ஆக்கிரமிப்பு அகற்ற கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை வலுக்கட்டாயமாக அகற்றிய போலீசார்

உசிலம்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கும் – போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.மாரிபட்டி கிராமத்தில் காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தினர், கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது., இந்த ஆக்கிரமிப்பு காரணமாக கோவிலுக்கு செல்ல பாதை இல்லை என இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்., இந்த கோரிக்கையின் அடிப்படையிலும், நீதிமன்ற உத்தரவின் […]

இராஜசிங்கமங்களம் ஒன்றிய தேசியக்கொடி யாத்திரை.!

  ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி இராஜசிங்கமங்களம் ஒன்றிய தலைவர் S.M.A. வடிவேலன் தலைமையில் தேசியக்கொடி யாத்திரை சிறப்பாக நடைபெற்றது. யாத்திரை ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஆரம்பித்து, ஸ்ரீ சமயா கோவில், ஸ்ரீ காளியம்மன் கோவில், காந்திநகர் நூலகம் வழியாகச் சென்று ஸ்ரீ பாண்டிகோவிலில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர்  சௌந்தரபாண்டியன், முன்னாள் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிவசங்கர், திரங்கா யாத்திரை பொறுப்பாளர் முன்னாள் ஒன்றியத் தலைவர் சசிகனி, மற்றும் M.R. […]

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.எங்களுக்கு ஒரே நெருடல் என்ன வென்றால் வருகிற சட்டசபை தேர்தலில் விஜய் தனித்துப் போட்டியிடுகிறாரே?என்பதுதான் எங்களுக்கு ஒரே நெருடல்? -செல்லூர் ராஜு

மதுரை துவரிமானில், ஆர் ஜே தமிழ்மணி டிரஸ்ட் மூலம் கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை நடத்தியது, திமுக்காவினருக்கு கலக்கமாகத்தான் உள்ளது,மடியில் கனமில்லை எனில், வழியில் என்ன பயம் 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுது திமுகவினர் மீது, […]

தேவகோட்டையில்தமிழ் சிறகுகள் அமைப்பு சார்பில் இரத்ததான முகாம்

79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் சிறகுகள் அமைப்பினர்கள் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி இனைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது .சிறப்பு அழைப்பாளராக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி எம்எல்ஏ, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் , தேவகோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் . இரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர் . அமமுக நகரச் செயலாளர் நகர் மன்ற உறுப்பினர் கமலக்கண்ணன் , தேவகோட்டை வர்த்தக சங்கத் தலைவர் மகபூப் பாச்சா […]

பாறைப்பட்டி அய்யனார் கோவிலில் கிராம மக்கள் பொங்கல் வைக்க அறங்காவலர் எதிர்ப்பு

மதுரை பாலமேடு அருகே பாறைப்பட்டி அய்யனார் கோவிலில் பொங்கல் வைக்க 5 கிராம பொதுமக்களுக்கு எதிர்ப்பு ..தெரிவித்த அறங்காவலர் பொங்கல் பொருட்களை வாங்க மறுப்பு.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அவமதித்ததால் அறங்காவலர் பதவியை ரத்து செய்ய வேண்டும் கிராம மக்கள் வேண்டுகோள்… நீதிமன்றம், காவல்துறை ,இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுகோள். உள்ளூர் திமுக பிரமுகரின் ஆதரவுடன் கோவில் அறங்காவலர் தன்னிச்சையாக செயல்படுவதாக பொதுமக்கள் பரபரப்பு புகார் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பாரைப்பட்டி கிராமத்தில் […]

உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி சத்திரிய குல நாடார்கள் உறவின் முறை கல்வி திருவிழா

. உசிலம்பட்டி பேரவை அரங்கில் உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி சத்திரிய குல நாடார்கள் உறவின் முறை கல்வி திருவிழாவில் மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. காமராஜர் 123 வது பிறந்தநாள் விழாவை கல்வி திருவிழாவாக உசிலம்பட்டியில் இருக்கும் சிவகாசி சத்திரிய நாடார்கள் உறவின் முறை சார்பில் ஏழை எளிய 108 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் உறவின் முறை தலைவர் டி.ஆர்.எஸ்.ஜி. மாணிக்க நாதன் தலைமையில் காரியதரிசி டி.பி.பி.டி பாஸ்கரன், […]

சோழவந்தான் பேருந்து நிலையத்தில் தொடரும் குளறுபடி போர்டை மாட்டாமல் செல்வதால் பயணிகள் குழப்பம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலைய பயன்பாட்டில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வரும் ஒரு சில பேருந்துகளும் எங்கே செல்கின்றன என போர்டை மாற்றாமல் போர்டை கழட்டி பேருந்து உள் பகுதியில் வைத்து விட்டு வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் சென்ற பின்பு எடுத்து மாற்றுவதால் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்படுவதாக கூறுகின்றனர் குறிப்பாக மாட்டுத்தாவணிக்கு செல்ல வேண்டிய பயணிகள் பேருந்துக்காக பல மணி நேரம் […]

அலங்காநல்லூர் அருகே பேருந்து கால அட்டவணை மாற்றத்தால் சிரமப்படுவதாக பொதுமக்கள் புகார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தை குளம் கிராமத்திற்கு மதுரை எல்லீஸ் நகர் கிளை பணிமனையின் மூலம் வண்டி எண் TN-58 = N 2038, தடம் எண் – 70, பெரியார் நிலையம் முதல் அலங்காநல்லூர் வழியாக பெரிய இலந்தை குளம் வரை இயங்கும் அரசு பேருந்தானது கடந்த 14 தேதி முதல் கிராமத்தில் இரவு நேர நிறுத்தம் (Halt) பேருந்தாக மாற்றி உள்ளதாகவும் தற்போதைய கால அட்டவணையின் படி காலை முதல் […]

