மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குள் உள்ள வனப்பகுதியில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட வன பாதுகாவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வனசரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வன […]
Category: மாவட்ட செய்திகள்
பெரியநாயக்கன்பாளையத்தில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சார்பில் மக்களின் அடிப்படை வசதிகளை கோரி பெரிய அளவில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி மற்றும் தமிழக அரசு இரண்டும் இணைந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான சாலை, சாக்கடை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பேரூராட்சியின் பல வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் பெரும் […]
மத்திய குழுவினர் ஆய்வுக்கு பின்னும் நெல் கொள்முதலில் தாமதம்
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாக கூடிய சூழ்நிலை இருப்பதாக விவசாயிகள் குமுறல் மத்திய குழுவினர் ஆய்வு செய்து சென்ற பின்பும் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி கருப்பட்டி அம்மச்சியாபுரம் கட்டக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்கள் மற்றும் நெல் மூட்டைகள் மழையில் […]
தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.10.2025) தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில், 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்த அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், […]
ஜித்து எனும் ஆண் காட்டு யானை உயிரிழப்பு..
கோவை வனக்கோட்டம் மேட்டுப் பாளையம் வனசரகத்தில் 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஜித்து என்னும் பேர் கொண்ட ஆண் காட்டு யானை உயிரிழந்த நிலையில், வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலின் படி யானை இறந்த பகுதிக்கு விலங்குகள் உடற் கூறாய்வு மருத்துவ குழு வந்தடைந்தது. தற்போது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு. உசிலம்பட்டி ஐயப்பன் எம்எல்ஏ தண்ணீர் திறந்து வைத்தார்
மதுரை விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு உசிலம்பட்டி ஐயப்பன் எம்எல்ஏ தண்ணீர் திறந்து வைத்தார் விவசாய சங்க தலைவர் எம் பி ராமன் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பாசன சங்க பிரதிநிதிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்விக்கிரமங்கலம் முதல் திருமங்கலம் வரை சுமார் 30க்கும் மேற்பட்ட கண்மாய்க்கு உட்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்
சோழவந்தான் அருகே தென்கரை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத ஸ்வாமி திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த வாரம் புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து தினந்தோறும் வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு வந்தன. பக்தர்களின் விண்ணத்திறும் கோஷத்துடன் சூரசம்காரம் நடைபெற்றது தொடர்ந்து. முருகப்பெருமான் ஸ்ரீ வள்ளி தேவசேனா திருக்கல்யாணம் நடைபெற்றது. கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் கணபதி பூஜை உடன் தொடங்கி […]
சோழவந்தான் அருகே வாகன விபத்தில் புகைப்படக் கலைஞர் உயிரிழந்த சோகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிரப்பு கிராமத்தை சேர்ந்த மணி இவர் புகைப்பட கலைஞராக இருந்து வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் வாடிப்பட்டியில் குடியிருந்து வருகிறார் பணி நிமித்தமாக சோழவந்தான் வந்துவிட்டு திரும்பி வீட்டிற்கு சென்ற போது சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் நாகம்மாள் கோவில் பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் […]
முதலமைச்சரின் கவனத்தை எதிர் நோக்கி பொது மக்கள்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரும் நிலையில் முதல்வரின் கவனத்தை சுரண்டை நகராட்சி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களின் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிக நகரங்களுள் சுரண்டை நகராட்சி ஒன்றாகும். மாவட்டத்தின் மத்தியில் அமைந்துள்ள சுரண்டை நகராட்சியில் தற்போது சுமார் 75 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமும், வர்த்தகமும் இப்பகுதி மக்களின் பிரதானமாக உள்ளது. மேலும் சுரண்டையை சுற்றியுள்ள சுமார் 40 ஊராட்சி 4 […]
சோழவந்தான் திமுக சார்பாக மாமன்னர் மருதுபாண்டியர் திருவுருவப்படத்திற்கு வெங்கடேசன் எம் எல் ஏ மரியாதை
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குருபூஜை ஒட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவர்களது திருவுருவப்படத்திற்கு வெங்கடேசன் எம் எல் ஏ மாலை அணிவித்து மரியாதை செய்தார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை வகித்தார். பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், […]
போட்ட ரோடெல்லாம் தண்ணியில கரைஞ்சு போச்சு.4 வருஷம் முடியப் போகுது. ஒருவேளையும் நடக்கல. திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் எம் பி முன் கொந்தளித்த திமுக நிர்வாகி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம் பி ஆய்வு பணி மேற்கொண்டார். இதில் ஆணையாளர் இளவரசன் கவுன்சிலர்கள் 24 வார்டுகளில் உள்ள அடிப்படை வசதிகளை மற்றும் பேருந்து நிலையம் விரிவாக்க பணிகள் வளர்ச்சி பணிகளை குடிநீர், சாக்கடை தெரு விளக்கு வசதிகள் குறித்து ஆய்வுப் பணி மேற்கொண்டார். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து […]
சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சாமி கோவிலில் சூரசம்ஹார விழா
சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சூரசம்ஹார விழா நடந்தது.இவ்விழாவை முன்னிட்டு கடந்த 22 தேதிஅன்று கணபதி ஹோமத்துடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினசரி சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. நேற்றைய முன் தினம்மாலை 4 மணி அளவில் அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை […]
சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை விழா அகமுடையார் முன்னேற்ற சங்கம் அறக்கட்டளை சார்பாக மாலை அணிவித்து மரியாதை, அன்னதானம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்கம் அறக்கட்டளை சார்பாக சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குரு பூஜையை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அகமுடையார் முன்னேற்ற சங்க அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் தெய்வேந்திரன் பொருளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி தெற்கு ஒன்றியதிமுக செயலாளர் பசும்பொன் மாறன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முள்ளி பள்ளம் கேபிள் […]
சோழவந்தானில் அதிமுக சார்பாக மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜையொட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
சோழவந்தானில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக மாமன்னர் மருது பாண்டியர்களின் 224வது குருபூஜையையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் ஏற்பாட்டில் சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமையில். மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, […]
நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்க மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை
நெல்லின் ஈரப்பதம் குறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நடப்பு நெல் கொள்முதல் சீசன், கடந்த செப்., 1ல் துவங்கியது. இந்த சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தஞ்சை, திருவாரூர் உட்பட பல மாவட்டங்களில், குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யவில்லை. இதனால், மழையில் நெல் நனைந்ததால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, […]
“அன்பு” எனும் கரங்கள் தந்து அரவணைத்த முதல்வருக்கு மனதார நன்றி..
தமிழ்நாடு அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், அந்த குழந்தைகள் 18-வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2000 உதவித் தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2025 அன்று அன்புக் கரங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் என்ற […]
விக்கிரமங்கலம் அருகே கிணற்றில் விழுந்த மயில்களை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த சோழவந்தான் தீயணைப்புத் துறையினர்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நரியம்பட்டி கிராமத்தில் ஜெயபாண்டி என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள கிணற்றில் மூன்று மயில்கள் விழுந்துள்ளதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் மற்றும் நாகராஜ் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் விழுந்த மூன்று மயில்களை உயிருடன் மீட்டனர் மீட்கப்பட்ட மூன்று மயில்களை வனத்துறை அலுவலர் ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர்
சோழவந்தானில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே ஏற்பட்ட முழங்கால் அளவு பள்ளத்தை ஒரே நாளில் சரி செய்த நெடுஞ்சாலை துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேருந்து நிறுத்தம் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலை நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டிருந்தது இந்த பள்ளம் காரணமாக பள்ளி மாணவிகள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகி இருந்தது இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் சாலையின் நடுவே முழங்கால் அளவு இருந்த பள்ளத்தை சரி செய்யும் பணிகளில் […]
சோழவந்தானில் தனியார் வணிக நிறுவனங்களுக்குள் சர்வ சாதாரணமாக நுழைந்து ஓய்வு எடுக்கும் தெரு நாய்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் உள்ளிட்டோருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்து வருகிறது குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாக குறுக்கும் நெறுக்கமாக ஓடுவதும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு குறைப்பதுமாக ஒருவித அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது இதன் உச்சகட்டமாக ஐந்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மொத்தமாக சேர்ந்து வணிக நிறுவனத்திற்குள் நுழைவதும் அங்குள்ள பொருள்களை சேதப்படுத்துவதுமாக வணிகர்களிடத்தில் […]
சோழவந்தானில் மைய பகுதிகளில் நிழற்குடை வசதி இல்லாததால் கடை, தனியார் மண்டப வாசலில் வழங்கும் பள்ளி மாணவ மாணவிகள்
மதுரை சோழவந்தானில் பேருந்து நிழல் குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி முடிந்து மழையில் நனைந்தபடி வீடுகளுக்கு செல்லும் அவலம் பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் அமைக்கவும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தானில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் சோழவந்தான் சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து சோழவந்தான் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசன் […]
You must be logged in to post a comment.