மும்பை இணைய குற்ற பிரிவிலிருந்து பேசுவதாக கூறி (‘DIGITAL ARREST’) செய்வதாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது..

மும்பை இணைய குற்ற பிரிவிலிருந்து பேசுவதாக கூறி (‘DIGITAL ARREST’) செய்வதாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புகார் தாரர் ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whatsapp ல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான பண பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே […]

தென்காசியில் புத்தக கண்காட்சி..

தென்காசியில் நேஷ்னல் புக் டிரஸ்ட், புதுடில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியை தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் பால்சுதர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயலாளர் இசக்கி துரை முன்னிலை வகித்தார். செங்கோட்டை நல்நூலகர் ராமசாமி முதல் […]

திருவேங்கடம் மூன்று நபர்கள் கொலை வழக்கு; குற்றவாளிகள் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு..

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் ஐந்து நபர்களுக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் […]

சாம்பவர் வடகரை பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் வெறிநாய்கள்; பொதுமக்கள் அச்சம்..

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் அதிகமான அளவில் சாலைகளில் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் சுற்றி திரியும் வெறிநாய்கள் இரவு மற்றும் பகல் நேரங்களில் சாலைகளில் அதிகமான அளவில் சுற்றி திரிவதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை தொடர்கிறது.  எனவே சாலையில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை […]

திருவேங்கடம் மூன்று நபர் கொலை வழக்கு; 11 நபர்கள் குற்றவாளி என தீர்ப்பு..

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 11 நபர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் கலிவரதன் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இவ்வழக்கின் விசாரனையானது திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட […]

காணாமல் போனவர்கள் பற்றிய சிறப்பு விசாரணை முகாம்..

தென்காசி மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்து பதியப்பட்ட வழக்குகளின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து உட்கோட்டங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போனவர்களை விரைந்து கண்டுபிடிக்கும் விதமாக மாபெரும் விசாரணை முகாம் நடைபெற்றது.  இதில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அந்த உட்கோட்டங்களில் விசாரணை முகாம் ஏற்பாடு செய்து புகார் தாரர்களை […]

நில அதிர்வுகளை ஏற்படுத்தும் குவாரிகளை நெறிப்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..

நில அதிர்வுகளை ஏற்படுத்தும் கல்குவாரிகளை நெறிப்படுத்த வலியுறுத்தி பொட்டல்புதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை நடைபெற உள்ளதாக சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள முதலியார்பட்டி, பொட்டல் புதூர், ஆழ்வார்குறிச்சி, ரவண சமுத்திரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், நெல்லை மாவட்டத்தில், ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும், கடந்த 22.9.24 அன்று காலை 12 மணி அளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பயந்து சில மணி நேரங்கள் […]

தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நன்றி..

தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் பயன்பெற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் நோக்கமானது நகர்ப்புற ஏழைகளிடையே சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி அவர்களின் வறுமையையும், நலிவு நிலையையும் குறைத்து சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுடன் கூடிய வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுத்து, அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தினை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்துவதும், நிலைத்த தன்மை அடையச் செய்வதும் ஆகும். தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார […]

கல்லிடைக் குறிச்சி ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து மனு..

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என அமைச்சரிடம் கல்லிடை இரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறனர். நெல்லை – செங்கோட்டை வழித்தடத்தில் அதிக வருவாய் தரும் இந்த ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்க தலைவர் உமர் பாரூக், ஆலோசகர் ஜான் பால் […]

விவசாயிகளையும் விளை நிலங்களையும் பாதுகாக்க எஸ்டிபிஐ ஆய்வுக்குழு வலியுறுத்தல்..

உயிர்பலிகள் ஏற்படும் முன் விவசாயிகளையும் விளை நிலங்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட நிர்வாகத்தை எஸ்டிபிஐ ஆய்வுக்குழு வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகளை ஒட்டியுள்ள வடகரை, பண்பொழி, கரிசல்குடியிருப்பு, புளியரை போன்ற பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகள் விவசாயிகளையும், வேளாண் நிலங்களையும் சேதப்படுத்தி வருகின்றது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு மாதமாக வடகரை பகுதியில் விளை நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து நெல், வாழை, தென்னை போன்ற பயிர்களை […]

நெல்லை தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு..