குருவித் துறையில் சுதந்திர தின விழா சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது செயல் அலுவலர் இளமதி கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார் பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா சுபா உள்பட பலர் கலந்து கொண்டனர் சிறப்பு வழிபாட்டில் அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார். இதே போல் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கூட்டு […]

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரவை சார்பில் 79வது சுதந்திர தின விழா

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும்மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்செ பால்பர்ணபாஸ் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட கிளையின் சார்பாகவ79 சுதந்திரதினவிழா மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது இதில் மாவட்ட செயலாளர் ரமேஷ் இணைச்செயலாளர் வழக்கறிஞர் ஜெய.தமிழ்செல்விபொருளாளர் சின்னகொடி துணை செயலாளர் திருலோகநாதன் நகரசெயலாளர் சுருளிமாவட்ட ஆலோசகர் மதிவாணன் சுருளிவேல் மகளிரணி ஈஸ்வரி ஈழச்செல்வி சேடபட்டி ஒன்றியம் ரத்தினம் மாயத்தேவர்சுப்பையன் […]

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா

நாடு முழுவதும் இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 79வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் தேய்வேந்திரன் தேசிய கொடியேற்றினார். பள்ளி நிர்வாகி ஜெயராஜ் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளின் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உசிலம்பட்டி பள்ளியில் சுதந்திர தின விழா

இந்திய திருநாட்டின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று அனைத்து இடங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம்உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு கொடி ஏற்றிய சுதந்திர தின சிறப்புரையாற்றினார். மாணவ மாணவியர்கள் பேச்சு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா நிகழ்ச்சியினை அனைத்து ஆசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்

சுதந்திர தினத்தில் மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு போராட்டம் – டாஸ்மாக் கடைகள் அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறும் வேளையில், “மதுவிலக்கு தான் உண்மையான சுதந்திரம்” என்ற கோஷத்துடன், மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில், பேருந்து நிலையம் முன்பும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக அகற்றக் கோரி தீவிரமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலை நிகழ்ச்சிகள் காலை முதலில், மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு சங்க அலுவலகம் முன்பு தேசியக்கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது.சி ஐ டி யு தொழிற்சங்கம் மாவட்ட தலைவர் […]

மேலக்கால் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில்தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது கிராம சபை கூட்டத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம சபை கூட்டம் கீழ மட்டையான் கிராமத்தில் நடைபெற்றது […]

உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மதுரை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக காங்கிரஸ் கட்சியினர் 79 வது சுதந்திர தினம் விழாவில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்திய தேசிய தொழிலாளர்கள் யூனியன் காங்கிரஸ் தொழிற்சங்க பலகையை திறந்து வைத்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் எம் மகேந்திரன் தலைமை வைத்தார். […]

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தாளாளர் எம் வி எம் மருதுபாண்டியன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். பள்ளி நிர்வாகி எம் வள்ளிமயில் எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா தலைமை தாங்கி தேசிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பள்ளி முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். […]

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை (NASA) சார்பாக சுதந்திர தின நிகழ்வு..

வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை – நாசா வின் சார்பாக இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தின கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை 8 மணியளவில் கீழக்கரை வடக்குத்தெருவில் உள்ள நாசா அலுவலகம் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு அரசு மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து, மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தினார். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ அன்புடன் வாழ வேண்டும், பிரிவினைவாத கருத்துக்கு […]

உசிலம்பட்டி அருகே தண்ணீர் வரி கட்டியவர்களுக்கே 100 நாள் வேலைத்திட்டம் கொடுக்கப்படும் என கிளர்க் மிரட்டுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்

மதுரை மாவட்;டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி கிராமம்.இக்கிராமத்தில் 1000க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராம தற்காலிக எழுத்தராக (கிளர்க்) சுகந்தி என்பவர் பணியாற்றி வருகின்றார்.இவர் இக்கிராம மக்களிடம் 100 வேலைத்திட்டம் வேண்டுமென்றால் தண்ணீர் வரி கட்டவேண்டுமென்றும் அவ்வாறு ரூ.200 கட்டுபவர்களுக்கே 100 நாள் வேலைத்திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்வதாகக் கூறப்படுகின்றது.இது தொடர்பாக சிலர் கிளர்க்கை அலுவலகத்தில் முற்றுகையிடடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.இதுகுறித்து பாண்டியன் என்பவர் கூறுகையில் […]

பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா

தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சி தாராபட்டி கிராமத்திற்கு முறையாக பேருந்து வராததை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 26 எச் என்ற அரசு பேருந்து தினசரி ஒன்பது முறை காலை 6:30 ஏழு முப்பது எட்டு முப்பது பத்து முப்பது நண்பர்கள் ஒரு மணி மாலை 4 மணி இரவு 8 மணி இரவு 10 மணி […]

2026 சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறும்டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி பேட்டி

மதுரை அலங்காநல்லூர் ஒன்றிய பகுதிகளில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கட்சி கொடிகளை ஏற்றி வைத்து பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: சென்னையில் போரட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் 15 ஆண்டு காலம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் , அவர்கள் வேறு நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் போது புதிய பணியாளர்களாகவே கணக்கில் கொள்ளப்படும் சம்பளம் குறைந்துவிடும். அதனால்தான் அவர்களது அடிப்படை உரிமைகளை கேட்டு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!