மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும் இந்த கோவிலில் தினசரி 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர் இந்த நிலையில் கோவிலின் முன்பு மூன்று மாதக் கொடி கம்பம் அருகில் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் குறிப்பாக போக்குவரத்து நெருக்கடி நிறைந்த இந்த பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் […]
Category: மாவட்ட செய்திகள்
மாற்றுத்திறன் படைத்தோருக்கு அரசு அடையாள அட்டைகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் ஆலங்குளம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வ மீனாட்சி, தென்காசி மாவட்ட மாற்றுத் […]
சிறுபான்மையினர் விரோத போக்குடன் செயல்படும் இராமநாதபுரம் நகராட்சி.! எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தலைவர் கண்டனம்.!!
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சாலையோர வியாபாரிகள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி […]
கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க். முபாரக் மதனி INTJ கீழக்கரை நகர் தலைவர் ஹாஜா அனீஸ் , 1வது வார்டு கவுன்சிலர் முகமது பாதுஷா , தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாஹ் கான் , KECT தலைவர் மன்சூர் Committee Of Mif நிர்வாகிகள் மற்றும் MYFA நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ISOUQ நிறுவனத்தின் தலைவர் அஹமது மற்றும் நிர்வாகிகள் யாசின் அக்ரம் […]
விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி.!
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், மாறனேரி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மண்புழு தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் மண்புழு தயாரிக்க உதவும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாறனேரி பஞ்சாயத்தின் கிராம நிர்வாக அலுவலர் அருள் மாணிக்கம் கலந்து கொண்டார் . விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சியை இயற்கை விவசாயி பசுபதி வழங்கினார் . 20 இயற்கை விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. […]
பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வு கருத்தரங்கம்.!
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு பயிற்சி தேர்வுக்கான கலந்தாய்வு கருத்தரங்கம் பாவை அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நேர்முக உதவியாளர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வித்திறன் பற்றியும் தேர்வு எழுதும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர். கருத்தரங்கு பயிற்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் செந்தில் குமார் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து […]
வேதாளையில் மின்னொளி கைப்பந்து போட்டி.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற முத்தப்பா பிரியாணி அணியினர் முதல் பரிசு வென்றது. பரீத் ஓட்டல், ஜே டி காகா அணிகள் 3ம், 4ம் […]
வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக வக்ஃப் மீட்பு பொதுக்கூட்டம்
மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தேவகோட்டையில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காந்தி ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச. உமர் பாரூக், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் எஸ்.முகமது அனஸ் சிறப்பு உரையாற்றினார்கள். மாவட்ட தலைவர் டாக்டர் அப்துல் கலாம், மாவட்ட பொதுச் செயலாளர் இன்ஜினியர் அகமது அலி, […]
மதுரை அழகர் கோவிலில் ரூ. 19.49 கோடி மதிப்பிலான புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்
, மதுரை அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் இந்து சமய அறநிலைதுறை சார்பாக ரூபாய் 19. 49 கோடி மதிப்பீட்டில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளிக்கு நான்கு வகுப்பறைகள், கருணை இல்லத்தில் சமையலறை, உணவருந்தும் கூடம், கருட தீர்த்தம் நடை பாதை மராமத்து , தென்மேற்கு கோட்டைச்சுவர் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் பணி நிறைவு பெற்ற மலைச்சாலை புதுப்பித்தல், மழை நீர் வடிகால் மற்றும் பாலம் அமைத்தல், பெரியாழ்வார் திருவரசு மேம்படுத்துதல், […]
ஸ்ரீ நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் ராஜமான்நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை மங்கள இசையுடன் கணபதி ஹோமம் நவக்கிரஹ ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் அன்னதானம் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா […]
சிவகங்கையில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இந்து முன்னனினர் எதிர்ப்பு..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் காதலர்களை ரோசாப்பூ கொடுத்து வரவேற்பு ஆஃபர் அளித்து உள்ளதாக சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்திருந்தனர். இதற்கு எதரிப்பு தெரிவித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் தாலிக் கயிறுடன் காதலர் தின ஆஃபர் அறிவித்த தனியார் பேக்கரி நிறுவனத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைத்து வந்த வடக்கு காவல் நிலைய போலீசார் பேக்கரி நிறுவனம் ஆஃபர்களை கேன்சல் செய்து […]
தஞ்சையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா…
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா தஞ்சையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்டத் தலைவர் கருப்பசாமி சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டத்துணை தலைவர்கள் கனகராஜ், சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குணசேகரன் துவக்கவுரையாற்றினர். தமிழ்நாடு இரண்டு சக்கர மோட்டார் வாகன ஒட்டுனர் பாதுகாப்பு சங்க மாநிலதலைவர் பிரகலாதன் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜரத்தினம் , கல்யாண சுந்தரம், சத்தியசீலன், ராஜன், சரவணபால்ராஜ், […]
பள்ளி வேன் மோதி இருவர் பலி..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்குடியில் இருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வேன் தேவகோட்டை நோக்கி செல்லும் போது சிறுவாச்சி சாலையில் ஞானஒளிபுறம் கிராமத்தில் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம் விபத்து நடந்த இடத்தில் துணைக் கண்காணிப்பாளர் கவுதம் விசாரணை நடத்தி வருகிறார்.
