இன்று (22-12-2024) Green Globe மற்றும் கீழை கம்யூனிட்டி சென்டர் (KCC) இணைந்து நடத்திய இரத்ததான முகாம், துபாயின் ஜதாஃப் பகுதியில் உள்ள Dubai Health Blood Donation Centreல் நடைபெற்றது. இந்நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆர்வத்துடன் இரத்த தானம் செய்தனர். Green Globe சார்பில், இரத்த தானத்தில் பங்கேற்ற அனைவருக்கும் துபாய் ஹெல்த் மையத்தின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஏற்பாடுகளை Green Globe அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் மற்றும் […]
Category: மாவட்ட செய்திகள்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அடைப்பு : இணை ஆணையர் அறிவிப்பு..
இராமநாதபுரம்: மார்கழி மாத அஷ்டமி பூப்பிரதட்சணத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை நாளை (23.12.2024) சாத்தப்படுகிறது. இதையொட்டி பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி நாளை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3:30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு சுவாமி – அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி ராமேஸ்வரம் நகர் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு […]
உசிலம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தமிழகமெங்கும் திமுக கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி தி மு க நகர் கழகம் சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியிலுள்ள 25 ஆட்டோ தொழிற்சங்கத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச காக்கி சீருடை வழங்கும் […]
தேவையில்லாமல் எதிர்கட்சி தலைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர் – தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் இணைந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.,இந்நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்.,ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படவில்லை ஏனென்றால் ஆளும் […]
நெல்லையில் பழிக்கு பழி நடந்த கொலை; காவல்துறை விசாரணையில் தகவல்..
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை நீதிமன்ற வாசலில் வாலிபர் ஒருவர் நேற்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஏழு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் விசாரணையில், பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, திருநெல்வேலி மாநகரம் பாளையங் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு 20.12.2024 ஆம் தேதி […]
உசிலம்பட்டியில் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பண்ணைப்பட்டி கிராமத்தில் குப்பை கிடங்கில் அருகில் பண்ணைப் பட்டி ஓடைகளில் நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகள் சேகரித்து வைப்பதாகவும் அப்பகுதியில் குப்பை கிடங்கு அகற்றக் கோரியும் ,உசிலம்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி 24 வார்டுகளில் அள்ளப்படும் குப்பைகளை அந்த வார்டுகளிலே வைத்து தீ வைப்பதை கண்டித்து பண்ணப்பட்டி குப்பை கிடங்கில் அருகில் மயானம் உள்ளது மற்றும் விவசாய விலை நிலங்கள் அதிக அளவில் உள்ளது. அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை […]
உலக தியான தினம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் உலக தியான தினம் கடைப்பிடிக்கப்பட்டது .பள்ளி தாளாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிரம்ம குமாரிகள் மதுரை அமைப்பினை சேர்ந்த சகோதரி ஆசா கலந்து கொண்டு உலக தியான தினத்தின் முக்கியத்துவத்தை சொல்லி ,மாணவர்கள் உலக அமைதிக்காகவும் மன அழுத்தத்தை குறைத்திடவும் தியான பயிற்சியை கற்றுக் கொடுத்தார்கள்.இன்றைய தினம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நிறைவாக பிரம்ம குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் சகோதரர் பாலமுருகன் நன்றி […]
தேசிய கராத்தே போட்டி : இரட்டை. சகோதரிகள் வெற்றி..
இராமநாதபுரம் : டில்லி டால்க டோர உள் விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி டிச.12 முதல் 15 வரை நடந்தது. 7 வயதிற்கு மேல் 14 வயதிற்குட்பட்டோர், சப்-ஜூனியர் மகளிர் 30 கிலோ எடை குமித் தே பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 4ம் வகுப்பு மாணவி ரித்யா, தமிழ்நாடு சார்பில் பங்கேற்று இறுதிச்சுற்றில் தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்தார். இவரது சகோதரி ரிதன்யா முதல் […]
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ராமநாதபுரம், தங்கச்சிமடம் பகுதிகளில் திமுக ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன் நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இழிவு படுத்தி பேசினார். இதையடுத்து திமுக தலைமை அறிவிப்பு படி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முததுராமலிங்கம் அறிவுறுத்தல் படி ராமநாதபுரத்தில் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக செயலாளர் கார் மேகம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் தெற்கு நகர் திமுக […]
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டம்..
