மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டி பழைய காலணி பகுதியில் குடிநீர் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முடுவார்பட்டி ஊராட்சியில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் ஊராட்சி நிர்வாகம் ஒரு பகுதிக்கு நல்ல குடிநீர் மற்றொரு பகுதிக்கு உப்பு கலந்ததண்ணீர் பல மாதங்களாக வழங்கி வருவதாக இந்த பகுதி […]
Category: மாவட்ட செய்திகள்
கீழக்கரை முழுவதும் மலேரியா மருந்து தெளிக்கும் பணி.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதார துறை இணைந்து நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளிலும் தெருக்களிலும் மலேரியா டெங்கு போன்ற கொசுக்கள் மற்றும் முதிர் கொசுக்களை ஒழிக்க வீட்டின் உட்புறங்களிலும் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோய் பரவலை தடுப்பதற்காக நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடுகளிலும் தெருக்களிலும் மருந்துகள் […]
அழகன்குளம் கிராமத்தில் நாவாய் அருங்காட்சியம் அமைக்க கோரிக்கை.!
ராமநாதபுரம் அடுத்துள்ள அழகன்குளம் கிராமத்தில் நாவாய் அருங்காட்சியம் இடம் மாற்றம் செய்ய உள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு அரசு அறிவித்து இடத்திலே அமைக்க கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை சட்டப்மன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகன் குளம் ஊராட்சியில் உள்ள அரசுப்பளியில் பழங்கால பொருட்கள் கிடைத்து. இதனைதொடர்ந்து 1984 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 8 கட்டங்களாக ஆகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், ரோமானிய நாட்டுமது குடுவைகள், மீன், […]
ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.! மீன் வளத்துறை ஆய்வாளர் விசாரணை.!!
இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த வாரம் மனு கொடுத்துள்ளார். அதற்கு மீன் வளத்துறை ஆய்வாளர் புகார்தாரரிடம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பெறவேண்டுமெனில் ரூ.5100/- கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு புகார்தாரர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.3500/- […]
கீழக்கரையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் நலத்திட்ட உதவி .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் கீழக்கரை நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் மற்றும் நிர்வாகிகள் பரோஸ்கான், சதாம் உசேன், நிஹாதா, ஹாபீஸ், நிஷார் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரிசி, பருப்பு, சேலை, வேஷ்டி உள்ளடக்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் நைனா முகம்மது, […]
ராமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழா.!
ராமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழ சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மருத்துவ சமுதாய மக்கள் சார்பில் இராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் நடைபெற்ற விழாவில் நகர் மன்ற தலைவர் நாசர் கான் கலந்து கொண்டு விஸ்வநாததாஸ் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் இந்திய சுதந்திரத்திற்காக தனது பாடல்கள் மூலம் சுதந்திர போராட்டத்தின் போது […]
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பேச்சு போட்டி..
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்து உள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி 30.06.2025 அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளையொட்டி 01.07.2025 […]
உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் மையம் தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து சாலை மறியல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டார்மங்கலம், அய்யம்பட்டி, சக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் 500க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது., இந்த நெல்-யை கொள்முதல் செய்ய கிராம மக்கள் சார்பிலேயே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு கொள்முதல் நிலையம் அமைத்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்துள்ளது., இந்த ஆண்டு இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 தினங்களாக கொள்முதல் செய்த அதிகாரிகள், திடீரென கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்துவிட்டு, அருகிலேயே […]
ராமநாதபுரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே சலசலப்பு.!
ராமநாதபுரத்தில் ஜல் ஜீவன் திட்டப் பெயர் மாற்றம் குறித்த சர்ச்சை: கொடுமையாக எதிர்த்த பாஜக நகர்மன்ற உறுப்பினர்! ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ குடிநீர் திட்டத்தின் பெயரை ‘சிறப்பு கூட்டு குடிநீர் திட்டம்’ என மாற்றியதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் ஆர்.கே. கார்மேகம் தலைமையில், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஆணையாளர் அஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மொத்தம் 63 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்த […]
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு படாத பாடுபடும் சுற்றுவட்டார பொதுமக்கள்!
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் நீண்டகால காத்திருப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பதிவேற்ற மிகவும் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இணையதள பதிவேற்றம் மிகவும் தாமதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், காஞ்சிரங்குடி, மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் அடங்கியுள்ளன. ஆனால் பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறவும் சான்றிதழ்கள் […]
கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை மறுப்பு: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.!
