46 கோடி மதிப்பீட்டில் துவரிமான் – கீழமாத்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் புதிய மேம்பால கட்டுமான பணிகளை சு. வெங்கடேசன் எம்பி துவக்கி வைத்தார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் ரூ.46 கோடியில் மதுரை துவரிமான் – கீழ மாத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துவரிமான் – கீழ மாத்தூர்நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த புதிய மேம்பால கட்டுமான பணிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். சு. வெங்கடேசன் எம். பி. பேசியதாவது, மதுரை மாவட்டம் துவரிமான் – கீழமாத்தூர் மற்றும் இந்த பகுதி மக்களின் […]

சோழவந்தான் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் இல்ல விழா ஆர் பி உதயகுமார் நேரில் வாழ்த்து

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 12 வது வார்டில் அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ரேகா ராமச்சந்திரன் இவரது இல்ல காதணி விழா சோழவந்தான் தனியார் மஹாலில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ராமச்சந்திரன் ரேகா தம்பதிகளின் குழந்தை செல்வங்களை வாழ்த்தினார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் […]

சோழவந்தான் அருகே ஐயப்ப நாயக்கன்பட்டியில் காமராஜர் திருஉருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஐயப்ப நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் முழு திரு உருவச்சிலைக்கு பாலாபிஷேகம் செய்து நோட் புத்தகங்கள் வழங்கி அவரது பிறந்தநாளை நாடார் உறவின் முறை சங்கத்தினர், நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கொண்டாடினர். நாட்டாமைக்காரர்கள் பால்பாண்டி ,ராம் பிரபு ,காமாட்சி பிரபு தலைவர் மனோகரன் பாலகிருஷ்ணன், செயலாளர் வேல்முருகன்,, பொருளாளர் சின்னு காளை, துணை தலைவர் கந்தசாமி துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக குருவித்துறை ஐயப்ப […]

சோழவந்தான் பகுதியில்17ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை

சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் 17ந்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது இதனால் சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி,மீனாட்சி நகர் ,ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி கச்சிராயிருப்பு, கீழ மட்டையான்,மேல மட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து,மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி முள்ளி பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன் […]

காமராஜர் 123 வது பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம்உசிலம்பட்டி வண்ணாரப் பேட்டை நாடார் புது தெருவில் காமராஜர் பிறந்தநாள் விழா உசிலம்பட்டி நட்டாத்தி நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியமான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி பரிபாலன சபை சங்க தலைவர் பி. பிரசாத் கண்ணன் ஏற்பாட்டில் அன்னதானம் – இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது . இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பரிபாலான சபை செயலாளர் எஸ். எம். எஸ். ஆர் நடராஜன் தலைமையில் அன்னதான நிகழ்ச்சியை அ.இ. அதிமுக நகரத் தலைவர் பூமா ராஜா […]

முதல்வர் ஸ்டாலினுக்கு bye bye.. சொல்லும் நேரம் வந்துவிட்டது -ஆர்.பி உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, புன்னூர் அய்யன், பாப்பம்மாள் கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., நான்கு ஆண்டுகளாக மக்களின் குறை தீர்க்காமல் தூங்கி கொண்டிருந்த திமுக அரசு தற்போது […]

சோழவந்தானில் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் எம்.வி. எம் மருது பாண்டியன், பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். பேச்சு கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா பரிசுகள் […]

காமராஜர் பிறந்த நாள்,கல்வி வளர்ச்சி நாள் விழா!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை தொடக்கப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது .இவ்விழாவிற்கு நகர்மன்றத் தலைவர் திருமதி மெஹரிபா பர்வின் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள், காமராசர் பற்றி பேசினார்கள்.மாணவ மாணவிகள் காமராசர்பற்றி பாடலைப் பாடினார்கள்.இந்நிகழ்ச்சியில் காரமடை வட்டாரகல்வி அலுவலர் தமிழ்ச் செல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளியின் கல்வியாளர் முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் […]

சோழவந்தானில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா அவரது முழு திருவுருவச்சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார் .பேரூராட்சி சேர்மன் எஸ் எஸ் கே ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத் தலைவர் கண்ணன் பிற்படுத்தப்பட்டோர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, , கொத்தாளம் செந்தில், […]

