ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர் .நல்லகண்ணு நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வாசு. இளையராஜா தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் கோசிமின் வரவேற்பு உரை ஆற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி தொடக்க உரையாற்றினார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் […]

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம் ஆண்டு குருபூஜை: திருவண்ணாமலை மாவட்ட தேமுதிக கட்சியினர் அனுசரிப்பு..

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர். அதன்படி தேமுதிகவினர் முதலாம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தேமுதிக கட்சியினர் தொண்டர்கள் மொட்டை அடித்து துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் திருவண்ணாமலை மாவட்டக் கழக செயலாளர் வி.எம்.நேரு தலைமையில் முதலாம் ஆண்டு குருபூஜை நடைபெற்று வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் புதுப்பாளையம் மேற்கு ஒன்றியம் […]

பெண்களின் பாதுகாப்பு திராவிட மாடல் அரசுக்கு மிக முக்கியமானது; அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி..

பெண்களின் பாதுகாப்பும் முன்னேற்றமும் திராவிட மாடல் அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தனக்கு நடந்த வன்கொடுமை தொடர்பாக தைரியமாக புகார் கூறிய மாணவிக்கு நன்றிகள், பாராட்டுகள். ஏனென்றால், நேர்ந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது என அவர் தைரியமாக புகார் அளித்ததற்கு பாராட்டுகள். இவ்வாறு பெண்கள் தைரியமாக புகாரளிக்க முன்வர வேண்டும். அப்படி வந்தால் தான் குற்றச் செயல்கள் […]

தொடர் கன மழையால் நெற்பயிர்கள் சேதம்; இழப்பீடு வழங்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை..

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா பகுதியில் தொடர் கனமழையால் நெற்கதிர்கள், நெல் பயிர்கள், கடலை பயிர்கள் என பல ஏக்கர் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக 27.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இடைப்பழம் நோய் தாக்கப்பட்ட நெல் கதிர்கள் மற்றும் பயிர்களுடன் சென்று ஆட்சியரிடம் பயிர்களை காண்பித்து உரிய அரசு நிவாரணமும், காப்பீடு செலுத்தப்பட்ட விவசாயிகளுக்கு […]

நேதாஜி, முத்துராமலிங்க தேவரை அவதூறு பேசியோரை கண்டித்து முதுகுளத்தூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் : 200 பேர் கைது..

இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை டிச.1ல் திருநெல்வேலியில் அவதூறாக பேசியோரை கண்டித்து, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஆப்பநாடு மறவர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆப்பநாடு மறவர் சங்கத்தலைவர் டாக்டர் ராம்குமார் தலைமை வகித்தார். இதில் 3000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அப்பகுதி மக்கள் போலீசாரின் தடுப்பை மீறி முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து எஸ்பி., சத்தீஷ் அங்கு விரைந்தார். […]

தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்த தூய்மைப் பணியாளர்கள்..

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 06.12.2024 அன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் உன்னத திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிய விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு தேவையான நலத் […]

மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்தம் அளித்த ஒப்பந்ததாரர் முறையாக சம்பளம் வழங்காமலும் அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ இ பி எப் போன்ற தொகைகளை முறையாக செலுத்தாததாலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடந்த 18ஆம் தேதி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் தலைமையில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் காவல்துறையினர் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அழைத்து அமைதி மற்றும் சமூக பேச்சுவார்த்தைக்கு […]

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைவு .!திருவண்ணாமலை காங்கிரஸ் சார்பாக அஞ்சலி.!!

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் இந்திய பாரத பிரதமர் பொருளாதார மேதை .டாக்டர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவர்கள் திருஉருவ படத்துக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் செங்கம் ஜி குமார் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நகரத் தலைவர் காந்தி, ராஜி, மாரி, சுப்பிரமணி, காமராஜ் நேரு அண்ணாமலை ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள் இதைத்தொடர்ந்து  திருவண்ணாமலை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் […]

போளூர் திமுக கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்..

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் திமுக கட்சி அலுவலகத்தில் போளூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் டாக்டர்.எ.வ.வே.கம்பன் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். ஆலோசனை கூட்டத்தில் போளூர் தொகுதியைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய கிளைக் கழக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

கோமுகி அணை 46 அடி ஆழம் இருந்தும் 28 அடி நீரே சேமிக்க முடிகிறது நீர்பிடிப்பு முழுவதும் மண் மேடாக மாறிய கோமுகி அணை, தூர்வாரி ஆழப்படுத்த கோரிக்கை

கோமுகி அணை கடந்த 1967ம் ஆண்டு சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், முதன்மை கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. அதாவது முதன்மை பாசன கால்வாய் மூலம் வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை, மாதவச்சேரி, பால்ராம்பட்டு, செல்லம்பட்டு, கரடிசித்தூர் ஆகிய 7 கிராமங்களை சேர்ந்த […]

கரியாலூர் காவல் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு !

*கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி திடீர் ஆய்வு கொண்டார்.* *இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ஏழுமலை ஆகியோர் இருந்தனர்.*

இராமநாதபுரம் – கீழக்கரை வரை சேதமான சாலையை செப்பனிட தவ்ஹீத் ஜமாத் புகார் மனு..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (தெற்கு) இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் இப்ராஹிம் சாபிர் தலைமையில், மாவட்டச்செயலாளர் தினாஜ்கான், மாவட்ட பொருளாளர் கரீம் ஹக் சாஹிப், மாவட்ட துணைச்செயலாளர் உஸ்மான் மற்றும் ஃபாரூக் ஆகியோர் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய இராமநாதபுரம் அலுவலக தலைமை அதிகாரி தினேஷிடம் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இராமநாதபுரம் முதல் கீழக்கரை வரை மிகவும் சேதமடைந்த சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தியும் புகார் கடிதம் வழங்கினர். இச்சாலை தற்போது பெரும் பள்ளம், உடைப்பு […]

தென்காசி நகர முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு..

தென்காசியில் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க விழா நடந்தது. முஸ்லிம் லீக் நகர தலைவர் அபுபக்கர் தலைமை வகித்தார். மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சம்சுதீன் கிராத் ஓதினார். மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி வரவேற்றார். மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ், மாவட்ட பொருளாளர் செய்யது மசூது, மாநில துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில், நகர பொருளாளர் முகம்மது யூசுப், மாநில வர்த்தக அணி தலைவர் […]

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முப்பெரும் விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 100 வது ஆண்டையும், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் நல்லகண்ணு அவர்களின் 100வது பிறந்தநாள் விழாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுப்பெரும் தலைவர் கே, டி. கே, தங்கமணி நினைவு நாளையொட்டியும் முப்பெரும் விழாவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாநகர குழு சார்பில் தஞ்சை பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை வகித்தார். […]

உசிலம்பட்டி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு 2 மாததிற்கான உணவுக்கான பொருட்களை வழங்கி திமுவினர் அறுசுவை விருந்து அளித்தனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் இயங்கி வரும் தனியார் ஆதரவற்றோர் இல்லத்திற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் தங்கப்பாண்டி தலைமையிலான திமுக நிர்வாகிகள் 2 மாததிற்கு தேவையான உணவிற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை […]

கீழக்கரையில் தொடரும் மின்வெட்டு: மின்வாரியத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி முன்பாக கீழக்கரையில் முன்னறிவிப்பின்றி தொடர்ச்சியாக மின்தடை செய்வதை கண்டித்தும், மின்கணக்கு எடுக்கக்கூடிய கணக்காளர்கள் கால தாமதமாக கணக்கெடுப்பதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழக்கரை துணை மின்நிலையத்திற்கு கீழ் மொத்தம் 17 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், மின் இணைப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப மின் ஊழியர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ளது. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக மின் கம்பியாளர், ஊழியர்கள் பற்றாக்குறை […]

புளியரை சோதனை சாவடியில் மாவட்ட எஸ்.பி திடீர் ஆய்வு..

புளியரை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் தடை செய்யப்பட்ட பொருட்கள், கழிவு பொருட்கள் போன்றவை தென்காசி மாவட்டத்திற்குள் நுழைவதை தடுக்கும் விதமாக ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில், இரண்டு சார்பு ஆய்வாளர்கள், நான்கு காவல் ஆளினர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

ரேசன் கடை கேட்டு பொதுமக்களுடன் சேர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மணல் பட்டி கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு அருகில் உள்ள மேல பெருமாள் பட்டி கிராமத்திற்கு சுமார் மூன்று கிலோ மீட்டர் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதாகவும் அதுவும் மாதத்தில் ஒரு நாள் மட்டும் ரேஷன் பொருட்கள் இந்த இரு கிராமத்திற்கும் வழங்குவதாகவும் இவ்வாறு வழங்குவதும் முன்னறிவிப்பின்றி திடீரென வழங்குவதால் வேலைக்கு […]

உசிலம்பட்டியில் நட்டாத்தி நாடார் பள்ளி பரிபாலன சபை சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.

உசிலம்பட்டி நட்டாத்தி நாடார் உறவின் முறைக்கு பாத்தியமான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளி பரிபாலன சபை சங்கப் பதிவு எண். 35 /1961 மதுரை மாவட்டம் புதிய நிர்வாக குழு தேர்வாகி பதவி ஏற்றனர்.உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளி பரிபாலன சபை தலைவர்  வி.பிரசாத் கண்ணன் செயலாளர் எஸ் எம் எஸ் ஆர் நடராஜன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பி சி ஆர் நடராஜன் ஏ எஸ் கே எஸ் […]

தென்காசி நகராட்சியில் தூய்மை காவலர்களுக்கு சமபந்தி விருந்து..

தென்காசி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் நடைபெற்றது. சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமபந்தி விருந்தினை நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலர் ராபின், நடிகர் (திருப்பாச்சி) பெஞ்சமின், சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், நகர்மன்ற உறுப்பினர்கள் ராம கிருஷ்ணன், […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!