மேட்டுப்பாளையம் சின்ன மத்தம்பாளையம் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கட்டிடத்திற்கு SMT. K.கல்யாணசுந்தரம் 20 லட்சம் ரூபாய் நன்கொடை நிதியுதவி கோவை மாவட்டத்தில் ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க அமைப்புகளால் சின்னமத்தம் பாளையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு கோவை மாவட்ட ஒக்கலிகர் பொதுநல அறக்கட்டளையின் அறங்காவலரும் காரமடை எஸ் எம் டி குழும நிர்வாக இயக்குனருமான கே கல்யாணசுந்தரம் அவர்கள் கட்டிட நிதி நன்கொடையாக இருபது 20 லட்சம் ரூபாய் வழங்கினார் இந்த நிகழ்வில் தமிழ்நாடு இந்து […]
Category: மாவட்ட செய்திகள்
கடும் மழையிலும் மீட்பு பணியை மேற்கொண்ட கோவை மேட்டுப்பாளையம் காவல்துறையினர்.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மாலை பரவலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது இதனால் மேட்டுப்பாளையத்தில் பிரதான சாலையான ரயில் நிலையம் சாலையில் சிவன் தியேட்டர் அருகில் மிகப் பிரமாண்டமான மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்துவிட்டது இந்த சாலையை கடந்து தான் மேட்டுப்பாளையத்தில் மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் இதனால் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சின்னக்காமணன் தலைமையில் காவல்துறையினர் பலத்த மழை இருக்கிடையே சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக […]
பாலை கீழே கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோடு முருகன் கோவில் அருகில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் பாலை ரோட்டில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஏ.சி வெண்மணிச் சந்திரன் தலைமையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மாவட்ட தலைவர் பி பெரிய கருப்பன் முன்னிலையில் மாநிலத் தலைவர் கே முகமது அலி மாநில பொதுச் செயலாளர் நாமக்கல் பி […]
ஷாம்பியன்ஷிப் கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறை; துணை முதலமைச்சர் பாராட்டு..
இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், 19 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் ஷிப் கோப்பையை வென்றது. கோப்பை வென்ற தமிழ்நாடு காவல் துறையினருக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். 25-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கி சுடும் போட்டி 2024-2025 நிறைவு விழா 21.03.2025 அன்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த போட்டியானது துப்பாக்கி சுடும் […]
சோழவந்தானில் தடை செய்யப்பட்ட கிரில் சிக்கன் உணவகத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கிய அதிகாரிகள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட தனியார் உணவகத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது சில மாதங்களுக்கு முன்பு தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட மூன்று வயது குழந்தை உட்பட 10க்கும் மேற்பட்டோர் சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரை அரசு […]
இலஞ்சி பி.எட் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில், தென்காசி வி.டி.எஸ்.ஆர் நிறுவனம் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் கல்லூரி மாணவிகள் இடையே நடந்தன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) கலா வென்சிலா வரவேற்றார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை பாதுகாப்பு, விவசாயத்தை பாதுகாத்தல், நீர் மாசுபடுதலை தடுத்தல், வனப் பாதுகாப்பு, போதை தடுப்பு ஆகியவற்றை […]
அரசு பள்ளியில் உலக வன தினம், உலக நீர் தினம்
கோவை மாவட்டம் காரமடை வட்டம் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன தினம் மற்றும் உலக நீர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டதுகாரமடை உள்வட்டும் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன தினம் மற்றும் உலக நீர் தினத்தை தொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகள்உற்சாகமாக கொண்டாடினர்.சிறப்பாக நடைபெற்ற உலக வன தினம் மற்றும் உலக நீர் தினத்தின் நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, நீர் வளத்தின் முக்கியத்துவம், மற்றும் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றனபள்ளி ஆசிரியர்கள் […]
அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டியில் கிராம பொது சாவடியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டையம்பட்டியில் கிராமசாவடி ஒன்று கலந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது கட்டி முடிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை கிராம சாவடி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை கொண்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சில தனி நபர்கள் பொதுச்சாவடியை பூட்டி பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் அபகரிக்க முயல்வதாக முதலமைச்சரின் தனிப்பிரிவு மதுரை மாவட்ட ஆட்சியர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் […]
வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நெல் நனைவதாக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் எதிரொலி ..இரு மடங்கு கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை ஊராட்சியில் ஒருபோக பாசன விவசாய மூலம் வடுகபட்டி தனிச்சியம் அய்யங்கோட்டை கல்லுப்பட்டி நகரி உள்ளிட்ட இடங்களில் விவசாயம் செய்யப்பட்டு தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது அய்யங்கோட்டை பகுதியில்கடந்த 20 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது குறைவான கொள்முதல் அளவு இருப்பதால் நிறைய விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்தநெல்லை போட முடியாமல் தவித்தனர். முறைகேடு நடக்காமலும், கொள்முதல் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மதுரை […]
பன்னீர் ரோஜா விலை குறைவால் பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே கருகும் அவலம்
உசிலம்பட்டி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பன்னீர் ரோஜா மலர்களின் விலை குறைவால் – பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே கருகி வரும் சூழல் உருவாகியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுபட்டி, வகுரணி, கள்ளபட்டி மற்றும் கல்லூத்து, பெருமாள்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை, பன்னீர் ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்துள்ளனர்., வெயிலின் தாக்கம் அதிகரித்தன் காரணமாக பூக்களின் விலை கடுமையாக குறைந்துள்ளது, அதன்படி பன்னீர் ரோஜா கிலோ […]
தேவகோட்டையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை.!
தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 300 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி உற்சவ முளைக்கொட்டு பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழா ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு காமாட்சி அபிராமி சரஸ்வதி சந்தான லட்சுமி பகவதி அம்மன் மீனாட்சி வைஷ்ணவி போன்ற சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் தீபாரனையும் […]
கேஜி மில் நிர்வாகத்தை கண்டித்துசி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டம் சிறுமுகை தென்திருப்பதி நால்ரோடு அருகே அமைந்துள்ள கேஜி மேல் நிர்வாகம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் போனஸ் மற்றும் நான்கு மாத சம்பளம் உள்ளிட்ட இஎஸ்ஐ பிஎப் போன்ற தொழிலாளர்களுக்கான அடிப்படை நிலுவைத் தொகைகளை வழங்காததை கண்டித்து சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
தென்காசியில் இலவச பஸ் பாஸ் சிறப்பு முகாம்..
தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். தென்காசி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி, பணி மற்றும் சிகிச்சைக்குச் செல்லும் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான சிறப்பு முகாம் (22.03.2025) அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. […]
தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 300 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி உற்சவ முளைக்கொட்டு பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இவ்விழா ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு காமாட்சி அபிராமி சரஸ்வதி சந்தான லட்சுமி பகவதி அம்மன் மீனாட்சி வைஷ்ணவி போன்ற சிறப்பு அலங்காரமும் சிறப்பு அபிஷேகமும் தீபாரனையும் நடைபெற்று வருகிறது. இன்று காலை சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி […]
வாடிப்பட்டியில் மத்திய அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி சிறப்புரை
மதுரை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக வாடிப்பட்டியில் இந்தி எதிர்ப்பு நிதி பகிர்வில் பாரபட்சம் தொகுதி மறுசீரமைப்பில்அநீதிஆகியவற்றை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார் வாடிப்பட்டி பேரூராட்சி சேர்மன் பால்பாண்டியன் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் […]
உரிய விலை இல்லாதால் செடியிலேயே அழுகும் தக்காளிகள் .மாட்டுக்கு இரையாகும் அவலம்
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே நாகமலை அடிவாரத்தில் உள்ளது பன்னியான் கிராமம் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ள இந்த கிராமத்தில் தக்காளி கத்திரிக்காய் வெண்டைக்காய் போன்ற விவசாயம் அதிகம் விளையும் பகுதியாக பார்க்கப்படுகிறது இந்த பகுதியில் தற்போது 200 ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர் இந்த நிலையில் அதிக மகசூல் காரணமாகவும் போதிய விலை இல்லாத நிலை காரணமாகவும் வயல்களிலே தற்காளிகளை அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் மேலும் தக்காளி நிலத்திற்குள் கால்நடைகளை மேய விட்டு […]
பிள்ளையார்பாளையம் ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா.!
மதுரை மாவட்டம் வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோடு பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவில் பதினோராம் ஆண்டு வருடாபிஷேக விழா மதுரா பில்டிங்ஸ் உரிமையாளரும் கோவில் அறங்காவலருமான வி கே தர்மராஜ் தலைமையில் மதுசூதனன் என்ற கணேஷ்ஐயங்கார் முன்னிலையில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜையோடு துவங்கியது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ மதுர விநாயகர் மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் தீபாரதனையும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கிழவகராஜன் பாண்டியன் ஒருங்கிணைப்பாளர்கள் குப்புசாமி […]
சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஆட்சியரிடம் மனு.!
மேட்டுப்பாளையம் தாலுக்கா சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாமில் மேட்டுப்பாளையத்தில் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மனுவாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் பல்வேறு கோரிக்கைகள் பொதுமக்களிடம் இருந்து மனுவாக பெறப்பட்டது நகராட்சியில் நடைபெற்ற முகாமில் மேட்டுப்பாளையம் தாலுக்கா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக […]
மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாம்.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி வட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், தலைமையில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் முகாம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன, மகளிர் சுய உதவி மூலமாக பயனாளிகளுக்கு கடன் உதவி , வேளாண்துறை சார்பாக விவசாய பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு இணைய வழி […]
சோழவந்தான் பகுதியில் கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் தன்னார்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சினி கிஷோர் சிங் இவர் கல்வி மற்றும் தொழில் முனைவோற்கான மேலாண்மை படிப்பை பெங்களூர் ஜெயின் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த நிலையில் மதுரையில் பல்வேறு கிராம பகுதிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்தில் புதிய தொழில்நுட்ப பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறார் அதாவது கல்வி இன்டர்நெட் பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு மெய்நிகர் உணர்வு தொழில் முனைவோர் பயிற்சி ஆகியவற்றை கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி […]
You must be logged in to post a comment.