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமதிக்கும் கருத்துகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்த நிலையில், இந்தியா கூட்டணி தலைவர்கள் அவரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான […]
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் : இந்திய அரசியலமைப்பு சட்டமேதை அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நடந்த நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் இழிவு படுத்தி பேசினார். இதையடுத்து திமுக தலைமை அறிவிப்பு படி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாஷா முததுராமலிங்கம் அறிவுறுத்தல் படி மண்டபம் பேரூர் திமுக சார்பில் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இன்று நடந்தது. பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர் தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் சாதிக்பாட்ஷா, முஹமது மீரா […]
ரூ.111 கோடி மதிப்பில் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் துவக்கி வைத்தார் …
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தனர். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் திறந்து வைத்தார். அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ரூ.111 […]
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஒன்றிய மந்திரியிடம் மனு..
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி சந்தித்து முறையீடு.. இது குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி அளித்த கடிதத்தில் தெரிவித்திருந்ததாவது: சென்னை – தூத்துக்குடிக்கு மானாமதுரை -அபிராமம், பார்த்திபனூர், கமுதி சாயல்குடி வழியாக தூத்துக்குடி வரை புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். காரைக்கால் – தூத்துக்குடி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக […]
காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சகாய தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். 70,000 காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு அகவிலை படியுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை கல்வித் தகுதி அடிப்படையில் 50 சதவீதம் நிரப்ப வேண்டும். ரூ. […]
தென்காசியில் புதிய இ-சேவை மையம் திறப்பு..
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மைய கட்டிடத்தில், தமிழ்நாடு அரசின் புதிய இ-சேவை மையம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தினை 18.12.2024 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் புதிய இ-சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. புதிய இ-சேவை மையத்தில், சாதிச் சான்றிதழ், […]
இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை கூட்டம்..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் அரசு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்தார். இராமநாதபுரத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் செயல்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுடன் ஆலோசனை […]
தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் கோஷ்டி பூசல் உச்சகட்டம்..
ராமநாதபுரத்தில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட தலைவராக மலர்விழி ஜெயபாலா உள்ளார். தமிழக வெற்றிக் கழக நிறுவனர் விஜய் உத்தரவு படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் கழக நிர்வாகிகள் கழக வளர்ச்சிக்காக பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு கோஷ்டியினர் கடந்த சில நாட்களாக மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் டிச.16 ல் தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளர் ராஜா, ஆலோசகர் […]
திமோர் நாட்டிற்கு தமிழக மாணவ மாணவியர் கல்விப்பயணம்..
திமோர் நாட்டில் மருத்துவம் படிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கல்விப் பயணம் மேற்கொண்டனர். அப்போது சிறப்பாக மருத்துவ கல்வி பயின்று முழுமையான மருத்துவராக தாயகம் திரும்பி மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வேண்டுமென பீஸ் மருத்துவப் பல்கலைக்கழக இயக்குனர் ஐசக் பாஸ்கர், சமூக நல ஆர்வலர் திருமாறன், தினமலர் தினேஷ் ஆகியோர் மாணவ மாணவியரிடம் அறிவுறுத்தினர். நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் உருவாகும் உன்னத நோக்கத்துடன் தமிழக மாணவ […]
90 ஆடுகள் உயிரிழந்த பெரும் சோகம்; நிவாரணம் வழங்க வலியுறுத்தல்..
தென்காசி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக ஆட்டுப் பண்ணைக்குள் தண்ணீர் புகுந்து 90 ஆடுகள் உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. ஆடுகளை இழந்துள்ளவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பேரூராட்சி கம்பிளி கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவரின் தோப்பில், கம்பிளி பகுதியை சேர்ந்த மாரியப்பன், சாம்பவர் வடகரையை சேர்ந்த குத்தால ராமன் ஆகிய இருவரும் ஆட்டு பண்ணைகள் அமைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் இரண்டு […]
ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது; கனிமொழி எம்.பி பேட்டி..
ஒன்றிய அரசால் மக்களவையில் கொண்டு வரப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா அரசியலமைப்பு சாசனத்திற்கும், மக்களுக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா டிசம்பர் 17ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து திமுக […]
You must be logged in to post a comment.