மதுரை, விக்கிரமங்கலத்தில், ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்ல பிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, கருப்புசுவாமி, பரிவார தேவதைகள் ஆலய வீரணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரமங்கலம் கிராமத்தில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற, ஐந்துபேர் ஆண்டித்தேவர் வகையறா நமச்சிவாய பிள்ளைகள் வகையறா நல்லபிள்ளைத்தேவர் வகையறாகளுக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீ […]
Category: மாவட்ட செய்திகள்
திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு சீமான் ஆஜராக வேண்டும் நீதிமன்றம் உத்தரவு.!
திருச்சி நீதிமன்றத்தில் டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கு சீமான் ஆஜராக வேண்டும் நீதிமன்றம் உத்தரவு. திருச்சி மாவட்ட எஸ்பி யாக இருந்த வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பி யாக இருந்த வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில சமூக வலைதள எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் […]
அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் பயணிகளை பைபாஸில் இறக்குவதால் அவதி.! மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .!!
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு கமுதி அருப்புக்கோட்டை பெருநாழி பசும்பொன் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான அரசு பேருந்துகள் வந்து செல்கின்றது. அவ்வூர்களுக்கு செல்லக்கூடிய கிராம மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகவும் ராமநாதபுரம் வழியாகவும் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு […]
பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்; VAO கைது..
தென்காசி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் S.குமாரவேல் (52), த.பெ.சுப்பையா. தனக்கு பூர்வீக பாத்தியமான தனது தந்தையின் பெயரில் உள்ள இராஜ கோபாலப்பேரி கிராம நத்தம் சர்வே எண்.30-ல் உள்ள 1.27 ஏர் பரப்பில் உள்ள வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக 06.01.2025 ஆம் தேதி அன்று குமாரவேல் இராஜகோபாலப் பேரி […]
கடம்பன்குடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரக் கூடிய மாவட்ட ஆட்சியரிடம் மனு .!
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையை அடுத்த கடம்பன்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அதுமட்டுமல்லாது தங்களது கிராமத்தில் உயிரிழந்த நபர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல மயான சாலை வசதி இல்லாததால் தனியார் வயல்களுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் குறிப்பாக தற்போது விவசாயக் காலம் இறுதி கட்டத்தை எட்டி பயிர்கள் விளைந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த […]
பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி கருகிய பயிரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள் .!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ஹெக்டேர் அளவிற்கு நெல் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 60 முதல் 70 விழுக்காடு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலுவான கோரிக்கை இருந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாம்பல் குளத்தை அடுத்த […]
திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் .! கீழக்குளம் கிராம பொதுமக்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு .!!
ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகா கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் கீழக்குளம் அருந்ததியர் காலணியில் 50 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு 36 பேருக்கு தலா 1.80 லட்சம் மதிப்புள்ள இலவச காலனி வீடுகள் அரசால் ஒதுக்கப்பட்டதாகவும் இந்த திட்டத்தின் படி […]
துணை முதல்வர் உதயநிதியின் காரின் பின்னால் சென்ற கார் மோதிய விபத்தில்சிகிச்சையில் இருந்தவர் இறப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை 16ந்தேதி தொடங்கி வைத்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில்சென்று கொண்டு இருந்தார். அவரது காருக்கு பின்னால் ஏராளமான திமுக நிர்வாகிகள் கார் வந்து கொண்டிருந்தது. ஒன்றன்பின் ஒன்றாக அந்த கார்கள் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவு பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக அதில் ஒரு கார் சித்தாலங்குடியை சேர்ந்த விருமாண்டி மகன் ராஜேந்திரன் (வயது 60) என்பவர் ஓட்டிவந்த இருசக்கர […]
ராமநாதபுரத்தில் கேண்டி கஃபே திறப்பு விழா.! ராமநாதபுரம் எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு .!!
ராமநாதபுரம் மாவட்டம் பட்டின காத்தான் பகுதியில் திருச்சி செல்லும் இ சி ஆர் சாலை அருகே கேண்டி கஃபே மற்றும் கேண்டி ஆட்டோ மொபைல் சர்வீஸ் திறப்பு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் அபுதாஹிர் ஃபைஜி , முகம்மது அபூபக்கர், ஹசன், ஆரிஃப் , அஹமது அப்துல் காதர் , சேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் […]
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கூடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ.!
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கட்டிடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இஸ்லாமியர்கள் நடத்திய தொழுகையிலும் பங்கேற்று சிறப்பித்தார். இந்த தொழுகை இடமானது சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்
திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் வைர விழா நடக்கும் வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!
திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் வைர விழா நடக்கும் வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (JAMBOREE) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா (28.01.2025) அன்று முதல் 03.02.2025) வரை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு […]
சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி .!எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு .!!
சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி: எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு, காவல்துறையின் பணியை செய்ய விடாமல் தடுக்கும் ஆளும் கட்சியின் தலையீடே காரணமாக உள்ளது. பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இன்றைய தமிழ்நாடு மாறியுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதிலும், மக்களை பாதுகாப்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக இராமநாதபுரம் மற்றும் பல இடங்களில், பெண்களுக்கு […]
அரச மரத்து பட்டி மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் எரவார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்து பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு சோழவந்தான் கும்பாபிஷேக சிரோமணி பிரம்மஸ்ரீ பாலமுருகன் சுவாமிகள் தலைமையில் ஆச்சாரியார்கள் இரண்டு நாட்கள் யாக பூஜை நடத்தினர். இதைத் தொடர்ந்து யாகபூஜை நடைபெற்று பூர்ணாஹீதி நடந்தது. இதைத் தொடர்ந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். மந்தை அம்மனுக்கு பால் […]
உசிலம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் டிக்கெட் வாங்க சொல்லி தகராறில் ஈடுபட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் வாலாந்தூர் அருகே சின்ன குறவக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணகுமார் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவரின் மகளான கனிஷ்கா மதுரை பசுமலையில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார் இவர் பள்ளிக்கு செல்வதற்கு தினசரி வாலாந்தூரிலிருந்து அரசு பஸ்ஸில் காளவாசல் சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்தில் பள்ளி செல்வது வழக்கம் இந்த நிலையில் இன்று காலை 7.50 மணி அளவில் கனிஷ்கா மற்றும் அவரது தாயாரை […]
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள மாடுகள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு, தினசரி நூற்றுக் கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பாளையம் கடலாடி காஞ்சி காரப்பட்டு குப்பநத்தம் பரமனந்தல் சிங்காரப்பேட்டை ஊத்தங்கரை ஒன்றியத்தில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பெங்களூரு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அனைத்து அரசுப் பேருந்துகளும் செங்கம பேருந்து நிலையத்தில் நின்று சென்று வருகின்றன. மாவட்டங்களில் இருந்தும் […]
அரசு பஸ் டெப்போ அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு பஸ் டெப்போ அமைத்திட வேண்டும் என நீண்ட காலமாக பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தென்காசி தொகுதியின் 10 முக்கிய கோரிக்கைகளில் “சுரண்டையில் பஸ் டெப்போ” என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுரண்டை பகுதியில் பஸ் டெப்போ அமைத்திட ஏதுவாக சுரண்டை அரசு கல்லூரி சாலையில் போதிய அரசு புறம்போக்கு நிலம் உள்ளது எனவும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் […]
மதுபானக்கடையை அகற்ற கோரி கிராம மக்கள் முற்றுகை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்ன செம்மேட்டுபட்டியில் 5586 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது., விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இந்த மதுபான கடைக்கு சமீப காலமாக மது அருந்த வருவோர் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்கு சென்று வரும் பெண்களை கேழி செய்வது தொடர்கதையாக உள்ளதாகவும், இதனால் அடிக்கடி பிரச்சினைகளும் எழுந்து வருவதாக குற்றச்சாட்டுகின்றனர்., இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் […]
சுரண்டையில் இருந்து சிறப்பு பேருந்து..
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 18.01.2025 அன்று சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு தாங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்பி செல்ல வசதியாக சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு நவீன (பக்கெட் சீட்) அரசு போக்குவரத்து […]
சிறந்த மருத்துவ சேவைக்கான விருது பெற்ற தென்காசி தலைமை மருத்துவமனை..
தென்காசி தலைமை மருத்துவ மனைக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சேவைகளில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை தமிழகத்தில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில், தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து தமிழகத்தில் சிறந்த மருத்துவ மனைகளில் ஒன்றாக தென்காசி தலைமை மருத்துவ மனை உள்ளது. இந்நிலையில், கடந்த […]
உசிலம்பட்டியில் சம்பளப்பிரச்சனையில் இளைஞர் மீது தாக்குதல்.புகாரளித்தும் வாங்க மறுத்து போலிசார் அலைக்கழிப்பதாக இளைஞர் புகார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழமாதரையைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி மகன் பழனியாண்டவர் 28.இவர் உசிலம்பட்டி எஸ்ஒஆர் நகரிலுள்ள கோபி என்பவரின் பேக்கரியில் தினக்கூலியாக ரூ.400 சம்பளத்திற்கு டீ மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் இம்மாதம் ரூ.100 சம்பளம் உயர்த்திக் கேட்டதாகக் கூறப்படுகின்றது.இது தொ டர்பாக கோபி மற்றும் மற்ற பணியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்ப்பட்டு தகராறு ஆன நிலையில் பழனி வேலையை விட்டு நின்று விட்டதாகக் கூறப்படுகின்றது.இந்நிலையில் கோபி மற்றும் கடையில் பணியாற்றும் சிலருடன் சேர்ந்து ஆம்னி காரில் பழனியை […]
You must be logged in to post a comment.