சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமம் உள்ளது. இங்கு இராமயணகால சரித்திர புகழ் வாய்ந்த ஸ்ரீ பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பழங்காலம் தொட்டேதேரோட்டத்திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் காப்புக்கட்டி 9நாள் திருவிழா நடைபெறும். காப்புக்கட்டிய நாள் முதல் தினமும் மண்டகப்படி நடக்கும். 8ம் திருநாள் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் […]
Category: மாவட்ட செய்திகள்
திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது கோவில் முன்பு யாக வேள்வி நடைபெற்று நந்தி பகவானுக்கு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சதுர்வேத கணபதிக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் திருவேடகம் தச்சம்பத்து மேலக்கால் […]
தாரப்பட்டியில் நல்ல குடி தண்ணீர் சாக்கடை வசதிமகளிர் உரிமைத் தொகை கேட்டு அமைச்சர் மூர்த்தியின் காரை மறித்த பெண்கள்
மதுரை தாராபட்டி கீழ மாத்தூர் துவரி மான் புதுக்குளம் ஆகிய பகுதிகளில் சாலை பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறைஅமைச்சர் மூர்த்தி வருகை தந்த நிலையில்மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் பூமி பூஜையில் கலந்து கொண்டு கிளம்பிய அமைச்சர் மூர்த்தியின் காரை வழிமறித்த பெண்கள் 4 அரை ஆண்டுகளாக நல்ல தண்ணீர் வரவில்லை, சாக்கடை வசதி செய்து தரவில்லை மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என […]
சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என வார்டு கவுன்சிலர் பரபரப்பு புகார்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இதில் பேரூராட்சியின் 13 வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் வள்ளி மயில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் மணி முத்தையாவின் மனைவி ஆவார் இவர் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை குறிப்பாக 13-வது […]
இ. கோட்டைப் பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் இ. கோட்டைப்பட்டியில் அதிமுக கழக அம்மா பேரவை சார்பில் 100 திருக்கோவில் சிறப்பு பிரார்த்தனையோடு 100 இடங்களில் அன்னதானம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து வழங்கினார். மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக நிரந்தர பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 ஆம் ஆண்டு மீண்டும் அம்மா […]
முதல்நாளிலே பழுதாகி நின்ற பேட்டரி காரர்கள்
கோவில் பாப்பா குடியில் ஊராட்சி பயன்பாட்டிற்கு பேட்டரி கார்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதல் நாளிலே பழுதாகி நின்ற அவலம்,பழுதாகி நின்ற பேட்டரி கார்களை தள்ளி சென்ற பணியாளர்கள் மதுரை மாவட்டம் கோவில் பாப்பா குடியில் புதிய தார் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்தி வந்திருந்த நிலையில் பொதுமக்கள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் கழிவுநீர் கால்வாய் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் […]
தந்தை சொத்தில் பங்கு தர மறுத்து வரும் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறையைக் கண்டித்து பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்த அய்யாத்துரை – வனப்பேச்சி தம்பதிக்கு சிவசக்தி என்ற பெண் குழந்தையும், முத்துப்பாண்டி, வரதராஜன் என்ற இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.,
அடிக்கடி மின்தடை அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்
மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி அமைச்சர் மூர்த்தியை முற்றுவகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு மதுரை மாவட்டம் கோவில்பாப்பாகுடி பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கோவில் பாப்பாகுடியின் பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக […]
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் அஞ்சாவது வட்ட கிளை மாநாடு நடைபெற்றது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டக் கிளை தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5ஆவது வட்டக் கிளை மாநாடு முத்துசாமி நினைவரங்கம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் உசிலம்பட்டி வட்டக்கிளை இணைச் செயலாளர் கே பழனி தலைமையில் இணைச் செயலாளர்கள் ஆசைத்தம்பி, அக்கினி, பாண்டி ஆகியோர் முன்னிலையில் செயற்குழு உறுப்பினர் அய்யங்காளை வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாவட்ட பொருளாளர் ஜெயராமன் வட்டக்கிளை செயலாளர் […]
திருச்செந்தூர் கோவில் பணி; கனிமொழி எம்.பி ஆய்வு..
