மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக ரவிச்சந்திரன் பணியாற்றி வந்த நிலையில் அவர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் (பொது) நேர்முக உதவியாளராக பணிமாறுதல் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக கரூர் மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியாற்றிய சண்முகவடிவேல் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக பணிமாறுதல் செய்யப்பட்டு இன்று புதிய வருவாய் கோட்டாட்சியராக (ஆர்டிஓ) பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர் .உசிலை மோகன்
Category: மாவட்ட செய்திகள்
சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளரை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்து கோரிக்கை
சென்னையில் தென்னக இரயில்வே பொது மேலாளர் . ஆர். என். சிங் அவர்களை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை குறித்த பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.இரணியல் நிலையத்தில் சாலை அகலப்படுத்துதல் மற்றும் 16729/30 புனலூர் – மதுரை விரைவு ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கவும், திருவனந்தபுரம் முதல் நாகர்கோவில் பாசஞ்சர் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை.2சமீபத்தில் கட்டிய புதிய ரயில்வே பாலத்தில் வளைவு […]
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; பாதுகாப்பு உபகரணங்களை நேரில் ஆய்வு செய்த தென்காசி எஸ்.பி..
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஶ்ரீனிவாசன் உத்தரவின் பேரில், மாவட்டத்திலுள்ள கடனாநதி, ராமாநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகள் மற்றும் முக்கிய ஆறு, குளம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கும் விதமாக மாவட்டத்தில் 22 தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தேவையான உதவிகளை செய்யும் விதமாக அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் […]
நெல்லை மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு..
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைர் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தாமிரபரணி ஆற்றினை பொறுத்தவரை தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இல்லை. இருப்பினும் பரவலாக பெய்து வரும் மழையால் சிறு ஓடைகள், கால்வாய்கள் மூலமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து சுமார் 2100 கன அடி தண்ணீர் ஆற்றில் வந்து கொண்டு இருக்கிறது. மழையின் அளவை பொறுத்து […]
உசிலம்பட்டி – நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் நகராட்சி நிர்வாகத்தினர் தீவிர சோதனை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகள் மற்றும் உசிலம்பட்டி நகர் பகுதியில் நெகிழி பயன்பாட்டை தடுக்கும் நோக்கில்., வணிக வளாக கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடை என ஆயிரக்கணக்கான கடைகளில் கடந்த ஒரு வார காலமாக உசிலம்பட்டி நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.,பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் நெகிழி பயன்படுத்தி வரும் கடைகளிடம் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் அபராதமும் விதித்து எச்சரிக்கை செய்து வருகின்றனர்.,அவ்வாறு இந்த ஒரு வார காலத்தில் […]
அனைத்து அரசு பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்..
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த பத்திரிகை செய்தியில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்காங்கே பாலியல் துன்புறுத்தல்கள், ஃபோக்ஸோ நடவடிக்கைகள் தினந்தோறும் நடந்து வருகிறது. மேலும் ஆசிரியர்கள் மாணவர்களை கடுமையாக தாக்குவது, மாணவர்கள் ஆசிரியர்களை தாக்கும் செயல்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது. பள்ளியில் உள்ள துப்புரவு வேலைகளை, மாணவ மாணவிகளை […]
உசிலம்பட்டி அருகே 200 ஆண்டு பழமையான குளத்தை கண்டறிந்து தூர்வாரி மீட்டெடுத்த சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் திருக்கோவில் இந்த கோவிலை சுற்று புதர் மண்டி காணப்படுவதோடு சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் அவற்றை சுத்தம் செய்ய வேண்டுமென்று பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.நிதி பற்றாக்குறை காரணமாக இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் கால தாமத படுத்தி வந்த சூழலில், இது குறித்து அறிந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞமான திமுக மதுரை தெற்கு மாவட்ட தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் தலைமையிலான குழுவினர் […]
பிராங் மூலம் பொதுமக்களை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை..
பிராங்க் என்ற பெயரில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தும் வகையில் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிடும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சோஷியல் மீடியாக்களில் Like, Share மற்றும் Followers க்கு ஆசைப்பட்டு Prank செய்வதாக கூறி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்காசி மாவட்ட காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சமூக ஊடகங்களில் அதிகப்படியான Like, […]
மேக்கரை அருகே எருமைச்சாடி தனியார் நீர்வீழ்ச்சி மூடல்..
