காதல் இளம் ஜோடிகள் விஷம் குடித்து தற்கொலை

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் ஜெயசூர்யா 21 பட்டதாரி இளைஞரான இவர் அதே ஊரில் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார், இவரும் இவரது தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகளான கல்லூரி மாணவி பாண்டீஸ்வரி 18 என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.,இந் நிலையில் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாண்டீஸ்வரிக்கு அவரது தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றதாக […]

இராமநாதபுரத்தில் வாடிய நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்… வீடியோ..

இராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழை, நோய் தாக்குதலால் பாதித்த நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அதிக கனமழை, இயற்கை இடர்களால் பாதித்த நெல் பயிருக்கு 100 விழுக்காடு தேசிய வேளாண் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தொடர்மழையால் பாதித்த மிளகாய் சாகுபடி ஏக்கருக்கு நிவாரணம் ரூ.25 ஆயிரம், இழப்பீடாக ரூ.50 ஆயிரம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் […]

குழந்தைகள் பராமரிப்பு இல்ல வளாகங்களில் மரக்கன்றுகள் நடும்பணி..

இராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வண்ணம் குழந்தைகள் இன்பமாக வளர இயற்கையோடு இணைக்க வேண்டும் என்ற முன்னெடுப்புக்காக “யாதும் உயிரே” என்ற முன்னெடுப்பின் மூலம் அனைத்து குழந்தைகள் காப்பகத்திலும் உள்ள குழந்தைகளை மரக்கன்று நட்டு புத்தாண்டை துவங்க வைத்தல் தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 அரசு, அரசு சாரா குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில் ஒவ்வொரு இல்ல வளாகத்திற்குள், தலா 10 மரக்கன்றுகள் குழந்தைகளால் நடப்பட்டு, மரக்கன்றுகளை சுற்றி மரக்கன்று […]

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் மருத்துவ முகாம்.!

  திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்P. V. வெங்கட் அறிக்கை. தமிழகத்திலே முதல் முறையாக துளசி பார்மசி உடன் இணைந்து இனி வரும் காலங்களில் அனைத்து மாதங்களிலும் முதல் வாரத்தில் கட்டாயமாக இலவசமாக BP மற்றும் SUGAR பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம் சென்ற வருடம் 2024 நவம்பர் மாதம் மாண்புமிகு நீதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட்டன அதன் தொடர்ச்சியாக இரண்டாம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம் வரும் […]

திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாநகர கலைஞர் பகுதி சார்பில் பொதுக்கூட்டம்.!

திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிழக்கு மாநகர கலைஞர் பகுதி சார்பில் பொதுக்கூட்டம். திமுக கழக இளைஞரணிச் செயலாளர் – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு மாநகரம், கலைஞர் பகுதி தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பகுதிச் செயலாளர் மணிவேல் அவர்கள் தலைமை வகித்தார் இந்தக் கூட்டத்தில் […]

தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு கோரிக்கை..

தானியங்கி மழைமானிகளில் ஏற்படும் பழுதுகளை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி வெதர்மேன் ராஜா தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது பற்றிய அவரது செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் 1300-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்கப்பட்டு குறு வட்டங்கள் அளவில் மழை அளவுகளை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப் பட்டது. இந்நிலையில், 1300-க்கும் மேற்பட்ட தானியங்கி மழை மானிகள் மூலம் ஒரு மாவட்டத்தில் எந்த பகுதியில் அதிகமழை, எந்த பகுதியில் […]

வடகரை பேரூராட்சி பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்..

பொது மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி வடகரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வரும் வடகரை பகுதியில் சாலை வசதி, கழிவுநீர் வாய்க்கால், தெரு விளக்கு, குப்பைத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் 50-க்கும் மேற்பட்ட […]

தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரணக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரணக் கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் பிர்லா கணேசன் தலைமையில் துணைத் தலைவர் ராஜாத்தி மாவட்ட கவுன்சிலர் செந்தில்குமார் முன்னிலையில் நடை பெற்றது.கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன,அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒன்றிய கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறினார், கூட்டத்தில் ஆணையாளர்,வட்டார வளர்ச்சி அலுவலர்,கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கத்தில பள்ளி திறந்த முதல் நாளில் வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் சகிலா திடீர் ஆய்வு செய்தார்.மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர் அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்த முதல் நாளில் வட்டார கல்வி அலுவலர் ஷகிலா திடீரென வருகை புரிந்து இறைவணக்க கூட்டத்தை பார்வையிட்டு பள்ளியில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்றும் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் குறித்து மாணவ,மாணவிகளிடம் படிக்க சொல்லி சோதித்தார். நிகழ்வின் […]

கற்பழிப்பு விவகாரம் பற்றி பேச பாஜகவிற்கு தகுதி இல்லை திருச்சி விமான நிலையத்தில் துரை வைகோ பேட்டி.

