திமுக மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்புகளை தகவல் தொழில் நுட்ப.அணி மாநில செயலாளர் டி ஆர் பி ராஜா அறிவித்துள்ளார் இதில் மதுரை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளராக சோழவந்தானை சேர்ந்த பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார் இவருக்கு கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
Category: மாவட்ட செய்திகள்
தென்கரையில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சங்கரா மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
சோழவந்தான் அருகே தென்கரையில் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை மற்றும் சங்கரா கண் மருத்துவமனை சார்பில் தென்கரை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமிற்கு மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கண் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளுக்கு கண்களை பரிசோதனை செய்தனர் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர் இதில் சர்வதேச ஐக்கிய கலாம் அமைப்பாளர்நாகு ஆச்சாரி ஊராட்சி செயலாளர் முனிராஜ் செந்தில் மற்றும் சங்கரன் […]
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் பால்குடம் நிகழ்ச்சி வருகின்ற திங்கட்கிழமை நடைபெற உள்ளது ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்
கீழக்கரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை .!
பக்ரீத் பண்டிகை தியாகப் திருநாள் கொண்டாட்டம். ! இஸ்லாமியர்கள் இறைவனை வணங்கி ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.!! ஹஜ் பெருநாள் அல்லது தியாகத் திருநாள் உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. வசதியுள்ள முஸ்லிம்கள், ‘ஹஜ்’ செய்வது என்பது, இஸ்லாத்தின் […]
சிவகங்கை மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை.!
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. சிவகங்கை வாலாஜா நவாப் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் சிறப்பு தொழுகையை மௌலானா முஹம்மது அன்சர் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் சிறப்பு சொற்பொழிவை மௌலானா பிலால் முஹம்மது அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். வாலாஜா நவாப் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் கூட்டுப் […]
சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா மூன்றாம் நாள் திருவிழாவில் அம்மன் யாழி வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலாவில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மூன்றாம் நாள் பெருந்திருவிழாவில் மண்டகப்படி தாரார்கள் சுப்பையா முதலியார் அண்ட் சன்ஸ் தாண்டவன் முதலியார் அண்ட் சன்ஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் அம்மன் யாளி […]
கருப்பட்டி கிராமத்தில் உள்ள ஓம் அரியவீர ஸ்வாமி திருக்கோவில் கோவில் கும்பாபிஷேக விழா
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி கிராமத்தில் உள்ள ஓம் அரியவீர ஸ்வாமி திருக்கோவில் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கருப்பட்டி கிராமத்தில் எழுந்தருளி அருள் பாளித்து வரும் ஓம் அரிய வீரஸ்வாமி, ஓம் கும்பத்து மாரியம்மன், வல்லாந் திருவரசு ஐயன்,, ஓம் பார்வத பத்தினி அம்மன், ஆகிய திருக்கோவில் அஷ்டபந்தனமகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி செந்தில் சிவாச்சாரியார் தலைமையில் சாமி பெட்டி வீட்டில் […]
மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் 26 கூட்டமைப்பு இணைந்து ஈதிக மைதானத்தில் பக்ரீத் பண்டிகையை சிறப்பு தொழுகை நடத்தினர் தமிழகம் முழுவதும் இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள் பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகப் பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று சாமி தரிசனம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர் பின்னர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் பொது மேலாளர் மணி வணிகத்துறை துணை மேலாளர் சதீஷ்குமார் தொழில்நுட்ப மேலாளர் தயாள கிருஷ்ணன் சோழவந்தான் […]
காவலர்களுக்கு கீழை நியூஸ் பாராட்டு..
விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு தடுப்பை முறைப்படுத்திய தென்காசி மாவட்ட காவல் துறையினரை கீழை நியூஸ் செய்தி நிறுவனம் பாராட்டுகிறது. தென்காசியில் இருந்து மதுரை செல்லும் சாலையில், (இ.விலக்கு ரவுண்டானா அருகில்) வைக்கப்பட்ட பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வண்ணம் சாலையில் விழுந்து காணப்படுகிறது என்றும், விபத்து ஏற்படும் முன் பேரிகார்டு முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கீழை நியூஸில் 06.06.2025 அன்று செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி சமூக ஆர்வலரால் தென்காசி மாவட்ட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு […]
தென்காசி இ.விலக்கு பகுதியில் ஆபத்தான நிலையில் பேரிகார்டு..
