கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி வட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், தலைமையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன, மகளிர் சுய உதவி மூலமாக பயனாளிகளுக்கு கடன் உதவி , வேளாண்துறை சார்பாக விவசாய பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு இணைய வழி […]
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தான் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் தன்னார்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினி கிஷோர் சிங் இவர் கல்வி மற்றும் தொழில் முனைவோற்கான மேலாண்மை படிப்பை பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த நிலையில் மதுரையில் பல்வேறு கிராம பகுதிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்ப பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறார் அதாவது கல்வி இன்டர்நெட் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் உணர்வு தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவற்றை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பச்சை காளியம்மன் முனியாண்டி கோவில் உற்சவ விழா அக்னிசட்டி பால்குடம் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகர் அருள்மிகு ஸ்ரீ பச்சை காளியம்மன் முனியாண்டி கோவில் உற்சவ விழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ பச்சை வள்ளி அம்மனுக்கு பொங்கல் வைத்து அக்னிசட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து பால் தயிர் நெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். மாலை பசும்பொன் நகர் பகுதியில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், […]
ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் மகேஷ்பாண்டியின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரண நிதியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் பாண்டி பட்டதாரியான இவர் மாடுபிடி வீரராகவும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிக்கும்போது காளை முட்டியதில்பரிதாபமாக உயிரிழந்தார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மகேஷ் பாண்டியின் குடும்பத்தினர் […]
பத்திரமாக தரையிரங்கிய சுனிதா வில்லியம்ஸிற்கு பள்ளி குழந்தைகள் பாராட்டு
உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியின் சார்பாக விண்வெளி நாயகி சுனிதா வில்லியம் அவர்களை இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பாகவும் welcome To India என்று வாழ்த்தினர். இன்று 19 .03 .25 புதன்கிழமை அதிகாலையில் 9 மாத பயணத்திற்குப் பிறகு டிராகன் மூலமாக விண்வெளியில் இருந்து மண்ணைத் தொட்ட இந்தியா வம்சாவளியை சார்ந்த விண்வெளி நாயகி தனது 3 சக வீரர்களுடன் பூமிக்கு திரும்பியதன் மூலம் தைரியம் /உறுதி/ விடா முயற்சி இவைகளை நமக்கு கற்றுத் […]
சோழவந்தானில் தி ஐ பவுண்டேஷன் சார்பில் கண் சிகிச்சை முகாம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் சந்திரன் பேலஸ் மஹாலில் மதுரை அண்ணாநகர் தி ஐ பவுண்டேஷன் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மருத்துவர் விசாலாட்சி அவர்களின் ஆலோசனையின் பேரில் பிரின்ஸ் இம்மானுவேல், மோகனா ,தினகரன், ஆகியோர் கண்பார்வை குறைபாடுகள் ,ரத்த அழுத்த பரிசோதனை ர்த்தத்தில் சர்க்கரை அளவு, கண் புரை, கண் சதை வளர்ச்சி, கண்ணில் நீர் அழுத்தம் ,ஒற்றைத் தலைவலி உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான […]
சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி: அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை.!
ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினத்தில் ஆலிம் நகர் புதிய பள்ளி வளாகத்தில் எஸ்டிபிஐ கட்சி ஜிபி கமிட்டி சார்பாக அதன் தலைவர் நசீர் மைதீன் தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்கள் நலனுக்காகவும் ஒற்றுமையோடு வாழ்வதற்கும் நாட்டின் நடக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் இருக்கு தீர்வு ஏற்றுவதற்கும் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் நோய் இல்லாமல் வாழ்வதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. நோன்பு திறப்பதற்கு உண்டான பழங்கள் பேரிச்சம் பழங்கள் […]
அவதூறு பரப்பியவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் துணைத் தலைவர் அஜ்கர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயலாளரும் பழைய குத்பா பள்ளி ஜமாத் செயலாளரும் கீழக்கரை நகராட்சியின் 19வது வார்டு உறுப்பினருமான சப்ராஸ் நவாஸ் என்பவரை சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பிய முத்து வாப்பா கீழக்கரை விசுவாசி போன்ற பெயரில் கள்ளத்தனமாக ஐடி உருவாக்கி அவதூறு பரப்பிய நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. […]
உசிலம்பட்டிக்கு வந்த தவெக மாவட்ட செயலாளருக்கு கிரைன் மூலம் 21 அடி உயர மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்து வருகிறார்., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் என்பவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராகவும், இணைச் செயலாளர், பொருலாளர், துணைச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை நியமித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்., இந்நிலையில் பொறுப்பேற்ற நிர்வாகிகள் சென்னையில் […]
அலங்காநல்லூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்த பாஜகவினர் கைது
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் கண்டித்தும் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜ்குமார் செய்ய வலியுறுத்தியும் தமிழக முழுவதும் பாஜகவினர் சாலை மறியல் செய்ய முன்வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் தமிழக முழுவதும் இன்று காலை கைது செய்யப்பட்டனர இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக சம்பவ […]
