இராமநாதபுரம் : தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு புத்தாக்க மேம்பாட்டு திட்டம் 2.0 சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் ராமநாதபுரம் மீன்வள தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் ராமகோபால், வேல்முருகன், செல்வகணேஷ் ஆகியோர் கேபிள் கிளைடு வே எனும் புதிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடித்து ரூ 1 லட்சம் பரிசுத்தொகை வென்றனர். இந்த மாணவர் 3 பேரையும், அரிய கண்டுபிடிப்பிற்கு வழிகாட்டிகளாக திகழ்ந்த சிவசுடலைமணி, பொன் வேல்முருகன் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் […]
Category: மாவட்ட செய்திகள்
சுகாதாரத்துறை ஏற்பாட்டில் கொசு ஒழிப்பு பணி : ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்காணிப்பு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனைப்படி புதுவலசை ஊராட்சியில் வீடுகள் தோறும் கொசு ஒழிப்பு பணி இன்று நடந்தது. இப்பணியை மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, உச்சிப்புள வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேந்திரன், சுகாதார ஆய்வாளர் வைரவசுந்தரம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மீரான் ஒலி ஆகியோர் கண்காணித்தனர். இதே போல் பனைக்குளம் ஊராட்சி வீடுகள் தோறும் […]
காரைக்குடியில்சம்பை ஊற்று நீர் , பாதுகாக்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம்…
காரைக்குடியில் சம்பை ஊற்று நீரை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ,நீர் நிலைகளை மாசுபடுத்தும் கெமிக்கல் மற்றும் ஒர்க் ஷாப், கார், பைக் கம்பெனிகளை மூட கோரியும் சம்பை நீர் நீரோட்ட பகுதியில் கட்டிடம் கட்ட தடை செய்யக்கோரியும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே. எம்.சரீப் தலைமையில் காரைக்குடியில் தாசில்தார் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விடுதலை தமிழ் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் மற்றும் தோழமைக் கட்சிகள் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரால் […]
தாயாரை மீட்டு தரக்கோரி மகள் கண்ணீர் மல்க மனு..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆ. புனவாசல் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பத்ரகாளி. இவரை வீட்டு வேலைக்காக ஏஜன்ட்கள் கொக்கா டி இருளாண்டி, திருச்சி நாசர் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஸ்கட் நாட்டிற்கு அனுப்பினர். அங்கு பத்ரகாளி தொடர் சித்ரவதையால் தற்போது மிகவும் உடல் நலம் பாதித்துள்ளார். இதனால் பத்ரகாளியை மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மகள் நபியா மக்கள் குறை தீர் […]
தேவகோட்டையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்..
உத்திர பிரதேசம் சம்பல் மாவட்டத்தில் ஆறு இஸ்லாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பாஜக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு தலைவர் சாதிக் அலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமூக செயற்பாட்டாளர் சத்திய பிரபு செல்வராஜ், ஜனநாயக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாவல், கண்டன உரை நிகழ்த்தினர். தேவகோட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் கமருல் ஜமான், நகர இஸ்லாமிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மொய்னுதீன், சாதிக்பாட்ஷா , மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் : மூன்று பேர் கைது..!
ராமநாதபுரத்தை அடுத்த கீழக்கரையில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்தப்படுவதாக க்யூப் பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவாளிகள் தப்பி விடாத வண்ணம் கீழக்கரை போலீசாருக்கு பிரிவு போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் கீழக்கரை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்த நபர்கள் சென்ற காரில் தீவிர சோதனை செய்தபோது, காரில் நான்கு கிராம் உயர்ரக போதை பொருளான […]
கண்காணிப்பு கேமரா சேவை : எஸ்பி தொடங்கி வைத்தார்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் சின்னஉடப்பங்குளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் வாசுதேவன் ஏற்பாட்டில் பொருத்தி கண்காணிப்பு கேமராக்களின் சேவையையும் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் இன்று துவங்கி வைத்தார். அபிராமம் அருகே பாப்பனம் கிராமத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 4 CCTV கேமராக்களின் சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் பொதுமக்கள் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.
காசநோய் இல்லா தமிழகம் விழிப்புணர்வு பிரச்சாரம்; தென்காசி மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
தென்காசியில் “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் 07.12.2024 அன்று “NIKSHAY SHIVIR” எனும் தொடர்ச்சியான 100 நாள் காசநோய் இல்லா தமிழகத்திற்கான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை கடைநிலை மக்கள் வரை கொண்டு சேர்க்கும் வகையில் […]
கடையம் அருகே இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் இலவச சித்தா மற்றும் கண் மருத்துவ முகாம் நடந்தது. இம்முகாமில் 5 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் திருநெல்வேலி அரசு சித்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து திருமலையப்பபுரம் திரு கைலாசம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் இலவச சித்த மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் […]
மண்டபம் மீனவர் 8 பேருக்கு டிச.20 வரை நீதிமன்ற காவல்: ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு…
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் டி – நகர், மேற்கு வாடி, கோயில் வாடி ஆகிய மீன்பிடி இறக்கு தளங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்கு சென்றன. இப்படகுகளில் மண்டபம் முகாம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் சகாய ஆன்ட்ரூஸ் ஆகியோரது விசைப்படகுகளில் தொழிலுக்கு சென்ற மீனவர் 8 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு கடப்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் […]
இட ஒதுக்கீடு அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மீண்டும் அமல்படுத்தக்கோரி ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம் பட்டியல் & பழங்குடி வகுப்பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 16(4-A) ஐ மாநில அரசு அமல்படுத்த கோருவது தொடா்பான ஆலோசனனக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமலிலிருந்த இனச்சுழற்சி அடிபடையில் பதவி வழங்கும் நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள், பட்டியல் & பழங்குடி வகுப்பைச் சார்ந்த பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் பதவி உயர்வு […]
மண்டபம் மீனவர் 8 பேர் 2 விசைப்படகு களுடன் கைது:இலங்கை கடற்படை நடவடிக்கை..