வக்ஃப் திருத்த சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்…
மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை எஸ்டிபிஐ ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக வக்ஃபு திருத்த சட்ட நகல் எரிப்பு போராட்டம் ஒபுளாபடித்துரை பகுதியில் நடைபெற்றது. கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அபுதாஹிர் தொகுப்புரை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் பக்ருதீன் வரவேற்புரை நிகழ்த்தினர். தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் கண்டன உரை நிகழ்த்தினார். தெற்கு மாவட்ட […]
இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்த காவல் துறையினர்..
தஞ்சை மாநகர காவல் துறையினர் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த வாகன ஓட்டிகள் 100 பேருக்கு அரை கிலோ ஸ்வீட் வழங்கி காதலர் தின வாழ்த்துகள் தெரிவித்தனர். இருபாலர் மட்டும்தான் காதலர் தினம் கொண்டாட வேண்டும் என்பது இல்லை அனைவரிடமும் அன்பை வெளிப்படுத்தி காதலர் தின வாழ்த்துகள் கூறலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தஞ்சை மாநகர காவல்துறையினர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் சாலையில் காதலர் தினத்தை ஓட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை […]
நெல்லையில் இலச்சினை வெளியீட்டு விழா..
நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழாவிற்காக புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழா வருகின்ற மார்ச் மாதம் 7-ஆம் நாள் அன்று பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடக்க உள்ளது. விழாவில், சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவிற்காக சிறப்பு இலட்சினை (லோகோ) ஒன்று […]
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.! 03 பேர் இறப்பு ஒருவர் காயம்..!!
இராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த குவாலிஸ் காரும் ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக வந்த தனியார் […]
மதுரை ரேடியோ மிர்ச்சியின் (தனியார் பண்பலை) “லவ் மாங்க்” நிகழ்ச்சி.!
மதுரை, பிப்ரவரி 14: காதலர் தினத்தையும், வானொலி தினத்தையும் முன்னிட்டு 98.3 ரேடியோ மிர்ச்சி தனது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “லவ் மாங்க்” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அன்பை மட்டுமே பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, இதில் மிர்ச்சி RJ நிதீஷ், “காதல் ஞானி” ஆக தோன்றி, நேயர்களை ஆச்சரியப்படுத்தினார். காதல், அன்பு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வேடிக்கையான முறையில் விளக்கி, அனைவருக்கும் மனமகிழ்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை கேகே நகரில் உள்ள ரேடியோ […]
கீழக்கரையில் பட்டமளிப்பு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் சின்னமாயாகுளம் அருகே அமைந்துள்ள இர்ஃபானுல் உலூம் எத்தீம்கானா & ஹிஃப்ளு மதரஸாவின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா & 19 ஆம் ஆண்டு விழா மதரஸா நிறுவனரும் வட்டார ஜமாத்து உலமா சபை தலைவருமான அப்பாஸ் அலி மன்பஈ தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை கௌரவ தலைவர் அஹ்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஃபாழில் ரஷாதி ஜாமிஆ அருவிய்யா தைக்கா முதல்வர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி உட்பட […]
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ். அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தில் முடிவு
பூதலூர் ஒன்றியத்தில் 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நீண்ட நாள் சம்பள பாக்கியை உடனே விடுவிக்க கோரியும்,கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் பூதலூர் தெற்கு ஒன்றியக்குழு சார்பில் பூதலூரில் பிப்ரவரி 14 அன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று மாலை (பிப்ரவரி 13) போராட்டக்காரர்களுடன் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மறிய ஜோசப் தலைமையில் […]