இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரியில் நடந்த தேசிய கருத்தரங்கம்..

தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் பொ தங்கம் முன்னிலை வகித்தார். மாணவ ஆசிரியர் காவ்யா வரவேற்றார். குஜராத் அதானி துறைமுக இனோவேஷன் மேலாளர் சுப்பிரமணியன் கல்வியின் சிறப்பு, தனித்திறன் வளர்ச்சி, வளரும் நவீன தொழில் நுட்பம் குறித்து பேசினார். சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் பிரான்சிஸ் […]

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் பணம் இழக்கும் அபாயம்; நெல்லை சரக காவல்துறை துணை தலைவர் எச்சரிக்கை..

ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் (செயலி) மூலம் பணம் இழக்கும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பா.மூர்த்தி தெரிவித்ததாவது, Google Playstore-ல் Grindr (Gay Dating & Chat) (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில், முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. […]

தேவர் கல்லூரியை திமுக அறக்கட்டளைக்கு தாரை வார்க்க நினைக்கும் செயலை கண்டித்து இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் கல்விக் கழகத்தின் கீழ் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இதன் தலைவர் செயலாளர்கள் நியமனம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் கள்ளர் கல்விக்கழகத்தின் தலைவர் என்று கூறிக் கொண்டு அய்யர் என்பவர் தன்னிச்சையாக கூட்டங்களை நடத்தி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை சென்னையிலுள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி அறைக்கட்டளை தத்து எடுக்க ஆவண செய்யுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் கல்லூரி கல்வித்துறைக்கும் மனு அனுப்பியுள்ளார்.இந்த மனுவை பரிசீலனை […]

ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு அதிகாரிகளுக்கு நன்றி..

ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம் செய்யப்பட்டதற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் ரயில்வே மேலதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தை, ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், வீராசமுத்திரம், மந்தியூர், தர்மபுரம் மடம், கோவிந்தப்பேரி, வாகைகுளம், நாணல்குளம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், உள்ளிட்ட பல கிராம மக்கள், ரயில் பயண தேவைகளுக்காக, பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் தெரியாத நபர், ரயில் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்ததால் […]

தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை பெற்ற காவலர்கள்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள்,  ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, […]

மதுரையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் சாலை மறியல்..

மதுரை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மதுரை அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வூதியர்களுக்கான 105 மாத DA நிலுவை தொகை வழங்க வேண்டும், 20 மாத பணபலன்களை உடனடியா விடுவிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் […]

உறுப்பினர் சேர்க்கை இயக்கம்- உசிலை நகர பாஜக மண்டல் கூட்டம்

பாஜக மண்டல் கூட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் -2024 பயிலரங்கம் உசிலம்பட்டி நகர் மண்டல் தலைவர்.பிரசாத் கண்ணன் தலைமையில் உசிலம்பட்டி குருசாமி கோவில் வண்ணாரப் பேட்டை அரங்கில் நடைபெற்றது, இப்பயிலரங்கத்தில் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர்.கவிதா கலந்து கொண்டு வழிகாட்டினார்.பயிலரங்க முன்னிலை மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர பார்வையாளர் வீரபிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினராக மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் – செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இப் பயிலரங்கத்திற்கு. உசிலை நகர் மண்டல் 5 நபர் […]

உசிலம்பட்டியில் பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் குழந்தைகள் கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து வந்தனர்.

தமிழகமெங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இதில் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 30க்கும் மேற்ப்பட்டோர் கிருஷ்ணன் -ராதை வேடமணிந்து வந்து மேடையில் தோன்றியது பார்வையாளர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்ப்படுத்தியது.இவ்விழாவில் பங்கேற்று கிருஷ்ணன்-ராதை வேடமணிந்த அனைவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு பரிசுகள் வழங்கினார்.

உசிலம்பட்டி அருகே கிராமத்தில் முன்அறிவிப்பின்றி வீட்டிற்கு போடப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி பஞ்சாயத்து ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் சந்திரா பாண்டி. இவர் கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.இவர் உயிருடன் இருந்த போது எருமார்பட்டி பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட அம்முமுத்தன்பட்டி கிராமத்தில் வீடுதோறும் ஆண்டிபட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்;தின் கீழ் ஒவ்வொரு வீடுகளிலும் குடிநீர் குழாய் இணைப்பு பதிக்கப்பட்டுள்ளது.அவர் இறந்த பின் தற்போது தற்காலிக ஊராட்சி மன்ற தலைவராக் ராணி பெருமாள் என்பவர் பதவி வைத்து வருகின்றார். இந்நிலையில தற்போதைய ஊராட்சி […]

உசிலம்பட்டியில் நடிகர் விஜயின் கொடி அறிமுகத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

உசிலம்பட்டி பி எம் டி நகரில் தமிழக வெற்றி க்கழக கட்சி கொடி வெளியிட்டு விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ்குமார் தலைமையில் உசிலம்பட்டி சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் விஜய் மகாலிங்கம் முன்னிலையில் நகர இளைஞரணி விஸ்வா, ஜெயபால், மனோபாரத், ஆகியோர் ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழகம் கட்சி கொடி அறிமுக விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மகளிர் அணி […]

கொசுத் தொல்லை பொதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.இதனால் குழந்தைகள் மற்றும் நோயாளிகள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர்.கொசுக்களினால் டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே கொசு தொல்லையை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை.