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று காலை தொழிலுக்குச் சென்றனர். இலங்கை யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக மண்டபம் கார்த்திக் ராஜா, தங்கச்சிமடம் ஆஸ்டின் ஆகியோரது விசைப்படகுகளில் இருந்த சேசு 47, காளி 50, கண்ணன் 55, முத்துராஜ் 45, பத்தரப்பன் 55 உள்பட 8 மீனவர்களை […]
திருவாடானை அருகே பாமக கொடியேற்று விழா..
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் தாமோதரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் பாமக கொடி ஏற்று விழா நடந்தது. திருவாடானை ஒன்றிய பாமக செயலாளர் தர்மராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், மீனவர் அணி தலைவர் ராகவேந்திரன் முன்னிலை வகித்தனர். கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிளை செயலாளர் கலைச்செல்வன், மூர்த்தி, துணை செயலாளர் பிரபாகரன், பொருளாளர் தீபேஷ் கண்ணன், பிரசன்னா, வில்லாயுதம், அய்யப்பன், பாண்டி, நாகேந்திரன் உள்பட […]
இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த காங்., கிராம ஊராட்சி, வார்டு, நகர், வட்டார மாவட்ட அளவில் கமிட்டி அமைக்க வட்டார, நகர் தலைவர்கள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட பொறுப்புக்குழு ஒருங்கிணைப்பாளரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான ராம.கருமாணிக்கம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளரும், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும், நகர்மன்ற உறுப்பினருமான இராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் மாநில பார்வையாளர்கள் டாக்டர். செல்வராஜ், அடையாறு பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர். மாநில செயலாளர் ஆனந்தகுமார், […]
ஆன்லைனில் முதலீடா? மோசடி!! காவல்துறை எச்சரிக்கை..
மொபைல் மூலம் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைனில் இணையதளம், டெலிகிராம் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலி வாயிலாக முதலீடு எனும் பெயரில் பல்வேறு நிதி மோசடிகள் நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களான வாட்ஸப் மற்றும் டெலிகிராம் மற்றும் யூடியூப் சேனல்கள் மூலம் “உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்” இது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ஏமாற்றி வருகின்றனர். இதனை […]
ராமநாதபுரத்தில் 991 பேருக்கு ரூ.2.66 கோடி மதிப்பில் நலத்திட் உதவிகள் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையொட்டி, ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு ராமநாதபுரத்தில் நடந்தது மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை […]
அம்பேத்கருக்கு வீர வணக்கம்..
இராமநாதபுரம்: இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு ஏர்வாடி அருகே புல்லந்தை கிராமத்தில் அம்பேத்கர் உருவச் சிலைக்கு திராவிடத் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் புவனேஷ்வரன், மாவட்ட அமைப்பு செயலாளர் காளிதாஸ், முன்னிலை வகித்தனர். மதுபாலன், ஜெகநாதன், கார்த்திக், ரெத்தினேஷ், ஊடகப்பிரிவு அரிவரசு மற்றும் அருண்அதியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் சுற்றுச்சூழல் தன்னார்வலருக்கு சேவை செம்மல் விருது..
இராமநாதபுரம் : தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐஐடி வளாகத்தில் சேவை செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகத்தில் 38 மாவட்டங்கள், புதுச்சேரி உள்பட 39 மாவட்டங்களில் கடந்த ஓராண்டில் தன்னலமற்ற சேவை செய்து வந் தோரை அடையாளம் கண்டு, அவர்களின் சேவைகளை அங்கீகரித்து 39 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிழல், பலன் மரக்கன்றுகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பசுமை கிராமம் […]
தேவிபட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில், எஸ்டிபிஐ கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியில் தமிழ் மாநில செயலாளர் நஜ்மா பேகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார் முன்னதாக மாவட்ட செயலாளர் நஜீம் அனைவரையும் வரவேற்றார். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் மொஹிதீன் கண்டன கோஷம் எழுப்பினார், திருவாடானை சட்டமன்ற பொறுப்பாளர் ஹனீப் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார் மாவட்ட பொதுச் […]
வலையில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமை:கடலில் பத்திரமாக விட்ட மீனவர்கள்..!
தொண்டி கடலில் சிக்கிய அரிய வகை நட்சத்திர ஆமையை, மீட்டு மீண்டும் பத்திரமாக கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு குவிகிறது. ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி புதுக் குடியை சேர்ந்த மீனவர் ராமகிருஷ்ணன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் தொண்டி புதுக்குடி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அவர்களது வலையில் 15 கிலோ எடை கொண்ட அதிசய நட்சத்திர ஆமை ஒன்று சிக்கியது. உடன் அதை பத்திரமாக வலையில் இருந்து எடுத்து உயிருடன் கடலில் மீண்டும் விட்டனர். தடை செய்யப்பட்ட கடல் ஆமையை […]
You must be logged in to post a comment.