இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று துவக்கி வைத்து 1,725 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டம் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் விரிவாக்கத்திட்டத்தை தூத்துக்குடியில் இன்று (30/12/2024) துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக […]
Category: மாவட்ட செய்திகள்
புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றினார். இத்திட்டத்தின் படி அரசு உதவி பெரும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மீலாது நபி விழா மற்றும் சமய நல்லிணக்க மாநாடு.!
ராமநாதபுரம் மாவட்டம் சந்தை திடலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் மீலாது நபி விழா சமய நல்லிணக்க மாநாடு அகமது இப்ராஹிம் மிஸ்பாஹி மற்றும் முகமது ஜலாலுதீன் அன்வாரி தலைமையில் வட்டார ஜமாஅத் உலமா சபைகள் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இஸ்லாம் சமுதாயம் மத நல்லிணக்கத்தையும் சமூக நல்லினத்தையும் ஒற்றுமையும் பேணி பாதுகாக்கும் மார்க்கம் என்று விளக்க உரை வழங்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை காஜி சலாவுதீன் ஜமாலி பாஜில் உமரி இந்திய யூனியன் […]
இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவருக்கு எதிராக போர்க்கொடி : திடீர் ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் அவரது தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் அரண்மனை திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்ம கார்த்தி, மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, மாநில மீனவரணி செயலாளர் நம்புராஜன், வழக்கறிஞர் சண்முகநாதன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மாநில தலைமை ஒருங்கிணைப்பு குழு முடிவிற்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் […]
பதவி உயர்வில் இடஒதுக்கீடு : மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு..
இராமநாதபுரம் : மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்டத்தலைவர் எஸ். கர்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெ.கா.சேக்கிழார் தொடக்க உரை ஆற்றினார். அமைப்பாளர் எம்.சோமசுந்தரம், பொருளாளர் கே.பாபு, செய்தி தொடர்பாளர் சி.தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் வகுப்பினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம், பதவி உயர்வில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவனத்தலைவர் ச.கருப்பையா, மாநில துணைத் தலைவர்வி.பாலச்சந்திரன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெ.மரியம் ஜேம்ஸ், சங்க […]
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கோரி ராமநாதபுரம் நகரில் அதிமுக துண்டு பிரசுரம்..
இராமநாதபுரம் :அண்ணா பல்கலை மாணவிக்கு இழைத்த அநீதியை கண்டித்து அதிமுக சார்பில் ராமநாதபுரத்தில் நாளை (டிச.30) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் ராமநாதபுரம் மக்கள் பங்கேற்க கோரி அதிமுக மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்து அழைப்பு விடுத்தார். துணைச் செயலாளர்கள் ரத்தினம் (எம்ஜிஆர் மன்றம்), செந்தில் குமார் (மாணவரணி) விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், துணைச் செயலாளர் அரவிந்த், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், […]
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை இலக்கை தமிழகம் கடந்து பல ஆண்டுகளாகி விட்டது : கனிமொழி கருணாநிதி எம்பி பெருமிதம்..
இராமநாதபுரம் : முகவை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆய்வுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. திமுக துணை பொதுச்செயலர் கனிமொழி கருணாநிதி எம்பி , பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், தொழில் துறை அமைச்சர் ராஜா, காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ, மார்க்கண்டேயன் எம்எல்ஏ ((விளாத்திகுளம்), தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), மேயர்கள் சங்கீதா இன்பம் (சிவகாசி), ஜெகன் பெரியசாமி (தூத்துக்குடி), தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர், […]
தென்காசி மாவட்ட காவல் துறை சார்பில் மறுப்பு செய்தி..
தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் மறுப்பு செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் பணிபுரியும், முதல் நிலை காவலர் பிரபாகரன் என்பவர் பெயரில், கையொப்பமிடாத பணியிலிருந்து விடுவிக்க கோரும் மனுவும், தொலைக் காட்சிக்கு காணொளி வாயிலாக பேட்டி கொடுத்த வீடியோவும் சமூக வலை தளங்களில் பரவி வந்தது. மேற்படி சம்பவம் தொடர்பாக M.ரமேஷ், தென்காசி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு மூலம் விசாரணை மேற்கொண்டதில், […]
திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும்; கனிமொழி எம்.பி பேச்சு..
திமுக அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு என்றைக்கும் உறுதுணையாக நிற்கும் என கனிமொழி எம்.பி உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவின் போது தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அமர் சேவா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்ட விழா, கோவில்பட்டி ஆர்த்தி மஹாலில் இன்று (28/12/2024) நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். […]
தஞ்சையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கண்டனம்.!
ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் குழிதோண்டி புதைக்கும் திட்டம் ஒரே நாடு ஒரே தேர்தல்! தஞ்சையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கண்டனம் நடைபெற்று முடித்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகளின் பல்வேறு கண்டனங்களை ஒன்றிய பாஜக அரசு சந்தித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி,ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் இன்று […]
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் சுதாகர் திடீர் ஆய்வு..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு சம்பந்தப்பட்ட பதிவேடுகளை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் சுதாகர் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசின் சார்பில் சிங்கப்பூர் சுற்றுலா: சடையனோடை அரசு பள்ளி மாணவி பவித்ரா சிறப்பு பேட்டி..
