தமிழக முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை அ.தி.மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி பொது மக்கள் சந்தித்து பேசி வருகிறார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முதல் கட்ட பயணத்தை தொடங்கி தற்போது நான்காவது கட்டமாக செப்டம்பர் 1ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறார். அதன்பின் மாவட்டம் முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார் செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சோழவந்தான் தொகுதி க்குட்பட்ட வாடிப்பட்டியில் […]
Category: மாவட்ட செய்திகள்
கீழமாத்தூர் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவ ஸ்ரீ நாகேஸ்வர சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ விக்னேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் மங்கள இசை உடன் விக்னேஸ்வர பூஜை முதலாம் கால யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இரண்டாம் நாள் நிகழ்ச்சி கோபூஜை, […]
சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தேமுதிக சார்பாக விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பென்சில் பேனா நோட்புக் எழுது பொருட்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார் தலைமை வகித்தார் பொதுக்குழு உறுப்பினர் குருநாதன் முன்னிலை வகித்தார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், முத்துப்பாண்டி, சரவணன், […]
புனித ஹஜ் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா அவரது தலைமையில் நடைபெற்ற ஹஜ் பயணி கள் 30 க்கும் மேற்பட்ட பயணிக ளுக்குமருத்துவ பரிசோதனை நடைபெற்றது இன்று அவர்களுக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்டது சான்றிதழ்களை பெற்ற ஹஜ் பயணிகள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா. மருத்துவர் விஜய். செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்தனர் இந்நிகழ்வில் ஹஜ் பயணிகள்வழிகாட்டி குழுவினர் மற்றும் சமூக அலுவலர்கள் உடன் இருந்தனர் …
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் 63 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 63 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் காலை திருக்கோஷ்டியூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம அய்யங்கார் தலைமையில் மங்கள […]
முள்ளிப்பள்ளம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.இதற்கான பணிகள்பணிகள் கடந்த சில நாட்களாக புணரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை திருக்கோஷ்டியூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம அய்யங்கார் தலைமையில் மங்கள இசை உடன் விஷ்வக்சேனர் முதலாம் காலயாக பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்யாவாகனம், வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்பணம், நடைபெற்றது. விமான கலசம் பிரதீஷ்டை […]
உசிலம்பட்டி ஆர் சி சிறுமலர் துவக்கப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை திமுக நகர செயலாளர் எஸ் ஓ ஆர் தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள ஆர்.சி.சிறுமலர் தொடக்கப் பள்ளியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி… உசிலம்பட்டி திமுக நகரச் செயலாளர் எஸ்.ஒ. ஆர்.தங்கப்பாண்டியன், முன்னிலையில், ஆர்.சி.பள்ளி தலைமை ஆசிரியர், சகாய மரிய ரட்சியம், பள்ளி தாளாளர், மரிய ரோஜாமணி, இல்ல தலைவி,சூசையம்மாள் அவர்களின் ஏற்பாட்டில். உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற தலைவர், தேன்மொழி, சுகாதார ஆய்வாளர், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பள்ளியில் காலை உணவு […]
சோழவந்தான் அருகே நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் பழனி என்பவர் விவசாய நிலத்தில் 12 ஏக்கரை நெல் நடவு செய்திருந்த நிலையில் நெல் பயிர்களுக்கு இணையாக களைகள் வளர்ந்துள்ளதால் சுமார் மூன்று லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார் நெல் விதையில் தவறு நடந்திருக்கும் எனவும் புகார் தெரிவிக்கும் விவசாயி வருவாய்த்துறை அதிகாரிகள் வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாய நிலங்களில் நேரில் பார்வையிட்டு சேதமடைந்த நெற்ப்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் […]
காலை உணவு திட்டத்தை விரிவு படுத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பள்ளி குழந்தைகள் வாழ்த்து மடல்
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக – உசிலம்பட்டியில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மழலைகள் தபால் அட்டையில் நன்றி மடல் அனுப்பி வைத்தனர்., தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அரசு பள்ளிகளில் துவங்கப்பட்ட காலை உணவு திட்டத்திற்கு பெரும் வரவேற்பு உருவான சூழலில், இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த காலை உணவு திட்டத்தை முதல்வர் விரிவாக்கம் செய்தார்., அந்த வகையில் […]
கோவில் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் துவக்கம்
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா யாகசாலை நிகழ்ச்சிகள் துவக்கம் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில நாட்களாக புணரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து காலை திருக்கோஷ்டியூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம அய்யங்கார் தலைமையில் மங்கள இசை உடன் விஷ்வக்சேனர் முதலாம் காலயாக பூஜை நிகழ்ச்சிகள் […]
தென்காசி செங்கோட்டை பகுதிகளில் காவல்துறை அணிவகுப்பு..