சோழவந்தானில்காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை

கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் பள்ளி நிர்வாகங்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் சோழவந்தான் நாடார் உறவின்முறை சார்பாக அவரது முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தலைவர் ஞானசேகரன் செயலாளர் மாரியப்பன் பொருளாளர் ஜெயபாண்டி துணைத் தலைவர் சண்முக பாண்டியராஜா துணை செயலாளர் பாலாஜி மற்றும் செயற்குழு […]

சோழவந்தானில் காமராஜரின் திருவுருவட்சிலைக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் துரை […]

கல்வி வளர்ச்சி நாள் விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காமராஜரின் வேடம் அணிந்து வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி அவர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காமராஜர் பிறந்த நாள் விழா விழிப்புணர்வு ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்டமாணவர்கள் முக்கிய தெருக்களில் வழியாக ஊர்வலமாக சென்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு […]

உசிலம்பட்டியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புனிதன் காமராஜ் நற்பணி மன்றம் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கி இனிப்புகள் வழங்கினர். புனிதன் காமராஜ் நற்பணி மன்றம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணக்குமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் உசிலை எம். மகேந்திரன் முன்னாள் மாவட்ட செயலாளர் […]

ஆன்லைனில் டாஸ்க் மோசடி; சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை..

ஆன்லைனில் மோசடிகள் பெருகி வரும் நிலையில், வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலை தளங்கள் மூலமாக தற்போது review task fraud எனும் ஆன்லைன் மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய காவல் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, Telegram/WhatsApp வாயிலாக அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து வீட்டில் இருந்த படியே மொபைல் போன் மூலமாக online part […]

இலஞ்சி பி.எட் கல்லூரிக்கு பள்ளி கல்வித் துறை அலுவலர் பாராட்டு..

தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர் கல்வி கற்பிப்பதில் சிறப்பிடம் பெற்றுள்ள இலஞ்சி டி.எஸ்.டேனியல் பிஎட் கல்லூரியை பள்ளி கல்வித் துறை மாவட்ட திட்ட அலுவலர் பாராட்டினார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் விளையாட்டு விழா, இளைஞர் தின விழா மற்றும் உணவுத் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்வில், கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் ஷீலா நவரோசி […]

திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா

உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் தி மு க கட்சியின் வழக்கறிஞர் அணி வழக்கறிஞருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. திமுக வழக்கறிஞர் அணி உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை தெற்கு மாவட்டம் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் எஸ் சிவனேசன் தலைமையில். மதுரை வழக்கறிஞர் அணி தலைவர் ஓ. செல்வராஜ அரசு வழக்கறிஞர் ராஜ சேகர் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளர் பி. கனி ராஜன் மற்றும் தலைவர் கரிகாலன் மற்றும் வழக்கறிஞர் கலந்து […]

விக்கிரமங்கலம் அருகே இளம்பெண் மாயம்

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைசேர்ந்த ஜெயபாண்டி மனைவி பவித்திரா வயது 23. இவர் கடந்த 10ம் தேதி வத்தலக்குண்டுக்கு வேலைக்கு செல்வதாக சென்றவர் வீடு திரும்பவில்லை பவித்ராவை உறவினர் மற்றும் நண்பர்கள் உட்பட அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தனர் பவித்திராவை காணவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் பவித்ரா தந்தை முத்தையா தனது மகளைக் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை வழக்கு பதிவு செய்து காணாமல் […]

சோழவந்தானில் பேரூராட்சி கவுன்சிலர் இல்ல விழா தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில்வார்டு கவுன்சிலராக உள்ள ரேகா ராமச்சந்திரன் இல்ல விழாவில் தொழிலதிபர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் ,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தொழிலதிபர் முள்ளிப்பள்ளம் ஜீவபாரதி, வார்டு கவுன்சிலர்கள் கொத்தளம் செந்தில், குருசாமி, பிற்படுத்தப்பட்டோர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப அணி பார்த்திபன் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இன்று ஆறாம் நாள் மண்டபடியாக வி. கீரை கண்ணன் குடும்பத்தார் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு தீபாராதனை […]

கீழக்கரையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது.! சட்டவிரோதமாக செயல்படும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்பி அறிவிப்பு.!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 11.07.2025-ம் தேதி அன்று சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் தலைமையில் குழு ரோந்து மேற்கொண்டபோது கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அருகே சங்குளிகார தெருவை சார்ந்த செய்யது கருணை மகன் முகைதீன் ராசிக் அலி என்பவர் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து சுமார் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!