உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் கட்ட பூமி பூஜை நடைபெற்று.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் கட்ட பூமி பூஜையில்  உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் கலந்து கொண்டார்.உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் எம் எல் ஏ  தொகுதி நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து  அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு செய்ய விளையாட்டு மைதானத்தில் சுற்றி சுவர் கட்ட பூமி பூஜையில் பி அய்யப்பன் எம் எல் ஏ தலைமையில் பள்ளி […]

கீழக்கரையில் புகாரி ஷரிப் 10 ம் ஆண்டு நிறைவு விழா.! உலக நன்மைக்காக இறைவனிடம் கண்ணீர் மல்க கூட்டுப் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள் ..!!

  இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குஃத்பா பள்ளிவாசலில் புகாரி ஷாரிப் பத்தாம் ஆண்டு நிறைவு விழா பழைய குஃத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் , செயலாளர் சப்ராஸ் நவாஸ் , பொருளாளர் சுல்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.   கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகமது சதக்கத்துல்லா ஆலின் கிராத் ஓதி துவங்கி வைத்தார் . கீழக்கரை புகாரி ஷெரிஃப் டிரஸ்ட் அல்ஹாஜ் பி எஸ் எம் ஹபிபுல்லா கான் […]

தஞ்சையில் சத்யா நடைபயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம்.

தஞ்சாவூர் சத்யா நடை பயிற்சி சங்கத்தின் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.,இதில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.சங்கத்தின் நோக்கம் சங்க உறுப்பினர்கள் தினம் தோறும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி தொடர்ந்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.சத்யா நடை பயிற்சி சங்கத்தின் செயலாளர் ஜெயக்குமார் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

கருப்பாநதி அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி..

கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் ஆணையின் படி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் கருப்பாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து பசலி பிசான பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் 31.12.2024 அன்று தண்ணீர் திறந்து வைத்தார். கருப்பாநதி பாசன திட்டத்தின் கீழுள்ள பெருங்கால், பாப்பான்கால், சீவலன் கால், இடைகால், கிளாங்காடு, ஊர்மேல் அழகியான் ஆகிய கால்வாய்களின் கீழ் […]

கீழக்கரை-இராமநாதபுரம் நெடுஞ்சாலையின் அவலத்தை தீர்க்க 11/01/2025 அன்று ஜனநாயக வழி நடைபயணம்..

கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலை கடற்கரையோர முக்கிய ஊர்களை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இச்சாலையில் தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் நூற்றுகணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.  ஆனால் சரியான பராமரிப்பு இல்லாமை மற்றும் சமீபத்தில் பெய்த கடும் மழையாலும் நெடுஞ்சாலை குண்டும், குளியுமாக மாறி பல விபத்துக்களுக்கு காரணமாகி வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கீழக்கரையில் உள்ள பல்வேறு அமைப்புகள் புகார் அளித்தும் எந்த வகையான தீர்வும் கிடைக்கவில்லை. சமீபத்தில் கீழக்கரையில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அமைச்சர்கள் […]

பரமக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழா.!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் இணைந்து இன்றைய தினம் காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை தாங்கி நடத்தினார்.  குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார்  வரவேற்று பேசினார்கள். நிகழ்ச்சியில் பரமகுடி நுகர்வோர் சங்கத்தின் தலைவர் கே.ஜே மாதவன் செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை […]

இராமநாதபுரத்தில் அய்யன் திருவள்ளுவர் மாதிரி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை..

கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவரின் 133 அடி உயர உருவச்சிலை நிறுவியதன் வெள்ளி விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து 133 அடி உயர மாதிரி அய்யன் திருவள்ளுவரின் சிலை அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் மாதிரி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாலை அணிவித்து […]

இராமநாதபுரத்தில் தடையை மீறி அதிமுக ஆர்ப்பாட்டம் : 15 பெண்கள் உள்பட 240 பேர் மீது வழக்கு..

அண்ணா பல்கலை மாணவி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ராமநாதபுரத்தில் தடையை மீறி அதிமுக சார்பில் நேற்று (டிச.30) காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமை வகித்தார். அதிமுக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் நிறைகுலத்தான்,  முன்னாள் மாவட்ட செயலாளர்கள் […]

பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டு நீட்டிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சித் தலைவர்கள் மனு..

இராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, போகலூர், ஆர் எஸ் மங்கலம், திருவாடானை என 11 ஊராட்சி ஒன்றியங்கள், 429 ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வென்று ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் கடந்த 5 ஆண்டு கால பதவிக்காலம் ஜன.5 ல் நிறைவடைகிறது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பு […]

விக்கிரமங்கலம்அருகே மழையால் நெற்பயிர்கள் சேதம்

விக்கிரமங்கலம் அருகே புயல் மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்கதிர்கள் சேதம்ம.மதுரை விக்கிரமங்கலம் அடுத்துள்ள அய்யனார்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏ ஆண்டிபட்டி கிராமத்தில் திருமங்கலம் பாசன கால்வாய் 98-வது மடையில் சுமார் 250 ஏக்கர் நெல் விவசாயம் செய்து உள்ளனர் இதில்150 ஏக்கருக்கு மேல் நெல்விளைச்சல் ஆகும் முன்பு தற்போது வீசிய புயல் சூறாவளி காற்று மழையால் நெற்கதிர் பால் பிடிக்காமல் வயலில் சாய்ந்து விட்டது இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது,இப்பகுதி விவசாயிகள் கூறும் […]

தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை -பாரதி உலா 2024..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த செ.நாச்சி பட்டு கிராமத்தில் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் உரத்த சிந்தனை 10ம் ஆண்டு பாரதி உலா 2024 நிகழ்வு கல்லூரி தாளாளர் அக்ரி. எஸ் .வெங்கடசலபதி தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ரேகா ரெட்டி, உரத்த சிந்தனை பொது செயலாளர் உதயம் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பேச்சரங்கம் […]

விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மணல்பட்டியில் நகரும் நியாய விலை கடை அமைக்க அதிகாரிகள் முடிவு

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மணல்பட்டியில் நியாய விலை கடை அமைத்து தர கோரி மணல்பட்டி மற்றும் கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் சக்கரப்ப நாயக்கனூர்ஊராட்சி மன்ற தலைவர் ஜென்ஸி சுப்பிரமணி தலைமையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் செய்தனர் அப்போது அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் விரைவில் நியாய விலை கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது இதனை அடுத்து நேற்று உசிலம்பட்டியில் […]

நேர்மைமிக்க காவல் துறை டி.எஸ்.பிக்கு பதவி உயர்வு..

நேர்மை மிக்க காவல் துறை டி.எஸ்.பி குப்புசாமி ஏ.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இன்ஸ்பெக்டர், உளவுப் பிரிவு டி.எஸ்.பி, மின்வாரிய குற்றங்கள் தடுப்பு, என பல்வேறு பதவிகள் மற்றும் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர் குப்புசாமி. மதுரை டி.எஸ்.பியாக உள்ள குப்புசாமிக்கு தீவிரவாத தடுப்பு ஏ.எஸ்.பி பதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. கன்னியாகுமரி முதல் திண்டுக்கல் வரை உள்ள அனைத்து மாவட்டங்கள், நகரங்கள், முக்கிய பகுதிகள் அனைத்தும் இவரது நேரடி கண்காணிப்பில் வரும். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், […]

மேட்டுப்பாளையத்தில் குட்டியுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை பத்திரமாக வனப்பகுதிக்கு அனுப்பி வைப்பு.. வீடியோ..

மேட்டுப்பாளையத்தில் குட்டியுடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை பத்திரமாக வனத்துறையினர் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் 30.12.2024 இன்று காலை 8.30 மணியளவில் குட்டியுடன் ஒரு பெண் யானை மங்கலக்கரைபுதூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக வனத்துறை அதிகாரிகள் வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து விரைந்து சென்று யானையையும் குட்டியும் பார்ப்பதற்கு அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியதை அடுத்து பொதுமக்களை பாதுகாப்பு கருதி வனத்துறையினர் காரமடை காவல்துறை உதவியுடன் பொதுமக்களை அங்கிருந்து […]

செங்கத்தில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..

செங்கத்தில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து  அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்  என்று கட்சி பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து நடைபெற்று வரும் நிலையில். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து 200போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்த […]

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதுமைப்பெண் திட்டத்தினை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று துவக்கி வைத்து 1,725 மாணவிகளுக்கு பற்று அட்டை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்க திட்டம் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் விரிவாக்கத்திட்டத்தை தூத்துக்குடியில் இன்று (30/12/2024) துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக […]

புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடியில் தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றினார். இத்திட்டத்தின் படி அரசு உதவி பெரும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மீலாது நபி விழா மற்றும் சமய நல்லிணக்க மாநாடு.!

ராமநாதபுரம் மாவட்டம் சந்தை திடலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் மீலாது நபி விழா சமய நல்லிணக்க மாநாடு அகமது இப்ராஹிம் மிஸ்பாஹி மற்றும் முகமது ஜலாலுதீன் அன்வாரி தலைமையில் வட்டார ஜமாஅத் உலமா சபைகள் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இஸ்லாம் சமுதாயம் மத நல்லிணக்கத்தையும் சமூக நல்லினத்தையும் ஒற்றுமையும் பேணி பாதுகாக்கும் மார்க்கம் என்று விளக்க உரை வழங்கப்பட்டது. மாவட்ட அரசு தலைமை காஜி சலாவுதீன் ஜமாலி பாஜில் உமரி இந்திய யூனியன் […]

இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவருக்கு எதிராக போர்க்கொடி : திடீர் ஆர்ப்பாட்டம்..

இராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசன் கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் அவரது தன்னிச்சையான முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் அரண்மனை திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்ம கார்த்தி, மாவட்ட துணைத்தலைவர் முத்துச்சாமி, மாநில மீனவரணி செயலாளர் நம்புராஜன், வழக்கறிஞர் சண்முகநாதன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மாநில தலைமை ஒருங்கிணைப்பு குழு முடிவிற்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் […]

பதவி உயர்வில் இடஒதுக்கீடு : மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு..

இராமநாதபுரம் :  மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கு ராமநாதபுரத்தில் நடந்தது. மாவட்டத்தலைவர் எஸ். கர்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வெ.கா.சேக்கிழார் தொடக்க உரை ஆற்றினார். அமைப்பாளர் எம்.சோமசுந்தரம், பொருளாளர் கே.பாபு, செய்தி தொடர்பாளர் சி.தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டியல் வகுப்பினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம், பதவி உயர்வில் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  நிறுவனத்தலைவர் ச.கருப்பையா, மாநில துணைத் தலைவர்வி.பாலச்சந்திரன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெ.மரியம் ஜேம்ஸ், சங்க […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!