தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடனா நதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடனா நதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், இன்று (05.07.2024) தண்ணீர் திறந்து வைத்தார். கடனாநதி பாசனத் திட்டத்தின் கீழுள்ள அரசபத்துகால், வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால், காங்கேயன்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 3987.57 ஏக்கர் […]
Category: மாவட்ட செய்திகள்
கீழக்கரையை சார்ந்தவருக்கு துபாயில் சாதனையாளர் விருது !
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அல் பர்சா பகுதியில் அமைந்துள்ள தனியார் மஹாலில் துபாய் தமிழ் மன்றம் சார்பில் “Business Excellence” விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமீரகத்தை சேர்ந்த இந்திய தொழிலதிபர்கள் , இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழிமுனைவோர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது அதனைத் தொடர்ந்து 2024 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விருது வழங்கும் விழாவில் 50 வருடத்திற்கு மேல் தொழில்துறையிலும் சமூக சேவைகளிலும் சிறப்பாக […]
தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முக்கிய கோரிக்கை..
தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முக்கிய கோரிக்கை.. தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான ரயில்வே சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பதவி ஏற்ற ஓரிரு நாட்களில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கோவையிலிருந்து மதுரை வரை இயங்கும் விரைவு ரயிலை ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய […]
கீழக்கரையில் மஞ்சப்பை பற்றி விழிப்புணர் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் உலக நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு மஞ்சப்பை பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழக்கரை நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா மற்றும் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் தலைமையில் ஆணையாளர் அஜிதா பர்வீன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் பரகத்துல்லா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது . மஞ்சப்பை பற்றியும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு நகராட்சி பணியாளர்கள் அலுவலர்கள் இணைந்து உறுதிமொழிகள் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும் நகராட்சிக்குட்பட்ட கடைகளுக்கும் மஞ்சப்பைகள் […]
புதிய சட்டத் திருத்ததை கண்டித்து 3 வது நாளாக உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட மூன்று சட்டங்களை சமஸ்கிருத மொழியிலும், இந்தி மொழியிலும் மாற்றம் செய்வதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.,இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்திலிருந்து கவணம்பட்டி ரோடு, தேவர் சிலை வழியாக […]
புதிய கிரிமினல் சட்டங்கள் வீண் வேலை.. அரசியலமைப்புக்கு எதிரானது!-பா.சிதம்பரம் குற்றச்சாட்டு..
இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய சட்டங்களில் பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான் என்று காங்கிரஸ் மாநிலங்களவை […]
பத்திரதரவா கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திரதரவா கிராமத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது .இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சையது முஸ்தபா கலந்து கொண்டு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது எப்படி என்றும் சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்வது எப்படி என்று விளக்க உரை விவசாயிகளுக்கு வழங்கினார். தவமுருகன் உதவி வேளாண்மை அலுவலர் […]
நிலக்கோட்டை அருகே புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேக்கம்! நோய் பரவும் அபாயம்! எஸ்டிபிஐ பரபரப்பு குற்றச்சாட்டு..
நிலக்கோட்டை அருகே புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேக்கம்! நோய் பரவும் அபாயம்! எஸ்டிபிஐ பரபரப்பு குற்றச்சாட்டு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் தேக்கம் அடைந்து பல வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சிலர் நோய் வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இம்ரான் என்பவரின் குடும்பமே சிகிச்சை […]
கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் பயிற்சி முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் முன்னேற்றக் குழு காரீப்பருவ பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் விலை ஆதரவுத் திட்டத்தின் (Price Support Scheme)கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்கு உரிய தொகையானது […]
திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு..
திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு.. மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணியுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. விரகனுார் ஊராட்சி பகுதியில் காவேரி கூட்டு குடிநீர், சாலை, சாக்கடை போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இது குறித்து விரகனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார […]
பெரியபட்டினத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு !
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் கெட்டுப்போன மீன்கள் வியாபாரம் செய்வதாக வந்த புகாரியின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வள ஆய்வாளர் சாகுல் ஹமீது. சாகர் மித்ரா பணியாளர் இலக்கிய வேந்தன் ஆகியோர் இணைந்து பெரியபட்டினம் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கெட்டுப்போன மீன்கள் சுமார் 11 கிலோ கண்டறியப்பட்டு அவற்றை பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் மீன் விற்பனை செய்யும் […]
ராமநாதபுரத்தில் நுகர்வோர் உரிமைகள் தின விழா ! மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசு !!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு முன்னிலையில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி வரவேற்புரை வழங்கினார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பாலசுப்பிரமணியம் , கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹீ ஆகியோர் சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் […]
சாமானிய மக்களும் மருத்துவம் படித்து சாதனைகள் பல படைக்கலாம்: டாக்டர் ஏகலவைன்..