அலங்காநல்லூரில் தமிழோடு விளையாடிய வணிகவரி பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி .தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை திறப்பு விழாவில் நடைபெற்ற பெயர் குழப்பம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருத்துவ வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. பெயர் பலகை திறந்து வைத்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி அலங்காநல்லூர் என்ற எழுத்தில் பிழையாக இருந்தது. அதனை அமைச்சர் மூர்த்தியோ மாவட்ட ஆட்சியரோ மற்ற அதிகாரிகளோ கண்டுகொள்ளவில்லை பெயர் பலகை திறந்தவுடன் புதிதாக வழங்கப்பட்ட கால்நடை மருத்துவ வாகனத்தின் சாவி மாதிரியை ஒப்படைக்கச் சென்றார். தமிழை வளர்ப்பதாக கூறும் விடியா திமுகவினர் ஆளும் அரசின் அமைச்சர் தான் […]
சோழவந்தான் வைகை ஆற்றில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் பிணம் போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் சோழவந்தான் கீழ ஒட்டுப்பச்சேரி வைகை ஆற்றின் கரையோரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில்சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் காவல்துறையினர்பிணத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இறந்து கிடந்தவர் அடையாளம் தெரியாத நிலையில் இருந்ததால் வைகை ஆற்றில் நீரில் அடித்து வரப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றனரா என்ற கோணத்தில் […]
சோழவந்தான் கலைவாணி பள்ளி ஆண்டு விழாவை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி ரவி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்
சோழவந்தான் பசும்பொன் நகரில் அமைந்துள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தாளாளரும் தொழிலதிவருமான டாக்டர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் நிர்வாகிகள் பாஜக விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல்நீதிபதி ரவி குத்துவிளக்கேற்றி ஆண்டு விழாவை தொடங்கி […]
என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க…கலெக்டருக்கே தெரியாம…. அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பேரூர் செயல் அலுவலரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்
என்ன நிகழ்ச்சி நடத்துறீங்க கலெக்டருக்கே தெரியாம அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் பேரூர் செயல் அலுவலரை கடிந்து கொண்ட மாவட்ட ஆட்சியர்.நிகழ்ச்சி நடப்பது தெரியாமல் வேறு பகுதிக்கு சென்றுஅமைச்சர் வந்த பிறகு தாமதமாக மாவட்ட ஆட்சியர் வந்ததால் அலங்காநல்லூரில் ஏற்பட்ட குழப்பம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சியில் காவல் நிலையம் பின்புறமாக பேரூராட்சி சார்பாக 5.12 கோடி மதிப்பில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை விழா இன்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் […]
கழிவு நீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து குழந்தை உயிரிழப்பு. விஏஓவை கிராம மக்கள் முற்றுகை
வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு குழந்தை இறந்த இடத்தை பார்வையிட வந்த கிராம நிர்வாக அலுவலரை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆத்திரம் மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கழிவு நீர் குழாயில் அண்ணன் தம்பி விழுந்ததில் அண்ணன் உயிரிழந்த நிலையில் ஆபத்தான நிலையில் தம்பி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
ஜல்லிக்கட்டு காளைமுட்டியதில் மாடுபிடி வீரரான பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும் 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர் ஜல்லிக்கட்டு போட்டியில் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் பாண்டி வயது 25 எம் காம் பட்டதாரி மாடுபிடி வீரர் ஜல்லிக்கட்டில் மாடு பிடித்த போது இடது நெஞ்சில் மாடு குத்தியதில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார் […]
சோழவந்தானில் தமிழக பட்ஜெட் எல் இ டி திரை மூலம் நேரடி ஒளிபரப்பு
தமிழக சட்டசபையில் 2025. 26 ஆம் ஆண்டு நிதிநிலை காண பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக முழுவதும் 900க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரை மூலம் பொது மக்களுக்காக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு வேளாண் துறைக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிகழ்ச்சியினை led திரை மூலம் பொது மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்தனர் இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்டத்திட்டகுழு உறுப்பினர் வார்டு […]
இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா.!
இராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா மற்றும் பாதுகாப்பான ஊட்டச்சத்துமிக்க உணவு அனைத்து நுகர்வோருக்குமான அடிப்படை உரிமை கருத்தரங்கு கிரியேட் அமைப்பு சார்பில் நடந்தது. கிரியேட் தலைவர் முனைவர். பி. துரைசிங்கம் தலைமை வகித்தார். கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத் தலைவர் மு.செய்யது இப்ராஹீம் வரவேற்றார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டலத் தலைவர் மு. மதுரைவீரன், கிரியேட் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் வே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் […]
ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.!
ராமநாதபுரம் நகர் கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்: ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு..! ராமநாதபுரம் நகர அஇஅதிமுக சார்பில், ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட்டில், மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு தனியார் மஹால்களில், அடுத்தடுத்து இரு வேறு இடங்களில் மதியம் முதல் மாலை வரை பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர்கள், கழக அம்மா பேரவை இணைச் […]
அதிமுக கழகத்தில் இணைந்த இளைஞர்கள்..!
ராமநாதபுரம் தனியார் மகாலில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் ஏற்பாட்டில் மாவட்டக் கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் 137 இளைஞர்கள் தன்னார்வமாகவும், திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியிலிருந்து விலகியும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் பொன்னாடை போர்த்தி அவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில்,கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜ வர்மன், கழக அமைப்பு செயலாளர் […]
You must be logged in to post a comment.