செங்கோட்டை நகர பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சுமார் 1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை சமூக ஆர்வலர்கள் காவல் ஆய்வாளர் பாலமுருகனிடம் வழங்கினர். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முக்கிய பகுதிகளில் காவல் துறையினரால் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சமூக நல ஆர்வலர்கள், கல்வி நிறுவனத்தினர் மற்றும் சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும் தங்களை இணைத்துக் கொண்டு தேவையான […]
Category: மாவட்ட செய்திகள்
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட எஸ்.பி; பெண் காவலரின் செயலை பாராட்டி வெகுமதி..
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன், பெண் காவலரின் செயலை பாராட்டி வெகுமதி வழங்கி கெளரவித்த நிகழ்வு காவல் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுதம் வைப்பறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பணியின் போது […]
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.11.2024 திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட […]
பயணியை கன்னத்தில் அறைந்த நடத்துனர் சஸ்பெண்ட்..
நெல்லையில் பயணியை கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மூலக்கரை பட்டியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், இன்று காலை 8.30 மணிக்கு பயணி ஒருவர் லக்கேஜ் உடன் ஏற வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தின் நடத்துனர் அந்த பயணியை ஏறக்கூடாது என்றும், உனது டிக்கெட் வேண்டாம் என்றும், ஆபாச வார்த்தை பேசி பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காட்சி வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் […]
உசிலம்பட்டி அருகே பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாம் தமிழர் கட்சி சார்பாக தொட்டப்பநாயக்கனுர் ஊராட்சி குன்னூத்துப்பட்டி கிராமத்தில் அசுவமா நதிக்கரையில் பனை விதைகள் நடப்பட்டது.இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளராகிய வினோத் அருண்பாண்டி ராஜா மணிவண்ணன் முனியப்பன் பிரபாகரன் சரத்குமார் வைரமணி கலைவாணன் மற்றும் பல மற்றும் பல நிர்வாகிகளும் மகளிர் பாசறை விமலா தேவி ,பிரியா, விஜி முத்துமாரி முனியம்மாள் நித்தியா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியருக்கு ‘உலகத் தமிழ் மாமணி” விருது
“ தேசியக் கல்வி அறக்கட்டளையும் சென் நெக்சஸ் குழுமமும் இணைந்து ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு 4 வது பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை ஐம்பெரும் விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது.இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவர் முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்களின் இலக்கியப் பணிகளையும் உலகு தழுவிய நிலையில் தமிழ் மொழிக்கு ஆற்றி வரும் தொண்டினையும் கருத்தில் கொண்டு “உலகத் தமிழ் மாமணி” என்ற விருதினை, இந்நிகழ்வில் சிறப்பு விருந்pனர்களாகக் கல்ந்துகொண்ட சென்னை, […]
மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடிய ராகுல்காந்தி..
தீபாவளி பண்டிகையின் போது அகல் விளக்குகளை தயார் செய்யும் ஒரு குடும்பத்தினரை சந்தித்து பேசிய வீடியோ ஒன்றை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் மற்றும் முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்தும், மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மண் பாண்டங்களை தயார் செய்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினேன். அவர்களின் வேலையை அருகில் இருந்து பார்த்து, கற்றுக் கொள்ள முயற்சித்தேன். அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும், சிக்கல்களையும் […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் (நவ.02) மின்தடை..
நெல்லை, தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 02.11.2024 அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மின்வாரிய செய்திக்குறிப்பில் பின்வரும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 02.11.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், […]
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவர்-கலெக்டர் கமல் கிஷோர் பாராட்டு..
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவரை மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் பாராட்டினார். இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் […]
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னதானம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையின் சார்பாக தேவர் ஜெயந்தி விழாவில் மாநில தலைவர் மு ராஜபாண்டியன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் த பூபதி ராஜா முன்னிலையில் துணைச் செயலாளர் ஆர் சௌந்திரபண்டியன் தேனி மாவட்டத் தலைவர் க. விலக்கு எம் முருகன் மதுரை மாவட்ட அமைப்பு செயலாளர்கள் ஆர் வீரணன் மாவட்ட பொறுப்பாளர் ஏ ஜெய வீரணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு […]
சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகள்; நெல்லை சரக டிஐஜி பரிசுகள் வழங்கி பாராட்டு..