தென்காசி மாவட்டம் மேக்கரை அருகே செயல்பட்டு வந்த எருமைச்சாடி தனியார் நீர்வீழ்ச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூடப்பட்டது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட மேக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பல தனியார் நீர்வீழ்ச்சிகள் செயல்பட்டு வந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல நீர் வீழ்ச்சிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் ஒன்றிரண்டு நீர் வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளிடம் ரூ100, 200, 300 என கட்டணம் […]
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் திமுக அரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, கையில் குடை பிடித்த நிலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் (SH-39) நெடுஞ்சாலையில் தேவை இல்லாத இடத்தில் சாலையை கடந்து செல்ல திறந்தவெளி அமைத்தும், தேவைப்படும் இடங்களில் அமைக்காமல் இருப்பது பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பின்றி உள்ளதாகவும் கூறி அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், […]
தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 23.11.2024 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி (சி.1) துறை, நாள் 19.11.1998 மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 3-ன்படி, உள்ளாட்சிகள் தினமான 01.11.2024 அன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, 23.11.2024 அன்று காலை 11.00 […]
காட்டு யானைகளை கட்டுப்படுத்த விவசாய நிலங்களுக்கு மின் வேலி; தென்காசி மாவட்ட கவுன்சிலர் அமைச்சரிடம் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை அழித்து வருவதை தடுக்க விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்து தர வேண்டும் என தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியிடம் தென்காசி மாவட்ட கவுன்சிலர் கனிமொழி கோரிக்கை மனு அளித்துள்ளார். அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி தெற்கு மாவட்டம், கடையநல்லூர் ஒன்றியம், திரிகூடபுரம் ஊராட்சி, மற்றும் சொக்கம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளது. […]
ஆன்லைனில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி 96 லட்சம் மோசடி; இருவர் கைது..
ஆன்லைனில் வீட்டிலிருந்து கொண்டே கை நிறைய சம்பாதிக்கலாம், ஆன்லைன் கேஷ்பேக் ஆஃபர், பொருட்கள் அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைக்கும், குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டு & டெபிட்கார்டு பயன்படுத்தி ஆஃபர் பெறலாம் என்பதாக சமூக வலைதளங்களில் விதவிதமாக விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஃபர்களை நம்பி மோசடியில் சிக்கிக் கொண்ட பலர் தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி சைபர் கிரைமில் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், சர்வதேச பங்குச் சந்தையில் ஆன்லைன் […]
திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கிய தென்காசி மாவட்ட எஸ்.பி
தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன் திருநங்கைகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். தென்காசியில் பேருந்து நிலையம், சுற்றுலாத்தலங்கள் போன்ற அதிக பொதுமக்கள் கூடும் பகுதிகளில் திருநங்கைகள் தங்களிடம் பிரச்சனை செய்வதாகவும், மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதாகவும், அசிங்கமாக பேசுவதாகவும் தொடர் புகார்கள் வந்த நிலையில், இதை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் தலைமையில் தென்காசி பகுதியில் உள்ள திருநங்கைகளை அழைத்து அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. திருநங்கைகள் மீது காவல் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் […]
தென்காசி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் கலந்தாய்வு கூட்டம்..
தென்காசி மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் 2025க்கு 01.01.2025-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை (அதாவது 31.12.2006 அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்) புதிய வாக்காளராக சேர்ப்பது தொடர்பான நடவடிக்கையாக 28.11.2024 வரை மனுக்கள் […]
வாட்ஸப் மூலம் போலி வர்த்தக முதலீடு செய்ய வைத்த மோசடி நபர் அதிரடி கைது..
போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து, whatsapp மூலம் பெரிய லாபம் திரும்ப கிடைக்கும் என எதிர்பார்ப்பை உருவாக்கி முதலீட்டாளர்களை ஏமாற்றிய மோசடி நபர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறை செய்திக்குறிப்பில் சைபர் கிரைம் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி வர்த்தகத்தின் (ஆன்லைன்) வாயிலாக மக்களை ஏமாற்றுவதற்கான புதிய வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றனர். போலியான வர்த்தக வாய்ப்புகளை முன்வைத்து, whatsapp மூலம் பெரிய லாபம் […]
உசிலம்பட்டி தொகுதி தி மு க இளைஞர் அணி ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.
உசிலம்பட்டியில் மதுரை தெற்கு மாவட்ட தி மு க சார்பில் உசிலம்பட்டி தொகுதி இளைஞர் அணி ஆலோசணைக் கூட்டம் மதுரை ரோடு ஸ்ரீ ராம் மஹாலில் நடைபெற்றது.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் திமுக உசிலம்பட்டி தொகுதியில் உள்ள ஒன்றிய நகர பேரூர் இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் உசிலம்பட்டி நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விமல் துணை அமைப்பாளர்கள் […]
நெல்லையில் சினிமா தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; போலீசார் விசாரணை..
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமா தியேட்டரில் இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் தியேட்டரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசும் காட்சி பதிவாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் விசாரணை முடிவுகள் வருவதற்கு முன்னதாகவே, […]
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா..
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக மாவட்டம் முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் வட்டார அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட உள்ளனர். இக்கலை விழா நிகழ்ச்சிகளை மாவட்ட முதன்மை […]
அரசு பள்ளியில் தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்களை ஆசிரியர்கள் மாணவர்கள் கௌரவபடுத்தினர்.
தேசிய பத்திரிக்கையாளர் தினம் நாளை 16.11.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது., இந்த தேசிய பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சியில் பத்திரிக்கை மற்றும் ஊடகத்தின் பங்கு என்ற தலைப்பில் சிறப்பு கருந்தரங்கம் நடைபெற்றது.,இந்த கருத்தரங்கில் மதுரை மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க தலைவர் கதிரவன், டைம்ஸ் ஆப் இந்தியா உதவி ஆசிரியர் ஆரோக்கியராஜ், காந்திகிராம பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் பழனித்துரை மற்றும் உசிலம்பட்டி தாலுகா அளவிலான பத்திரிக்கை […]