“சாமானிய மக்களும் மருத்துவம் படிக்கலாம், சாதாரணமானவரும் சரித்திரம் படைக்கலாம்”; டாக்டர் ஏகலவைன் கூறும் தகவல். “தைமூர் நாட்டில் சாமான்யரும் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளதாகவும், மருத்துவ துறைகளில் சாதனைகள் பல படைத்து உயர முடியும் எனவும் டாக்டர் ஏகலைவன் தெரிவித்துள்ளார். தைமூர் நாட்டின் மரூத்துவ கல்வி விவரங்களை டாக்டர் ஏகலைவன் விவரித்துள்ளதாவது; இந்தியாவில் நீட் மதிப்பெண்கள், மிகப்பெரிய நன்கொடை என பல்வேறு காரணங்களால் மருத்துவராகும் கனவு பலருக்கு துளிரிலேயே பட்டுப்போகும் நிலை காணப்படுகிறது. மிகச் சாமான்ய குடும்பத்திலிருந்தும் மருத்துவர் […]
மகமாயி பாட்டிக்கு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வலர்கள்; பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு..
மகமாயி பாட்டிக்கு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் தன்னார்வலர்கள்; பொதுமக்கள் பாராட்டு.. செங்கோட்டை அருகே ஆதரவற்ற நிலையில், கால்களில் புழுக்கள் நிறைந்த புண்களுடன் சாலையோரம் வாழ்ந்து வந்த மகமாயி பாட்டியை மீட்டு மறுவாழ்வு அளித்த பசியில்லா தமிழகம் குழுவினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாலையோரம் ஆதரவு இல்லாமல் கால்கள் முழுக்க புண்களில் புழுக்கள் வைத்த நிலையில் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மகமாயி என்ற பெண் வெயிலிலும் மழையிலும் […]
கீழக்கரை நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசாரமான விவாதம் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியின் நகர்மன்ற கூட்டம் நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் தற்காலிக ஆணையாளர் நஜிதா பர்வீன் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடிநீர் கழிவுநீர் சாலை உட்பட அடிப்படைத் தேவைகளை பற்றி விவாதிக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் சில மாதங்களாக அதிகாரிகள் பணிகளை முறையாக செய்யவில்லை என்றும் நகராட்சியில் பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் […]
கள்ளர் பள்ளிகளை அரசுப்பள்ளிகளோடு இணைப்பதைக் கண்டித்து உசிலம்பட்டியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தமிழக முழுவதும் கள்ளர் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பெயர் மாற்றம் செய்து அரசு பள்ளிகளோடு இணைக்க ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கமிஷன் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.கள்ளர் பள்ளிகளை அரசுப்பள்ளிகளோடு இணைப்பதற்கு தென்மாவட்டங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் தெற்கிந்திய தேசியவாதிகள் சங்கம் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கருப்பு […]
தமிழக அரசு கள் விற்பனை செய்ய அனுமதிக்க வலியுறுத்தி உசிலம்;பட்டியில் விவசாய சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் டாஸ்மார்க் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்து கொண்டு அதை குடித்து பல விவசாயிகளும் பல பொதுமக்களும் உயிரிழந்த வருகின்றனர் இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பாரம்பரிய கள் இறக்கும் தொழிலை மேம்படுத்தி பனைமரத்திலும் தென்னை மரத்திலும் கள் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாய சங்கம் சார்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கேரளா கர்நாடகா ஆந்திரா பாண்டிச்சேரி ஆகிய […]
தென்காசியில் குரூப்-।। மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசியில் குரூப்-।। மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் தகவல்.. தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி II-ல் உள்ள உதவி […]
குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்; 3 பேர் அதிரடி கைது..
குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம்; கேரள மாநிலத்தை சேர்ந்த மூவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.. குற்றாலத்தில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐந்தருவி சாலையில் அமைந்துள்ள RGB ரிசாட்டில் ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய மாவட்ட […]
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நடந்த போதை பொருள் ஒழிப்பு தின பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி.. தென்காசியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]
You must be logged in to post a comment.