திருச்சி DJ ஆட்டோமொபைல் ஷோரூமில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிய தியாகி. திருச்சியில் ஒத்த கடை அருகே அமைந்துள்ள பிரபலமான DJ ஆட்டோமொபைல் ஷோரூமில் 76வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஷோரூம் முன்பு தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்விற்கு D J ஆட்டோமொபைல் ஷோரூமின் உரிமையாளரும் சமூக ஆர்வலருமான DJ வெங்கடேஷ் துரை தலைமை வகித்தார். DJ ஷோரூமின் HR மேலாளர் விஜய் முன்னிலையில் தேசிய கொடியை சுதந்திர போராட்ட தியாகியும் DJ […]
Category: மாவட்ட செய்திகள்
திருப்பரங்குன்றம் ஊராட்சி மற்றும் திருப்புவனம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் .!
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சாமநத்தம் ஊராட்சிகள், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கொந்தகை காஞ்சிரங்குளம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கிரமசபை கூட்டங்களில் வரவு செலவு தணிக்கை அறிக்கை ஜல்ஜீவன் திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம், திருப்புவனம் வட்டார […]
தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில்கொடியேற்றிய அமைச்சர்.!
தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் குடியரசு தின கொண்டாட்டம் கொடியேற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ். 76வது குடியரசுத் தின விழா இன்றைய தினம் சென்னையில் திருவல்லிக்கேணி அருகே காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, […]
திருச்சி புங்கனூரில் கிராம சபை கூட்டத்தில் தங்கள் பகுதியை மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது என்று பொதுமக்கள் போராட்டம்.!
திருச்சியை அடுத்த புங்கனூரில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தாங்கள் வசிக்கும் புங்கனூர் கிராமத்தை மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் சொல்லிய போது அதை நிறைவேற்ற முடியாது என்று சொன்ன காரணத்தால் ஊர் பொதுமக்கள் அனைவரும் சாலை மறியல் செய்தார்கள் திருச்சி செய்தியாளர் H.பஷீர்
மதுரை மகாத்மா குளோபல் பள்ளியில் தமிழ்நாட்டின் சிறப்பு அம்சங்கள் .!
*மதுரை மகாத்மா குளோபல் பள்ளியில் தமிழ்நாட்டின் சிறப்பம்சங்களை கொண்டாடும் பெஸ்ட் ஆப் தமிழ்நாடு(BOT) அறிமுகம்* நாட்டின் பண்பாடு கலாச்சாரம் தொன்மையான வரலாற்று நினைவு சின்னங்கள் பராம்பரியங்களை போற்றும் வகையிலும் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தமிழ்நாட்டின் சிறப்பு அம்சங்களை கொண்டாடும் பெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு இருந்து வருகிறது. மேலும் இன்றைய பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியத்தை நினைவு படுத்தும் விதமாக மதுரை கருப்பாயூரணி அருகே மகாத்மா […]
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!
மதுரை பசுமலை மேல் நிலைப்பள்ளியில் தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா அறிவுரையின்படி, பள்ளி தலைமையாசிரியை மேரி தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகள் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பள்ளி உதவி தலைமையாசிரியர் ரிச்சர்ட் பி ராஜன் வரவேற்புரை வழங்கினார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் உதவி ஆய்வாளர் செல்வகுமார் அறிவுரை வழங்கினார்.சாலை பாதுகாப்பு மன்றச் செயலாளர் தி.மோசஸ்ராஜன்.நன்றியுரை கூறினார்.நுகர்வோர் மன்றச் செயலாளர் பிரகாஷ், மற்றும் […]
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 153 மாணவர்கள் தேர்வு.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒசுரில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனமான அசோக் லேலாண்ட் லிமிடெட் மற்றும் கல்லுாரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் இயந்திரவில் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அ.சேக்தாவுது தலைமையுரையாற்றி பேசுகையில் கடந்த 10 வருடமாக 100%வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும் […]
கீழ மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை
மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கீழமாத்தூர் ஊராட்சி செயலாளருக்கு பதிலாக அவரது மனைவியை கொண்டு ஊராட்சி நிர்வாகத்தை நடத்துவதாகவும் கிராமசபை கூட்டத்தை ஊராட்சி செயலாளரின் மனைவி அறிக்கை வாசிப்பதாகவும் கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராத நிலையில் இது குறித்து கேள்வி கேட்டால் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும் […]
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 4 மாதமாக 100 நாள் வேலைக்கு சம்பளம்வராததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து நிறுத்தம் அருகில் கூடியதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சியில் பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் 100 நாள் வேலை பணிக்காக கருப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் கூடியிருந்தனர் அப்போது காலை ஒன்பது முப்பது மணி அளவில் 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்கள் தங்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்றும் ஆகையால் உடனடியாக மத்திய அரசு 100 நாள் வேலை பணியாளர்களுக்கு சம்பளம் […]
ராமநாதபுர மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.!
