பொது தேர்வில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண் பெற ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை தலைமை குருசாமி மோகன் சாமி Another வழங்கினார்! பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் அச்சமின்றி சிறப்பாக தேர்வு எழுதி நல் மதிப்பெண் பெறுவதற்காக10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பள்ளி மாணவ மாணவியருக்கு சிறப்பு பூஜை ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் இன்று […]
Category: மாவட்ட செய்திகள்
மதுரையில் ஜி-ஸ்கொயர் நிறுவனம்.!
ஜி ஸ்கொயர் பார்ச்சூன் சிட்டி புதிய டவுன்ஷிப் உதயம் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் பாரம்பரியம் கலாச்சாரம் நிறைந்த ஆன்மீக நகரமான மதுரையில் தனது ஜி ஸ்கொயர் பார்சூன் சிட்டி என்னும் டவுன்ஷிப் திட்டத்துடன் கால் பதித்துள்ளது .நடுத்தர மக்களின் வீட்டுமனைகள் கனவை நினைவாக்கும் விதமாக இந்நிறுவனம் குறைந்த விலையில் சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது மேலும் ரியல் எஸ்டேட் துறையில் தனது சிறப்பான வளர்ச்சியுடன் மக்களுக்காக தரமான வீடுகளை சிறந்த வசதிகளுடன் […]
பட்டியல் இன மக்களின் 300 கோடி ரூபாய் சொத்து விடுதலை சிறுத்தைகள் முயற்சியால் மீட்கப்பட்டது-சிந்தனை செல்வன் எம்எல்ஏ
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கி அங்கீகாரம் பெற்றதைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் தமிழ் நிலவன் தலைமை வககித்தார், மாவட்டச் செயலாளர் சிந்தனை வளவன் முன்னிலை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ சிறப்புரை ஆற்றும் போது… விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக அரசிடமிருந்து பட்டியலின மக்களுக்காக […]
போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு விழா.!
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்வில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் […]
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு அன்னதானம்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திமுகவினர் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர் மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது முன்னதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது இதில் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் […]
குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 1.5 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தென்காசி தலைமை மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பின்வருமாறு விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. தற்போது மருத்துவ மனையில் இறந்த குழந்தைக்கு கடந்த புதன் கிழமை அன்று 1.5 வயது நிறைவடைந்ததும் வழக்கமாக செலுத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதன் பின் குழந்தைக்கு காய்ச்சல் மூன்று தினங்களாக இருந்த நிலையில், குழந்தையின் பெற்றோர் ஒரு […]
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி. மாணவர்கள் புதுப்புது படைப்பு. பெற்றோர்கள் மகிழ்ச்சி
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இவ்விழாவிற்கு எம்விஎம் குழும தலைவர் மணிமுத்தையா தலைமை தாங்கினார். கவுன்சிலர் வள்ளி மயில் முன்னிலை வகித்தார்.பள்ளி தாளாளர் கவுன்சிலர் டாக்டர் மருதுபாண்டியன் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார்.உதவி முதல்வர் தீபாரோகினி நன்றி தெரிவித்தார். இந்த கண்காட்சியில் மாணவ,மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் செய்து வைத்திருந்தனர். இதை மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கண்டுகளித்தனர். […]
குமாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஆர் பி உதயகுமார் சிறப்புரை
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் குமாரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் சமயநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் வரவேற்புரை ஆற்றினார் இதில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு வலுதூக்கும் போட்டி.!
மதுரையில் 7-வது சீனியர், 4-வது ஜூனியர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வலுதூக்கும் போட்டி காந்தி அருங்காட்சியகம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சிவகங்கை, ராம நாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வீரர்-வீராங்கனைகளின் உடல் எடைகளுக்கு ஏற்ப எவ்வளவு எடை தூக்கினார்களோ அவர்கள் வெற்றியாளர் ஆனார்கள். மேலும் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் வெற்றி […]
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் .!
*தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது* தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் மதுரை வில்லாபுரம் ரய்யான் கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முகமது பஷீர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் மற்றும் லியாகத் தலைவர்கள் வரவேற்புரையாற்றினார் மற்றும் முகமது பெய்க் சாஹிப் அவர்கள் தொகுப்பரை ஆற்றினார் மற்றும் காஜா முகைதீன், கான், கவி ஜாபர், அன்வர் சாஹிப், ஆலம் ஹாஜியார், ஜியாவுதீன் ஹாஜியார், […]
தென்காசி மாவட்டத்தில் வலுவான மழை; வெதர்மேன் ராஜா தகவல்..
தென்காசி மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் தரைக் காற்றுடன் கூடிய வலுவான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா அறிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் வலுவான மழையை சந்திக்கும். பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 01 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகும். சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி மாவட்டத்தில், சங்கரன் கோவில், […]
அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் .!
