர்னபாஸ் கல்லூரி நிர்வாகத்தை பாராட்டினார். கல்லூரியில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் […]
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக களை கட்டும் ஜமாபந்தி!
நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக களை கட்டும் ஜமாபந்தி! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் வருவாய் தீர்வாய் அலுவலரும் திண்டுக்கல் மாவட்ட கலால் உதவி ஆணையர் பால்பாண்டி தலைமையில் நேற்று முன்தினம் துவங்கியது. நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீதான விசாரணை வருவாய் தீர்வாய் அலுவலர் பால்பாண்டி விசாரணை செய்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற ஜமாபந்தியில் மாலைய கவுண்டன்பட்டி, குள்ளல குண்டு, கல்லடி […]
விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டம், கருணாபுரம் காலனியில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 35 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு […]
தமிழக சட்ட சபை இன்று கூடியது! பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட வாய்ப்பு..
தமிழக சட்டசபை இன்று கூடியது. கூட்டம் கூடியதும் உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார். கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்த விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் குவைத் தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்க இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு […]
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்!அரசு நிர்வாகத்தின் அலட்சியம்: தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு..
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. இந்த நிலையில், கள்ளக் குறிச்சி சம்பவம் அரசின் அலட்சியத்தையே காட்டுவதாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. […]
பா.ஜ.க.வில் இருந்து திருச்சி சூர்யா அதிரடி நீக்கம்..
தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழக பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்! கதறும் உறவினர்கள்! பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு.. அரசு எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்..
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அதன்படி கருணாபுரத்தை சோ்ந்த கணேசன் மகன் பிரவீன், சிவா (32), மகேஷ் (60), ஜெகதீசன் (70), ஏசுதாஸ் (36), கண்ணன் […]
ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள், விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி, தந்தை இறந்த சோகத்திலும் + 2 அரசு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேறிய காட்டூரணியைச் மாணவி ஆர்த்திக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் , ஆடவர் […]
தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்..
தமிழக முதல்வரின் சிறப்பான ஆட்சி மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது; கனிமொழி எம்.பி. புகழாரம்.. கலைஞர் ஆட்சியின் நீட்சியாகத் தமிழகத்தில் முதல்வர் சிறப்பான ஆட்சி நடத்தியதன் மூலம் 40ம் நமதே என்ற வெற்றி கிடைத்துள்ளது என சுயமரியாதை திருமண விழாவில் பேசிய எம்.பி. கனிமொழி கருணாநிதி புகழாரம் சூட்டினார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியில் நடைபெற்ற மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் த.செந்தில்குமார் இல்ல திருமண விழாவில் திமுக துணைப் […]
திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணி; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.. தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 18.06.2024 இன்று சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வுப்பணிகளை காணொளி காட்சி மூலமாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் திருமலாபுரத்தில் தொல்லியல் அகழாய்வு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் […]
டூவீலர்கள் தொடர் திருட்டு ! 3 வாலிபர்கள் அதிரடி கைது..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் டூவீலர்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக, கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தொண்டி உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம் 21, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் 25, எஸ்.பி.பட்டினம் கிழக்கு தெரு முகமது முஸ்தபா 19, ஆகியோர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, மூன்று வாலிபர்களையும் ஏர்வாடியில் வைத்து தனிப்படை போலீசார் பிடித்தனர். மேலும், […]