நெல்லை தென்காசி மாவட்டங்களில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், மணிமுத்தாறு ஆகிய பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம், உள்ளிட்ட இடங்களில் சுமார் 11.45am மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

கடையம் சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆதாய கொலை, திருட்டு மற்றும் 72க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான கடையம் கல்யாணிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரின் மகனான பாலமுருகன்(36). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் […]

முதலியார்பட்டி அரசு பள்ளிக்கு விரைவில் கூடுதல் கட்டிடம்; வட்டாட்சியர் கோட்டாட்சியர் நேரில் ஆய்வு..

முதலியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட உள்ளது. வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் பள்ளியை நேரில் ஆய்வு செய்து கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், சீட்டு கொட்டகைகளிலும், மர நிழலிலும், தரையிலும், அமர்ந்து மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். எனவே உடனடியாக கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு […]

கோ-ஆப்டெக்ஸ் திபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட கலெக்டர்..

திருநெல்வேலி சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள கோ- ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், 21.09.2024 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பை […]

தென்காசியில் கழிவு நீர் ஓடையை சீரமைத்திட பொதுமக்கள் கோரிக்கை..

தென்காசியில் முக்கிய சாலையில் செல்லும் கழிவு நீர் ஓடையை சீரமைத்து சுகாதாரம் காக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி ரயில் நிலையம் வடபகுதி மற்றும் ஐசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி, எம்.கே.வி.கே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் கழிவு நீர் ஓடை சென்று கொண்டிருக்கிறது.  துர்நாற்றம் வீசும் இந்த கழிவு நீர் ஓடையால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள், பள்ளி பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்கள் […]

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலையம் கொலை முயற்சி வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளியான தென்காசி பாறையடி மேட்டு தெருவை சேர்ந்த திருமலை குமார் என்பவரின் மகனான முகமது மைதீன் @ நாகராஜன்(28). இவர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் பரிந்துரையின் […]

தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை; தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்..

தென்காசி-செங்கோட்டை இடையே இரட்டை அகல ரயில் பாதை அமைத்திட வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நெல்லை ரயில் நிலையத்தில் 20.09.24 மாலை 6.30 மணிக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங், நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் ஆகியோருடன் நடைபெற்ற சந்திப்பின் போது, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், நெல்லை – தென்காசி […]

சுரண்டையிலிருந்து சென்னைக்கு மீண்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்; பொது மக்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சென்னைக்கு இயக்கி நிறுத்தப்பட்ட இரண்டு அரசு பேருந்துகளையும் நவீன புதிய ரக பச்சை வண்ண பேருந்து அல்லது வெள்ளை வண்ண பேருந்தாக மீண்டும் இயக்க வேண்டும் என சுரண்டை மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை, வீ.கே.புதூர், சாம்பவர் வடகரை, சேர்ந்தமரம், வீரசிகாமணி பகுதியை சேர்ந்த பயணிகளில் சுமார் 200 பேர் தினமும் விழுப்புரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், சென்னை என சென்று வருகின்றனர். இவர்களது வசதிக்காக […]

காமராஜர் அரசு கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்; பரிசுகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் நுண்ணுயிரியல் துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் 20.09.2024 அன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கை தலைமையேற்று கல்லூரி முதல்வர் (பொ) ரா.ஜெயா தொடங்கி வைத்தார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் 200 பேர் கலந்து கொண்டார்கள். முதல் அமர்வில் துபாய் ஆகாஷ் பிளான்டேஷன் முதன்மை விஞ்ஞானி முனைவர் ரவிந்தர் சிங் உயிரியல் துறையில் வேலை வாய்ப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்து சிறப்புரை ஆற்றினார். 2வது அமர்வில் […]

விவசாய பயிர்களை அழித்து வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும்; எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்..

தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் விவசாய பயிர்களை அழித்து வரும் வனவிலங்குகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. வடகரை நகர எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் 20-09-2024 அன்று கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. நகர தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட சமூக ஊடக அணி செயலாளர் வாவை சேக் முகம்மது, தொகுதி தலைவர் சேக்முகம்மது ஒலி மற்றும் தொகுதி இணைச் செயலாளர் சாஜித் ஒலி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!