ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும், அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த சிலர் வாங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோதமாக […]
Category: மாவட்ட செய்திகள்
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல் .!
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..! ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த […]
திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் விழா.!
திருவாடானை அருகே புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமரிசையாக நடந்தது.! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்களகுடியை அடுத்துள்ள கஸ்பார்நகர் புனித லூர்து அன்னை ஆலயம் திருப்பலி மற்றும் சப்பர பவனி விமர்சியாக நடந்தது. இந்த ஆலயத்திற்கு திருப்பலி மற்றும் சப்பரபவனியானது கடந்த பிப் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடைசி நாளான இன்று புனித லூர்து அன்னை ஆலயம் சிறப்பு சொரூபம் பல்லக்கில் எழுந்தருளி அதனை இறை மக்கள் கூட்டத்துடன் குருந்தங்குடி […]
ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்..!
ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவரப்பட்ட 250 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு காரில் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் தடுப்பு […]
கல்வியும்,சுகாதாரமும் இரு கண்களாக கருதி முதலைமைச்சர் வழியில் அமைச்சர்கள் பணியாற்றி வருகிறோம்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தத்தனேரி அருள்தாஸ்புரம் வார்டு 22இல், மாநகராட்சி திரு.வி.க மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஹனிவெல் நிறுவனத்தின் அறிவியல் உபகரணங்கள் தொகுப்பினை வழங்கினார்.இந்த நிகழ்வில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த்,மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன்,மண்டலத்தலைவர் சரவண புவனேசுவரி,மாநகராட்சி கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன்,மாமன்ற உறுப்பினர் மகாலெட்சுமி,பள்ளித்தலைமை ஆசிரியர் அன்புச்செல்வன்,ஹனிவெல் நிறுவனத்தின் அதிகாரி கிருஷ்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் பேசிய […]
பஸ் வசதி இல்லாதது லான விவசாயம் செய்ய முடியல -பரமன் பட்டி கிராம மக்கள் வேதனை
மதுரை மாவட்டம் சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குப்பல்நத்தம் பஞ்சாயத்தைச் சேர்ந்தது பரமன்பட்டி கிராமம். இக் கிராமத்தில் 350 மேற்பட்ட குடும்பங்களும் அருகிலுள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் 450க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றன. இக் கிராமங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் அருகில் உள்ள சின்ன கட்டளை கிராமத்தில் இறங்கி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டும். மேலும் கிராமத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் சின்ன கட்டளை […]
பாவூர் சத்திரம் பகுதியில் அரசு கலை கல்லூரி; முதல்வருக்கு வைகோ கோரிக்கை..
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என தமிழக முதல் அமைச்சருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த அறிக்கையில், தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம், பாவூர்சத்திரம் பகுதி கல்வியிலும், வர்த்தகத்திலும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. கீழப்பாவூர் பேரூராட்சி, குலசேகரப் பட்டி, கல்லூரணி ஊராட்சிகள் உட்பட நூற்றுக் கணக்கான கிராமங்களுக்கு மையப் பகுதியாக பாவூர்சத்திரம் விளங்கி வருகிறது. இவ்வட்டாரத்தில் உள்ள 11 அரசு […]
மதுரையில் அலங்கார மீன் வளர்ப்பு குழுவின் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு
மதுரை பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் அறையில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு மாநில மீன்வளத்துறை தேசிய மீன்வள அறுவடை பின்சார் தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தேசிய மீன்வளம் மேம்பாட்டு வாரியம் சார்பாக அலங்கார மீன் வளர்ப்பு குழுவின் மதிப்பு கூட்டல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.இந்நிகழ்வில் மதுரை மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒடிசாவின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சரோஜ் குமார் நன்னீர் அலங்கார […]
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442 வது பிறந்தநாள் விழா பண்டைய கால பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்பட்டது,
மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் 442வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திருஉருவசிலைக்கு தமிழ் வழி நாய்டு மக்கள் பேரவையின் தலைவர் செந்தில்குமார் நாயுடு அவர்கள் தலைமையில் மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் திரு உருவசிலைக்கு பண்டைய கால பாரம்பரிய முறைப்படி 400 ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் ஜெயந்தி விழா அன்று அரண்மனையில் எவ்வாறு மரியாதை செலுத்தப்பட்டதோ, அதேபோன்று வரலாற்றை மீட்கும் […]
பாப்பாபட்டி ஆச்சி கிழவி அறக்கட்டளை துவக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்திப்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில். இக்கோவில் சாமியை குல தெய்வமாக வழிபடுபவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ளனர்.இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பத்தை பூர்விகமாகக் கொண்ட இக்கோவில் வம்சாவளியினர் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்காக பாப்பாபட்டி ஆச்சி கிழவி அறக்கட்டளை என்னும் பெயரில் புதிதாக அறக்கட்டளை துவங்கியுள்ளனார்.இதன் அறிமுகநிகழ்ச்சியாக தைப்பூச திருநாளிலன்று உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் பொங்கல் வைத்து ஒச்சாண்டம்மனை வழிபட்டனர்.பாப்பாபட்டி பத்து தேவர் சார்பாக முதற்கட்டமாக […]
ஆர் எஸ் மங்கலம் அருகே அருள்மிகு பத்திரகாளியம்மன் ஸ்ரீ எழுந்தருள் நாயகி ஆலய கும்பாபிஷேகம் விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் தாலுகா வரவனி அருகே வ.மஞ்சள்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு பத்ரகாளியம்மன் ஸ்ரீ எழுந்தருள் நாயகி ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ பைரவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து. யாகசாலையில் வைத்து புனித குடங்களில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டு. புனித குடங்கள் தலையில் சுமந்து கோவிலை மூன்று முறை வலம் வந்த சிவாச்சாரியார்கள் கோவில் கும்பத்தில் புனித நீரை ஊற்றி மந்திரம் முழங்க சண்டை மேளம் முழங்க […]
தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை.! ஓராண்டுக்குள் சேதம் அடைந்ததால் அவதி..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரிய கீரமங்கலத்தில் புதிதாக தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டப்பட்டது. சேந்தனி செல்லும் சாலையில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் உள்ள இந்த தீயணைப்பு நிலையத்திற்கு மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறியதால் வாகனம் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், வாகனத்தை அருகில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் நிறுத்தப்பட்டு வந்தது.மேலும்,தீ விபத்து போன்ற அவசர காலங்களில் வாகனத்தில் நீர் நிரப்பி சம்பவ […]
மது அருந்தும் கூடாரமாகும் பயணிகள் நிழற்குடை..