மதுரை விஷால் டி மால் & மேல மாசி வீதி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்-ன் CSR (கார்ப்பரேட் சமூக பொருப்புணர்வு) நிகழ்ச்சி மதுரை விஷால் டி மால் & மேல மாசி வீதி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்றது. இந்த […]
மதுரையில் பிஎம்சி மெகா பிஸ் விருது வழங்கும் விழா..
மதுரை திருமங்கலம் நான்கு வழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பி.எம்.சி மெகா பிஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவை இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளை பேரன் சிதம்பரம் துவக்கி வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ராஜாக்கூர் சபி சிறப்புரையாற்றினார்கள். மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் 350 […]
ஆலங்குளம் ஒன்றியத்தில் மின்கல வாகனங்கள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு சுகாதார பணிகள் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக மின்கல வாகனங்கள் வழங்கும் விழா ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு மின் கலம் மூலம் இயங்கும் தூய்மைப் பணி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், கடங்கனேரி, காவலா குறிச்சி, மாயமான் குறிச்சி, […]
சோழவந்தான் வெற்றிலைக்கான தபால் உறை பேரூராட்சித் தலைவரிடமிருந்து மாலைமலர் நிருபர் பெற்றுக் கொண்டார்
சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கியதை முன்னிட்டு வெற்றிலைக்கு தபால் உறை தபால் துறை சார்பில் சில மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது இந்நிலையில் இதற்காக முயற்சிகள் மேற்கொண்ட சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வார்டு கவுன்சிலர் சத்திய பிரகாஷ் மற்றும் வெற்றிலை கொடிக்கால் விவசாய சங்க நிர்வாகிகள் தபால் துறை அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த விழாவில் அனைவருக்கும் சோழவந்தான் வெற்றிலை படம் பொரித்த தபால் உறை வழங்கப்பட்டது இதில் பேரூராட்சி […]
சோழவந்தானில் மாணிக்கம் தாகூர் எம்பி யை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்பியைகண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி காமராஜர் சிலைக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சங்கர பாண்டி தலைமை தாங்கினார் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலை வகித்தார் மாவட்ட தொழிற்சங்க தலைவர் பாலாஜி மாநில பொதுச் செயலாளர் நளினி தெற்கு மாவட்ட தலைவர் ராஜா தேசிங் தேனி […]
பணியிலிருக்கும் போது தன்னை தாக்கிய சக பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் மிரட்டுவதாக புகார்.150க்கும் மேற்பட்ட முறை மதுரை ஆட்சியரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அவலம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை ஆத்தகரப்பட்டியைச் சேர்ந்தவர் தவசி (60).இவர் கடந்த 1980 முதல் எழுமலை மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக தற்காலிக ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்து தற்போது பணிநிறைவு பெற்றுள்ளார். இலருக்கு கீழ் பணியாற்றுபவர்கள் வயர்மேன் த.தவசி உதவியாளர் கதிரேசன் .இவர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும் வேலையில் அஜாக்ரதையாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.இது குறித்து தவசி பலமுறை இவர்களை கண்டித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 4.6.2022ம் ஆண்டு பணியிலிருக்கும் போது இவர்கள் வேலை செய்யாதது குறித்து தவசி கேட்ட […]
கீழக்கரையில் பாஜகவின் தெருமுனை கூட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மத்திய அரசின் 2025 2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் கீழக்கரை நகர் தலைவர் K.C.V. மாட முருகன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் தரணி R. முருகேசன் மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் T. பாரதி ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மக்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டையை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் பொதுச் செயலாளர் கருங்கதாஸ் விளையாட்டுப் பிரிவு மாவட்டச் […]
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில்2 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க வெங்கடேசன் எம் எல் ஏ பூமி பூஜை
சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் இருந்து மேற்கே 5 கிலோ மீட்டர் அளவில் ரோடு மிகவும் மோசமாக இருந்து குண்டு குளியுமாக இருந்தது இதனால் பல விபத்துகள் நடந்து வந்தது. இது குறித்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி இந்த ரோடு புதுப்பித்து கொடுப்பதற்கான நிதியைப் பெற்றுத் தருமாறு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனிடம் கோரிக்கை வைத்தார். இதன் பேரில் அந்த ரோட்டை புதிதாக போடுவதற்கு 2 கோடியே20 லட்சம் செலவில் போடுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. […]
சோழவந்தான் அருகே திருவேடத்தில் நெடுஞ்சாலைத் துறையினரின் தொடரும் அலட்சியத்தால் விபத்து ஏற்படும் அபாயம்
சோழவந்தான் அருகே திருவேடகத்தில் சாலையின் நடுவே முழங்கால் அளவு ஏற்பட்டுள்ள பள்ளம் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் திருவிடகம் ஏடகநாதர் கோவில் நுழைவாயில் முன்பு சாலையின் நடுவில் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது இதன் அருகிலேயே வைகை அணைகளில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் பைப்புகள் செல்கிறது இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக வெளியேறும் குடிநீர் பள்ளத்திற்குள் விழுந்து சாலை முழுவதும் தண்ணீர் செல்கிறது மேலும் […]
You must be logged in to post a comment.