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதி கட்டப் பணிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருக் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள், பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள், பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், […]
பொதும்பு ஆவின் நகர் பகுதியில் ஒரு முனை மின்சாரத்தை மாற்றி மும்முனை மின்சாரம் வழங்கிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி பொதும்பு பகுதியில் விரிவாக்கப்பட்ட ஆவின் நகர் கௌதம் நகர் மற்றும் திருமலை நகர் பகுதியில் ஒருமுனை மின்சாரம் செயல்பட்டு வந்ததால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் இரவு நேரங்களில் அதிக அளவு நேரம் மின்சாரம் தடைபடும் சூழ்நிலையும் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆவின் நகர் பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சமயநல்லூர் மின் பகிர்மான குறைதீர் முகாமில் மின்வாரிய அதிகாரிகளிடம் மும்முனை மின்சாரம் வேண்டி கோரிக்கை […]
சோழவந்தான் எம்விஎம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை ஒட்டி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாளாளர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார். எம் வி எம் குழுமத் தலைவர் மணி முத்தையா, பள்ளி நிர்வாகி வள்ளிமயில் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் செல்வம் வரவேற்றார். சோழவந்தான் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருநாவுக்கரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு […]
அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில் வீடு கிடைமாட்டுத்தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சுவாமி கோவில்வீடு, கிடை மாட்டுத் தொழு புனராவர்த்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சிவாச்சாரியார் பிரகாஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் நேற்று கணபதி பூஜையுடன் முதலாம் கால யாகசாலை நிகழ்ச்சியினை தொடங்கினர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக நிகழ்ச்சி தொடங்கி மகா பூர்ணாஹூதியுடன் யாகசாலை நிகழ்ச்சி நிறைவுபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி […]
தென்காசியில் போதைக்கு எதிராக உறுதி மொழி ஏற்பு..
தென்காசியில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தென்காசி ஈஸ்வரன் பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர், தென்காசி மாவட்ட காவல் துறையின் சார்பாக பள்ளி மாணவர்களின் சர்வதேச […]
மேட்டுப்பாளையம் சி.ஐ.டி.யு பொதுத்தொழியாளர் சங்கத்தின் சார்பாக 13-வதுமகாசபை மாநாடு கொடியேற்றத்துடன் நடைபெற்றது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 13 ஆவது மாநாடு ஈஸ்வரி அம்மாள் சேரன் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த மாநாட்டை சங்கத் தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார் சானவாஸ் முகமது அலி ஜின்னா சாமுவேல் முன்னணி வகித்தனர் மூத்த தலைவர் பெருமாள் சங்க கொடியை ஏற்றி வைத்தார் மாநாட்டில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் மனோகரன் சங்க பொதுச் செயலாளர் பாஷா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் கனகாமணி சதாம் […]
சோழவந்தானில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது சோழவந்தானில் உள்ள காமராஜர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் ஊர்வலத்தில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி மாணவ மாணவிகள் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர் முக்கியமாக […]
அரசு மருத்துவமனை முன்பு சுகாதார பணி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு பேரூராட்சி சார்பில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆலோசனையின் பேரில் செயல் அலுவலர் செல்வகுமார் மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் ராமு மற்றும் பணியாளர்கள் தூய்மை பணி பணியினை மேற்கொண்டனர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு தொற்றுநோய் பரவாமல் இருக்க மருத்துவமனை உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சுகாதார பணிகள் […]
கருப்பட்டியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்
மதுரை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் மருத்துவர் அணி பாலகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் டாக்டர் கருப்பையா வரவேற்புரை ஆற்றினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் , எம் வி கருப்பையா மாணிக்கம் , வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா மகளிர் அணி லெட்சுமி வனிதா சாந்தி மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாநிலமாவட்ட அணி நிர்வாகிகள் […]
கீழக்கரையில் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு.! காரசார விவாதம் .!! சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு .!!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது . கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு உட்பட்ட அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் குழாய் பதித்தல் பேவர் பிளாக் அமைத்தல் வார்க்கால் அமைத்தல் கழிவு நீர் குழாய் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் […]
போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டி காவல்துறை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து போதை பொருள் ஒழிப்பு மற்றும் போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்., ஜூன் 26 ஆம் தேதியான இன்று சர்வதேச போதை பொருட்கள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது., இந்த தினத்தில் போதை பொருட்களை ஒழிக்கவும், போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்கவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் […]
You must be logged in to post a comment.