இலங்கைக்கு இரவில் கடத்த வீட்டில் பதுக்கிய 611 கிலோ கடல் அட்டை பறிமுதல்..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்துள்ள பதப்படுத்திய கடல் அட்டைகளை கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் வடிவேல் முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதன்படி தீவிர சோதனையில் வேதாளை தெற்கு தெரு ராஜா முஹமது(40) என்பவரது வீட்டில் யாருமில்லாத நிலையில் வீட்டின் பின்புறம் பதப்படுத்தி சாக்கு மூடைகளில் இருந்த 611 கிலோ கடல் அட்டையை கைப்பற்றினர். இது தொடர்பாக ராஜா முஹமது மீது […]

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு.. சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு முறையான சம்பளம்,  இ எஸ் ஐ,  பிஎப் போன்ற தொகைகளை வழங்காமலும் பணி உபகரணங்கள் வழங்காமலும் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் சிஐடியு ஒப்பந்த தூய்மை பணியாளர் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்துவிட்டு நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்ற […]

திருவாடானை பகுதியில் நெற் பயிர்கள் கண்மாயிலிருந்து வெளியேறும் நீரில் மூழ்கி சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அதிகளவில் கண்மாய்கள், ஊரணிகள் உள்ளன. நூறு ஏக்கருக்கு மேல் பாசன வசதி கொண்ட கண்மாய்கள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழும், அதற்கு கீழ் பாசனம் உள்ள சிறுகண்மாய்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பராமரிப்பிலும் இருந்து வருகின்றன. இந்த பாசனக் கண்மாய்களுக்கு உட்பட்டு பல நூறு ஏக்கர் விவசாய விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக யெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பிவிட்டன. அவ்வாறு நிரம்பிய […]

திருவாடானை அருகே தரைப்பாலம் வழியாக தண்ணீரோடுவதால் போக்குவரத்து நிறுத்தம். கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அவதி..

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி பாண்டுகுடி நகரிக்கத்தான் ஓரியூர் உட்பட 10 கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலையில் அமைந்துள்ள தரைப்பாலத்தில் பருவமழை காலங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்படும் இதனால் அவ்வழியில் வாகனங்கள் சொல்ல முடியாத நிலையில் உருவாகும். இந்தப் பாலத்தினால் மழைக்காலங்களில் கிராம மக்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர் மேலும் அவசர சிகிச்சைக்காக நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல […]

வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியிலும் வெற்றி பெறுவதில் உசிலம்பட்டி தொகுதி முதன்மையாக இருக்கும் – அமைச்சர் மூர்த்தி பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட மெய்யணம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் மாநாடு போன்று நடைபெற்றது.,இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு டிராக்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மருத்துவ பணியாளர்கள், உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட […]

தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தென்காசி மாவட்ட அரசு பள்ளி மாணவிகள் சாதனை..

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் பங்கேற்ற தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். ஸ்கூல் கேம்ஸ் பெட்ரேஷன் ஆப் இந்தியா சார்பில் 2024-25ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடந்தது. சிவகங்கையில் நடந்த போட்டியில் தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மு.சந்தியா மற்றும் சி.யோக தர்ஷினி […]

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் 2 நாள் நிறுத்தம் : ஆட்சியர் தகவல்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தொகுப்பு III & V பிரதான குழாய்களை இணைக்கும் பணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 19.12.2024 & 20.12.2024 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் : ரேஷன் கடை பணியாளர்கள் தீர்மானம்..

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் வட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநிலச்செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வர வேற்றார். மாவட்டத்தலைவர் தினகரன் தலைமையில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, ஆர் எஸ் மங்கலம், நயினார்கோவில், வட்டக்கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை, சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், உணவுப் […]

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : இலங்கை அதிபரிடம், பிரதமர் மோடி வலியுறுத்தக்கோரி ராமநாதபுரம் எம்பி கடிதம்

இராமநாதபுரம் : பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ் கனி எம்பி கடிதம் எழுதிய கடிதத்தில்:- இலங்கை பிரதமர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது. இலங்கை அதிபர் நம் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையான […]

பெருங்குளம்,  ஆர் எஸ் மடை, ரெகுநாதபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி : நாளை (17/12/2024) மின் தடை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (டிச. 17) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் செம்படையார்குளம், வட்டான்வலசை, எஸ் கே.ஊரணி, கீழ நாகாச்சி, உச்சிப்புளி, துத்திவலசை,  என்மனம் கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, சூரங்காட்டுவலசை, மானாங்குடி, கடுக்காய்வலசை, புதுமடம், நாரையூரணி, வளங்காவேரி, ரெட்டையூரணி, தாமரைக்குளம், மான் குண்டு, உசிலங்காட்டு வலசை, பெருங்குளம், நதிப்பாலம், ஏந்தல், உடைச்சியார்வலசை, வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, கீரி பூர்வலசை, சமயன் வலசை, வாணியன்குளம், வடக்கு […]

உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த திமுக நிர்வாகி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் உசிலம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.,இந்த பேருந்து நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியதால் பேருந்துகள் வந்து செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.,இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இது குறித்து அறிந்த சமூக ஆர்வலரும், திமுக […]

உசிலம்பட்டி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பிட்டு முகாம்.

