இலங்கையில் தான் கஷ்டம் என்று தமிழகத்துக்கு வந்தால் இங்கே அதைவிட கஷ்டமாக இருக்கிறது. இலங்கை தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என இலங்கை தமிழ் அகதிகள் கண்ணீர் விட்டு அழுது கெஞ்சி கேட்கின்றனர். தங்களை இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பும்படி வேதனையுடன் ஆட்சியரிடம் மனு கொடுத்த இலங்கை தமிழ் அகதிகள். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் யுத்த காலத்திலும், அந்நாட்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்ட போதும் அங்கிருந்து அகதிகளாக தஞ்சம் வந்த […]
Category: மாவட்ட செய்திகள்
பள்ளி கட்டிடத்தை சரி செய்து தரக்கோரி பாட்டுப்பாடி, ஆட்டம் ஆடி ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்த அரசு பள்ளி மாணவ மாணவிகள்..!
ராமநாதபுரத்தை அடுத்த வித்தானூர் பகுதியில் அரசு துவக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த அரசு பள்ளிக்கு சரியான கட்டிட வசதி இல்லாததால் மகளிர்மன்ற கட்டிடத்தில் மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது பள்ளிப் பாடத்தின் பாடலை பாட்டுப்பாடி ஆட்டம் போட்டு மாணவ மாணவிகள் […]
மயானத்துக்கு போக வழியில்லாம வயலுக்குள்ள பொணத்தை தூக்கிட்டு போறோம்”- புகைப்படங்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் புலம்பிய பொதுமக்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவிலை அடுத்த நெடுங்குறிச்சி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சுடுகாட்டு பகுதிக்கு செல்ல எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என, குற்றம் சாட்டும் அந்த கிராம மக்கள் போதிய சாலை வசதி செய்து தரப்படாததால் சுடுகாட்டிற்கு, இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்வதில் கடும் சிரமம் ஏற்படுவதாகவும், வேறு வழியின்றி உடல்களை வயல்வெளிக்குள் தூக்கிச் செல்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக […]
டாஸ்மார்க் அகற்ற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF )தஞ்சாவூர் மாநகர குழு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு .. தஞ்சாவூர் மாநகராட்சி கீழவாசலில் இயங்கி வரும் டாஸ்மாக் (கடை எண் 7901 ) கடையினால் பெண்களும் ,பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வணிக பெருமக்களும் போக்குவரத்து நெரிசலினால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும், டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 11-09-2024 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரச்சனையின் […]
“இப்பவே உன்னை தூக்கிச்சென்று காணா பிணமாக்கி விடுவேன்.” உசிலம்பட்டியில் அரைகுறை ஆடையில் வந்து பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பைனான்ஸ் ஊழியர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சிந்து.இவருடைய பெயரை பயன்படுத்தி அவருடைய உறவினர் சங்கர் உசிலம்பட்டி அருகே தி.விலக்கிலுள்ள செல்லப்பாண்டி என்பவரின் பைணான்ஸ் கடையில் பணம் பெற்று விட்டு தலைமறைவானார்.இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பணம் கேட்டு செல்லப்பாண்டி பைனான்ஸ் ஊழியர் மதன் என்பவர் சிந்து வீட்டிற்கு அடிக்கடி வந்து மிரட்டியதாகக் கூறப் படுகின்றது.இந்நிலையில் நேற்று இரவில் யாரும் இல்லாத நிலையில் சிந்து வீட்டிற்கு அரைகுறை (ஷாhட்ஸ் டிசர்ட்) வந்த மதன் அவரிடம் பணம் கேட்டுள்ளார்.சிந்து […]
முதலுதவி தாமதத்தால் முன்னாள் பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு..
தென்காசி மாவட்டத்தில் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த சுரண்டை பேரூராட்சி முன்னாள் தலைவர் முதலுதவி தாமதம் ஆகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை சிவ குருநாதபுரத்தை சேர்ந்தவர் டி.கே.எம். மாதாள பாண்டியன்.வயது (70). இவர் சுரண்டை பேரூராட்சியாக இருந்த போது 10 ஆண்டுகள் பேரூராட்சி மன்ற தலைவராக பணியாற்றினார். இவர் கடந்த 30ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடையம் அருகே உள்ள மாதாபுரத்தில் அவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் […]
வரும் மூன்று மாதத்திற்குள் தமிழ்நாடே உசிலம்பட்டியை திரும்பி பார்க்கும் வகையில் உசிலம்பட்டியில் முக்கிய நிகழ்ச்சி உள்ளது – அமைச்சர் மூர்த்தி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு செல்லம்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் பி.மூர்த்தி, தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது., இந் நிகழ்வில் விவசாயிகளுக்கு கரவை மாடுகள், ஆடுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள், பொங்கல் பரிசு பொருட்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.,இந்த விழாவில் நலத்திட்ட […]
தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி பொறுப்பேற்பு..
தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தென்காசி மாவட்ட புதிய எஸ்.பி அரவிந்த் இன்று பொறுப் பேற்றுக் கொண்டார். தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக திருச்சி துணை கமிஷனராக பணியாற்றி வந்த அரவிந்த் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் 6-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக S.அரவிந்த் இன்று (06.01.2025) ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். இவர் 21.07.2005 ஆம் ஆண்டு காவல் பணியில் இணைந்து துணை எஸ்.பியாக திருவாரூர், கரூர், திருநெல்வேலி, […]
தமிழ்நாடு ஸ்டேட் மினி 11 வயது உட்பட்டவர்களுக்கான ரேங்கிங் இறகு பந்து விளையாட்டு போட்டி..