தென்காசி மாவட்டம் வைத்திலிங்கபுரம் பகுதியில் திறந்த வெளியுடன் புதிதாக கட்டப்படுள்ள பயணிகள் நிழற்குடை மது மற்றும் சீட்டு விளையாட்டு பயிற்சி கூடமாக மாறி வருவதாகவும், இந்நிலையை தடுத்து நிறுத்தி, பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம், ஆவுடையானூர் வைத்திலிங்கபுரம் பகுதியில் புதிய பயணிகள் நிழற்குடை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் 7.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை […]
கொண்டலூர் பள்ளி மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா..
தென்காசி மாவட்டம், செங்கோட்டை பூலாங்குடியிருப்பு பகுதியில் உள்ள S.S.ஆர்கானிக் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணைக்கு கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவ மாணவியர் கல்வி சுற்றுலா மேற்கொண்டனர். அங்கு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரம் நடவு, வீட்டுத் தோட்டம் & மூலிகை கொத்து (பொக்கே) பற்றிய செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. S.S.ஆர்கானிக் பண்ணை நிர்வாக இயக்குனரும், ஓய்வு பெற்ற வேளாண் அலுவலருமான மு.சேக் முகைதீன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். கொண்டலூர் […]
மத்திய அரசு அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழகத்தின் சார்பில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் திமுக தலைமை செய்தி தொடர்புகுழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.,இந்த கூட்டத்தில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன்., மதுரையில் எய்ம்ஸ்க்கு செங்கலை நட்டு வைத்துவிட்டு சென்றார் மோடி, ஏன் கட்டவில்லை என்றால் ஜப்பனிலிருந்து பணம் வரவில்லை என சொல்கிறார்கள், ஆனால் அதற்கு பின் 7 […]
சோழவந்தானில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தனி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் மண்டல தலைவர் கதிர்வேல் தலைமை வாங்கினார் முன்னாள் மண்டல் தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார் வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவர் முள்ளை முத்துப்பாண்டி மண்டல் பொதுச் செயலாளர் ரமேஷ் நிர்வாகிகள் கருப்பத் தேவர் வரதராஜன் கேசவ மூர்த்தி நாகராஜ் செல்வி பேட்டை […]
சோழவந்தான் அருகே அமைச்சர் மூர்த்தி வரும் வழியில் பழமையான புளிய மர கிளைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்துவில் பழமையான புளியமர கிளைகள் திடீரென சாலையில் விழுந்ததில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதேநேரம் சோழவந்தானில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி வருகை தர இருந்த நிலையில் புளியமரம் சாலையில் விழுந்ததால் காவல்துறையினர் பதட்டம் அடைந்தனர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து அலுவலர்களை வரவழைத்து சாலையில் விழுந்து கிடந்த மர கிளைகளை ரம்பங்களை வைத்து வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர் அமைச்சர் […]
பார்வர்ட் பிளாக் ஆலோசனை கூட்டம்
மதுரை இரயில் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய குழுவின் மூன்று பேர் கொண்ட கமிட்டி ஆய்வு கூட்டம் மாநில பொதுசெயலாளர் பி.வி.கதிரவன் தலைமையில் மாநில தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அகில இந்திய தொழிற்சங்க பொது செயலாளர் (கர்நாடகா) ஜி.ஆர் சிவசங்கர், பண்டாசுரேந்திரரெட்டி(தெலுங்கானா செயலாளர்) ஜோதிரஞ்சன்(ஒடிசா) மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுரை பெரியார்நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சாத்தூர் புனித ஸ்தானிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 1987-89 ல் பயின்ற மாணவர்கள் 38 ஆண்டுக்கு பின் சந்தித்து பயின்ற காலத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் ஜஸ்டின், ஜேம்ஸ், ரிச்சர்டு அந்தோணிசாமி அந்தோணி, ஆல்பர்ட் ஜேம்ஸ் உட்பட முன்னாள் மாணவகளான ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்,காரியாபட்டி அருகே சித்துமூன்றடைப்பு […]
தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா
மதுரை கீழக்குயில்குடி ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா மதுரை மாவட்ட தலைவர் சபரிநாதன் தலைமையிலும், மாநிலச் செயலாளர் மாரிச்செல்வம்,மாநிலத் தலைவர் மகேந்திர குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் துரைப்பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்கத்தின் கொடி ஏற்றியும் வைத்து குத்து விளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் பிரபு, மாநில பொருளாளர் […]
You must be logged in to post a comment.