மதுரை சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்டதில் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சோழவந்தான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த மூன்று வயது சிறுமி சாரா ஸ்ரீ மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில சிறுமியின் தந்தை ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சிக்கன் உணவக உரிமையாளர் மீது சோழவந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் […]
Category: மாவட்ட செய்திகள்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2400 கிலோ பீடி இலைகள் பறிமுதல் : ! தப்பி ஓடிய கடத்தல் காரர்களுக்கு போலீசார் வலைவீச்சு .!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் திருப்புல்லாணி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கீழக்கரையை அடுத்த செங்கல்நீரோடை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வேன் ஒன்றைப் பார்த்து அதனை சுற்றி வளைத்து சோதனை செய்த போது அந்த வேனில் இலங்கைக்கு கடத்துவதற்காக பீடி இலை மூடைகள் இருந்ததை கண்டறிந்தனர். போலீசார் வந்ததை அறிந்து கடத்தலில் ஈடுபட முயன்ற கடத்தல்காரர்கள் கடலுக்குள் இறங்கி தப்பி ஓடி விட்டனர் . உடனே […]
தமிழகத்தில் கொத்தடிமை தொழில் அகற்றப்படும் – மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன் பேட்டி !
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சார்பாக 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் கொத்தடிமை தொழிலை அகற்றுவோம் என்ற விழிப்புணர்வு பிரச்சார பேரணி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதனை தொழிலாளர் துறை மதுரை மண்டல இணை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையில் சார்பு நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணசெந்தில்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர் மற்றும் தொழிலாளர் துறை […]
தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழா.!
மதுரை சாத்தமங்கலத்தில் அமைந்துள்ள தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் தமிழறிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் விழாவையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா அவரின திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் தேவநேய பாவாணரின் கொள்ளு பேரன் சீவாபாவாணர் […]
மதுரை மாவட்டத்தில் புதிய விரிவான மினிப்பேருந்து திட்டம் .! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .!!
மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம் – 2024 , பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள்/குக்கிராமங்கள்/ குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியினை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த “புதிய விரிவான மினிபேருந்து திட்டம் 2024” அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:- 1. அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் நீளம் 25 கி.மீ. ஆக இருக்க வேண்டும். 2. குறைந்த பட்ச சேவை […]
தஞ்சாவூர் கார்மேல் குழந்தை இயேசு ஆண்டு பெருவிழா மற்றும் தேர் பவனி.!
தஞ்சை மாநகரில் காமேல் சபை குருக்களால் 1987ஆம் ஆண்டு முதல் அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு பக்தி ஆரம்பிக்கப்பட்டு. அதன்மூலம் அனைத்துத் தரப்பினரும் குழந்தை இயேசுவின் அற்புதங்களையும், அதிசயங்களையும் பெற்று வருகின்றனர். மகிமைநிறைந்த அற்புத குழந்தை இயேசுவின் ஆண்டு பெருவிழா கடந்த வியாழன் அன்று திருக்கொடி யேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 8 நாட்களாக ஒவ்வொரு நாளும் மாலை திருஜெபமாலை, சிறப்புத் திருப்பலி, குணமளிக்கும் ஜெபக்கொண்டாட்டம் என சிறப்பு வழிபாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இறுதி […]
குப்பைகளை ரோட்டில் தீ வைப்பதை தடுக்க கோரி உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளரிடம் மனு
உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை தீ வைப்பதையும் சாலையில் மற்றும் வார்டு பகுதியில் குப்பைகளை சேகரித்து சுகாதாரப் பணியாளர்கள் தீ வைப்பதை தடுக்க கோரி நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள 24 வார்டுகளில் உள்ள குப்பைகளை சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளில் குப்பைகளை வாங்கி பேரையூர் சாலையில் உள்ள மின் மயானம் அருகே குப்பை கிடங்கில் தரம் பிரித்து வருகின்றனர். மேலும் பேரையூர் சாலை பண்ணப்பட்டி […]
தென்காசியில் சுகாதாரத்துறை மாதாந்திர ஆலோசனை கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பொது சுகாதாரத் துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் 05.02.2025 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச் சான்றிதழ் பெறுவது, புகையிலை தடுப்பு பணி குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வது, பருவ கால நோய்கள் தடுப்பு பற்றிய நடவடிக்கைகள், இள வயது திருமணம் மற்றும் இள வயது கர்ப்ப தடுப்பு சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் பொது […]
உசிலம்பட்டி தேவர் கல்லூரி அருகில் போதை மாத்திரை,கஞ்சா விற்ற 4 பேர் கைது
உசிலம்பட்டியில் தேவர் கல்லூரி அருகில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 4 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் ஆனந்த் தலைமையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது.,உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் சந்தேகப்படும் படி நின்றிருந்த 4 பேரிடம் சோதனை நடத்தியதில் அவர்களிடமிருந்து 200 போதை […]
சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் குவிந்துள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் சிலை அருகே மது பிரியர்களால் காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் குவிந்து கிடக்கின்றது இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் காலை முதல் இரவு வரை காமராஜர் சிலையின் பின்புறம் அமர்ந்து மது அருந்துபவர்கள் காலி மது பாட்டில்கள் மற்றும் கப்புகளை அங்கேயே விட்டுச் சென்று விடுகின்றனர் இதனால் சுகாதாரத் கேடு ஏற்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக […]
ரூ.4 ஆயிரம் இருந்தால் போதும். கெட்டுப் போன உணவையும் விற்கலாம். சுகாதாரத்துறையினரின் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி
கெட்டுப்போன கிரில் சிக்கனால் 20க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாக காரணமான தனியார் உணவகம் மீது நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறையினர் மீது பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றுகரையில் உள்ள தனியார் உணவகமானபிரிடா ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 20க்கு மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதில் இன்னும் 8 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் இதில் கூடைப்பந்தாட்ட […]
கீழக்கரையில் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 8 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அல் அஃபியா டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் திறப்பு விழா நிறுவனர் வழக்கறிஞர் நஃபீல் தலைமையில் நடைபெற்றது. இங்கு ஹஜ் உம்ரா சேவை மற்றும் ஹலால் ஷாப்பி மற்றும் டவுன்ஷோர் கார்மெண்ட்ஸ் என்ற ஆண்கள் ஆடையகம் போன்றவை விற்பனை செய்து வருகின்றனர். இவ்விழாவிற்கு கீழக்கரை துணை சேர்மன் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் , திமுக அயலக அணி மாவட்ட தலைவர் ஹனீஃபா ,தமுமுக மாநில துணை செயலாளர் சலிமுல்லாஹ் […]
சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு. மாவட்ட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தியும் ஏற்பட்டதுஇதில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீதி 13 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர் சோழவந்தான் வைகை பாலம் அருகே உள்ள பிரபல அசைவஹோட்டலில் நேற்றைய முன் தினம் இரவு கூடை பந்தாட்டவிளையாட்டு வீரர் பிரசன்னா உட்பட 10 பேரும் மற்றும் குழந்தை உட்பட 12 பேரும் இங்குள்ள தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் […]
ஹைதராபாத் நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷன்; கீழக்கரை மாணவன் சாதனை
ஹைதராபாத்தில் நடந்த நேஷனல் லெவல் குவிஸ் காம்படிஷனில் மூன்றாவது இடம் பெற்று கீழக்கரை மாணவன் அப்துல்லா சாதனை படைத்துள்ளார். நேஷனல் அகாடமி பள்ளியில் பயிலும் ஷகீல் மைதீன் என்பவரது மகன் அப்துல்லா என்ற மாணவன் 24 பள்ளிகளுக்கு இடையே நடந்த குவிஸ் போட்டியில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து இரு பள்ளிகள் மட்டுமே இதில் கலந்து கொண்டன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேஷனல் அகாடமி பள்ளி மற்றும் மதுரையைச் சார்ந்த மற்றொரு […]
செங்கோட்டை அரசு பள்ளியில் அழகிய ஓவிய கண்காட்சி..
செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியரின் அழகிய ஓவியப் படைப்புகள் அடங்கிய ஓவியக் கண்காட்சி 05.02.2025 புதன் கிழமை நடைபெற்றது. மின்நகா் ஹியூமன் அப்லிப்ட் டிரஸ்ட் இயக்குநா் ரெங்கநாதன் தலைமை தாங்கி ஓவியக் கண்காட்சியை துவக்கி வைத்தார். மின்நகா் சுற்றுச் சூழல் விஞ்ஞானி விஜய லெட்சுமி, வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் இல்ல இயக்குநா் திருமாறன் மற்றும் தேசிய பசுமைப் படையின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் பள்ளி […]
டெல்லியை நோக்கிய பயணத்தில் திமுக மாணவரணி..
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாணவர் அணியினர், மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி பயணம் மேற்கொண்டனர். ஒன்றிய பாஜக அரசின் பல்கலைக் கழக நிதிக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறி முறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக […]
ஆதாய கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அடிதடி வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..
சிவகிரியில் ஆதாய கொலை வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் செங்கோட்டையில் அடிதடி வழக்கின் இரண்டு குற்றவாளிகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குமரபுரம் சமுத்திரவேல் என்பவரின் மகன் தங்கமாரி (34) என்பவரை சிவகிரி காவல் துறையினர் […]
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சாவூர் மாநகர கலந்தாய்வு கூட்டம்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தஞ்சை மாநகர கலந்தாய்வு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் ஏ.வி.எம்.ஆனந்த், மாநகர அமைப்பாளர் ஜெயக்குமார். செய்தி தொடர்பாளர் முருகேசன். இளைஞரணி செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்த கூட்டத்தில், வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை பழைய பஸ் நிலையம் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வரும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும். இந்த கூட்டத்தில் மாவட்ட, […]
இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி.
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம் ,பூதலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பூதலூர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர் . பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் , செவிலியர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து […]
ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் . ! மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர் இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை […]
You must be logged in to post a comment.