திருவண்ணாமலை அடுத்த போளூர் பகுதியைச் சேர்ந்த டி.எஸ்.ஷாதின் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஸ்டேட் மினி 11 வயது உட்பட்டவர்களுக்கான ரேங்கிங் இறகு பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட 38 மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 128 மாணவர்களில் கலந்து கொண்டு 16வது இடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். பயிற்சியாளர் கே.டி.ஆர்.கார்த்தி உடன் உள்ளார்
திருச்சி மணப்பாறையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா பணிகளை பார்வையிட்ட அமைச்சர்..
திருச்சி மணப்பாறையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைர விழா நடக்கும் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் m பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இவ்விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு […]
திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சமத்துவ பொங்கல் விழா..
திருச்சி தெற்கு மாவட்ட மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பாக சமத்துவ பொங்கல் விழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு. கழக இளைஞரணிச் செயலாளர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் 47வது நிகழ்ச்சியாக மாவட்ட மற்றும் கிழக்கு மாநகர கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா காட்டூர் பகுதியில் நடைபெற்றது. தெற்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகரச் செயலாளர் […]
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.!
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் எஸ் டி பி ஐ கட்சியின் பெண்கள் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாலியல் அத்துமீறல்களை கண்டித்தும் , பெண்களுக்கு எதிராக அரங்கேறி வரும் கொடுமைகளை கண்டித்தும் , திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார். விம் நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அரசுக்கு எதிராகவும் பெண்களுக்கு […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை.!
பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் மண்டபம் வரையிலான கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது., என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பொங்கல் திருநாளை […]
திருச்சி தேசிய நூலக வார விழா அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு.!
.திருச்சிராப்பள்ளி மாவட்ட மைய நூலகத்தில் இன்று (04.01.2025) நடைபெற்ற 57-வது தேசிய நூலக வார விழாவில் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி 57-வது தேசிய நூலக வாரவிழா, இளைஞர் இலக்கிய திருவிழா மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, நன்கொடையாளர்களை பாராட்டி விழாப் பேருரையாற்றினார். முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் 2000 ஆம் ஆண்டு 133 அடி உயர […]
திருச்சி விமான நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சோதனை செய்வது ஏன் .! துரை வைகோ கேள்வி .!!
திருச்சி விமான நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை சோதனை செய்வதா? துரை வைகோ. திருச்சியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் குருவிகள் என நினைத்து பயணிகள் குறிப்பிட்ட நபர்களை தொடர்ந்து பரிசோதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இது அவர்களின் பணி என்றாலும் கூட சிலரை டார்க்கெட் செய்து சோதிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் தான் திருச்சி சர்வதேச விமான நிலைய வளர்ச்சி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. […]
தேவகோட்டை அருகே அரசுப் பள்ளியில் பொங்கல் விழா .!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் மங்களம் அரசு நடுநிலைப்பள்ளியில் பொங்கல் விழா . தலைமையாசிரியர் சுப.கவிதா தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் பட்டாம்பூச்சி போல் உடையணிந்து பங்கேற்றனர். இதில் ஆசிரியர்கள் ஸ்ரீகலா, ச.கவிதா, பாண்டிச்செல்வி, ராணி, ஷீபா விண்ணரசி, சங்கீதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். சத்துணவு அமைப்பாளர் ஞானப்பிரகாசம், உதவி அமைப்பாளர் நாச்சம்மை மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து குதூகலமாக கொண்டாடினர்.
உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஸ்கேன் செண்டரில் மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தினசரி உள்நோயாளியாக 500க்கும் மேற்பட்டோரும், புறநோயாளியாக 1000க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.,இந்த மருத்துவமனையில் இயங்கி வரும் ஸ்கேன் செண்டர் மூலம் எலும்பு முறிவு, தசை மற்றும் வயிறு, தலை உள்ளிட்ட ஸ்கேன்கள் ஒரு நாளைக்கு 50 முதல் 100 ஸ்கேன்கள் எடுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு மாதமும் வயிறு, தலைக்கு மட்டும் 500க்கும் மேற்பட்ட ஸ்கேன்கள் எடுக்கப்படுவதாக கூறப் படுகிறது.,இந்நிலையில் தற்போது மருத்துவர் பற்றாக்குறையால் ஸ்கேன் […]
திருச்சி தொட்டியத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் நேரு…
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் மைக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு அருகில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். […]
திருச்சி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்…
3 கோடியே 85 லட்சத்து ஐயாயிரம் ரூபாய் மதிப்பீட்டில்முடிவடைந்த திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தனது தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் உள்ள திருவளர்ச்சிபட்டி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைத்ததுடன் சுகாதார நிலையத்திற்கு வந்திருந்த கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கியும், உணவு மற்றும் நிவாரண பொருட்களை […]
பரமக்குடி அருகே வாளுடன் புகைப்படத்தை வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர் கைது .! வலைத்தளங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை .!! மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூர் மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த ஆஞ்சிநேயர் என்பவர் சமூகவலைதளத்தில் (Instagram) சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக வாள் உடன் தனது புகைப்படத்தை ஸ்டேட்டஸாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 31.12.2024-ம் தேதி பார்த்திபனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு வைக்கப்பட்டுள்ளார். மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று சட்டம்-ஒழுங்கு மற்றும் இரண்டு மதங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை பதிவிடும் இளைஞர்களுடைய சமூக […]