தென்காசி இ.விலக்கு பகுதியில் விபத்தை தடுப்பதற்காக வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சாய்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் இ.விலக்கு ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டு உள்ள பேரிகார்டு சாலையில் சாய்ந்து விபத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது. தென்காசி பகுதியில் இ.விலக்கு சாலை அதிக போக்குவரத்து நிறைந்த முக்கியமான சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக அதிகமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் தினமும் […]
பிரமலைக் கள்ளர் சமுதாயத்திற்கு சொந்தமான இடங்களை தமிழகஅரசு கையகப்படுத்தி வருவதைக் கண்டித்து உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பிரமலைக்கள்ளர் சமுதாய மக்கள் பல நுறாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்களுடைய வீரதீர செயல்களை பாராட்டி பிரிட்டிஷ் அரசு சுதந்திரத்திற்கு முன் பல நிலங்களை மானியமாக கொடுத்துள்ளது.சுதந்திரத்திற்கு பின் பட்டா மற்றும் பதிவுப்பத்திரம் மூலமாக இச்சமுதாய மக்கள் அனுபவித்து வந்தனர்.தற்போது தமிழக அரசு கையகப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு பிற சமூகத்தைச் சேர்ந்த போலியான ஆட்கள் மூலம் ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகின்றது.உதாரணமாக உசிலம்பட்டி அருகே புத்தூர் சுப்பிரமணிய கோவிலைச் சுற்றியுள்ள நிலங்களை வேறு சமுதாய நபர்கள் […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உசிலம்பட்டி தாலுகா 25 ஆவது மாநாடு நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உசிலம்பட்டி தாலுகா 25 ஆவது மாநாடு உசிலம்பட்டி சந்தை தேவர் மகாலில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி சின்னா தேவர் கொடியேற்றி தொடங்கி வைத்தார். மாநாட்டில் மாநில கட்டுப்பாட்டு குழு பி காளிதாஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில செயற்குழு தீ ராமசாமி மாவட்ட செயலாளர் பி முத்துவேல் விவசாய தொழிலாளர் சங்கம் விருமாண்டி என். ஜீவானந்தம் கலந்து கொண்டனர் . மாநாட்டில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா இரண்டாம் நாள் திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றுதல் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 17 நாள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் தினந்தோறும் சிம்மம், யாழி, காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலாவில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இரண்டாம்நாள் பெருந்திருவிழாவில் மண்டகப்படிதாரர் பூ மேட்டு தெரு கிராமத்q தலைவர் மணி முத்தையா ஏற்பாட்டில் காலை 9 மணிக்கு திருக்கோவிலில் இருந்து அம்மனை […]
தென்காசி மாவட்டத்தில் (ஜூன்-04) மின்தடை..
திருநெல்வேலி கிராமப்புற கோட்டம் மற்றும் தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஊத்து மலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் மின் நிலையங்களில் 04.06.2025 புதன் கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஊத்து மலை, கீழக்கலங்கல், குறிஞ்சான் குளம், மேல மருதப்பபுரம், சோலை சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலி யூத்து, கல்லத்திக்குளம், […]
சோழவந்தானில் கருணாநிதி பிறந்த நாள் விழா
சோழவந்தானில் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பேரூர் மூன்றாவது வார்டு ரயில்வே பாலம் அருகில் சோலை ராம்குமார் தலைமையில் மு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் அவைத் தலைவர் வேதநாயகம், முன்னாள் தொமுச செயலாளர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது கொடியேற்றத்துக்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார் அதனைத் தொடர்ந்து கொடியேற்றத்திற்கான பூஜை பொருட்களுடன் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர் பின்னர் கோவிலில் உள் பிரகாரத்தில் […]
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முள்ளிப்ள்ளம் கிளைக் கழகம் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய முள்ளிப்பள்ளம் திமுக கிளைக் கழகம் சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இனிப்புகள் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் கேபிள் ராஜா தலைமை வகித்தார். மகளிர் அணி சந்தான லட்சுமி முன்னிலை வகித்தார். இளங்கோவன், காமாட்சி ,பாஸ்கரன், ராஜமாணிக்கம், முத்துராமலிங்கம் மார்நாடு, தெய்வம், சங்கர் ,காளிமுத்து, யாகூப் கான், வண்டிக்காரராசு, ஆனந்தன், சக்திவேல், லீலாவதி, பாண்டி […]
வாடிப்பட்டி வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ. 75லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இந்த சந்தைக்கு மதுரை,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 […]
வாடிப்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது பதவி காலம் வரை ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்த பணத்தை வழங்க கோரி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கிருஷ்ணவேணியிடம் கடிதம் மூலமாகவும் […]
You must be logged in to post a comment.