நெல்லையில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பள்ளி குழந்தைகளை நெல்லை சரக டிஐஜி பா.மூர்த்தி பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினார். நெல்லை செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் வகுப்பில் மாணவர் சபரி இஷாந்த் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு பெற்றார். இரண்டாவது வகுப்பில் மாணவர் ரியோ மார்வினும், மூன்றாவது வகுப்பில் மாணவி மீரஜாவும், நான்காவது வகுப்பில் மாணவி பிளெஸ்ஸியும், ஐந்தாவது வகுப்பில் […]
தென்காசியில் புறவழி ரயில் பாதை; பாவூர்சத்திரத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கை -தென்காசி எம்எல்ஏ வலியுறுத்தல்..
தென்காசி ரயில் நிலையத்தில் புற வழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான பாண்டியராஜா இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் ரயில் தேவைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிப்பு செய்யக்கூடிய வசதிகள் […]
மோசமான நிலையில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் சேவை; பொதுமக்கள் அவதி..
தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒன்றிய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது வங்கி கணக்குகள் மற்றும் வர்த்தக கணக்குகள், ஏடிஎம், ஜி.பே, போன்பே போன்ற மூன்றாம் தர செயலிகளின் பணப் பரிமாற்றத்திற்கு இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவை இன்றியமையாததாக உள்ளது. அனைவரிடமும் 5ஜி ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ள நிலையில், தற்போது தான் பிஎஸ்என்எல் […]
மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு பெற்றனர்.
2024- 2025 ஆம்ஆண்டின் மதுரை வருவாய் மாவட்ட தடகளப்போட்டிகள் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 8 பேரகள் ஈரோட்டில் நடைபெறும் மாநில போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர் .தடகள விளையாட்டுப் போட்டியில் 14 வயது பிரிவு மாணவிகள் மித்ரா வட்டு எறிதலில் இரண்டாம் இடமும் செளமியா 400 மீ ஓட்டம் இரண்டாம் இடமும் […]
உசிலம்பட்டியில் பள்ளியில் ஆதரவற்ற ஏழைக்குழந்தைகளுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக புத்தாடை மற்றும் துணிமணிகள் வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் ஆதரவற்ற மற்றும் ஏழை மாணவர்களுக்கு தீபாவளி புதிய துணிமணி மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டது. இப்பள்ளியில் கடந்த 1981-1985 கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து தங்கள் படித்த பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் வருடம் தோறும் நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் வருடம் தோறும் தீபாவளிக்கு தாய் தந்தை இல்லாத மாணவர்கள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவியர்களுக்கு புதிய துணிமணிகள் மற்றும் […]
செங்கோட்டையில் புதிதாக 50 CCTV கேமராக்கள் இயக்கத்தினை துவங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட எஸ்.பி
செங்கோட்டையில் புதிதாக 50 CCTV கேமராக்கள் இயக்கத்தினை துவங்கி வைத்து, பொது மக்களிடையே மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் குற்ற செயல்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், நடைபெற்ற குற்ற சம்பவங்களின் குற்றவாளிகளை கண்டறியும் விதமாக பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து செங்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் முன்னிலையில், செங்கோட்டை காவல் நிலைய பெண் […]
தென்காசி மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. விரைவில் 21வது கால்நடை கணக்கெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கும் இந்தப்பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணியினை மேற்கொள்ள தென்காசி மாவட்டத்தில் 169 கால்நடை […]
திருவனந்தபுரம் இரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரையை இணைப்பதா?; வைகோ எம்.பி கண்டனம்..
திருவனந்தபுரம் இரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரையை இணைப்பது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என கூறி வைகோ எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை இரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என 22.10.2024 அன்று தினமலர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. இரயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. இது குறித்து ஏற்கனவே நான் பலமுறை […]
செங்கோட்டை அரசு நூலகத்தில் நூல் திறனாய்வு மற்றும் நூல் வெளியீடு..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் நெல்லையைச் சேர்ந்த செல்வி. சூடாமணி எழுதிய எம்மண்ணின் நட்சத்திரங்கள் என்ற கட்டுரை நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதிமூலம் மற்றும் இணைச் செயலாளர் செண்பகக் குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் செல்வி. சூடாமணி சிறந்த திறனாய்வு செய்த 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் எழுத்தாளர் […]
புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..
புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடல் தமுமுக-காவல்துறை இணைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அடையாளம் தெரியாத நபர் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததன் அடிப்படையில், அவரின் உடலை திருநெல்வேலி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் […]