உசிலம்பட்டி வட்டார வள மையம் அலுவலகத்தில்  மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக  கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைந்து நடத்தும் 0.18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.மதுரைமாவட்டம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி  வட்டார வள மையத்தில்   முதன்மைக் கல்வி அலுவலர்  வழிகாட்டுதலின் படி மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மருத்துவ  மதிப்பீட்டு முகாம் உதவி  திட்ட அலுவலர் சரவண முருகன் மற்றும்  மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமி […]

ராமநாதபுரத்தில்  25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு..

ராமநாதபுரம், டிச.16 – ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி சார்பில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யதம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக், ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சுந்தரம் செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை […]

தேசிய மக்கள் மன்றத்தில்  999 வழக்குகளுக்கு ரூ.7,80,30,350 தீர்வுத்தொகை..

இராமநாதபுரம் : தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்திரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, A.K.மெஹ்பூப் அலிகான் தலைமை வகித்தார், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி K.கவிதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் C.மோகன்ராம், சார்பு நீதிபதி M. அகிலா தேவி. சார்புநீதிபதி S. பிரசாத், நீதித்துறை நடுவர் எண்-1 N.நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் எண்-II G.பிரபாகரன், […]

இராமநாதபுர மாவட்டத்தில் மணல் கொள்ளை தடுக்க இரவு பகலாக தீவிர சோதனை..

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சந்தீஷ் இ.கா.ப உத்தரவுபடி திருப்பாலைக்குடி காவல் சரகத்தில் தீவிர வாகன சோதனை இரவு முழுவதும் நடை பெற்றது.  அப்போது தனிப்பிரிவு தலைமை காவலர் சந்திர சேகருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சார்பு ஆய்வாளர் அர்சுன கோபால் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமை காவலர்கள், சரவணகுமார், சரவனன் முதல்நிலைகாவலர் சிக்கந்தர், காவலர்கள் செல்வகுமார், சுரேஷ் ஆகீயோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது காலை 3.45 மணி  அளவில் […]

மண்டபத்தில் இலவச கண் , பொது மருத்துவ முகாம்…

இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஹெல்பேஜ் இந்தியா சார்பில் இலவச கண், பொது மருத்துவ முகாம் மண்டபம் பேரூராட்சி திருமண மஹாலில் இன்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ராஜா துவக்கி வைத்தார். கவுன்சிலர் முபாரக் தலைமை வகித்தார். அக்வா அக்ரி மண்டபம் கிளை முருகேசன், பரம்பரை விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் ஆஸாத் முன்னிலை வகித்தனர்.  டாக்டர் அழகுவேல் மணி தலைமையில் பொது மருத்துவம், டாக்டர் ரம்யா தலைமையில் கண் […]

இருமேனி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் திறப்பு..

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் இருமேனி ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டட திறப்பு விழா இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ திறந்து வைத்தார். மண்டபம் வட்டார வளர்ச்சி ஆணையர் சோமசுந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷங்கர பாண்டியன், ஊராட்சி தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் ஐனுல் அரபியா, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், ஊராட்சி தலைவர்கள் கார் மேகம் […]

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள்… மாடு முட்டி முதியவருக்கு கால் முறிவு..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை திருப்பத்தூர் சாலை யூனியன் பஸ் ஸ்டாப் அருகில் இரு காளை மாடுகள் சண்டையிட்டுக் கொண்டதில் அவ்வழியாக சென்ற முதியர் சுந்தரம் மீது முட்டியதில் கால் முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் சாலையில் அடிக்கடி மாடு சண்டையிட்டு கொள்வதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மண்டபம் மேற்கு வாடி வடக்கு கடற்பகுதியில்தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி அமைச்சரிடம் மீனவர்கள் மனு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்குவாடி வடக்கு கடல் டி -நகர் முதல் மண்டபம் அரசு டீசல் பங்க் பழைய டி – ஜெட்டி வரை கடற்பகுதியை தங்கு தளமாக கொண்டு 300 விசைப்படகுகள், 100க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இப்பகுதியில் கடல் சீற்றம், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகிறது. இதனால் மீனவர்களுக்கு பொருளாதார செலவு ஏற்பட்டு மீனவர் பலன் மீன்பிடி தொழில் செய்ய […]

ராமநாதபுரத்தில் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்..

இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பி ஆர் பாபு தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் எம்.கபிலர், துணைத் தலைவர் ஜி.இளங்கோவன், துணைச்செயலர்கள் ராஜா, வெள்ளைச்சாமி, நகர் செயலர் கணேச மூர்த்தி முன்னிலை வகித்தனர். இதைமுன்னிட்டு ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டி ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!