திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாரண சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெரும் திரளனி நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்
Category: மாவட்ட செய்திகள்
ஜனநாயக வழி நடைபயண நிகழ்வு.. அமைதியான முறையில் தீர்வு எட்டபட்டதால் கைவிடப்பட்டது..
கீழக்கரை இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. இந்த சாலையை சீரமைப்பு செய்ய பல்வேறு சமூக, சமுதாய அமைப்புகள் தொடர்பு குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த பணி தாமதம் செய்யப்பட்ட வந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைப்பு செய்ய சம்பந்தப்பட்ட துறையிரை வலியுறுத்தி நாளை 11/01/25 சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து […]
மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்..
திருவண்ணாமலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா ஜெயந்தி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உழவுக்கு உயிரூட்டு, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற கோஷத்துடனும், தமிழ்நாடு தமிழர்கள் பெருகுக வளம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி மாணவ-மாணவிகள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா…
தஞ்சாவூர். ஜன.11.தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. செம “வைபாக” மாணவிகள் தொடர்ந்து அட்டகாசமாக நடனம் ஆடி கொண்டாடினர். தமிழர்களின் மிக முக்கியமான திருநாள் பொங்கல் பண்டிகையாகும். வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக சமத்துவ பொங்கல் […]
மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) துறை சார்பாக சமத்துவ பொங்கல்..
மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) துறை சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மதுரை கோட்டம் தலைமை பொறியாளர் செல்வராஜ் அவர்கள் தலைமையிலும், கண்காணிப்பு பொறியாளர் அய்யாச்சாமி, துணை கண்காணிப்பு பொறியாளர் மதி மணி ஆகியோர் முன்னிலையிலும், சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என பலர் கலந்து […]
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், திமுக நகரச் செயலாளர் பெரி பாலமுருகன், நகராட்சி ஆணையாளர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தை அலங்கரிக்கும் ஜல் ஜல் மணிமாலை தயாரிப்பு தீவிரம்..
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு சீசன் துவங்க உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தை அலங்கரிக்கும் மணிமாலை வாங்க ஜல்லிக்கட்டின் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால் சலங்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைக்களுக்கான வண்ணமிகு அலங்காரத்தோடும் சலங்கை சத்தத்துடன் மணி மாலை கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. கண்கவரும் வண்ண வண்ண உள்ளன் நூல்களைக் கொண்டும் சப்தம் மிகுந்த சலங்கைகள் கோர்க்கப்பட்ட தயாரிக்கப்படும் இந்த மணி மாலைகள் தைப்பொங்கலில் ஜல்லிக்கட்டு காளைகளின் […]
போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார் போதை பழக்கத்தில் தாக்கங்கள் குறித்து சத்திரப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஹரிஹரசுதன் விளக்க உரை ஆற்றினார் மாவட்ட நீதிபதி சேர்மன் திலகம் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் போதை […]
போதை இல்லா தமிழகம், விபத்தில்லா மதுரை என்ற தலைப்பில் நட்சத்திர நண்பர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி..
மதுரை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் குருசாமி, மதுரை மாநகர் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஆய்வாளர் சேது மணி மாதவன், ரெட் கிராஸ் ஆகியோர் இணைந்து, அவர்கள் தலைமையிலும், மதுரை மாநகர் காவல்துறையே வடக்கு இணை ஆணையாளர் அனிதா, கலால் உதவி ஆணையாளர் ராஜகுரு, கலால் தாசில்தார் ஆனந்தி ஆகியோர் முன்னிலையிலும், போதையில்லா தமிழகம், விபத்தில்லா மதுரை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, மதுரை தமிழ் அன்னை சிலை […]
கீழக்கரையில் தொழில்நுட்ப திறன் மேம்பாடு பயிற்சி முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ் குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார். இதில் இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றார்கள். . விழாவில் […]
இந்திய அரசியலமைப்பு தினம் அனுசரிப்பு
தஞ்சாவூர் லயன்ஸ் கோல்டன் ஹாலில் தஞ்சாவூர். மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இந்திய அரசியலமைப்பு தினம் லயன்ஸ் வழக்கறிஞர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது. அண்ணல் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தை பாதுகாப்பதென்றும் மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றக் கூடாது என்றும் அரசியல் சட்டம் ஏழை. எளிய சாமானிய மக்களின் நம்பிக்கைக்கு உரியதாக காப்போம் என உறுதிமொழி யேற்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கூடுதல் வழக்கறிஞர் ஜெனரல் சந்திரமோகன்,வழக்கறிஞர் ராஜ் மோகன். […]
கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!!
கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு. ! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு.!! *தமிழ்நாடு முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு சென்னையில் வழங்கி தொடங்கி வைத்ததை தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் குடும்ப அட்டைக்காரர்களுக்கு வழங்கினார் கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் உடன் இருந்தார் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் பாபு
பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை மாற்றியமைக்க கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் .!
பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தைமாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சருக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம்.! ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் நான்கு வழிச்சாலை புதிய பாலத்தை குடியிருப்புகளை பாதிக்காத வகையில் மாற்றியமைக்க கோரி பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ வ வேலுவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் சந்தித்து கடிதம் வழங்கினார். இது […]
கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிக்கு ஜன.9ம் தேதி 9 ரயில்கள் மாற்றுபாதையில் இயக்கம்
கூடல் நகர் ரயில் பாதை மேம்பாட்டு பணிகளுக்காக நாளை ஒன்பது ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம் மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை அன்று (ஜனவரி 9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய ஒன்பது ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி […]
கீழக்கரையில் கள்ளத்தனமாக மது விற்பனையை தடுக்க கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளதனமாக மது பாட்டில் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய கோரியும் கள்ள சந்தையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இதற்கு துணை போகும் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் ரவி தலைமை […]
மதுரையில் தலைமை ஆசிரியர்கள் நடத்திய குழந்தைகளுக்கான தற்காப்பு பாதுகாப்பு நிகழ்ச்சி.!
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் HCL foundation மற்றும் OFERR நிறுவனமும் இணைந்து எனது பள்ளி நிகழ்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். OFERR நிறுவனத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரி ஜெய்சங்கர், HCL foundation program officer ராஜலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு !
சுரக்குடிப்பட்டி, வெண்டையம்பட்டி, இராயமுண்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை வெள்ள பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 40 சதவீதம் வரை நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட சுரக்குடிப்பட்டி, இராயமுண்டான்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பெய்த கடும் மழை வெள்ளத்தால் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் மூழ்கி முற்றிலும் அழுகியது.இதனால் மீண்டும் நாற்று வாங்கி நடவு செய்யவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.உரிய இழப்பீடு கேட்டு இந்திய கம்யூனிஸ்ட் […]
அய்யனார் குளம் பகுதி விவசாயிகள் அதிகாரிகள் மீது புகார்
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம்,அய்யனார் குளம் பகுதியில் பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்க முயற்சிப்பதாக அதிகாரிகள் மீது புகார் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே அய்யனார்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த புயல் மழை காரணமாக அறுவடைக்கு முன்பே வயல்களில் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரிய […]
உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் தஷ்விக்(4).யுகேசி படிக்கின்றான்.நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பியவன் வீட்டின் அருகில் விளையாட்டிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடிய போது வீட்டின் அருகிலுள்ள துரைராஜ் என்பவரின் கிணற்றில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி தாலுகா போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலிசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து கிணற்றிலிருந்த சிறுவனின் உடலை மீட்டனர்.போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது […]
70 வயசுல டைவர்ஸ் பொய்யா ஏமாத்தி மோசடி எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை.!
‘ ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 70 வயசுல என் புருஷன் என்னை டைவர்ஸ் பண்ணிட்டாருன்னு பொய்யா ஏமாத்தி மோசடி செஞ்ச பாவிங்க.. 250 சவரன் நகையவும் பணத்தையும் ஏமாத்திட்டாங்க..- எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பித் தள்ளிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை… ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் போஸ் தேவர். இவருக்கு பஞ்சவர்ணம் மற்றும் பாக்கியம் என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். போஸ் கடந்த 2022 டிசம்பர் 1ஆம் […]
You must be logged in to post a comment.