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றினார்.! இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 96 பயனாளிகளுக்கு ரூ.55.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 76-வது குடியரசு […]
ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு: குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புனித தளமாக அறியப்படும் ஏர்வாடி தர்கா அமைந்துள்ள ஏர்வாடி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அதைத் தொடர்ந்து பொங்கலுக்கு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் எதுவும் முழுமையாக கிராமங்களுக்கு வரவில்லை எனவும் கிராம சபை கூட்டத்தில் கண்டம் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது ஊராட்சி அந்தஸ்து உள்ள […]
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் குடியரசு தின விழா.!
இராமநாதபுரம் சின்ன கடை தெருவில் அமைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட தலைவர் ஏ வருசை முஹம்மது தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டத் துணைத் தலைவர் சாதுல்லாஹ் கான், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது யாக்கூப், ஆசிக் உசேன், இராமநாதபுரம் நகரத் தலைவர் முகம்மது காசிம், நகர செயலாளர் சிராஜுதீன், மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சாபிர்கான், மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பாளர் யாஸீன் […]
கீழக்கரையில் ரத்த தான முகாம் .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்கம் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர். ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்க தலைவர் முகமது நசுருதீன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் காளீஸ்வரன் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி , மருத்துவர் அனீஸ் பாத்திமா, அஹமது பசீர்தீன் , கஃபார்கான் ஆகியோர் […]
ராமநாதபுரத்தில் சிறப்பாக பணியாற்றிய சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுச் சான்றிதழ்.!
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்திவேல், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ், ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பட்டு ராஜா, அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், தொண்டி காவல் நிலைய […]
உசிலம்பட்டி தனியார் பள்ளியில் குடியரசு தின விழா
உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று இந்தியாவின் 76- ஆவது குடியரசு தின விழா பள்ளி தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர். லயன் .அமுத பிரியா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக இந்தியாவின் பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர் வருண் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள் அவ்வீரர் மாணவர்களின் முன்பு தான் கடந்து வந்த […]
மேலூர் வந்த தமிழக முதல்வருக்கு வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் சோழவந்தான் பேரூர் நிர்வாகிகள் வரவேற்பு
மதுரை மேலூர் பகுதியில் அமைய இருந்த டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றி முழு வெற்றியடைய நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு மேலூர் உள்ளிட்ட 48 கிராம மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்தினர் இந்த நிகழ்ச்சிக்காக மதுரை விமான நிலையத்திலிருந்து மேலூர் பகுதிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு சோழவந்தான் தொகுதி சார்பாக வெங்கடேசன் எம் எல் ஏ தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் […]
தென்காசியில் இந்தியாவின் 76வது குடியரசு தினவிழா..
தென்காசி தலைமை மருத்துவ மனையில் இந்திய தேசத்தின் 76-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். அவர் பேசும் போது, தென்காசி மருத்துவ மனை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக குடியரசு […]
மதுரை எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியரசு தின விழா
மதுரை sdpî தெற்கு மாவட்ட சார்பாக நமது இந்திய தேசத்தின் 76 வது குடியரசு தின திருவிழா கட்சியின் பொதுச் செயலாளர் சாகுல்ஹமீது தலைமையில் மாவட்ட அலுவலகம் அருகே நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வரவேற்புரை மாவட்ட துணை தலைவர் அபு தாஹிர் , நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் ஆசாத் வழங்கினார்கள்.மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தேசிய கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.நிறைவாக தெற்கு தொகுதி தலைவர் M.P.பாட்ஷா நன்றியுரையாற்றினார்.மேலும் விம் மகளிரணி விம் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஓபுளாபடித்துறை அருகே மாவட்ட தலைவர் […]
கீழக்கரை பள்ளியில் குடியரசு தின விழா
இன்று(26/01/2025) பள்ளியில் 76 வது குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பொது மேலாளர் DR.ஜனாப். M. முஹைதீன் சலாவுதீன் கலந்துக்கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் . கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடமும் மாநில அளவில் இரண்டாம் இடமும் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்த இரண்டாம் வகுப்பு மாணவி S.ஜெய்னப் மஸ்கூராவுக்குபரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக மாறு வேடப் […]
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர்.
திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பின்னர் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய 418 அரசு அலுவலர்கள், மற்றும் 8 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என மொத்தம் 426 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும்,முதலமைச்சரின் காவல் பதக்கம் 90 காவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். திருச்சி செய்தியாளர் […]
You must be logged in to post a comment.