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் வழங்கப்படாததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மற்ற ஊராட்சிகளில் பணிகள் நடைபெறும் நிலையில், கோவிந்தமங்கலம் ஊராட்சி செயலாளர் மட்டும் பணி வழங்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் […]
சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அபிஷேகங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்தார் அப்போது ஏராளமான பொதுமக்கள் பெண்கள் […]
கோவில் காலியிடத்தில் மற்றொரு தரப்பினர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரிசன் தெருவில் ஆதிதிராவிடஎ மக்களுக்கு சொந்தமான உஜ்ஜியினி மகா காளியம்மன் கோவில்.இக்கோவிலில் வடக்கு தெரு மக்கள்; வழிபாடு செய்து வந்துள்ளனர்.தெற்கு தெரு மக்களும் தனியாக கோவில் கட்டி வழிபாடு செய்துள்ளனர்.இதில்; வடக்கு தெரு கோவில் அருகில் அரசு புறம்போக்கு காலியிடம் உள்ளது. இதில் வடக்கு தெரு மக்கள் பொங்கல் வைப்பது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தெற்குத் தெரு மக்கள் கோவில் காலியிடத்தில் கட்டிடம் கட்ட முயற்ச்சித்து இரு தரப்பினருக்கும் […]
சோழவந்தானில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகம் சார்பாக தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா சோழவந்தான் பேரூராட்சி பசும்பொன் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரூர் நிர்வாகிஅன்பில் சுரேஷ் , ஒன்றிய நிர்வாகி ராஜேஷ் கண்ணா , வழக்கறிஞர் தியாகராஜன் ஆகியோர் வார்டு செயலாளர் சரவணன் ஏற்பாட்டின் பேரில் மரக்கன்றுகளை வழங்கினர். அஜித் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில் வங்கி முன்பு மழை நீர் தேங்குவதால் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு மழை நீர் தேங்குவதால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த பகுதியில் தபால் நிலையம் மற்றும் வாடிப்பட்டியில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது சிறிய மழை பெய்தாலே இங்குள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக மாறிவிடுகிறது இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் தபால் அலுவலகத்திற்கு […]
விக்கிரமங்கலம் அருகே நோய் பாதிப்பால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள் பட்டி கீழப்பெருமாள்பட்டி தெப்பத்துப்பட்டி அரசமரத்துப்பட்டி பாணா முப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப்பூ விவசாயம் நடைபெற்று வருகிறது நோய் தாக்குதல் காரணமாக மல்லிகை பூக்கள் அரும்பில் கருகி விடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் குறிப்பாக மல்லிகை பூக்கள் அரும்பு விட்டு பின்பு மலர்ந்து பயன் தரக்கூடிய நிலையில் அரும்பாகும் நிலையில் நோய் தாக்குவதால் அரும்புகள் கீழே உதிர்ந்து விளைச்சல் குறைவதாக விவசாயிகள் […]
டாஸ்மார்க் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பீட்டர் சாலை மறியல்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே எரவார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பத்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது புதிதாக திறக்கப்பட முடிவு செய்துள்ள டாஸ்மாக் கடை முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர் மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேஎரவார் பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் […]
திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்!
திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பேருந்து நிறுத்தம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் விவேக் ஆதித்தன் தலைமையில் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா மற்றும் ஒன்றிய கழக […]
திருவாடானை அருகே அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!
திருவாடானை அருகே பாண்டுகுடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாம் ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் படி திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் […]
உசிலம்பட்டியில் இரண்டரை வயது பெண் குழந்தை பல்வேறு யோகாசனம் செய்யும் காட்சி
உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன்-ரீனா தம்பதியினர். இவர்களின் மகள் லோகிதா வயது 2½. இவருக்கு இவரது பாட்டி பழனியம்மாள் சிறு வயது முதலே யோகாசனம் கற்றுக் கொடுத்து வருகின்றார். இதனால் லோகிதா தான் பிறந்த ஆறாவது மாதத்திலேயே யோகாசனம் செய்து மத்திய அரசின் சான்றிதழை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .ஆறாவது மாதத்திலிருந்து […]
You must be logged in to post a comment.