திருவண்ணாமலை மாவட்டம் சடையனோடை அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவி பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்ற போட்டியில் கலந்து கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலிடத்தில் , சென்னையில் மாநில அளவிலான இலக்கிய மன்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.கவிதா மாணவியின் பெற்றோர் ரமேஷ் […]
மாவூர் பால் உற்பத்தியாளர்கள்
கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் மானியத்திட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் மாவூர் பால் உற்பத்தியாளர்கள்கூட்டுறவு சங்கத்தின் மூலம் மகளிர் குழு உறுப்பினர்கள் மானியத்திட்டத்தின் மூலம் கறவைமாடுகள் வளர்க்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு பயனாளிகளிடம் பயன்கள் குறித்து கேட்டறிந்ததுடன் சிறப்பாக கறவை மாடுகள் பராமரித்து வரும் மகளிர்களுக்கு ரூ 3000/ – ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார் மாவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயன்பெற்று வரும் பயனாளி வசந்தா முருகேசன் தெரிவிக்கையில்,எங்கள் குடும்பத்தில் பல ஆண்டுகளாக […]
உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தனது சொந்த செலவில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட திமுக செயற்குழு உறுப்பினர் இளமகிழன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம்.இந்த அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தினந்தோறும் காலையில் பெண்கள் ஆண்கள் நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.மேலும் இளைஞர்கள் சிறுவர்கள் பல்வேறு விளையாட்டுப்பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செடி கொடிகள் மற்றும் பாதைகளில் மழைநீர் தேங்கியும் உடற்பயிற்சி செய்ய வரும் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. அதிகாலையில்; உடற்பயிற்சி செய்ய வரும் பொது மக்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக […]
திமுக இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதளப் பயிற்சி..
இராமநாதபுரம் : திமுக இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைத்தளப் பயிற்சி நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்து துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் சம்பத்ராஜா வரவேற்றார். சமூக செயற்பாட்டாளர் சூர்யா கிருஷ்ணா மூர்த்தி, சமூக தளத்தில் பணியாற்றுவது குறித்து அன்பகம் விக்னேஷ் ஆனந்த் பயிற்சி அளித்தனர். திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் இன்பா ரகு, ஜி.பி. ராஜா பேசினர். மாவட்ட இளைஞரணி […]
கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சையது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி காலங்களில் வேலைவாய்ப்பை அடைதல் என்ற தலைப்பில் இன்போசிஸ் மற்றும் ஐசிடி அகாடமி இணைந்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஐசிடி அகடமின் மேலாளர் பூர்ண பிரகாஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பற்றி சிறப்புரையாற்றினார் முஹம்மது சதக் அறக்கட்டளையின் இயக்குனர் ஹபிப் முகமது சதக்கத்துல்லா அவர்கள் முன்னிலை வகித்தார் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமை […]
உசிலம்பட்டி அருகே வகுரணி கண்மாய்க்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இதன் அருகில் உள்ள நல்லுத்தேவன்பட்டி கண்மாய் நிரம்பி, குருவிளாம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டு, அதற்கு பிறகு வகுரணி கண்மாயக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறந்து விட்டனர்.. ஆனால் திறந்த மறுநாளே தண்ணீரை நிறுத்திவிட்டு அசுவமாநிதி ஓடை வழியாக வடுகபட்டி கண்மாய்க்கு தண்ணீரை திறந்து விடப்பட்டதால் பொதுமக்கள், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள் முறையிட்டும் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வகுரணி […]
ஒற்றை பெற்றோரின் குழந்தைகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் விழிப்புணர்வு முகாம்..
இராமநாதபுரம் : குழந்தை உரிமைகளும் நீங்களும் வழிகாட்டல் படி, ராமநாதபுரம், சாயல்குடி பகுதிகளில் ஒற்றை பெற்றோரின் குழந்தைகள் உயர் கல்வி உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கூட்டம் ரூரல் வொர்க்கஸ் டெவலப்மென்ட் சொசைட்டி சார்பில் 1 வாரம் நடந்தது. ரூரல் வொர்க்கஸ் டெவலப்மென்ட் சொசைட்டி இயக்குனர் சத்தையா தலைமை வகித்தார். மரியஸ்டெல்லா வரவேற்றார். குந்தைகளுக்கு முழு பாதுகாப்பு, தன்னம்பிக்கை ஏற்பட குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்ற அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என சாயல்குடி காவல் சார்பு ஆய்வாளர் கார்த்திக் பேசினார். […]
குரான் ஒப்புவித்தல் போட்டி : மதரஸா மாணவ, மாணவிகளுக்கு பரிசு..
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி மன்பவுல் ஹைராத் மதரஸா மாணவ மாணவிகளுக்கு குரான் ஒப்புவித்தல் 2 ஆம் ஆண்டு போட்டி பரிசளிப்பு விழா நேற்றிரவு (27.12.2024) நடந்தது. தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் சலீமுல்லா கான் பரிசு வழங்கினார். தமுமுக மாவட்ட தலைவர் இப்ராஹீம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், முன்னாள் மாவட்ட பொருளாளர் பரக்கத்துல்லா, மருத்துவ அணி மண்டல செயலாளர் சுலைமான், மஸ்ஜித் தக்வா இமாம் அய்யூப் புகாரி, திருப்புல்லாணி ஒன்றிய மனிதநேய மக்கள் […]
ஒரத்தநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழாவையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழா மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர், கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர் .நல்லகண்ணு நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வாசு. இளையராஜா தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் கோசிமின் வரவேற்பு உரை ஆற்றினார். தஞ்சை மாவட்ட செயலாளர் முத்து. உத்திராபதி தொடக்க உரையாற்றினார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் […]