திமுகவில் இருந்து விலகி SDPI கட்சியில் இணைந்த ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.

இராமநாதபுரம் நம்புதாலையில் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் SDPI கட்சியின் கொள்கைகளால் கவரப்பட்டு தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் போது திருவாடானை ஒன்றிய தலைவர் அப்துல் மஜீத் மற்றும் நம்புதலை நகர செயலாளர் கலபத் சகுபர் சாதிக் உடன் இருந்தனர்.

முக்கிய சரித்திர குற்றவாளியை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசார்; மாவட்ட எஸ்.பி பாராட்டு..

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியை தென்காசி மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பல சீறிய முயற்சிகளை முன்னெடுத்து குற்றவாளி பாலமுருகனை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் வெகுவாக பாராட்டினார். தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் கல்யாணிபுரம் ஊரைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பாலமுருகன். சரித்திர பதிவேடு ரௌடியான பாலமுருகன் தமிழ்நாடு […]

திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது விழுந்த உயர் அழுத்த மின்கம்பி; அதிக பயணிகள் இல்லாததால் உயிர்பலி தவிர்ப்பு..

திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது உயர் அழுத்த மின் கம்பி விழுந்தது. பயணிகள் அதிக அளவு இல்லாததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பசுமலை,  மூலக்கரை அருகில் வடக்கு மற்றும் தெற்கு திசைகளை இணைக்கும் நோக்கில் உயிர் அழுத்த மின்சார கம்பிகள் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலையில் அந்த வழியாக  வந்த தமிழ்நாடு அரசு மாநகர  பஸ் மீது  மின்சார கம்பி தாழ்வாக இருந்ததால் அதன் மீது மோதியதில் மின்சாரக் கம்பி  […]

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மதுரை எம்.பி..

மதுரை துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ 46 கோடி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சு. வெங்கடேசன் எம்பி நன்றி. தெரிவித்துள்ளார். திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் – மேலக்கால் சந்திப்பு இருக்கிறது. எனவே துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும் , சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் சு. வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார். […]

சமயநல்லூர் அருகே தனியார் ஆலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்..

மதுரை சமயநல்லூர் அருகே 6 கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்ட புலி நகர் பகுதியில் உள்ள சீலா ராணி டெக்ஸ்டைல் தனியார் மில்லில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையான 6:45 கோடியை உடனடியாக வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு […]

உசிலம்பட்டி அருகே கவணம்;பட்டியில் மாபெரும் கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியில் அமைந்துள்ள வீரா கோவிலின் திருவிழாவை முன்னிட்டு கவணம்பட்டி வீரா கோவில் மூன்று பங்காளிகள் மற்றும் இளைஞர்கள் குழு சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 160 ஜோடி கிடாக்கள் பங்கேற்றனர்.குரும்பை, சின்னக்கருப்பு, வெள்ளைமறை, கண் செவலை என பல்வேறு வகையான கிடாக்கள் இந்த போட்டியில் கலந்து கொண்ட நிலையில் கிடாக்களின் வயது, ஆறுபல் […]

தாம்பரம் ரயில் கீழக்கடையம் பகுதியில் நின்று செல்ல வேண்டும்; நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை..

தாம்பரம் ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் என நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், தட்கல் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்களையும், மக்கள் தாமதமின்றி பெற டிக்கெட் கவுண்டரில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் ரவணசமுத்திரம், ரயில் நிலையத்தில் நெட்வொர்க் பிரச்சனைகள் காரணமாக டிக்கெட் […]

தென்காசியில் கொல்கத்தா மாணவிக்கு நீதி வேண்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொல்கத்தா மருத்துவ மாணவியின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா முதுநிலை மருத்துவ மாணவி பணியின் போது கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளையும் இணைந்து தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் […]

கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..

மதுரையில், கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை ஊக்கப்படுத்தியுள்ளது. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவிகளின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகளின் ஆடல் பாடல் மற்றும் பாரதமாதா, வேலுநாச்சியார் போன்ற வேடமிட்டு சுதந்திர வீர உரை நிகழ்த்தினர். மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!