வல்லநாடு மலைப்பகுதியில் விதைப்பந்துகள் மூலம் பசுமை பாதுகாப்பு பணி; பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..

பூமியில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக வல்லநாடு மலையில் பள்ளிச் சிறுவர், சிறுமியர்களால் விதைப்பந்துகளை தன்னார்வத்துடன் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இயற்கை மற்றும் சமூக நல ஆர்வலர்கள், கல்வித்துறை, வனத்துறை, காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பசுமையை பாதுகாக்கும் பணியில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் காலாண்டு விடுமுறையில் தாம் செய்த விதைப் பந்துகளுடன் வந்திருந்தனர். 21,000 விதைப்பந்துகளை இந்த […]

தென்காசியில் இளைஞர் எழுச்சி தின பேரணி; மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்…

தென்காசியில் இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என என்றும் போற்றப்படும் பன்முகத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15 ஆம் […]

நெல்லை தென்காசி மாவட்டங்களில் நாளை மின்தடை..

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உபமின் நிலையங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.10.2024) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மானூர் உப மின் நிலையத்தில் 16.10.2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில் காலை […]

ஸ்கேட்டிங் மூலம் சாதனை படைத்த மூன்றரை வயது சிறுமி; தென்காசி எம்எல்ஏ பரிசுகள் வழங்கி பாராட்டு..

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் மூன்றரை வயது சிறுமி 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் 50 நிமிடத்தில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சாதனை சிறுமியை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார், சுரண்டை நகரமன்ற தலைவர் வள்ளிமுருகன் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் செல்வராஜ். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு கேடன்ஸ் மார்ஷியா என்ற மூன்றரை […]

தென்காசி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் தாமதமின்றி வழங்க வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தாமதமின்றி ரேஷன் கார்டுகள் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேசன் கடை எண், ரேசன்கடை ஊழியர் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் மண்டல / தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள உங்கள் ஸ்மார்ட் கார்டு (333XXXXXX034) பெற்று கொள்ளவும் என விண்ணப்பதாரரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது. இந்த குறுஞ்செய்தி வந்தவுடன் தாலுகா அலுவலகத்திற்கு […]

ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின் கீழ் அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் என்ற திட்டத்தின்படி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்” ஏழாம் கட்டமாக எதிர் வரும் 16.10.2024 புதன்கிழமை முற்பகல் […]

மறந்து போன உணவு தானியங்களை வைத்து இயற்கை உணவுத்திருவிழா நடத்தி அசத்திய பள்ளி..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை உணவு திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.,வழக்கம் போல இந்த ஆண்டும் இந்த உணவு திருவிழா பள்ளி வகுப்பறை வளாகத்தில் நடைபெற்றது.,மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் உதவியோடு இயற்கை உணவுகளான கம்பு மற்றும் கேப்பை கூல், கேப்பை புட்டு, அரிசி மாவு புட்டு, கொழுக்கட்டை, தேன் மிட்டாய், முளைகட்டிய பாசி பயறு, சுண்டல் பயறு, பழங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், பச்சை காய்கறிகளால் செய்யப்பட்ட உணவு […]

கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு அரசு பேருந்திற்கு வழிவிட மறுத்து டிரைவருடன் தகராறில் ஈடுபடும் இளைஞர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து நேற்று இரவு பேரையம்பட்டிக்கு அரசுப்பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.பேருந்து டிரைவர் பாண்டி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.பேருந்து எழுமலை புல்லுக்கடை மைதானத்தின் அருகே சென்ற போது சில இளைஞர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அருகில் நின்று கொண்டிருந்தனர்.பேருந்து செல்ல வாகனத்தை எடுக்குமாறு டிரைவர் பாண்டி ஹாரன் அடிக்க இருசக்கரவாகனத்தை எடுக்க மறுத்து டிரைவர் மற்றும் நடத்துனரை கெட்டவார்த்தையால் திட்டி அடிக்கச் சென்றுள்ளனர்.அனைவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருப்பது […]

தென்காசி மாவட்டத்தில் ரூ.24 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், நகரம் (ம) இராமசாமியாபுரம் கிராமம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 91 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட நகரம் (ம) இராமசாமியாபுரம் கிராமம் ஜெயராம் திருமண மண்டபத்தில் 09.10.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் […]

கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” நூலினை வெளியிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்..

கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” எனும் நூலை தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார். நூலின் முதல் படியை நியூஸ் -18 தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ச. கார்த்திகைச் செல்வன் பெற்றுக் கொண்டார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நெல்லையில் கவிஞர் பேரா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுவர் கவிஞர் பே.இராஜேந்திரன். நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க நிறுவுநரும், தமிழ் […]

தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசர காலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும், அமைச்சர்களை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக பின்வரும் அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, திருப்பத்தூர் […]

தென்காசி மாவட்டத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 07.10.2024 திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் மூளை முடக்குவாதம் புற உலக சிந்தனையற்ற மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மாற்று வழியில் பிறருடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளுடன் கூடிய உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் […]

பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும்; தென்காசி மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை..

Grindr App உள்ளிட்ட ஆன்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்தி பொது மக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், Google Play Store – Grindr (Gay Chating App) என்ற செயலி (Application) பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. […]

Grindr ஆப் மூலம் மக்களை மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த மர்ம கும்பல் அதிரடி கைது..

Grindr எனும் ஆன்ட்ராய்டு ஆப் மூலம் மக்களை மிரட்டி பணம் நகை செல்போன் பறித்த மர்ம கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்த ஒருவரை தவறான உறவுக்கு தூண்டும் grindr-app மூலம் தொடர்பு கொண்டு சுரண்டை காவல் நிலைய பகுதிக்கு அவரை வரவழைத்து முறைகேடாக இருப்பது போல் வீடியோ எடுத்து மிரட்டி அவரை தாக்கி பணம், செல்போன் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அவர், […]

பஞ்சாபில் காணாமல் போன ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி; 13 வருடங்களுக்கு பிறகு நெல்லையில் மீட்பு..

பஞ்சாபில் காணாமல் போன ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி 13 வருடங்களுக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் மீட்கப்பட்டு பஞ்சாப் மாநில காவல்துறை உதவியுடன் மீண்டும் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டார். கடந்த 17.09.2024ஆம் தேதி விஜயநாராயணம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வயது முதிர்வாலும், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலும், தன்னை குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க இயலாத நிலையிலும், எவ்வித அடையாள அட்டையும் இல்லாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நபரை பிடித்து காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் […]

ரயில் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி? போலீசார் தீவிர விசாரணை..

தென்காசி மாவட்டம் சங்கனாப்பேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி ஏதும் நடந்துள்ளதா என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு புதன் கிழமை இரவு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. சங்கனாப்பேரி பகுதியில் ரயில் சென்ற போது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட […]

தென்காசி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்..

தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தென்காசி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், தட்டம்மை (மீசல்ஸ்) ரூபலா கண்காணிப்பு பணி, பருவ கால நோய்கள் தடுப்பு, புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் அயோடின் பயன்பாடுகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தர கட்டுப்பாடு மற்றும் மாவட்ட சுகாதார பேரவை நடவடிக்கைகள் பற்றியும் சம்பந்தப்பட்ட துறை […]

மும்பை இணைய குற்ற பிரிவிலிருந்து பேசுவதாக கூறி (‘DIGITAL ARREST’) செய்வதாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது..

மும்பை இணைய குற்ற பிரிவிலிருந்து பேசுவதாக கூறி (‘DIGITAL ARREST’) செய்வதாக மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புகார் தாரர் ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whatsapp ல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான பண பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே […]

தென்காசியில் புத்தக கண்காட்சி..

தென்காசியில் நேஷ்னல் புக் டிரஸ்ட், புதுடில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் தென்காசி ஆகாஷ் ப்ரண்ட்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியை தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் பால்சுதர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு ஆகாஷ் அகாடமி நிர்வாக இயக்குநர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயலாளர் இசக்கி துரை முன்னிலை வகித்தார். செங்கோட்டை நல்நூலகர் ராமசாமி முதல் […]

திருவேங்கடம் மூன்று நபர்கள் கொலை வழக்கு; குற்றவாளிகள் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு..

திருவேங்கடத்தில் மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 4 நபர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் ஐந்து நபர்களுக்கு 5 ஆயுள் தண்டனை மற்றும் இரண்டு நபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம், திருவேங்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடப்பன்குளம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு மூன்று நபர்களை கொலை செய்த வழக்கில் 25 நபர்கள் மீது அப்போதைய சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!