விநாயகர் சதுர்த்தி விழாவினை பொது மக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணமும் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில், தென்காசி மற்றும் செங்கோட்டையில் காவல் துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் துவங்கி யானை பாலம் சிக்னல், மேலரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக காசி விஸ்வநாதர் கோவில், சுவாமி சன்னதி வீதி, ஜெமினி லாலா […]
சோழவந்தான் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக இலக்கிய அணி ஒன்றிய செயலாளர் பலி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி செல்லும் சாலையில் இருசக்கர வாகன விபத்தில் அதிமுக ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி சம்பவ இடத்தில் பலி சோழவந்தான் முதலியார் கோட்டையை சேர்ந்தவர் மணி ஓய்வு பெற்ற அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் இவர் அதிமுகவின் வாடிப்பட்டி ஒன்றிய இலக்கிய அணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் இந்த நிலையில் வாடிப்பட்டியில் இருந்து தனது இருசக்கர மொபட் வாகனத்தில் சோழவந்தானில் உள்ள தனது வீட்டிற்கு […]
வாடிப்பட்டியில் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் மீது ஏறி கையில் பெட்ரோல் கேனுடன் தற்கொலை மிரட்டல் விடும் ஆட்டோ ஓட்டுனர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ராஜா வயது (37). இவரது உறவினர் ஒருவர் 17 வயது சிறுமி ஒருவரை கடந்த சில மாதங்கள் முன்பு கட்டாய காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் இது தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் அந்த நபர் மீது போக்சோ வழக்கின் கீழும் ராஜா மற்றும் அவரது மனைவி மீது ஆள் கடத்தல் பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர் இந்நிலையில் இன்று திடீரென ஆட்டோ ஓட்டுனரான […]
சோழவந்தானில் பேருந்து திடீரென பழுதாகி நின்று விட்டதால் மாற்று பாதையில் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் அவதி
சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் மதுரை அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நாச்சிகுளம் செல்லும் 28 என்ற அரசு பேருந்து இன்று மதியம் 12:00 மணி அளவில் திடீரென பழுதாகி நின்று விட்டதால் அந்த வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் மாரியம்மன் கோவில் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள பேருந்துகளில் ஒரு சில பேருந்துகள் தவிர அனைத்து பேருந்துகளும் […]
ஆபத்தான நிலையில் குடிநீர் நீர் தேக்க தொட்டி
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டு அக்ரஹாரம் பகுதியில் கிருஷ்ணன் கோயில் ஆஞ்சநேயர் கோவில் சனீஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களுக்கு மத்தியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி சிதலமடைந்த நிலையில் பக்கவாட்டு சுவர்களில் கீறல் விழுந்தும் தொட்டியின் மேல் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தும் இருப்பதால் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் தண்ணீர் தேங்கும் மேல் புற சுவர்கள் பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் இருந்து வருகிறது இந்த நிலையில் தொட்டியின் மேல் புறமுள்ள […]
முள்ளிப்பள்ளம் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் மின்கம்பம்கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் உடனடியாக சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர் வருகின்ற 28ஆம் தேதி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ள நிலையில் கோவிலின் அருகில் மிகவும் ஆபத்தான நிலையில் சாய்ந்தவாறு மின்கம்பம் உள்ளதால் எப்போது வேண்டுமானால் விபத்து ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்கும் பலமுறை தகவல் தெரிவித்தும் […]
சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் 13 வது வார்டு சிவன் கோவில் அருகே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது இந்த அலுவலகத்திற்கு முன்பு உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது மேலும் மின் வயிர்களும் குறுக்கும் நெடுக்கமாக உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பத்தால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது இதுகுறித்து இந்த பகுதி பொதுமக்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு மின் வாரிய அலுவலகத்தில் மின்கம்பத்தை மாற்றி அமைக்க மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை […]
தொழிலாளர் யூனியன் சங்க ஆலோசனை கூட்டம்
சோழவந்தானில் நடைபெற்ற மதுரை மாவட்ட திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்க கூட்டத்தில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இணை ஆணையர் அலுவலகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தீர்மானம் நிறைவேற்றம். மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை மாவட்ட திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன் சங்க கூட்டம் பொறுப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுக்கு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி மதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து […]
சோழவந்தானில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பாக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டன. மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் மாவட்ட துணை செயலாளர் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி தலைமை வகித்தனர். பேரூர் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன் வரவேற்றார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சசி, முன்னாள் […]
பல்வேறு குளறுபடிக்கு மத்தியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
அலங்காநல்லூரில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாம் அமைச்சருக்காக 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த கர்ப்பிணி தாய்மார்கள் காலை 9 மணிக்கு மருத்துவ முகாமை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைப்பார் என கூறியிருந்த நிலையில் 4 மணி நேரம் தாமதமாக ஒரு மணிக்கு வந்த அமைச்சரால் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்ட அவலம் பொதுமக்கள் பயன்படக்கூடிய வகையில் நடத்த வேண்டிய மருத்துவ முகாமை பத்துக்கு […]
You must be logged in to post a comment.