தமிழக பள்ளிகல்வித் துறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 500 அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாக புரிந்துகொண்டு பேசுகிறார்கள். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 500 அரசுப் பள்ளிகளில் இருக்கும் அடிப்படை, கட்டமைப்பு மேம்படுத்த தனியார் பள்ளிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று தான் கூறினார்.மத்திய அரசிடம் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பிச்சை எடுப்பது போல் நிதியை கேட்டார்கள். ஆனால் மத்திய அமைச்சர் […]

உசிலம்பட்டி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து – கல்லூத்து கிராமத்தில் அன்னம்பார்பட்டியைச் சேர்ந்த சிங்கராஜ் என்பவரது தோட்டத்தை வில்லாணியைச் சேர்ந்த செல்வராஜ் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.,இன்று இவரது தோட்டத்து கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததைக் கண்ட செல்வராஜ் உசிலம்பட்டி வனச் சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.,தகவலின் பேரில் விரைந்து வந்த உசிலம்பட்டி வனச் சரக வனத்துறையினர் மற்றும் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் கயிறு […]

மாணவர்களுக்கு 3 ஆம் பருவ பாடப் புத்தகம் விநியோகம்..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளி மூன்றாம் பருவ வகுப்பு துவக்க நிகழ்ச்சி இன்று (02/01/2025) நடந்தது.  ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ், ஆசிரியைகள் கிருஷ்ணவேணி, பேபி சுகன்யா, சாமுண்டீஸ்வரி, காலை உணவு திட்ட பொறுப்பாளர்கள் அழகு சுந்தரி, புவனா, செல்வராணி […]

திருச்சியில் தொழிலதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை.! போலீஸ் விசாரணை .!!

 தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (65). தொழிலதிபா் மற்றும் ஒப்பந்ததாரரான இவா் திருச்சி, பொன் நகா் 2ஆவது பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசிக்கிறாா். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரத்தநாட்டில் உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் சென்ற சண்முகம் புதன்கிழமை காலை திரும்பினாா். அப்போது வீட்டின் காவலாளி முருகேசனை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்கி கட்டிப்போட்டு விட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் […]

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு வரும் 10ம் தேதி திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடந்து கொண்டிருக்கிறது இதன் தொடர்ச்சியாக வருகிற பத்தாம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெற இருக்கிறது. 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் […]

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆறு நகரும் படிக்கட்டுகள் ஆறு மின் தூக்கிகளும் இணைக்கப்படுகின்றன ஆட்சியர் ஆய்வு.!

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அமைந்த பிறகு மீண்டும் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் முதல் பணிகள் தொடங்கின. தற்போது, கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், கோட்டாட்சியர் கே. அருள், நகரப் பொறியாளர் சிவபாதம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்விற்குப் பின் […]

பெங்களூர் கார்மேலாராம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரெயில்கள் .! தவிக்கும் தமிழ்நாடு பயணிகள் .!!

நாகர்கோவில் பெங்களூர் ரயிலை குறிப்பிட்ட நிறுத்தத்தில் நிறுத்தாமல் ரத்து செய்துவிட்டனார் இதனால் பெங்களூர் தமிழ்நாடு தென் மாவட்ட பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர் பெங்களூர் கார்மேலராம் ரயில்வே நிலையம் அருகே ஐ.டி கம்பெனிகள் தனியார் நிறுவனங்கள் ஸ்கூல் வணிக நிறுவனங்கள் என ஏராளமான தனியார் துறை அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன இப்பகுதியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர் அதேபோல் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்து படித்த பல்வேறு நபர்கள் இங்கு உள்ள தனியார் நிறுவனங்களில் […]

நேர்மையுடன் செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த சலவை தொழிலாளி..

பொட்டல்புதூர் பகுதியில் சலவை தொழிலாளி ஒருவர் தனது நேர்மையான செயற்பாட்டால் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ஊர் பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி குமார். தினமும் ஊர் மக்களின் துணியினை சலவை செய்து இஸ்திரி போட்டுக் கொடுக்கும் பணியினை செய்து வருகிறார். இந்த நிலையில், அருகில் உள்ள வெங்காடம் பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பூ.திருமாறன் பெரிய தொகையை தவறுதலாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து அதனை […]

சாலை விதிகளை மதிக்கும் நாணயமானவர்களுக்கு நாணயம் பரிசு .!

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயம் பரிசு விபத்தில்லா 2025ம் ஆண்டை அனுசரிக்க வலியுறுத்தி ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு இருசக்கர வாகனம் இயக்கும்போது தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் , அணிந்து செல்வதால் உள்ள நன்மைகள், உயிர் பாதுகாப்பு குறித்தும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாவட்ட காவல்துறையுடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது . அதன் ஒரு பகுதியாக பிறந்திருக்கும் 2025 […]

உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் கட்ட பூமி பூஜை நடைபெற்று.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுற்று சுவர் கட்ட பூமி பூஜையில்  உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் கலந்து கொண்டார்.உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி அய்யப்பன் எம் எல் ஏ  தொகுதி நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து  அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு செய்ய விளையாட்டு மைதானத்தில் சுற்றி சுவர் கட்ட பூமி பூஜையில் பி அய்யப்பன் எம் எல் ஏ தலைமையில் பள்ளி […]

கீழக்கரையில் புகாரி ஷரிப் 10 ம் ஆண்டு நிறைவு விழா.! உலக நன்மைக்காக இறைவனிடம் கண்ணீர் மல்க கூட்டுப் பிரார்த்தனை செய்த இஸ்லாமியர்கள் ..!!

  இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குஃத்பா பள்ளிவாசலில் புகாரி ஷாரிப் பத்தாம் ஆண்டு நிறைவு விழா பழைய குஃத்பா பள்ளி ஜமாத் தலைவர் ஹாஜா ஜலாலுதீன் , செயலாளர் சப்ராஸ் நவாஸ் , பொருளாளர் சுல்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.   கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகமது சதக்கத்துல்லா ஆலின் கிராத் ஓதி துவங்கி வைத்தார் . கீழக்கரை புகாரி ஷெரிஃப் டிரஸ்ட் அல்ஹாஜ் பி எஸ் எம் ஹபிபுல்லா கான் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!